பக்கங்கள்

சனி 16 2013

மாயமாய் மறைந்த புது (திருட்டு) மாப்பிள்ளை.....!!!!!!!

அந்தி மயங்கும்
மாலை நேரம்
மூதாட்டி தன்
வீட்டின் வெளி
வாயிலிலே.அமர்ந்து
இருந்தார்................

இருபதைந்து வயது
மதிக்க தக்க
இளைஞன் ஒருவன்
மூதாட்டியிடம் வந்து
தங்களின் மகனின்
நண்பென் என்றும்
திருமணம் முடிக்க
போகும் புது
மாப்பிள்ளை என்று
கதை சொன்னான்

கதை கேட்க
மூதாட்டியின்
ஆர்வத்தைக்
கண்டு புது
மாப்பிள்ளை
காரன் மேலும்
கதை விட்டான்.

புது மாப்பிள்ளை
யான எனக்கு
புதுசா தங்க
சங்கிலி வாங்க
வேண்டும்

மாடலுக்கு தாங்கள்
அணிந்திருக்கும்
சங்கிலியை
கழட்டி தாருங்கள்......

மாடல் பார்த்து
விட்டுதருகிறேன்
என்றான்.

கதை கேட்டு.
கதை கேட்டு
நாடே சொக்கி
கிடக்கும் போது
மூதாட்டி  விதி
விலக்கா என்ன?.................

கழட்டி கொடுத்த
அய்ந்து பவுன்
சங்கலியை வாங்கிய
புது மாப்பிள்ளை
காரன் மாயமாய்
மறைந்தான்............

கதைப் பித்தம்
தெளிந்த மூதாட்டி
காவல் நிலையம்
சென்ற பிறகுதான்
தெரிந்தது. அவன்
புது மாப்பிள்ளை
அல்ல திருட்டு
மாப்பிள்ளை என்று.........................

வெள்ளி 15 2013

முற்றத்தில் வீரப்போர் புரிந்த சாதிவெறி நடராஜ சோழன்.................???


இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் .
கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் .
நடராஜசோழனின் வீரப்போர்.!!!!
போருக்குமுன்---“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை” 
போருக்கு பின்................
"திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’

# கடந்த 8ஆம் தேதி " முற்றம் திறக்கப்பட்டுவிட்டது என்னைஇனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை" என்று சொன்ன வள்ளல் ம.நடராசனின் முன்ஜாமீன் மனுவில் சொல்லப்பட்டதுதான் மேற்கூறிய வாசகங்கள்.
ஆனால் அவ்விழாவில் மைக்செட் அமைத்த சேகர் சிறைக்குப்போயிருக்கிறார்.

நன்றி !வில்லவன் இராமதாஸ்,வினவு.

வியாழன் 14 2013

சொந்த சாதிக்காரனையே துடிதுடிக்கக் கொன்று ரசித்ததுதான் சாதிவெறி..!!!


சுனாபனாJune 6, 2011 at 6:26 pm

33
காலங்காலமாக தேவர் மீது பெருமை ஏற்றுவதற்காக சொல்லப்படுவது என்னவென்றால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்கு இவர் துணையாக நின்றார் என்பதுதான்.
முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.
காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.
1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.
1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட “”கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி” தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (“”பண்பாட்டு அசைவுகள்”, தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).
1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். “”கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்” என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (“”சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்”, தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)
ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.
கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?
ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் “”முதுகுளத்தூர் கலவரம்”, தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).
தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!
சுனாபனாJune 6, 2011 at 6:30 pm

34
“”முதுகுளத்தூர் கலவரம்”, எனும் நூலின் மூலம் தேவரின் சாதிவெறியை அம்பலப்படுத்தியவர் தினகரன். இவரும் இதே சாதியைச் சேர்ந்தவர்தான் எனினும் சாதிவெறியை ஒழிக்கப் போராடியவர். இந்நூல் மூலம் சாதிவெறியைக் கண்டித்தபடியால் தினகரனை தேவரின் அடிப்பொடிகள் தினகரனைக் கடத்திச் சென்று பனைமரத்தின் கருக்குமட்டையால் கொஞ்சம் கொஞ்சமாக தினகரனின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். அறிவாளாக் வெட்டுப்பட்டிருந்தால் கூட சில நிமிட வலியோடு உயிர் போய் இருக்கும். சாதி வெறியைக் கண்டித்த சொந்த சாதிக்காரனையே துடிதுடிக்கக் கொன்று ரசித்ததுதான் சாதிவெறி..


நன்றி! வினவு


புதன் 13 2013

தந்தையிடம் சென்ற மகன் திரும்பி வந்த கதை......



என் தந்தையிடம் சென்றேன்
அங்கு அவரை காணாததால்
திரும்பி வந்து விட்டேன்.

திரும்பி வந்ததில் என்
தாயாருக்கும்  என்
தமக்கைக்கும் மகிழ்ச்சி.................

எனக்கு இல்லை.
பாதி கடனாளியாக
இருந்த என்னை
முழு கடனாளியாக்கி
விட்டார்கள் அவர்கள்.

நான் பிறந்த சில வருடம்
என்னைக் கொஞ்சி குலாவிய
சிலநாளில் நோய்வாய்பட்டு
துபாய் சென்று விட்டார்.

காலம் கடந்த நான்
அவருக்கு துணையாக
இருக்க மேலூர்க்கு
சென்ற போது

தாயாரும் தமக்கையரும்
தமக்கையின் பிள்ளைகளும்
வசூல் ராசாக்களிடம்.........
மொய் பணம் சரியாக
செலுத்தியதால்.........

வசூல்ராசாக்கள் இரக்கப்பட்டு
மேலூரிருலுள்ள எமனுக்கு
இமெயில் அனுப்பியதால்
மேலூர்க்கு செல்லவிருந்த
எனக்கு விசா மறுக்கப்பட்டு

கீலூருக்கே திருப்பிஅனுப்ப
பட்டுவிட்டேன்...................
விசா மறுக்கப்பட்ட நான்
இனி செய்ய வேண்டியது
என்ன......................

வசூல்ராஜாக்களுக்காக
வாங்கப்பட்ட கடனுக்காக
விசா கிடைக்கும்வரை
குடும்பத்தோடு பாடு
பட வேண்டும்............


 மொழிப்புரை----
(தூபாய்  சென்றார்---------- செத்துபபோனார்)
(மேலூர்-------------- மேலோகம்)
(கீலூர்.........பூமி )

செவ்வாய் 12 2013

நல்ல குடிமக்களுக்கு...........

                       Rathna Peters
















போராடாத நல்ல
குடி மக்களே!
வாருங்கள் நாம்
அமைதியாய்....
இருட்டில் தவிப்போம்!

வெளிச்சத்தில்
ஆட்சியாளர்கள்
நம்மைக் கொடூரமாய்
கொல்ல திட்டங்கள்
தீட்டட்டும்.!!!

திங்கள் 11 2013

ஆண்ட பரம்பரைகள் வீரம் காட்ட வேண்டிய இடம்........!!!

படம் .இட்லிவடை
















ஏலேய்................ய்ய்ய்.
சாதிவெறியும் மதவெறியும்
பிடித்த சூராதி சூரர்களே!
வீராதி வீரர்களே!!!!!

காலையில் எழுந்ததும்
கழிப்பறையில் சென்று
“ப்ப்ரீ”யாக மலம்
கழிக்க முடியும்மாலே
உங்களால்................!!!

உங்கள் மதவெறியையும்
சாதிவெறியையும்
அடக்கு முறையையும்
அங்கு காட்டுங்கலே...
ஆண்ட பரம்பரைகளே!!!
ஆளும் பரம்பரைகளே!!!

ஞாயிறு 10 2013

ஏம்மா..........ஏப்பா...........இது உங்களுக்கு வெட்காமாயில்ல..............

Tamil Ula

ஏப்பா..............ஏம்மா..............
சாதிவெறி கொண்டாட்டத்த
தள்ளிப் போட முடியாத
ஒங்களுக்கு...................

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு
தயார்னு சொல்லுறதுக்கு
வெட்காமாயில்ல.............

(ஐந்து வருடத்துக்கு ஒரு முறை)
ஆள் மாற்றதுக்கு தயாருன்னு
சொல்லுங்கப்பா...........................
சொல்லூங்கம்மா........................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...