பக்கங்கள்

வியாழன் 19 2017

டீ வித்தவரை சந்தித்த டீ ஆத்தினவரு....!!!!!!!

அண்ணே....தெரியுமா...சேதி....?

என்ன சேதி..யப்பா....??

அதாண்ணே..டீ ஆத்தினவரு..... டீ வித்தவருகிட்ட  போனது...ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்க போகலையாம்......???

பின்ன...எதுக்கு போனராம்....

டீ வித்தவரு... மிச்சர் வைத்திருக்காராம்..... அதை கொரித்து பார்த்து வாங்கத்தான்  போனராம் அண்ணே......

இதுக்கா  டீ ஆத்துனவரு...அம்புட்டு தூரம்.. டீ விக்கிறவருகிட்ட போயிருக்காரு... மெரினா பீச்சுக்கு போயிருந்தா...உடனே கிடச்சிருக்குமேயப்பா.....

என்ன செய்யிறது.அம்புட்டு அறிவு இருக்கு...

பிறவு டீ வித்தவரு  என்ன சொன்னாரு.....  

ஜல்லிக்கட்டு.. வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது..தற்போது எதுவும் செய்ய முடியாதுன்னு கையை விரித்து விட்டாராம் அண்ணே...

பாபர் மசூதி வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கும்போது ரத யாத்திரை நடத்தி பாபர் மசூதியை இடித்தபோது  இந்த அறிவு இல்லையான்னு டீ வித்தவரு கேட்கலையா..யப்பா.....


அந்த அறிவு..டீ வித்தவருக்கு இருந்தா.. நீங்க  சொன்ன மாதிரி... அங்க போயி மிச்சர் வாங்க போகாம... மெரினா  பீச்சுக்கு போயிருக்க மாட்டாரா ண்ணே...

ஆமாமப்பா... புத்தியில்லாதவிங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவங்க  எப்படி இருப்பாங்க..அவிங்கள மாதிரிதானே இருப்பாங்க......

IMG_20170119_233439_288.jpg ஐக் காண்பிக்கிறது


புதன் 18 2017

ஜல்லிக்கட்டு...போராட்டம் வெற்றி பெறுமா...???

என்ன நண்பரே... போராட்டம் வெற்றி பெறுமா...?

எந்தப் போராட்டம் நண்பரே....??

சரியாப்போச்சு.... நீங்க  எந்த ஊருல..இருக்கீங்க...!

அட..நா..எந்த ஊருல இருக்கிறேன் என்பது உங்களுக்கு சந்தேகமாயிடுச்சா.....!!

பின்னே..ஊரே...நாடே..அல்லகோலபட்டுகிட்டு இருப்பது தெரியாமல்  இருந்தால்.. இப்படித்தான்  சந்தேகம்  வரும்,...

சாரி... மன்னிச்சுடுங்க..எதோ  ஒரு ஞாபகத்துல  இருந்துட்டேன்... ஆமா... மொத மொதல்ல  என்ன கேட்டீங்க.....

ஓ...... அதுவா...சுரைக்காயிக்கு உப்பு இருக்கான்னு கேட்டேன்.

என்னது சுரைக்காய்க்கு உப்பு..இருக்கா....!!!

அதான் முன்னாலயே..கேட்டேன்ல... நீங்க  எந்த ஊருல  இருக்கீங்கன்னு.....

நா...ன் எந்த  ஊருல இருக்கிறேன்னு கண்டுபிடிக்கிறது இருக்கட்டும் நண்பரே..... பத்து இலட்சம் பெருமானமுள்ள கோட் அணிந்திருந்த  நபர்... எந்த நாட்டுல  இருக்காருன்னு கண்டுபிடிங்க மொதல்ல.....

அவர  கண்டுபிடிச்சு......

அவர கண்டுபிடிச்சா.... சுரைக்காய்க்கு உப்பு இருக்கா..இல்லையான்னு சட்டு புட்டுன்னு சொல்லியிருவாருல்ல.....

அடேங்கப்பா..... கொம்ப விட்டுபுட்டு..வால  புடிச்ச கதையாவுல இருக்கு....

இப்ப...நாட்டுல..அதுதானே..நடந்தகிட்டு இருக்குது......

என்ன நடந்துகிட்டு....இருக்கு....

ஜல்லிகட்டு போராட்டம்....

வந்திட்டிங்க  வழிக்கு... ஆமா..ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுமா...?

அத  எப்படி..என் ஊத்த வாயால.... சொல்லுவேன்...

பரவாயில்லை நண்பரே..அந்த ஊத்த வாயாலதான்  ஓட்டு வாங்கிப் போனவர்கள்  பாலாறும் தேனாறும் ஓட வைப்போம் என்று வாக்குரிதி அளித்தார்கள்..

அவர்களின் ஊத்த வாயால்..வாக்கரிசி அளித்ததால்தான்  தேனாறும் பாலாறும் ஓடவில்லை...நண்பரே....

நீங்கள் என்ன வாக்கரிசியா போடப் போகிறீர்கள்..நாட்டு நடப்பைத்தானே சொல்வீர்கள் .... நீங்கள சொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை...சும்மா சொல்லுங்கள்....ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுமா....???

நேரிடையாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்...அதாவது.. பத்து இலட்சம் விலை மதிப்புள்ள கோட்டு அணிந்தவரு பிரதமார இருக்கும் நாட்டின் இராணுவத்தின் தரைப்படையானது உலகிலேயே பெரிய படையாகும். இந்த தரைப்படையின் எண்ணிக்கை உலகிலயே  மூன்றாவதாக உள்ளது.. இந்த இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக உள்ளது...அன்றைய ஆங்கில படை போராடும் மக்களை என்ன செய்தது..  இது போக  தமிழ்நாட்டு போலீஸ்படையானது..அது தோன்றிய காலத்திலிருந்தே. ம மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், லஞ்ச ஊழல் பரவல், அரசியல்மயமாக்கம் எனபதில் தொடங்கி..இதுவே ஒரு  கட்டப் பஞ்சாயத்து  அதிகார மன்றமாக  பீடு நடை போட்டு வருகிறது..தற்பபோது செத்துப்போன ஒரு புன்னியவதியின் முதல் செல்லப் பிள்ளையாக இருந்தது  தெரியுமா...?  இது எப்படி....?????..... அம்புட்டுத்தான்...


தலையும் இல்லாமா  வாலும் இல்லாம இப்படிச் சொன்னா  நா..... எப்படி புரிந்து கொள்வது....



யோசிங்க... புரியும்...   கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்னிங்களே..கொம்ப விட்டுபுட்டு வாலப் புடுச்ச கதையின்னு அந்தக் கதை மாதிரிதான் நண்பரே.. யோசியுங்கள்  புரியும்  நண்பரே..



செவ்வாய் 17 2017

எல்லாம் நிறைந்த தமிழ்நாடு.......

அய்யா.... வணக்கம்....... நான்  யாருன்னு தெரியுதுங்களா...அய்யா...?

வணக்கம்...வா...வா.... நல்லா இருக்கியா...???

நான் யாருன்னு சொல்லவே இல்லையே.... அய்யா.........

என்  மகனோட... நண்பனய்யா.... உன்னை மறக்க முடியுமா...?

அய்யாவுக்கு நிணவு தப்பல.... நல்லா  இருக்கீங்க...மகிழ்ச்சி  அய்யா....


நல்லது  நீ நல்லா..இருக்கேல்ல........ அவன பாத்தீட்டியா.........

பாத்திட்டேன் அய்யா...அவரையும் வீட்டில் உள்ள அனைவரையும் பாத்திட்டுதான் உங்களை பார்க்க வந்தேன்  அய்யா....


உங்க ஊருல.... இப்பவும் ஜல்லிக்கட்டு நடக்கலயே  அய்யா.....

ஆமய்யா போன வருசம் நடக்கால.... அதனால வெள்ளாமையும் இல்ல மழையும் இல்ல.... இந்த வருசமும் நடக்கலயா..தமிழ்நாடு.அவ்வளவுதான்.....

அப்படி எல்லாம்  ஒன்னும்  ஆகாதுங்க அய்யா.... நம்ம நாடு எல்லாம் நிறைந்த தமிழ்நாடு அய்யா....


???........ எப்படி எத வச்சி...அப்படி சொலற  அய்யா....

அதாங்கய்யா... உங்க ஊருல ஜல்லிக்கட்ட நடத்தச் சொல்லி  போராட்டம் நடக்குது. அந்த ஜல்லிக்கட்ட நடத்தவிடாம தடுக்கிறதுக்கு ஒரு மாட்டுக்கு பத்து போலீஸ் வீதம் காவல் இருக்குது....

ஆமா.... எம் மருமகன் வீட்டுக்குகூட போலீஸ் இதுக்குத்தான் வந்திருக்காங்கே.....


ஜல்லிக்கட்ட தடையை நீக்கி சொல்லி தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் போராட்டம் நடக்குது.....இதுக்கு இடையில  எம்ஜியாரு பொறந்து நூறு வருசம் அச்சுன்னு...அந்தாளுக்கு ஊருக்கு ஊரு விழா கொண்டாட்டம நடக்குது..... சசிகலாவுக்கு போட்டியாக... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் களத்துல குதித்து போராடாடுது... எது நடந்தாலும் எங்களுக்கு என்னடான்னு ஒரு கூட்டம் திருவையாறுல....திியாகராசரு பேரச் சொல்லி  பாட்டுப்பாடி குதுகாலிக்குது.....அங்க ஒருத்தன் காவிரியல தண்ணி விடமாட்டுறான்.. மேற்கே ஒருத்தன் வர்ர தண்ணிய மறிச்சு புதிதாக அனை கட்டுறான் அய்யா .இப்படி ஒவ்வொன்னா பலதும்  நம்ம நாட்டுல நடக்கிறது அய்யா சுருக்கமாக சொல்வதென்றால் பஞ்சமும் பவிசும் எல்லாம் நிறைந்த தமிழ்நாடு  அய்யா.....

ஹா.....‘ஹா.....ஹா..... எல்லாம் நிறைந்த...தமிழ்நாடா.....ஹா....ஹா...ஹா..


 சரி....சிரிச்சிட்டுகிட்டே   யோசிங்க...அய்யா.... அடுத்து வரும்போது ஒரு சம்பவத்த  எனக்கு சொல்லுங்க.....நா....வர்ரேன் அய்யா.....


திங்கள் 16 2017

ஜல்லிக்கட்டு தடையை உடைப்பதை காணச் சென்ற கதை,

ஜல்லிக்கட்டு தடையை உடைக்க.. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு..முன்னமே நடக்கும் போராட்டத்துக்கு போக வழி பிறக்காததால்.... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவின் தடையை   தமிழ்மான வீரர்கள் உடைப்பதை காண  செல்ல வேண்டும் என்று முந்தின இரவே முடிவு எடுத்துவிட்டதால்...

வழக்கமாய் எழுவதற்கு முன்னமே அதாவது ஏழு மணி ஆக... அய்நது நிமிட வாக்கில் எழுந்து. சாமி கும்மிட்டு பின்  .பல் துலக்கி முகம் கழுவி  விட்டு தலைக்கு சிறிது எண்ணெயை தடவி சீவி விட்டுக்கொண்டு பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது.... அலங்காநல்லூர் மற்றும் அதன் வழியாக போகும் ஒரு பஸ்சும் வரவில்லை....... காவல் வீரர்கள் முன்கூட்டியே நிறுத்தி விட்டுருப்பதாக  படித்த செய்தி பிறகுதான் நிணைவுக்கு வந்தது.

அதன் பின் யோசிக்காமல்..ஆட்டோவில்  ஏறிச் சென்ற போது....சிக்கந்தர் சாவடிக்கும்  பா..சிங்கா புரத்துக்கும் இடையில்  போலீஸ் படை வீரர்கள் தடுத்தனர். டூவிலர் சென்றவர்கள் அனைவரும் வழி மறிக்கப்பட்டு அவர்களின்  ஓட்டுனர் உரிமத்தை காட்டச் சொல்லி...அதில்  அவர்கள் அலங்காநல்லூர் பக்க ஊராக இருந்தால் அனுமதிப்பதும் மதுரை மற்றும் வேறு ஊர்ராக இருந்தால் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பவுதுமாய் இருந்தார்கள்...

இதன் மாதிரியே... ஆட்டோவில் சென்றவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் கடமை வீரர்கள்....பின்னர்  கடமை வீரர்களுடன் அவனியா புரத்தில் மோதிய இயக்குநர் கௌதமன் மாதிரி மோதி கடமை வீரர்களிடம் அடிவாங்க   விரும்பாமல்  வேறு வழியாக சென்று  அலங்காநல்லூருக்கு சற்று தூரத்தில் வாடிப்பட்டி சாலையில் இறக்கி விடப்படடு   அலங்காநல்லூரின் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கி நடை பயிற்சியில நடந்து வந்தேன்...


வரும் வழியில்...நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமுல் படுத்தும் கடமை வீரர்கள்......  தூணிலும் துரும்பிலும்மாய் இருப்பதும் அந்த நரசிம்மரே வாயில் விரல் வைக்கும் அளவுக்கு அவர்கள் சந்து பொந்து, இடுக்கு,சொடுக்கு எல்லாம் நிறைந்து இருந்து.. எல்லாம் வல்ல அவன் போட்ட உத்தரவை நிறைவேற்றிக் கொண்டு இருந்தனர்... ..

வாடி வாசலுக்கு அருகில்  முழக்க..சத்தமும் விசில் சத்தமும் கேட்டது... அங்குதான் ஜல்லிக்கட்டு தடையை உடைப்பவர்கள்  குழுமி இருந்தனர்  அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டார்கள்.. என்பது தெரிந்தது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல்...அந்த புல்லு இல்லீங்க...இது வேறங்க....முழக்கமிட்டு கூட்டமாய் கூடியிருக்கிற இடத்துக்குச் செல்ல... சாக்கடைபாதை  வழியாக சென்று அடையு.ம் வழி கிடைத்தது அந்த வழியாக சென்று குழுமியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக நின்று கொண்டு, தமிழ்மான வீரர்கள் தடையை உடைப்பதைக் காண ஆவலோடு காத்திருந்தேன்..


கூட்டத்தின் நடு மத்தியில்  உள்ள கூட்டம் முழக்கம் போட, அதையொட்டி அடுத்த கூட்டத்தினரின் கை தட்டலும் அதனைத் தொடர்ந்து விசில் சத்தமும்
காதை பிளந்தது எனபதைவிட  வின்னைப் பிளந்தது... கூட்டத்தில் தாடி வைத்து மஞ்சள் கலர் சட்டை போட்ட ஒருவர் கூடி நின்ற கூட்டத்தை உட்காரச் சொல்ல...  கூட்டத்தில் நின்றவர்கள்  சாமி கும்பிடுவது போல் உட்கார   சிறிது நேரத்தில் வேறு பக்கத்தில்  முழக்கமும் விசில் சத்தமும் வின்னைப்பிளந்தது..

இந்த நேரத்தில் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்த்திருந்த  விவசாய சங்கத்தலைவர்   பாண்டியன் என்பவரும் இன்னொருத்தரும் பேச முயல...
வேறு பக்கத்தில்  முழக்கமும் விசில் சத்தத்துடன் கூட்டத்தில் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது... அந்த களோபரத்தில்... விவசாய் சங்கத் தலைவர் பேசாமல் நகல..திரும்பவும் அந்த மஞ்சை சட்டைக்காரர்..கூட்டத்தினரை ஊட்கார சொல்ல... முன் நின்ற கூட்டம் வேண்டா வெறுப்பாக உட்கார.. மஞ்சை சட்டைக்காரர்  படமெடுத்துக் கொண்டு  இருந்த புதிய தலைமுறை  செய்திஒளி  ஒலி பதிவாளரை எதோ  சொல்ல... ஒளிப்பதிவாளர்க்கு அருகில் இருந்த கூட்டம் அவரைப்பார்த்து  கத்தியது...

வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து முழக்கமிட முயன்றபோது... எந்த அரசியலும் வேண்டாம்..எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் என்று கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தவர்கள் கத்த  கூடியிருந்த கூட்டமும் ஓ......ஓ.....ஆ...ஆ... வென கத்தியது..... இந்த  ஓஓவையும்...ஆ...ஆவையும் எப்படி எடுத்துக் கொளவது என்று தெரியவில்லை.... 


முழக்கமும் கைத்தட்டலும் விசில் சத்தமும் நடைபெற்று இருக்கையில் வீட்டு மாடியில் நின்ற ஒருவர்.... ஏய்...ஏய....மெயின் .. ரோட்டுல.... போலீஸ்காரங்க.. தடியடி நடத்திராங்கே...என்ற தகவலை அறிவித்தார்...

இப்படியாக தடையை உடைக்கும் ..நிகழ்ச்சி களைகட்டி கொண்டு இருக்க கூட்டத்தோடு கோஷமிட்ட எனக்கு தண்ணி தாகம் எடுத்தது.. தண்ணீர் தேடியபோது ஒருவீட்டின் நாலைந்து குடங்களில் தண்ணீரும்.. பல டம்பளர்களும் வைத்திருந்தனர்.. அந்தக் கூட்டத்துக்குள் தண்ணீர் குடித்துவிட்டு  திரும்பவும் தமிழ் உணர்வாளர்கள் தடையை உடைக்க போகும் காட்சியை காண ஆவலாய் இருந்தேன்...

வழக்கமான காட்சிகளாய் இருந்தாலும் நிகழ்ச்சியில் புதிதாய் பெண்களும் முன் வந்து  முழக்கமிட்டார்கள்... கூட்டத்தில் பெரும்பாலனோர்  தங்களின் செல்போனில் படம் பிடிப்பதும்..தங்களை மற்றும் நண்பர்களுடன் செலஃபி எடுப்பதும்மாய் காட்சி அளித்தனர்.. மணி ஒன்னை நெருங்கிக் கொண்டு இருந்தது.... மேற்ச்சொன்ன கா்டசிகளே...நடந்து கொண்டு இருந்தது...



தமிழ்மானவீரர்கள் தடையை உடைப்பதாக தெரியவில்லை... நேரங்கழித்து தடையை உடைப்பார்களா  என்றும் தெரியவில்லை... பசியும் எடுத்தது... பசியை அடக்கவும் தாகத்தை போக்கவும் அருந்திய தண்ணீரும் பாட்டுப்பாட என்னை நெருக்கியதால் மதியம் இரண்டு மணி வாக்கில்  தமிழ் மான வீரர்கள் ஜல்லிக் கட்டு தடையை உடைப்பதை பார்க்க முடியாமல் வெளியேறி விட்டேன்...

வீட்டுக்கு வந்தப் பிறகு தடையை உடைத்தார்களா...? என்பது தெரியவில்லை...ஆனால்  நடந்த நிகழ்ச்சியை பார்த்த காட்சியில் இருந்து ஒன்று மட்டும் எனக்கு தெரிந்தது.... அவர்களால் ஜல்லிக்கட்டு தடையை அவர்களாலும், அவர்களின் விசில் அடிச்சான் குஞ்சுகளாலும் உடைக்க முடியாது...  உடைப்பதற்க்கான எந்தவித அஸ்திவாரமும் பலமும் அவர்களிடம் இல்லை .என்பதுதான்.... 





ஞாயிறு 15 2017

மணி....பைத்தியமான கதை,

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவன்  அ்லல மணி. உறக்கம் வந்து உறங்கி விடக்கூடாது என்பதற்க்காகவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான்..கையில் கட்டியிருந்த இரவிலும் மணி பார்க்கும் ரேடியன் கடிகாரத்தில் அவ்வப்போது மணியை பார்த்துக் கொண்டான்.  கடைசியாக அவன் எதிர்பார்த்த நேரம் பணிரெண்டைத் தாண்டியதும்...

தலைக்கு அடியில் இரண்டு கைகளையும் முட்டுக் கொடுத்தபடியே, சற்று தள்ளி படுத்திருந்த தன் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு அருகில் படுத்திருந்த தனது மூன்று பிள்ளைகளையும் பார்த்தான். அந்த இருட்டிலும் அவர்கள் நன்றாக உறங்கி கொண்டு இருப்பதை கவனித்தான்.

மூன்றாவது பிள்ளை பிறந்ததிலிருந்து. அவன் மனைவி அவனுடன் படுக்கையில் சேர்வதை தவிர்த்துவிட்டாள. பலமுறை அவன் முயன்றும் அவள் அவனை  தன்னுடன் படுக்கையில் ஒட்டவிடுவதில்லை... சண்டையிட்டும், அதட்டிப் பார்த்தும் கெஞ்சி பார்த்தும் தவம் கிடந்தும். அவன் மனைவி அவனுக்கு தேக சுகம் கொடுப்பதை மறுத்தே வந்தாள். இத்தனைக்கும் அவள் குடும்பக கட்டுப்பாடு செய்தும். உடலில் நோக்காடும் இல்லாமால்தான் இருந்தாள்... மூன்று பிள்ளைகுளக்கு பின் என்ன வேண்டி கிடக்கு என்று நாளாடைவில் அவனுக்கு நிரந்தர  தடையும் போட்டுவிட்டாள்...

வேறு யாருடனாவது தொடர்பில் இருப்பாளோ என்று சந்தேகம் கொண்டு, அதை கண்டுபிடிக்க பெரு முயற்சி செய்தும் அவனால் ஒரு துறும்பைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொள்ளவும்  முடியவில்லை.. இரகசியமாய்  ஒரு உறுப்படியை தேடிக் கொள்வதற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு இருந்த நேரத்தில்தான்....


அவன் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு குடி வந்தார்கள் செல்ல முத்துவும் அவன் மனைவி முத்துமாரியும்...அவர்கள் வந்த புதிதில் அவர்களை மணி கண்டு கொள்ளாமல் இருந்தான். சில நேரங்களில் தவிர்க்க முடியாமல்  மாரியை கவனித்தபோது அவள் இவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள். ஒருநாள் மனைவியிடம் பேச்சு வாக்கில் மாரியைப் பற்றி விசாரித்து.மாரிக்கு பிள்ளை இல்லை என்ற விபரம் தெரிந்து கொண்டதும். தன் பார்வையை அவள் மேல் செலுத்தினான்.. முத்துமாரியம்மாள் மணியின் காமம் பார்வையைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொள்வாள். இவனும்  யோக்கியவான் போல பல மாதங்களாக காய் கனிவதற்க்காக தவம் கிடந்து காத்துக் கிடந்தான்..

அத்து மீறாமல் தவம் கிடந்து காத்து இருந்ததால் அவனுக்கு  கைமேல் பலன் கிடைததது. அவள் அவனுக்கு உயிர்க்கு உயிரான காதலியானாள்.அவன் வுிட்டுக்குச் சென்று அவனின் பிள்ளைகளை தூக்கி வைத்திருக்கும் சாக்கில் அவர்கள் காதல் வளர்ந்தது. அவன் மனைவியின் செயலையும் புரிந்துகொண்டவள் அவனுக்கு தேக சுகம் தரவும் முடிவெடுத்து அவனுக்கு தன் சம்மதத்தை தந்தாள். முதல் நாளில் ஒரு நாள் ..அவனை யாருக்கும் தெரியாமல்  இரவு தன் வீட்டுக்கு வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்

மணி ஒன்னைக் கடந்தது. மெதுவாக எழுந்தான். கதவின் தாழ்ப்பாழை சத்தம் வராமல்   திறந்தான். பின் திறந்த கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு. தெருவை நோட்டமிட்டபடி வாசலில் கிடந்த செருப்பை காலில் மாட்டியவன் யோசனை வந்தவனாக தன் தலையில் தானே செல்லமாய் தட்டிவிட்டுக் கொண்டு  காலில் மாட்டிய செருப்பை கழட்டி ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செருப்பில்லாமல் தெருவைக் கடந்து பிரதான ரோட்டுக்கு சென்றான்.  

அங்கு வரிசையாக நின்றிருந்த  ட்ரைசைக்கிளில்களில் இழுத்து போர்த்தி படுத்துக் கிடந்தவர்களில் பலரை ஒவ்வொருவராக நோட்டமிட்டான்.. அதில் ஒரு உருவத்தை பார்த்ததும்  சந்தோசம் அடைந்தான். திரும்பவும் தெருவுக்குள் வந்தான்.தன் வீட்டருகில் சற்று நேரம் நின்று சுற்றும் பார்த்தான். மெதுவாக அவன் கால்களிலிருந்து சத்தம் வராத அளவுக்கு எதிர்வீட்டை நோக்கிச் சென்றான்

கதவைத் தொட்டதும்  முன்பே பேசியிருந்த படி..கதவு தானாக திறந்தது. . மணி உள்ளே நுழைந்த மறுகணம் இரு கைகள் அவனை இழுத்து தழுவிக் அணைத்துக் கொண்டது. அங்கேயும் சத்தமில்லாமல  கதவின் தாழ்ப்பாள் போடப்பட்டது.

அவன் அவளை அணைத்தபோது. ஏன் ? இவ்வளவு நேரம் என்று அவள் கேட்டபோது.... அவளின் கனவன்  வெளியில்  படுத்திருப்பதை உறுதிப்படுத்தியபின் வந்தததை சொன்னான்.

சத்தம் எதுவும்  கேட்காமல் இருந்த சிறிது நேரத்திற்குப்பின். முத்தமிடும் சத்தம் கேட்டது... நெடு நாட்களாக தேக சுகம் கிடைக்காமல் தவியாய் தவித்துக் கொண்டு  இருந்த அவர்கள் இருவரும்  பயத்தையும்.கூச்சத்தையும் ஒதுக்கிவிட்டு தேக சுகத்தில் முழ்கினார்கள்...

ரேடியன் கடிகாரத்தில் மணி மணியைப் பார்த்தபோது மணி நான்கை நெருங்கிக் கொண்டு இருந்தது. அவள் காதில் மணி நாலு ஆச்சு என்றான்.

மெல்ல எழுந்தவள். கதவைத் திறந்து வெளியே வந்தாள். வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழிக்கும் சாக்கில்.நின்று கொண்டு சுற்றும் முற்றும் கவனித்தாள்.  பின் திரும்பி வந்து. அவனுக்கு முத்தங்கள் கொடுத்து கவலைப்படாதே நான் இருக்கிறேன் நாளைக்கும்..வா...என்று சொல்லி விடை கொடுத்தாள்.

திருடனைப் போலவே..சத்தமில்லாமல் தன் வீட்டிற்குள் வந்தவன்  நல்ல பிள்ளையாக அமைதியாக படுத்து கொண்டான்.

இப்படியான இருவர்களின் நடுஇரவு திருட்டுக் காதலானது  மாரியின் கனவன் செல்லமுத்து  பக்கத்து ஊரு நாட்டாமைக்காரரின் பிளாட் போட்ட இடத்துக்கு காவல்காரனாக வேலைக்கு போகும்வரைக்கும் யாருக்கும் தெரியாமால் எவ்வித சிக்கல் இல்லாமல்  நடந்து வந்தது..

செல்ல முத்து. நாட்டாமையின் இடத்துக்கு காவல்காரனாகவும் அவன் மனைவி முத்துமாரி நாட்டாமை வீட்டுக்கு வேலைக்காரியாக போன காலம் முதல்.. மணி காதல் சோகத்தில் ஆழ்ந்தான்.மாரி இவனை விட்டு பிரியமனமில்லாமல் பிரிந்தாள்.. பல நாட்கள். பலமறை மாரியை தனியே சந்திக்க முயன்றும் முடியாததால் தாடிமீசையுடன் பார்ப்பதற்கு அசிங்கம் பிடித்தவனாக காட்சியளித்தான். அவன் மனைவியும் உற்றார் உறவினர் நண்பர்களும் தாடி மீசையை எடுக்கச் சொல்லியும்  எடுக்காமல் அலைந்தான். வேலைக்கு செல்வதையும்  விட்டொழித்தான். .. 

கடைசியில் மாரியின் கனவன் செல்ல முத்து இறந்த பிறகு,தன்னைத் தேடி முத்துமாரி வருவாள் என்று பெரும் நம்பிக்கையுடன் இருந்தான்.. பின்னாளில் அவள்... நாட்டாமையின் தொடுப்பாகவே மாறி விட்டதை மணி  அறிந்ததும். மனம் வெதும்பி   பையத்தியமாக மாறி  ஊர்  ஊராக அலைந்து திரிந்தான். ஒவ்வொறு ஊர் பக்கம் செல்லும்போது இரக்கப்பட்ட சாராயக் குடி மக்கள் கொடுப்பதையும் வாங்கி குடித்துக் கொண்டு சாராயக் கடை மற்றும் டீக் கடைகளிலே   காணப்பட்டு வந்தான்....்்் 




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...