பக்கங்கள்

சனி 22 2015

அவள் வழியில் அவன்.

படம்-www.worldtamilswin.com


இன்ன நேரத்தில்
இன்ன இடத்தில்
என்னை சந்திக்கவும்
காத்து இருக்கிறேன்
இப்போது வரவில்லை
என்றால் எப்போதும்
என்னை நீ....
சந்திக்க முடியாது.

உடனே வரவும்
என்ற செய்தி
கேட்டு அவன்
பதறி அடித்து
சென்ற போது
அவள் காத்து
இருக்க மனம்
இல்லாமல் போய்
சேர்ந்தாள்.........

எப்படியும் அவளை
சந்தித்தே தீர்வது
என்ற முடிவில்
அவள் வழியில்
அவன்...............

பின் குறிப்பு
அவளை அவன்
சந்தித்து விட்டான்
என்ற நிம்மதியில்
இருவரின் நட்புகள்.

அவனுக்காக காத்திருந்த
அவளையும் சந்திக்க
ஓடோடி வந்த
அவனையும்  கழுவிலே
ஏற்றி தம்
சாதி குலப்
பெருமையை நிலை
நாட்டிய விட்ட
பெருமையில் ஆதிக்கச்
சாதி வெறியர்கள்.

ஆக அவள்
வழியில் அவனை
அனுப்பி விட்டார்கள்


                                .......................................


வெள்ளி 21 2015

தமிழ் சமூகத்தை சீரழித்த ஜெயாவின் மரண தேசம்


Graphic1
--பார்க்க....----
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி உண்டு . அது போல் அம்மா என்று அழைக்கப்படுபவர்க்கும் ஒரு  தகுதி உண்டு....அம்மா என்று அழைத்து வந்த தமிழ் மக்களுக்கு ஊத்தி கொடுத்து  தமிழ் சமூகத்தை சீரழித்தவரை ..   அம்மா என்று அழைப்பது  (அடிமைகளைத் தவிர )  சுய மரியாதை இழந்ததற்கு சமம்.


அந்த வகையில் புதியகலாசசாரம் வெளியீடான  “டாஸ்மாக்: அம்மாவின் மரணதேசம்” என்று தழிழ் சமூகத்தை சீரழித்தவரை அம்மா என்று தலைப்பிட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை....மற்றவைகளில் கட்டுரைகளில் முழு மனதுடன் உடன் பட்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.



தாங்களும் படித்துப் பாருங்களேன்.....

வியாழன் 20 2015

அவர்கள் ஒன்று சேர்ந்தால் .......என்ன நடக்கும்...

படம்--ammanastrology.blogspot.com/..


சூரியனும் சந்திரனும்
ஒன்று சேர்ந்தால்..
என்ன நடக்கும்...??


ஏய்... அய்யா...
 ஐம்பது நிமிடம்
என்ன நடந்தது
என்று கேட்டதற்கு
செறுப்பு. துடைப்பம்
உருவப் பொம்மை
எரிப்பு நடக்கிறது.

கீழத்தெரு சூரியனும்
 மேலத்தெரு சந்திராவும்
அவர்கள் ஒன்று
சேர்ந்தால்  இங்கு
சாதி வெறியர்களால்
வெட்டு குத்து
நடக்கும் ஏன்?
கொலையும் நடக்கும்......!!!!




புதன் 19 2015

என்னப்பா...நடக்குது...நாட்டுல......


evks.elangovan
படம்-ஒன் இந்தீ...யா




என்னப்பா......நடக்குது நாட்டுல....

வெளிநாட்டுலேயா....... உள்நாட்டுலயா.......

அது என்னப்பா...உள்நாடு....வெளிநாடு....ன்னு

அது தெரியாதண்ணே..... வெளி நாடுன்னா...பிரதமர் ஆளுறது... உள்நாடுன்னா... குடி மக்கள் குடியை கெடுத்து கொண்டிருக்கும்  முதல்வரு ஆளுறது

அட...... இப்படி  வேறா... பிரிச்சு புட்டாங்கயே...... சரிப்பா... குடி மக்கள் குடியை கெடுக்கும் இந்த உள் நாட்டில... என்னப்பா...... நடக்குது....


அது ஒன்னுமில்லண்ணே......

என்னாது ஒண்ணுமில்லயா........ ஒண்ணுமில்லாதததுக்குதான் இவ்வளவு களோபரமா......

அது வந்துண்ணே....

அட. சொல்லித் தொலைக்கப்பா...என்னதான் நடக்குது...இந்த குடிகார நாட்டுல.....

ஒங்க காங்கிரஸ் கட்சி தலவரு  இருக்காருல்ல......

ஆமா,  இருக்காரு... அவருக்கு என்ன...இப்போ......

அவருக்கு ஒன்னுமில்லண்ணே......அவரு வாயல... உள்ளதை உள்ளவாறு பேசியதால்...வந்த கோளாறுண்ணே.........

ஏய......அவரு... யாரு..தெரியுமில்லே.....

அவரு.. ஒங்க கட்சி தலவருண்ணே......

 அவரு என் கட்சி தலைவரு மட்டுமில்லப்பா...... நம்ம பெரியாரு பேரனப்பா...

என்னாது..... பெரியாரோட  பேரனா.......???அவரு எப்படி காங்கிரஸ் தலவரா இருக்காரு.......

இவருடைய அம்மா..சுலோசனா..  குடி மக்களுக்கு ஊத்தி கொடுத்த கட்சியில இருந்தவருப்பா.......

ஆ.....ஆ..... அப்படியா....????

அது ஒரு பெரிய கதைப்பா....... அதவிடுங்க.....எங்கத் தலவரு என்னத்த உள்ளதை உள்ளவாறு  பேசினாரு.......!!!

வெளிநாட்டைச் சேர்ந்த உலகம் சுற்றும் பிரதமரும்,  குடி மக்களின் குடியை கெடுத்து நம்ம நாட்டை ஆளும் முதல்வரும்  விதி  முறைகளை மீறி சந்தித்து பேசினாங்களாம்.. அதைப்பத்தி பேசினாராம்...ண்ணே.....

பார்ரா...... மூடூ மந்திரமா பேசிக்கிட்டு....விளக்கமா... சொல்லுங்கப்பா......

அதாவது ண்ணே..பஜகவுக்கும். அதிமுகவுக்கும் கள்ள உறவு இருக்குன்னு
 எதுகை மோனையா பேசியிருக்காருண்ணே...

என்னது கள்ள உறவா....??.. அட அரசியலைத்தானப்பா... பேசியிறுக்காரு....இது என்னப்பா...கொடுமையா.. இருக்கு... பொது வாழ்க்கைக்குன்னு வந்துட்டாலே எல்லா அசிங்கத்தையும் பேசித்தானப்பா..... ஆக வேண்டும்...அதுதானப்பா அரசியல். திருடுறவன். என்ன நமக்கு தெரியகிற மாதிரியா திருடுவான்.. அந்தத் திருடனையும் திருட்டையும் கண்டுபிடிக்கிற த மாதிரிதானப்பா  அரசியலு.....ம்ம்....

அண்ணே... ஒங்களுக்கு தெரிஞ்சது... அந்த ரெண்டு கட்சிகாரங்களுக்கும்  தெரியலைண்ணே..... அப்படியே தோசையை புரட்டி போடுற மாதிரி புரட்டிபோட்டு...அந்த ரெண்டு பேருடைய புகழையும், பெருமையையும் கலங்கப்படுத்தியதாக கூறி..... ஒங்கத் தவைருடைய உருவ பொம்மயை  கூட்டமாக சேந்து எரிக்கிறாங்கண்ணே.......

அப்போ...நான் வர்ர வழியில.....எரிச்சது எங்கக் கட்சி தலைவருடைய உருவப் பொம்மைதானா......

அமாண்ணே...இப்ப...இதுதாணே்ணே.....நடந்துகிட்டு இருக்கு......

 எதுடா சாக்குன்னு இந்த நொண்டிச சாக்க வச்சு டாஸ்மாக் போராட்டத்த  திசை திருப்புறாங்கே......

நீங்க..... சொல்றது மாதிரிதாண்ணே.....

ஒங்களுக்கு வரலாற பத்தி  சொல்றேன் கேளுங்கப்பா.....

சொல்லுங்கண்ணே.......

முன்னால் அமைச்சரு  காளிமுத்து தெரியுமில்ல..... அதாவது... .. சீமான்னு ஒருத்தரு இருக்காருல்லே  அவருடைய மாமனாரு....அவரு.. அந்த  நடிகையை பற்றி பேசாததையா.... எங்கச் கட்சி தலைவரு பேசியிருக்காரு...
அந்த ரெண்டு கட்சிக்காரன்களும் வரலாற்றை  மறச்சு பேசுறாங்கப்பா....

அந்த வரலாறு எல்லாம் எங்களுக்கு தெரியலேண்ணே....

சரி,.... குடி மக்கள் குடியை கெடுத்து கொண்டிருக்கும் குடி நாட்டுல என்ன நடக்குதுன்னு ஒங்க மூலமா... தெரிஞ்சு போச்சு... நான் வர்ரேன்ப்பா...

அண்ணே... அந்த வரலாறுண்ணே......

இந்தா....... வந்து சொல்றேன்பா.......




செவ்வாய் 18 2015

செவ்..வாய்க்கு அடுத்தப்படியாக..........

செவ்வாய்க் கோள்
பட்ம-https://ta.wikipedia.org/..




 கொஞ்சுன்னு படித்த எனது நண்பர் ஒருவர். என்னிடம் இப்படிக் கேட்டார்.
செவ்வாயக்கு ராக்கெட்டு....  அது பேரு கூட...ம்ம் மங்கலயான் எதுக்கு அனுப்பினாங்கே........

எப்ப அனுப்பனாங்க...... அதப் போயி இப்ப கேட்குறீங்க..... கேட்டேன்.

அத எப்ப அனுப்புனா... என்னப்பா......எனக்கு தெரியும்போதுதானேப்பா கேட்கமுடியும் அத வுடு... எதுக்கு அனுப்புனாங்கே..அதச் சொல்லுஎன்றார்.

அய்யே...... அது தெரியாம.... நீ ஒரு குடி மகனா இருக்கீயப்பா.... சே... மானக் கேடுப்பா.......

இந்தாப்பா...நான் குடிமகனா இருக்கிறது. ஓனக்கு தெரியுமா....??? நீய்யும் குடிமாட்டே.... குடிக்கிறவனையும் குடிக்க் விட மாட்டுற..... அப்புறம் எப்படி குடி மகனா இருக்கிறது... சரி சரி.. சொல்லு.... எதுக்கு அனுப்புனாங்கே........

சரி...சரி....  எனக்கு தெரிஞ்ச சொல்றேன். நான் சொல்றது பேப்பர்ல எல்லாம் வராதது தெரியுமில்லே......

அடச்...சொல்லப்பா...... எதுக்கு அனுப்புனாங்கே......ன்னு

செவ்வாயிலே  குடியேறும் எதிர்கால சந்ததியினர்க்கு..நம்ம நாட்டுல மாதிரி ரோட்டோரம், கம்மாக்கரை வரப்பு வயலுகாட்டுல ..மலஜலம் கழிக்கிற மாதிரி  செவ்வாயில கழிக்க்கூடாதுன்னு..  கழிப்பறை கட்டுறதுக்கு  மங்களயான அனுப்பி இருக்காங்கப்பா.....

“நெஜமாகவா........???

“இப்படி சந்தேகப்படுவீங்கன்னுதான் நா.... சொல்லுறதே....... இல்லப்பா...

அங்கே கட்டி முடிச்சுட்டாங்களா.......????

“அங்க வேலைக்கு போனவங்கே.... இன்னும் திரும்பி வந்துட்டாங்களப்பா......???
“,வந்தாத்தான்..என்ன..பாக்க வந்துரவாங்கல்ல..............

“அப்போ...இன்னும் வேல  முடியல போலிருக்கு...”

செவ்வாய்க்கு அடுத்தப்படியா...... உங்க ஊருக்கு   பக்கத்திலே.. கப்பல் ஊரிலே   4..50 இலட்சத்திலே கழிப்பறை கட்டி இருக்காங்க.... அது தெரியுமா.. ஒனக்கு?

ஆ........ஆ....எங்க ஊரு பக்கத்திலா...????

வாய பொளக்காத...... நா... சொல்ற கேளு... கேட்டுபுட்டு ஒங்க ஊருக்கு போகும்போது  கப்பல்  ஊரில் இருக்கிற கழிப்பறையை பாரு... நா சொன்னது உண்மையா? பொய்யான்னு..... என்னப்பா....

..“.ம்ம. சரிப்பா....

அது பேரு என் வாயிலயே நுழையமாட்டுது..“ பயோ டை ஜஸ்டர் கழிப்பறை. அந்த கழிவறை கோப்பைகள் உள்ளே கீழே வடிவமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியில் ஏராளமான பாக்கிடிரியாக்கள் வளர்க்கப்படுகிறது. இந்தப் பாக்கிடீரியக்காள் சேர்ந்து மனித கழிவுகளை மட்கச் செய்து தண்ணீரை சுத்தரித்து வெளியே தள்ளும், இந்த்த் தண்ணீரைக் கொண்டு, செடி கொடிகளை வளர்க்கலாம். மேலை நாடுகளில் இந்த முறை கழிவறைகளைத்தான் அதிக அளவில் பயன் படுத்தகிறார்களாம்.  என்றபோது.

அத்தி...அய்யோ.. அந்தத் தண்ணிய வச்சு செடி கொடிய வளக்குறாஙகளா...? என்று அய்யறப்பட்டார்..

யோவ்...ரெம்பவும் அய்யரப்படாதே...... மதுரை மாநகரத்து சாக்கடை தண்ணீர் எல்லாம் அவனியாபுரம், கம்மாயில் போயி.. அங்கு விளையுற தானாப்பா... நீ சாப்புடுற... கீரை வகைகள் எல்லாம் அங்க விளஞ்சுதான் முக்கால் வாசி விற்பனைக்கு வருது .. தெரியுமா...ஒனக்கு..???

“ஏய்.... போப்பா..... அப்படி எல்லாம் இருக்காதுப்பா......

அப்படின்னா செவ்வாயில... கழிப்பறை கட்டுறதுக்குத்தான் மங்கலயான் அனுப்பி இருக்கிறதும் பொய்யா......

“அது ....உண்மையா இருக்கலாப்பா........

“அப்ப... கப்பல் ஊர்ல கழிப்பறை கட்டி இருக்கிறது...

“ நா.... ஊருக்கு போவேன்ல... அப்ப பாத்துட்டு வந்து சொல்றேன்..

“அப்பச் சரி. ஒன் சந்தேகம் தீர்ந்ததுல.... இனி நான் போகலாம்மா.....

அவர்.தாராளமாக போகலாம் என்றவுடன். வேறு ஒருவர் என்னைத் தேடி வந்து கொணடு  இருநததைக் கண்டவுடன்.. சற்றும் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.



                       .........................................................


திங்கள் 17 2015

வெறிநாய் கடியிலிருந்து உயிர் பிழைத்த முதல் மனிதனின் கம்பீர மரணம்.

Louis Pasteur.jpg
படம்-https://ta.wikipedia.org/s/13g -லூயி பாஸ்டர்

வெறி நாய்கடிக்கான தடுப்பு  மருந்தை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு மருத்துவ விஞ்ஞானி லூயி பாஸ்டர் . தான் கண்டுபிடித்த மருந்தை ஒரு மனிதனின் மீது செலுத்தி சோதித்துப் பாரப்பதில் பெரிதும் தயங்கியவர், மனித உயிரின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பிற்கு அதுவே சன்றாக இருந்த்து.

1885 ஆண்டு ஜூலை 6ந்தேதி ஜோசப் மெய்சர் என்ற 9 ஒன்பது வயது சிறுவனின் உடலில் தனது மருந்தைச் செலுத்தி,வெறி நாய்கடி நோயிலிருந்து அவனை குணமாக்கினார் லூயி பாஸ்டர்.

வெறி நாய் கடியிலிருந்து உயிர் பிழைத்த உலகின் முதல் மனிதர் ஜோசப் மெய்சர்தான். லூயி பாஸ்டர் மறைந்த பின்னும் லூயி பாஸ்டர் இறந்த பின்னும் லூயி பாஸ்டரின் ஆய்வக் கூடத்தின் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

1940-ல் பாரீஸ் நகரை ஆக்கிரமித்த இட்லரின் படை, லூயி பாஸ்டின் ஆய்வுக் கூடத்தில் நுழைந்தது. “ பிரெஞ்சு தேசத்து நாயகன்என்று மக்களால் போற்றப்பட்ட லூயி பாஸ்டரின் உடலை கல்லரையிலிருந்து தோண்டி எடுத்து , வெளியில் வீசுமாறு காவலாளி ஜோசப் மெய்சருக்கு ஆணையிட்டது இட்லரின் பாசிச படை..

பாசிஸ்டு வெறிநாய்களுக்கு அடிபணிய மறுத்த மெய்சர் லூயி பாஸ்டருடைய கல்லறையின் எதிரியிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை, களவாடி, அவற்றை முடக்கி தமது லாப வெறிக்காக  மக்களை கொல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

ஜெர்மன் நாசிகள் செய்ய முயன்ற அவமதிப்பைக் காட்டிலும். இழிந்த முறையில் அந்த மாபெரும் விஞ்ஞானியை அவமதிக்கின்றன். இன்றைய ஏகாதிபத்திய வெறிநாய்கள்....

நன்றி!  மருத்துவ அரசியல்கீழைக்காற்று வெளியீடு.

ஞாயிறு 16 2015

நீ செத்துப் போனாலும் பரவாயில்லை..வீட்டுக்கு மட்டும் திரும்பி வந்துவிடாதே...!!!!!


இந்திய விதவைகள்
படம்-www.bbc.com

நாட்டில் பெணகளின் எண்ணிக்கை
குறைந்தறகு காரணம் என்னவென்று
செல்ஃபி மோக மோடிக்கு தெரியுமா..???

விளம்பர பித்தருக்கு அதெப்படி
தெரியாமல் இருக்கும் அதனால்தான்
இண்டியன் பிரிம் மினிஸ்ட்டரின்
செல்ஃபி வித் பெண் குழந்தை

செவ்வாய்க்கு ராக்கெட் ஏவிய இந்தீ யாவில்
பெண் குழந்தைகளை கருவிலே கொல்லுவதும்
கொல்வதை தவற விட்டால் பிறநதவுடன்
கொல்வதும் நடைமுறையாக உள்ளதுக்கு
காரணம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு ???


அதற்கு முழு முதற்க் காரணம்.
காட்டு மிராண்டிகளின் மதமான
அந்த மதம்.........இந்து மதம்.

பெண்களை  ஆண்களுக்கு அடிமை ஆக்குவது
வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவது
கல்வி கொடுக்க மறுப்பது. குழந்தை
திருமணம் நடத்துவது.............

இது போக.....
கர்ப்ப காலத்தில் சத்துணவு கிடைக்காதது
பிறந்த குழந்தைக்கு ஊட்ட சத்து இல்லாதது
வறுமை கொடுமை அறியாமை இவற்றால்தான்

திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காத்தால்
பெண்களையும் விற்பனை பொருளாக்கி இருக்கிறது
குழந்தைகள் திருமணத்தால் விதவைகளின்
நிலைமை மிகவும் மோசம் அந்த மோசத்துக்கு
சாட்சி இதுதான்.----------

பீகாரில் விதவைகளை கைவிட்டுச் செல்ல ஒருகோயில் உள்ளது.அந்தக் கோயிலில் நாற்பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது.. அந்தக் கோயிலில் கைவிட்டுச் செல்லும் போது விதவைகளிடம் சொல்லும் வாசகம் இது.

நீ செத்துப் போனாலும் பரவாயில்லை, வீட்டுக்கு மட்டும் திரும்பி வந்துவிடாதே என்பதுதான்.

பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சனை. பெண்ணடிமைத்தனம் போன்றவைஃஃ இந்து மத்த்தில் மட்டுமல்ல.. முஸ்லீம் மத்த்திலும் நிறைந்து உள்ளது.

தற்போது குடி கெடுக்கும் புர்ச்சி நடிகையின் ஆளும் அரசால்..
படம்pmptn.wordpress.com




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...