பக்கங்கள்

சனி 24 2017

குண்டூசியால் மிருகம் வெளியே வந்த கிளைமேட்ச் ..



நன்றி! வினவு...






ங்கிகளை லேசாக சுரண்டினாலே போதும். அவர்களுக்கு உள்ளே இருக்கும் மங்கிகளை வெளியே கொண்டு வந்து விடலாம்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் 21.06.2017 அன்று நடைபெற்ற விவாதத்தில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணனின் சீட்டுக்கு அடியில் குண்டூசி வைத்து விட்டார் தோழர் மதிமாறன். மிருகம் வெளியே வந்து விட்டது.
யோகா – கலையா, மத அரசியலா என்பது தலைப்பு.
நாராயணன்தான் பேசத் தொடங்கினார். ஐநா சபையில் மோடி பேசினாராம். பருவ நிலை மாற்றம் புவி சூடேறுதலை தடுக்கலாம். மூலம், பவுத்திரம் உள்ளிட்ட சகலவிதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம். எங்களிடம் மருந்து இருக்கிறது. உலகத்துக்கே வழிகாட்ட தயாராக இருக்கிறோம் என்று பொளந்து கட்டினார். இந்தியாவில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்றார் நாராயணன்.
அடுத்து பெருமாள்மணி. அவருக்குப் பெயர் யோகா ஆதரவாளராம். மதமாகவும் பார்க்கலாம், கலையாகவும் பார்க்கலாம் என்று வழுக்கினார். நெறியாளர் நெல்சன் சேவியர் நெருக்கிய பிறகு, அது கலைதான் என்றார். அப்புறம் நீண்ட நேரம் வழுக்கி விட்டு, கடைசியில் நெருக்கிப் பிடித்த பின், மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
நான் நாராயணன் இல்லை என்று நடித்த பெருமாள் கடைசியாக வேடத்தை களைந்தார்.
அப்புறம் ஒரு அம்மையார், யோகா டீச்சராம். அவுங்க ஆயிரக்கணக்கான – கவனியுங்கள் ஆயிரக் கணக்கான – வருசங்களுக்கு முன்னரே உடல் பிரச்சினைக்கு மனசுதான் காரணம் என்று நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். அந்த மேட்டரை அறிவியல் முந்தாநாள்தான் கண்டுபிடித்திருக்கிறது என்றும் அடித்து விட்டார். அப்புறம் மானாட மயிலாட வில் கலா மாஸ்டர் சொல்வது போல, வைப்ரேசன் அது இது என்று கொஞ்சம் அடித்து விட்டார்.
மேற்படி செட்டுதான் யோகா தரப்பு.
யோகா கலையை பாஜக கண்டு பிடிக்கவில்லை. அதைவைத்து ஆதாயம் தேடும் கலையை கண்டுபிடித்திருக்கிறது ஹெட்கேவார் பிறந்த நாளில்தான் இந்த நாளை அறிவிப்பது ஏன்?
சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர் கடலில் விழுந்து சாகட்டும் என்று ஆதித்யநாத் சொல்கிறாரே, திணிப்பு இல்லை என்றா இதற்கு பொருள்? என்றார் த.மு.மு.க-வின் ஹாஜா கனி.
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.
பிறகு தோழர் மதிமாறன் துவக்கினார். ஏகபத்தினி விரதன் இருந்த நாட்டில்தான் எயிட்ஸ் அதிகம். உலகத்துக்கே யோகா சொல்லிக் கொடுத்த நாட்டில்தான் நோயாளி அதிகம் என்று தொடங்கி, உழைக்காத வர்க்கத்தினர், சாதியினர் உருவாக்கிய யோகாவை உழைப்பவர் மீது திணிப்பதை கேள்விக்குள்ளாக்கினார்.
உடம்புக்கு நல்லது என்பதனால் திணிப்பது சரி என்றால், சுன்னத் செய்வது சரியானது என்று மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டிருப்பதால் ஆண்கள் எல்லோரும் சுன்னத் செய்யவேண்டும் என்று உத்தரவு போட்டால் ஒப்புக்கொள்வார்களா என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
நாராயணனுக்குள் எரிமலை குமுறத் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையை இழிவு படுத்தினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆளும்கட்சி நாராயணன் மதிமாறனை மிரட்டினார். யோகாவை விட்டு விட்டு சம்மந்தமில்லாமல் அவதூறு பேசுவதை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று நெல்சனையும் அவர் மிரட்டினார்.
நெல்சன் அசரவில்லை. அவர் என்ன பேசவேண்டும் என்று நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவதூறு என்றால் வழக்கு போடுங்கள் என்றார்.












நாராயணனின் மிரட்டலை அம்பலமாக்கியது மட்டுமல்ல, நீங்கள் பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதி அல்ல, பார்ப்பனர்களின் பிரதிநிதி என்று டவுசரை உருவினார் மதிமாறன்.
என்னை பார்ப்பான் னு சொல்லிட்டாரு இத கேக்க மாட்டீங்களா என்று சாமியாடத் தொடங்கினார் நாராயணன். அப்புறம் நான் பூணூல் போட்ட பிராமணனா இருந்தால் உங்களுக்கென்ன என்று சட்டைக்குள் கையை விட்டு பூணூலை வெளியே எடுக்க முனைந்தார்.
ஜஸ்ட் மிஸ். பூணூலை வெளியே எடுத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். நம் துரதிருஷ்டம். பூணூலை வெளியே உருவவில்லை.

வெள்ளி 23 2017

அடுத்த முதலைமைச்சர்...ஆருண்ணே.?????????????

அண்ணே என்றார்
என்னண்ணே என்றேன்

அடுத்த ரப்பர்   ஸ்ஸ்டாம்பு
ரெண்டுல ஒருத்தாருன்னு
தெரிஞ்சு போச்சு
அடுத்து தமிழ்நாட்ட
சீரழிக்க போற
முதலைமைச்சரு யாருண்ணே

அடப் பாவி விடிய
விடிய ராமாயணம்
கேட்டு புட்டு
விடிஞ்ச பொறகு
சீதைக்கு சித்ததப்பன்
யாருன்னு தெரியாம
ஏங்கிட்ட கேட்குறீயே
உங்களால  தாண்டா
நாடு குட்டிச்
செவரா போய்
கிட்டு இருக்கு..

ஏற்கனவே நாடு
குட்டிச் செவராத்தானே
கிடக்கு இதுல
நாங்க எப்படி
குட்டிச் செவரா
ஆக்குறோம்.அடுத்த
முதலமைச்சரு யாருண்ணே

அடே அங்க
ரெண்டு பேரு
பேசுரத கேளு...



அவர்களில். ஒருவன்
சொன்னான் ரசினி
முதலைமைச்சர் ஆக
வர முடியாதுன்னு

இன்னொருவன் எத
வச்சு சொல்ற
ஆகா முடியாதுன்னு
ரசினிதான்  தமிழ்
நாட்டின் முதலை
அமைச்சராக வருவார்
சந்தேகம் இல்லாமல்
கையில் அடித்துச்
சொன்னான் பலமாக



இன்னொருவன் சொன்னான்
பொறுமையாக கேளு
என்மேல் கோபப்படத
எம்ஜியார் வழுக்கை
தலையை மறைக்க
வெள்ள தொப்பியை
பயன் படுத்தி
ஆம்பளை பொம்பளன்னு
எல்லாத்தையும் வளச்சு
போட்டார்  ஆனால்
சொட்ட மண்டையை
மறைக்க தெரியாமல்
சொட்ட மண்டையோடு
பப்பாரப்பான்னு என்
மண்டையைப் பாருன்னு
காட்சி அளித்தால்
எப்படி தமிழ்
நாட்டின் முதலை
அமைச்சராக ஆவார்

அவர் வழுக்கை
தலை கட்டுமரத்தைப்
போல் அவ்வளவு
ஸ்டாங்கானது இல்லை
இதோடு எம்ஜியாருக்கு
ஜெ.மாதிரியான
ஒரு செட்டப்பு
இல்லாததும் குறை
அதனால் ரசினி
அரசியலுக்கு வந்தாலும்
முதலமைச்சராக முடியாது
இப்ப இருக்கிற
கேப்பு டவுனு
மாதிரிதான் ஆவாரு
முதலமைச்சராக ஆக
சத்தியமா முடியாது

அப்படின்னா விஜய்
வருவானா...சொல்லு

அவன் சின்னப்
பையன் ஒருவேள
அவன் முதலைமைச்சராக
வந்தால் இளவயது
முதலைமைச்சர் என்று
கின்னஸ் புத்தகத்தில
இடம் புடிக்கலாம்.
சொட்ட மண்ட
இல்லென்னாலும் ஒரு
செட்டப்பு இல்லடா..
இந்த தமிழ்நாட்டு
மக்கள அவ்வளவு
எளிதில் எடை
போட முடியாதுடா



என்னண்ணே  ரெண்டு
ஆளுகளும் வர
முடியாது என்கிறாங்கே..

எனக்கு அதுானே
உதைக்குது கல்
தோன்றா மண் தோன்றா
காலத்துக்கு முன்னே
தோன்றிய இந்த
தமிழ்நாட்டு மக்கள
அவ்வளவு எளிதில்
எட போட முடியாதுண்ணே..???????????????

புதன் 21 2017

இந்தியன் ஆக்கிரமித்த இடத்தில் எந்திரன்....

சுமார்  இருப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால்  ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கிய  அமெரிக்க ஊழியர்களை விட்டு, அந்த வேலைக்கு குறைந்த கூலியில் இந்திய ஊழியர்களை அமர்த்தி அதிக லாபம் சம்பாதித்த முதலாளிகள்..

இன்று இந்தியர்களின் கூலியைவிட குறைந்த கூலியில் வேலையை செய்ய எந்திரங்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.. ஏன் ? இப்படி என்று கேட்டால்

“எந்திரங்களுக்கு தூக்கம் வராது, அரட்டை அடிக்காது, தம் அடிக்க அடிக்கடி வெளியே போகாது, பெண் ஊழியர் போல் மகப்பேறு விடுப்பு எடுக்காது, இதை எல்லாம் விட நிர்வாகத்துடன் வாதம் புரியாது” என்று பல ஆதாயங்கள் இருக்கின்றவாம்.

மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்களால் செய்விக்க முடியாத இடத்தில் மட்டும்தான் மனிதர்களுக்கு இடம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதி. கொடுக்கும் வேலையை செய்வதற்க்கான திறமையும், விருப்பமும் இருந்தும் இலாபம் ஈட்டுவதற்க்கு தேவைப்படாத கரணத்தினால்தான் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள்.

இப்படி மனிதர்களின் இடத்தில் எந்திரங்களை அமர்த்திக் கொண்டே போவதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கு ஆளில்லாமல் சந்தை சுருங்குகிறது. இந்த முரண்பாடு தோற்றுவிக்கும் நெருக்கடிகள்தான் முற்றிப்போய் மீளமுடியாத   சிக்கலில் சிக்கியிருக்கிறது முதலாளித்துவம்.

நானோ தொழில்நுட்பம்,கிளைவுட் தொழில்நுட்பம்,செயற்கை அறிவு தொழில் நுட்பம்,விண்வெளி பயணம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,சூரிய எரிசக்தி தொழில்நுட்பம் இப்படி பலப்பல புதிய தொழில் நுட்பம் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனக்குத்தானே ம சொல்லிக் கொள்கிறது முதலாளித்துவம்ஃ

ஆக.....முதலாளித்துவ மூலதனத்தின் நோக்கம் “வேலை கொடுப்பதல்ல. இலாபம் ஈட்டுவதே ”

செவ்வாய் 20 2017

ரசினியை திருமா ஆதரிக்கும் ரகசிய ஆதாரம்.......




எங்க கட்சி
தலீவரு ரசினிய
எதுக்கு ஆதரிக்கிறாருன்னு
தெரியுமா உங்களுக்கு...????

தெரியாதுங்க தலீவா
சொல்லுங்க தலீவா
நானும் தெரிஞ்சுக்கிறென்.

எங்க கட்சி
தலீவரு ரசினிய
ஆதாரமில்லாம ஆதரிக்க
மாட்டாருன்னு தெரியுமில்ல...

தெரியும் தலீவா
அந்த ஆதாயத்த
சீ....ஆதாரத்தை
சொல்லுங்க தலீவா...

ரசினி மராட்டிய
தலித் என்பதால்
எங்கள் தலைவர்
திருமா ஆதரிக்கிறார்.
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்

ஓ....அப்படியா
தலீவரே....மகிழ்ச்சி..

சீ.....பட்ட
மானுக்கு எங்கள்
தலைவர்களுக்கு எல்லாம்
எங்க தலைவர்
கேட்ட  கேள்வி
இது தான்..

தமிழ் நாட்டை
தமிழன் தான்
ஆளனுமுன்னு சொல்ற
எவரும் தமிழ்
நாட்டில் தமிழர்கள்
அனைவரும் ஓரே
தெருவில் வசிக்க
வேண்டும என்று
சொல்வதில்லையே ஏன்?

சரியான கேள்வி
தலீவரே மானமுள்ள
தழிழர்கள்  யாரும்
பதில் சொன்னாங்களா...

மானமுள்ள தமிழராக
இருந்தால்தானே பதில்
சொல்வதற்கு..............

....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள் 19 2017

பகவானை முந்திய அய்யர்......!!!

என்னாது இது
என்றைக்கும் இல்லாம
இன்றைக்கு பகவானை
முந்திக் கொண்டு
அய்யரு போறாரு
இது எப்படி
நான் பார்த்திலிருந்து
பகவான்தானே ஆடாம
அசையாம முன்னாடி
முதல் வரிசையில
இருந்தாரு இப்ப
பகவானை இரண்டாம்
இடத்துக்கு தள்ளிவிட்டு
அய்யரு முன்னாடி
வந்து நிக்கிறாரு
மந்திரமா தந்திரமான்னு
ஒன்னும் புரியலையே
ம்ம்........ம்ம்ம்.......

இதப் பத்தி
யாருகிட்ட கேட்கலாம்
சே.... என்னாது
ஒருத்தரும் ஞாபக்துக்கு
வர மாட்டுறாங்க...

ஆ.....வந்திருச்சு
வந்திருச்சு ஞாபகம்
வந்திருச்சு பேசிருவோம்...

டிரிங்.........டிரிங்
டிரிங்.........டிரிங்

சார் வணக்கம்
சார் .... சார்
நான் வலிப்போக்கன்
பேசுறேன் சார்....

சார் எனக்கு
ஒரு சந்தேகம்
கேட்டுகட்டுமா சார்..

நன்றி! சார்
அது ஒன்னுமில்ல
சார் நம்ம
தமிழ் மணத்தில
முதல் வரிசையில
எனக்கு தெரிந்து
பகவான்தான் முதல்
வரிசையில இருந்தாரு
இப்ப திடிரென்று
நா..பார்க்கையில
சிரிராம் அய்யாரு
முதல் வரிசையில
இருக்காரு  அவரு
எப்படி முதல்ல
வந்தாருன்னு சொன்னீங்கன்னா
நானும் தெரிஞ்சுக்குவேன்
சார்......... சார்

தெரிஞ்சு என்ன
செய்யப் பேறேன்னு
கேட்டு சொல்லாம
விடாதிங்க சார்...
சொல்லுங்க சார்..

அட.. அப்படியா
சார் ஒருத்தரே
பல கணக்ககு
வச்சு அவங்களே
ஓட்டு போட்டுக்குங்வாங்களா...
சார்...அப்படின்னா
அது கள்ள
ஓட்டுதானே சார்

ஆமா..சார்
சிரிராம் அய்யரு
தளமான எங்கள்
பிளாக் தளத்துக்கு
போயி பாத்தேன்
சார்..சிரி
ஆசிரியருன்னு அஞ்சு
ஓட்டு வச்சு
இருக்காரு சார்..

என்னாது அய்யரு
மதுரக்காரா அப்படியா
சார்  அப்படின்னா
அய்யரு தமிழ்மனத்தில
முதல் ரேங்குல
வந்தது இப்படித்தானா
சார்....எப்படி
சார் அய்யரு
அம்புட்டு பாஸ்வேர்டு
நம்பரை மனசில்ல
மறக்காம வச்சு
இருக்காரு.....ஆக

பகவானை அய்யரு
முந்தியது இப்படித்தனா...
ரெம்ப நன்றி!
சார்....என்னது
சார்.... சே...சே..
இந்த அரிய
பெரிய ரகசியத்த
சொன்னதுக்கு என்ன
கட்டிப்போட்டு லாடம்
கட்டிப் அடிச்சு
கேட்டாலும் உங்கள
சத்தியமா சொல்ல
மாட்டேன் சார்.

நன்றி! சார்
நம்ம பேசியதை
பதிவா போடுறேன்
படிங்க சார்...


ஞாயிறு 18 2017

சொர்க்கத்திலிருந்து நரகத்துக்கு .




அன்று ..............

என் வேலை
என் உழைப்பு
என் அப்ரைஸ்
என்று நரகத்திலிருந்து
சொர்க்கத்துக்கு போனவர்கள்

இன்று..............

என் சம்பாத்தியம்
என் குடும்பம்
என் எதிர்காலம்
என்ற சொர்க்கத்திலிருந்து
நரகத்திற்கு தள்ளப்
பட்டு இருக்கிறார்கள்..

வேலை கொடுப்பதல்ல
இலாபம் ஈட்டுவதே
மூலதனத்தின் நோக்கம்
என பொட்டில்
அடித்து புரிய
வைக்கிறது ஐ.டிதுறை


குறிப்பு---ஏழு ஐ.டி முன்னணி நிறுவனங்கள் இந்தாண்டு 56.000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாதகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறதாம்....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...