பக்கங்கள்

சனி 27 2018

நினைவலைகள்-10.

ஒருஅழைப்பு-ஒரு விசாரிப்பு--ஒரு வேண்டுதல்............


ஏய்.. க்கான பட முடிவு






வழக்கமாக நான் செல்லும் பாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு விட்டதால்.. இந்த பக்கம் உள்ளவர்கள்..அந்தப் பக்கமும், அந்தப் பக்கம் உள்ளவர்கள் இந்தப் பக்கமும் இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ.... செல்லமுடியாதாவாறு பள்ளமாகி இருந்ததை ..மாநகராட்சிக் காரர்கள் சரி செய்வதற்க்காக மேலும் பள்ளமாக தோண்டி விட்டார்கள். ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் அந்தப் பள்ளத்தை சரி செய்து கொண்டிருந்ததால்.....

வங்கிக்கு செல்வதற்க்காக...குறுக்கு..மற்றும் நெடுக்கு மாற்றுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது.. ஒரு குரல்..

“ஏய்.....என்று கூப்பிட்டது.... கேட்பதில் கோளாறு எனக்கு இருந்ததால் ..என்ன குரல்... எங்கிருந்து வருகிறது.. நிதானமாக கவனிக்க ஆரம்பித்தபோது..

“ஏய்..” ஒன்னத்தானப்பா...  ” என்று ஒரு வீட்டின் வாசலில் நின்று நடுத்தர பெண் ஒருவர் என்னைச் கைநீட்டிக் கூப்பிட்டார்.

“ சுதாரித்து. புன்னகையை காட்டியபடி அவர்களை நோக்கி..“ என்னங்க அம்மா” என்றபடி சென்றேன்.

“என்னாது அம்மாவா...?” “நான் என்ன உனக்கு அம்மவா..? என்றார்கள்..

சட்டென்று.. பின்வாங்கி “ என்னங்கக்கா” என்றேன்...

அவுகளும் மீண்டும்..“ நான் உனக்கு அக்காவா” என்றார்கள்..

நானும் சற்றும் சளைக்காமல்...“ என்னங்க..மேடம்” என்றேன்..”

அட..இங்கிலிசுல பேசுற“““ என்றபடி..“ அது....சரி...உங்கம்மா நல்லா இருக்காங்கலா..என்றார்..

“ நல்லா இருக்காங்க மேடம்.”

“ உன் ..னக்காவும் உன் மச்சானும் இங்க இருக்காங்கலா..?ஃ ஊறுல..இருக்காங்கலா...”

“ அக்காவும் மச்சானும் வெளி நாட்டுல.. இருக்காங்க மேடம்..”--சிரிக்காமல் சொன்னேன்..

“நல்லா இருக்கட்டும்.... நல்லா இருக்கட்டும்.... அதுசரி.... நீ..எனக்கு ஒரு உதவி செய்யனுமே...!!! செய்வியா...???


“ என்ன உதவி மேடம்... சொல்லுங்க மேடம்..”

“என் மகன்.. படிச்சுபுட்டு சும்மா இருக்கான்.... உன் ஆபிஸ்ல.. அவனுக்கு ஒரு வேலை கொடேன்....”

“ உங்க மகன்  எவ்ள..படிச்சிருக்கான்..மேடம்..”

“ அவன் பத்து வரை படிச்சிருக்கான்பா....”

” அவருக்கு கம்யூட்டர்ல டைப் அடிக்க தெரியுமா..மேடம்..”

“அதெல்லாம் அவனுக்கு தெரியாதுப்பா..”

“வேல கிடைக்காது மேடம்”

“ அட, ஏப்பா..”

“மேடம், என் ஆபிசுல கம்யூட்டர்ல.. டைப் அடிக்கிற வேலதான் இருக்கு, மிஷின் ஓட்டுவதற்கு,. பைண்டிங் செய்வதற்கெல்லாம் ஆளு இருக்கு மேடம்”

“உனக்கு தெரிந்த கம்பெனியில  கேட்டு சேத்துவிடுப்பா...”

“ கேட்டு சொல்றேன் மேடம்”

“ மறந்திட மாட்டியில.....”

“ மறந்திட்டா..இந்தப்பக்கம்  வர்றயில.... “ஏய்.... இந்தாப்பா....ன்னு  கூப்பிட்டு கேளுங்க  மேடம்”

“ ம்..ம்...ம்..  சரிப்பா...”

..
இரண்டு மாதத்திற்கு மேல் பெரும் பள்ளம் சரி செய்யப்பட்டதால்.... நான் அந்த குறுக்கு நெடுக்கு சந்தில் செல்வதில்லை...அந்த நிகழ்ச்சியையும் மறந்துவிட்டேன்..


இன்று ரோட்டில்... செல்கையில்..ஒருத்தர்.. வேறு ஒருவரை   ஏய்..இந்தாப்பா என்று குரல் கொடுத்த போது..    அந்த “ஏய்”  மேடம்”நினைவுக்கு வந்து போனாங்க....

வெள்ளி 26 2018

நினைவலைகள்-9












ஒரு நண்பன் கதை சொன்னான்....


ஒரு நண்பன் கதை சொன்னான் க்கான பட முடிவு







என்னடா..உங்க ஏரியாக்கார ஆம்பள- பொம்பளங்க..இவ்வளவு மட்டமா நடந்திறாங்க....சே..என்ன ஜென்மம்ட..அவிங்க......நானும் எனது அனுபவத்தில் பல ஏரியாக்கார சனங்களை பார்த்திருக்கேன்..உங்க ஏரியாக் கார பக்கிககள் மாதிரி எவனையும் -எவளையும் நான் பார்த்ததில்லைடா....எப்படிடா...நீ.. இத்தனை..வருடம் அந்தப் பக்கிகளோடு  மல்லுக்கட்டி வருகிற  .... இப்பத்தாண்டா  எனக்கு புரியுது....

வந்துட்டு போற..எனக்கே... இவ்வளவு சிரமம்ன்னா.... உனக்கு எவ்வளவு சிரமம் இருக்குதுன்னு.. இப்போதுதான்டா புரியுது.. ஸாரிடா..இத்தனை நாளா...உன்னை திட்டினது மனதுக்கு ரெம்பவும் வேதனையாக இருக்குதுடா...


உன் தெரு பக்கிகள் உனக்கு தரும் சிரமம்களை என்னிடம் சொல்லும்போது ..உன்னை புலம்பல்காரானாக பார்த்தேன்டா....என்னடா..இவன் எப்பப் பார்த்தாலும்..ஏரியாக்காரன்கள் தொடுக்கும் இம்சைகளை சொல்லி நம்மை கொல்லுறானே என்றுதான் மற்றவர்களிடம் சொல்லியிறுக்கிறேன். மற்றவர்கள் உன்னைப்பற்றி  பெருமையாக சொல்லும்போது... நான் செவிமெடத்ததுதில்லை..........


என்னைப்போல் உனக்கும் வாய்ப்பும் வசதியும் இருந்தால் நீ..ஏன்? அந்தப் பக்கிகளின் ஏரியாவில் இருக்கப்போகிறாய் என்று நினைத்தேன்....ஒரு கட்டத்தில் உன்னிடம் எதார்த்தமாக நான் கேட்டபோது....

. நீ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது..... விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை  குடியிறுக்கும் வீட்டிற்க்காகவும் இடத்திற்க்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். போராட்டம்தான் முடிவுக்கு வரவில்லை  என்று...போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து செல்வதற்கு  முதல் காரணமாக இருப்பது .. வருவாய்துறையும் அதனுடன் சேர்ந்த மாநகராட்சியும். பொய்புகார் என்று தெரிந்தும். நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் போலிசும்தான்..இதோடு சவ்வே அறுந்து போகுமளவுக்கு வழக்கை இழுத்துச் செல்லும் நீதிமன்றமும்தான் என்று சொன்னது..

எனது பிரச்சினையின் போதுதான் எனக்கு புரிந்தது. நண்பா...உனது பிரச்சனை..

உன் பாசையில் சொல்வதென்றால் இப்போது புரிந்து என்ன செய்ய..என்று நீ சொல்வது என்  மண்டையில்  நீ கொட்டுவது போல்.  இருக்கிறது...


அப்போது சொன்னது புரியவில்லை..நேரடி அனுபவத்தின் போதுதான் அதன் உண்மை தெரிகிறது....

எனது பிரச்சினையில் என் உறவுகளின் பலமும் பணபலமும் இருப்பதால் இழு இழு..வென்று இழுத்துக் கொண்டே சென்ற எனது பிரச்சினை ஒரு கட்டத்தில் ஒரு  கட்டத்தில் முடிவுக்கு வந்தது.

உன்னோட பிரச்சினை ஏன்? முடிவுக்கு வராமல் இருக்கிறது. என்பதும் அதன் காரணமும் நீ சொன்னதின் உண்மை தெரிந்தது. நண்பா.... உன்னை ஊதாசீனப்படத்தியதையும்... கேலி கிண்டல் செய்ததையும் மனதில் வைத்துக் கொள்ளாதே... என்னை மன்னித்துவிடு.....

நீ பட்ட கஷ்ட நஷ்டங்களை நான் பட்டதில்லை... யாருடைய ஆதரவும் உதவியும் இன்றி இந்தளவுக்கு நீ வந்திருக்கிறாய். என்றால்..அதற்க்கு பின்னால் இருக்கின்ற உழைப்பும் வலியும் எவ்வளவு என்று என் அனுபவத்தால் புரிந்து கொண்டேன்..இதையும் உன் வலைப்பதிவில் பதிவிடுவாய் என்று தெரியும்.. பதிவிட்டவுடன் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதே!. என்னால் உனக்கு தேவையான உதவியை கண்டிப்பாக செய்வேன் நண்பா.....என்னை மறந்தவிடாதே!.... புறக்கணித்து விடாதே!..

புதன் 24 2018

அதிகாலை கனவு-8..

அவதி அவதியாய்.. ஒரு  கனவு...............!!!!!!


வைகையில் வெள்ளம் க்கான பட முடிவு



 வேலை  செய்து முடித்த பொருட்களை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குறுகிய தெருக்களைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும்போது  பிடித்தது பெரு மழை... வண்டியை பாதுகாப்பாய் ஒரு கடையின் முன்னால் ஓரமாய் நிறுத்துகிறேன்.

சிறிது நேரத்தில் ரோட்டில் வெள்ளம். நடந்து சென்றவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.  என்னருகில் வந்தவரை காப்பாற்றுவதற்க்காக  நீட்டிய  அவர் கைகளை பற்றுகிறேன்.  பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தும் என்னால் அவரை இழுக்க முடியவில்லை. அதற்கு மாறாக....அவர் என்னையும் வெள்ளத்திலே இழுத்துவிட்டார்....

வெள்ளத்திலே எல்லோரும்  காப்பாற்ற சொல்லி சத்தம் போடுகிறார்கள்... நானும் சத்தம் போட முயலகிறேன்.. சத்தம் போட முடியவில்லை... ரோட்டைக் கடந்து பிரதான ஆற்றில் இழுத்துச் செல்லப்படுகிறேன். 

ஆற்றில் உள்ள படிக்கட்டுகளில்  பெண்கள் துணிகளை துவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..நாங்கள் இழுத்துச் செல்லப்படுவதை கண்டும் காணாமல்  தங்கள் வேலைகளில் முழ்கிறார்கள்.

 இழுத்துச் செல்லப்பட்டமனிதர்கள் வெள்ளத்திலே  தனித்தனியாக  சிதறடிக்கப்பட்டார்கள்.. அப்படி சிதறடிக்கப்பட்ட வயல் வெளிகளிலே தள்ளப்பட்டேன்...

வயல் வெளியில் உள்ள ஓடையில் பலர் குளித்துக் கொண்டுருந்தார்கள். வெள்ளம் அவர்களை இழுத்துச் செல்லவில்லை என்னை மட்டும் இழுத்துச் சென்று வரப்பு ஓரமா உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டது.

பள்ளத்துக்கு மேலே வரப்பு. அது ஒத்தையடி பாதையாக தெரிந்தது.. ஆட்கள் நடந்து செல்வது தெரிந்தது. சத்தம் போடுகிறேன்..சத்தம்  வரவில்லை. சிறிது ஆடு  கத்தும் சத்தமும் நாய் குரைக்கும் சத்தமும் கேட்டது அதைத் தொடர்ந்து மனிதர்கள் சலசலவென்று பேசும் சத்தமும் கேட்டது.

பள்ளத்தில் இருந்து மேலே பார்த்தபோது  ..வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவரை காப்பாற்ற நான் கை கொடுத்தவர் என்னை காப்பாற்ற கையை நீட்டிக் கொண்டிருந்தார்.  அவரைப் போல் நானும் அவரை இழுத்துவிட்டால் என்ன செய்வது.என நிணைத்து.நான் கையை நீட்டாமல் இருந்தேன்.

என்னவோ சொன்னார்..மனிதர்களின் சலசலப்பில்  ஒன்றும்  புரியவில்லை. தலை குனிந்தேன். அடுத்த மணித் துளியில் பள்ளத்தில் மேல் ஒரு பகுதியிலிருந்து  தண்ணீர் வெள்ளமென பாய்ந்து பள்ளத்தை நிரப்பியது.

மேலே வந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருத்தரையும் காணவில்லை.
கண்ணுக்கு எட்டியவரை ஒரே வெள்ளக்காடாக இருக்கிறது. கரையையே காணோம்...காற்று மட்டும் வீசிக் கொண்டு இருக்கிறது..உடலெல்லாம் நடுங்கிக் கொண்டு இருக்கிறது... எது பள்ளம் எது மேடு என்று தெரியாமல்
தவித்த நேரத்தில் செல்போன் ஒலிக்கிற சத்தம் கேட்கிறது.  பேண்ட் பைக்குள் கையைவிட்டு செல்போனை எடுக்கிறேன். நனைந்து இருந்தது. தூக்கி வீசுகிறேன். விடாமல் போன் ஒலிக்கிறது..

தண்ணிரில் முழ்கி இருந்த கால்களை யாரோ இழுக்கிறார்கள். கால்களை பதறியடித்து இழுத்துக ் கொள்கிறேன்.. இப்போது கையை பிடித்து கொண்டு என் உடலை உலுக்கிறார்கள்.

திடீர் அதிர்ச்சி அடைந்து முழிக்கிறேன்..எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை...எதிரே இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள்..அண்ணே என்கிறார்கள்.  என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.. சிறிது சிறிதாக நிதானம் வருகிறது..

வந்தவர்கள் “ என்னண்ணே....நல்ல தூக்கமா..? என்றார்கள்...

ஆமாப்பா...நல்ல தூக்கம்தான்..உங்க வேலையை முடித்துவிட்டு தூங்குவதற்கு நேரமாகிவிட்டது..என்றேன். 

கைகால்கள் எல்லாம் அடித்து போட்டது போல் வலி எடுத்தது...



செவ்வாய் 23 2018

அதிகாலை கனவு-7.

அம்மா இல்லையென்றாலும் விலகாத பயம்....!!!!



தூக்கத்தில் பயம் க்கான பட முடிவு





பாஸ் ..........எழுந்திருங்க  பாஸ்... விடிந்து விட்டது பாஸ்...


விடியட்டும்..பாஸ்,        இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைதானே பாஸ்....சிறிது நேரம் துாங்கிக்கிறேன்  பாஸ்...... அதுவரைக்கும். நீங்கள் அதோ..அங்கியிருக்கும் புத்தகங்களில் எதையாவது எடுத்து படித்திகிட்டு இருங்க பாஸ்..........


“அம்மா  எழுப்ப சொன்னால்........”

“கண்டுகிராதிங்க...பாஸ்”


“..............சரிங்க......பாஸ்”

“ டேய்..... மணி எட்டாக போகுது, இன்னுமா...தூங்கிற....!!!. விடிஞ்ச பிறகும் என்னடா தூக்கம்.... எழுந்திருடா...... !!!!!!!!!!. எழுந்திருக்கப் போறீயா..இல்ல..நா....வரவாடா...”

----சட்டென  விழித்து படுக்கையை விட்டு எழுந்தேன்.. என் பால்ய வயது நண்பனையும் காணோம்..... சவுண்டு கொடுத்த என் அம்மாவையும் காணோம்.



பால்ய நண்பன் எழுப்பிய போது எழுந்திருக்க மறுத்த நான்.  என் அம்மாவின் குரலைக் கேட்டவுடன் பதறியடித்து எழுந்துவிட்டேன்..

என் தாயார் இறந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டபோதும் . தாயார்  இல்லை என்பது நன்கு தெரிந்த போதும் தாயார் மீதிருந்த பயம் மட்டும் இன்னும் விட்டுப் போகவில்லை என்பது ..சிறிது நேரத்திற்கு பின்புதான் எனக்கு புரிந்தது..




வடிவேல் பாணியில் சொல்வதென்றால்..பயம் என்னை விட்டுப் போகாது போலிருக்கே..........!!!!!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...