பக்கங்கள்

சனி 16 2019

நினைவலைகள்-65.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் காலணிகள்



ஒரு தாயின் நிறைவேறாத ஆசை....!!!!!!!!

• அற்புதம்மாள்
பெயர் மட்டுமல்ல அவர் வாழ்வும் அற்புதமே!

28 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்

தனது மகனின் விடுதலைக்காக 28 வருடங்களாக ஓயாமல் நடக்கிறார். இப்போது தமிழக மக்களை நம்பி அவர்களின் ஆதரவு கேட்டு வருகிறார்.

மகனுடன்தான் வீடு திரும்புவேன் இல்லையேல் என் பிணம்தான் வீடு திரும்பும் என்று கூறி நடக்கிறார்.

தள்ளாத வயதிலும் கடைசி சில நாட்களையாவது தன் மகனுடன் கழித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நம்பிக்கையுடன் நடக்கிறார்.

நான் பல தடவை ரஸ்சிய நாவலான “தாய்” நாவலை படித்திருக்கிறேன். அதில் வரும் தாய் போன்று எம் தமிழ் மக்கள் மத்தியில் ஏன் ஒரு தாய் இல்லை என்று ஏங்கியிருக்கிறேன்.

ஆனால் அற்புதம்மாள் வரலாற்றை அறிந்த பின்புதான் எனக்கு தெரிந்தது எம் மத்தியிலும் அற்புதமான தாய் உண்டு என்று.

ஆனால் அதை எழுதுவதற்கு ரஸ்சிய தாய் நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி போன்ற எழுத்தாளர் எம் மத்தியில் இல்லை என்று.

கார்க்கி கூறகிறார் “கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவுவதே இலக்கியத்தின் பணி” என்று. அதனால்தான் அவரால் தாய் போன்ற அற்புதமான நாவலை படைக்க முடிந்தது.

ஆனால் எமது தமிழ் இலக்கிய ஜம்பவான் என்ற ஜெயமோகன் கூறுகிறார் “ ஈழத்தில் நடந்தது இன அழிப்பு இல்லை. அது ஒரு ஆயுத குழுவை அரசு செய்த வெறும் அழிப்பே” என்று.

இப்படிப்பட்டவர்கள் தமிழ் இலக்கியவாதிகள் என்று இருக்கும்வரை எப்படி எம் தாய் அற்புதம்மாள் இலக்கியமாக வரலாற்றில் வர முடியும்?

விசாரித்துவிட்டு உடன் அனுப்பிவிடுகிறோம் என்று பேரறிவாளனை கூட்டிச் சென்றவர்கள் 28 வருடமாக இன்னும் விடவில்லை.

சட்டம் விடுதலை செய்யும் என்று நம்பினார். ஆனால் நடக்கவில்லை

உச்சநீதிமன்றம் விடுதலை செய்யும் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.

தமிழக அரசு விடுதலை செய்யும் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.

ஆளநர் விடுதலை செய்வார் என நம்பினார். ஆனால் நடக்கவில்லை.

பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதினேன் என்று விசாரணை செய்த அதிகாரியே கூறிய பின்பும்கூட விடுதலை செய்யப்படவில்லை.

எனவேதான் Nவுற வழியின் மக்களை நம்பி அந்த வயதான தாய் நம்பிக்கையுடன் வருகிறார்.

ஆம். தமிழக மக்களால் மட்டுமே பேரறிவாளனை விடுதலை செய்ய முடியும்.

வியாழன் 14 2019

நினைவலைகள்-64.

இந்து..இந்தி..இன்டியா.......வில்!!!!!





பல்வேறு மதங்களும்
பல தரப்பட்ட
சாதிகளும் நிறைந்த
இந்து இந்தி
இந்தீயாவில் முதல்
மதம் சாதி
அற்ற முதல்
பெண் தான்தான்
என்று நம்பாத
மனிதர்களுக்கு  அதையும்
அரசு சான்றிதழ்
பெற்று காட்டிய
முதல் பெண்.




புதன் 13 2019

நினைவலைகள்-63.



ஒரு பாடகரின் பாடலுக்காக தடை செய்யப் பட்ட ஒரு மாநாடு


அந்தப் பாடகர்

கோவன் க்கான பட முடிவு




அந்தப்பாடல்........








உலகத்திலே பெரிய சிலை படேலு..............


செவ்வாய் 12 2019

நினைவலைகள்-62.

நீண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண்..!!!!
மண்டேலா க்கான பட முடிவு

நெல்சன் மண்டேலாவுக்கு பின் நிண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண் யார் என்று தெரியுமா..?  கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.. படியுங்கள் தெரியும்....


ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்குவதில் கில்லாடியான சிபி ஐ அதிகாரியான தியாகராசனால் சித்ரவதைப்பட்டு குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவர் அவர்.

தடா சட்டத்தின்படி பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே சான்றாக வைத்து செய்யாத குற்றத்திற்க்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் இவர்.

மாணவிகளை பஸ்ஸிலே கொளுத்தியவர்கள் எல்லாம் விடுதலையாகி இருக்கும்போது.. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்.  அந்தப் பேயை விட  கொடுமையானவர்களின் கொடுங்கதைதுக்கு நீதி இன்னும் நீதிதான் கிடைக்கவில்லை...

நளினி க்கான பட முடிவு

திங்கள் 11 2019

நினைவலைகள்-61.

உலக கம்யூன்ஸ்டுகளை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திய தோழர் லெபா ராடிக்காவின் வாசகம்.....

தோழர் லெபா ராடிக்.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற வீரம் நிறைந்த  யுகோஸ்லோவாகிய இளம் பெண் தோழர்.

17 வயதே ஆன இளம் பெண் தோழரான அவரை 1943ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ந்தேதி நாஜிப்படையினர் தூக்கலிட்டு கொன்றனர்.

அவரை தூக்கிலிடுவதற்கு முன்பு நாஜிப்படை அதிகாரி ஒருவன் தோழர் லெபா ராடிக்கு ஒரு சலுகையை அறிவித்தான். அந்தச் சலுகை என்னவென்றால்.. அவரது சக போராளிகளைப் பற்றிய தகவல்களைச் சொன்னால் மரணதண்டனையை தவிர்த்துவிடுவதாக உயிர் ஆசையை காட்டினான்.

ஆனால் அவரோ உலகெங்கும் உள்ள எல்லா உண்மை கம்யூனிஸ்டுகளைப்போலவே வீரத்துடன் அந்த உயிர் சலுகையை மறுத்தார். எக்காரணத்தைக் கொண்டும் தனது சக தோழர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக மறுத்து நின்றார்

அவர் கூறிய வாசகம் உலக கம்யூன்ஸ்டுகளை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தும் ஒன்றாகும் .

“எனது மரணத்திற்கு
நீதி கேட்டு
எனது தோழர்கள்
வருவார்கள்.. ......
அப்போது அவர்களே
தங்கள் பெயர்களை
உங்களுக்கு சொல்வார்கள்.”

இத்தகைய மகத்தான வீரத்தை வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்தார் தோழர்
மரணத்தை கண்டு பதறாமல் பயப்படாமல் அதை எதிர்கொண்ட தோழர் லெபாவின் வீரம் கம்யூன்ஸ்டுகளின் பொதுவான குணாம்சமாகும்


#Red_Salute_Comrade_Lepa_Radic
இணைப்புகளின் பகுதி

ஞாயிறு 10 2019

நினைவலைகள்-60.

பொய் வழக்கில் கைது 
செய்யப்பட்ட உரிமைச் 
செயற்பாட்டாளர்களை 
விடுதலை செய்யக் கோரி 
மதுரையில்  பிப்ரவரி 08, 2019
 வெள்ளிக்கிழமை அன்று 
மாலை 05:00 மணியளவில்
மக்கள் சிவில் உரிமைக் கழகம் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 
இணைந்து நடத்திய  கண்டனக் 
கூட்டத்தில் கூட்டத்தோடு
ஒருவனாக.. நானும்..............









ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...