பக்கங்கள்

சனி 03 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1)

படம் சித்திரவீதிக்காரன்.














முன்கதை---
                       


இன்ஸ்பெக்டர்தான் இருக்காருல சார், அவர பார்க்கிறேன் சார். என்றபோது,

நீயா....நேரடியா..கொடுத்தா.....எங்கள சத்தம் போடுவாறீய்யா.... பொறு நான் கேட்டு வந்து சொல்றேன் என்றார் ரைட்டர்.

அரை மணிக்கு மேல் காத்திருந்த அவர். மீண்டும் ரைட்டரை பார்த்து,”சார்,என்றார். பொறு...பொறு.....இன்ஸபெக்டர் பேசிக் கொண்டு இருக்கிறார்.  என்றார் ரைட்டர்.

இனஸ்பெக்டர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.  பொறுமையுடன்  போலீஸ் நிலையத்துக்கு வெளியில் வந்து நின்றார். வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் இவரை இன்னும் ஓரமாக நிற்கச் சொன்னார்.

அப்போது. புத்தம் புதிய கார் ஒன்று போலீஸ் நிலையத்துக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து வெள்ளையும் சொள்ளையமாக தடித்த வர்கள் நான்கு பேர்கள் இறங்கினார்கள். இறங்கியவர்கள்.  நேராக இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றனர். போனில் பேசிக்கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் முகம்மலர அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ,எதிரே இருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி அமரச் சொன்னார்.

வந்தவர்களும் முக மலர்ச்சியுடன் நாற்காலியில் அமர்ந்து இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவை வாங்கி படித்து பார்த்த இன்ஸ்பெக்டர்.. படித்து முடித்துவிட்டு அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

வெளியே நின்று இவற்றையெல்லாம்  கவனித்துக் கொண்டு இருந்தவருடன்  புகார் கொடுக்க வந்த  மேலும் சிலரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்..

வெள்ளையும் சொள்ளையுமானவர்கள் வந்த காரியம் முடிந்துவிட்ட திருப்தியில் காரில் ஏறி மறைந்து விட்டனர். ரைட்டரை பார்த்தபோது வயர்லெஸ்ஸில் ஓவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ரைட்டர் ஓவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்து. பின் மெதுவாக அவர் மேஜைக்கு அருகில் சென்றார்.

ஏறெடுத்து பார்த்த ரைட்டர்,இவரை பார்த்து  மீண்டும் பொறு பொறு என்றபடி இவரின் மனுவை தேடிக்கொண்டு இருந்தார். மற்றவர்களும் இவரை தொடர்ந்து பின் சென்ற போது அவர்களையும் பொறு...பொறு என்று சைககை காட்டியபடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக..ஒவ்வொரு பேப்பராக எடுத்து ஒவ்வொரு போலீசுக்கும் கொடுத்து விவரம் சொல்லி முடித்த பிறகு,தொப்பியை தேடி எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு  வாங்கி வைத்திருந்த..புகார் மனுவை எடுத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றார்.

 சென்ற சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கத்துவது கேட்டது. இன்ஸ்பெக்டரிடம் திட்டு வாங்கிய ரைட்டர் முனங்கியபடி தொப்பியை கழட்டியபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். ரைட்டரின் முகம் கோபமாக  தெரிந்ததால் புகார் கொடுத்தவர்கள் யாரும் அவர்க்கு அருகில் செல்லவில்லை.

பக்கத்தில் பிடித்து வைத்து அமர்த்தி இருந்தவர்களில் இருவரை ரெண்டு போலீஸ்காரர்கள்.  லத்தியால் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  உட்கார்ந்து இருந்த ரைட்டர் அடிவாங்கிக் கொண்டு இருப்பவர்களை பார்த்து இவரும் பேசிக் (கத்திக்) கொண்டே அவர்கள் அருகில் சென்று  இன்ஸ்பெக்டர் தனக்கு கொடுத்த திட்டுக்கு பதிலடி கொடுத்தார்.

பிறகு இருக்கையில் வந்தமர்ந்த ரைட்டரிடம்....சிறப்பு எஸ்ஐ ஒருவர்(எஸ்எஸ்ஐ) ,இன்ஸ்பெக்டர் சவுண்டு விட்டதைப் பற்றிக் கேட்டார்.

ரைட்டரோ....,“எஸ்எஸ்ஐ எல்லாம் புடுங்குறாங்கேளா....?.“என்பதை சுறுதி குறைத்து கிசுகிசுத்துவிட்டு.. ஒவ்வொரு எஸ்எஸ்யையும் கூப்பிட்டு ஒவ்வொருத்தரிடமும் வந்திருந்த மனுவை கொடுத்தார்.

வெளியே நின்றபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவரை,.,
கணேசன் என்று கூப்பிட்டார் ரைட்டர்.

ரைட்டர் கூப்பிட்டதும் அவரிடம் சென்ற போது ஒரு எஸ் எஸ்ஐயை காட்டி அவரிடம் செல்லுமாறு பணித்தார்.

கணேசன் புகாரை படித்துப்பார்த்த  சிறப்பு எஸ்ஐ வண்டி வச்சியிருக்கியா? என்றார்.

சிறப்பு எஸ்ஐ கேட்டதை புரிந்து கொண்ட கணேசன். இல்ல ...சார்..சைக்கிளல் வந்திருக்கேன் சார். என்றார்.

ஆட்டோ புடி என்றவர். இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக ...இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்றவர் நெடு நேரம் கழித்து வந்தார்.

சிறப்பு எஸஐ வெளியே வந்ததை பார்த்து அவரிடம் சென்றார் கணேசன்.

கணேசனைப் பார்த்த சிறப்பு எஸ்ஐ ரைட்டரிடம் ஏதோ சொன்னார். ரைட்டர் கணேசனைப் பார்த்து எந்த ஏரியா என்று கேட்டார்.கணேசன் தனது ஏரியாவை சொன்னதும் ரைட்டர் தனது செல்போனில் பேச ஆரம்பித்தார்.

தொடரும்............................







வெள்ளி 02 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்..

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராஜா இருப்பது மாதிரி..சுத்திமுத்தி பாத்தா நாற்பது வீடுகள் கொண்ட குடும்பம் வசிக்கும் தெருவுக்கும் ஒரு ராஜா இருந்தான்.

அவரே தெருவுக்கு ராஜாவாகவும் அந்தத் தெருவுக்கு நாட்டாமையாகவும் அந்தத் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு பூசாரியாகவும். கோயிலின் திருவிழாவின்போது சாமியாட்டம் போடும் சாமியாராகவும் தன்பெயரைக்கொண்டே குருசாமியாகவும் இருந்தான்..இதோடு அந்தத் தெருவிலே அந்த ஒருத்தர் மட்டுமே மின்சார வாரியத்தில் வேலைலை பார்த்த அரசு ஊழியர் என்ற பெருமை வேறு இருந்தது.

இவ்வுளவு பதவி இருந்தது மாதிரியே  அதற்கு ஈடாக  சின்னப்புத்தியும் சபலபுத்தியும் அடுத்தவன் மனைவியை பெண்டாளுவதோடு நில்லாமல் வறியவர்களின் இடத்தையும் அபகரிப்பதிலும் எதிர்த்தவர்களை  தெருவில்    உ ள்ளவர்களிடமும் தன் குடும்பஉறுப்பினர்களையும் சாட்சியாக கையெழுத்து பெற்று   போலீசில் புகார் செய்து அடி உதையுடன் தண்டம் கட்டச் செய்வதிலும் கில்லாடி..

அந்த ராஜாவை நேரில் பார்த்தால் இந்தப் பூணையும் பால் குடிக்குமா? என்று கேட்குமளவுக்கு நடிப்பில் சினிமா நடிகளையே தூக்கி சாப்பிட்டு அளவுக்கு திறமைச்சாலி. தனது தனிப்பட்ட பிரச்சனையை பொதுப் பிரச்சனையாக்கி  தெரு கோயில் வரிபோட்டு தன்னை எதிர்த்தவனை அந்தத் தெருவை விட்டே ஒதுக்கி வைத்து இம்சை கொடுத்து ரசிப்பதில் பலே கில்லாடி...........


இப்பேர்ப் பட்ட பலே கில்லாடியை எந்தவொரு பின்புலம் இல்லாமல் எவர் துனையின்றியும்   ஆத்திரத்தால் போட்டு தள்ளாமல் தனக்கு தெரிந்த சட்ட வழிமுறைகளிலே எதிர்த்து வந்தான் ஒருவன். அவனுக்கு  அந்தத் தெரு ராஜாவோடு அந்தத் தெரு மக்கள் கொடுத்த   பல இம்சைகளையும் தாங்கிக் கொண்டு வந்தான்.

இப்படி பெற்ற பல  இம்சைகளின் ஒரு இம்சை ஒன்றைப்பற்றித்தான் பதிவிடப்படுகிறது.


 அந்த ராஜா கோலோச்சும் அந்தத் தெருவில் ஒரு இடத்திற்கு நடை பாதை இல்லாததால் அந்த இடத்தை அந்த ராஜா அடிமாட்டு விலைக்கு வாங்கி  வழி நடை பாதையாக ராஜாவை தனி ஒரு ஆளாக எதிர்ப்பவனின் வீட்டுக்கு மேற்கு புறமான இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தான். அதனை எதிர்த்தபோது தனது நான்கு ஆண்பிள்ளைகளுடனும் தன்வைப்பாட்டி பிள்ளைகளுடன் கூட்டமாக சேர்ந்து தெற்கு புறமாக  வாசல் உள்ள அவன் வீட்டை மறித்து தனக்கு இதுவரை பாத்தியமுள்ளது என்று அடவடியாக வேலி கட்டி தன்னை எதிர்த்தவன் அவனுக்கு பாத்தியமான இடத்தில் நடமாட முடியாத அளவுக்கு அராஜகம் செய்து வந்தான்.

அந்தப் பிரச்சனையில் தெரு நாட்டாமையான குருசாமிக்கும் வைப்பாட்டி ராணிக்கும் பிறந்த மகனும் வெளியில் ஏழரை மகன் என்று அழைக்கப் படுபவனுமான திருமா வளவன் என்று பெயர்சூட்டியக் கொண்டவன் நாட்டாமையின் உத்தரவில் அடிதடியில் இறங்கி கொலை வெறியுடன் பாய்ந்தான்.

நாட்டாமையின் உத்தரவால் கொலை வெறியுடன் பாய்ந்தவனிடம்  அடிதடியில் இறங்கி தப்பித்து   அப்பகுதி போலீசில் அவன் மீது  புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்நிலைய ரைட்டர். மாலை ஏழு மணிக்கு வா..என்றார்.

தொடரும்....................

புதன் 30 2014

கம்மலுக்காக வயிற்றை கிழித்த தம்பதியினர்...



குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் அருகே கிடங்கன்கரைவினை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி இவரது மனைவி அகிலா .

இவர் தனது அரைப்பவுன் கம்மலை கழற்றி வீட்டில் இருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு  வேறு ஒரு வேலையை முடித்துவிட்டு.. மேஜையில் வைத்திருந்த கம்மலை கானாது  திடுக்கிட்டார்.

என்னடா இது மேஜையில் வைத்திருந்த கம்மலை காணவில்லை..நம்மளைத் தவிர வேறு யாரும் வரவில்லை. பிறகு எப்படி கம்மல் காணாமல் போயிருக்கும் என்று யோசனை செய்தார்.

அப்போது அவர் வீட்டு கோழி ஒன்று அருகில் மேய்ந்து கொண்டு இருந்தது. அந்தக் கோழியும் தீவணத்தை லாவகமாக கொத்தி உடைத்து சாப்பிட்டதைக் கண்டார்.

அகிலாவுக்கு கோழி மேல் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டிற்குள் வேறு யாரும் வராதபோது..கம்மலை இந்தக் கோழி விழுங்கியிருக்குமோ என்று நிணைத்தார்.

நடந்த விபரத்தை தனது கனவரிடம் தெரிவித்தார். அவரின் ஆலோசனைப்படி கோழியை கட்டிப்போட்டு இரண்டு நாட்களாக தீனி போட்டு பார்த்தனர். கோழியின் கழிவிலிருந்து கம்மல் வெளியே வரும் என்று...எதிர்பார்த்து இருந்தனர்.

கோழியின் கழிவிலிருந்து கம்மல் வரவில்லை. கோழியின் மீதுள்ள சந்தேகமும் தீரவில்லை.

கோழியின் குடலுக்குள் தங்கக் கம்மல் ஒட்டிக் கொண்டு வெளியே வராமல் இருக்கவும் வாய்ப்புண்டு என்ற காரணத்தால்..கடைசி முயற்சியாக..

தம்பதியினர் இருவரும் கோழியைக் கொன்று அதன் வயிற்றை அறுத்துப் பார்த்தனர்.

தம்பதியினரின் சந்தேகத்தின்படியே தங்கக் கம்மல் கோழியின் கழிவுடன் இருந்தததைக் கண்டனர்.

கல்லையும் கரைக்கும் சக்தி கோழியின் இரைப்பைக்கு இருக்கிறது என்றாலும் தங்கக்கம்மல் கரையாமல் துண்டு துண்டாக இருந்தன.

தங்கக் கம்மல் கிடைத்த மகிழ்ச்சியில் வயிற்றைக கிழித்த கோழிக்கறியையும் சமைத்து சாப்பிட்டனர்.

செவ்வாய் 29 2014

பாரதியாரே வந்து சொன்னாலும்........




எதிர்பாரவிதமாக ஏப்ரல் 10ம்தேதியிட்ட தினமணியில் வந்த கட்டுரையை படிக்க நேரிட்டது. போலிகளின் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் என்பவர்  மதசார்பின்மையின் முன்னோடி என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

அந்தக் கட்டுரையில் ஜாலியன்வாலா படுகொலை போராட்டத்தையும் ஜெனரல் டயரை உத்தம்சிங் போட்டுதள்ளியதையும்..கூடவே உலக மகா யுத்தத்தில் யோக்கிய சிகாமணியான கரன்ஸி படப்புகழ்லின் கொள்கை விளக்க நம்பிக்கையை பற்றியும்,உலக மகாயுத்த்தில்  ஆங்கிலேயேனின் இந்திய படைவீரர்களின் பாதிப்புகளை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

எல்லாம் சரி,ஆனால்.1914ல்  லெனின் தலைமையில் ரஷ்யாவில் நடைபெற்ற  பாட்டாளி வர்க்க புரட்சியான நவம்பர் புரட்சியைப் பற்றி மகா கஞ்சாக் கவி பாரதி பாடியதாக ஒரு புரட்டை எழுதியிருந்தார்

பாரதி பாடிய “எழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாடல் லெனின் தலைமையில் நடந்த பாட்டாளி வர்க்கப்புரட்சியான நவம்பர் புரட்சிதினத்தைப் பற்றி வாழ்த்திப் பாடவில்லை.

அக்டோபர் - நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த ஜார் மன்னனை வீழ்த்திய முதாலாளித்துவ புரட்சியைத்தான் பாரதி வாழ்த்தி பாடினார். இந்த உண்மையை தங்கள் கட்சிக் கொள்கையைப்  போலவே திரித்து நவம்பர் புரட்சியைத்தான் பாரதியார் வாழ்த்தி பாடியுள்ளார் என்று எழுதியுள்ளார் ..டிகே.ரங்கராஜன்

இது பற்றி.. செத்துப்போன பாரதியே வந்து, “ஜார் மன்னனை துாக்கி எறிந்த முதலாளித்துவ புரட்சியைத்தான் பாடினேன். பாட்டாளி வர்க்கப் புரட்சியான நவம்பர் புரட்சியை நான் வாழ்த்திப்பாடவில்லையப்பா என்று   பாஞ்சாலி மீது சத்தியம் அடித்து சொன்னாலும்..

உங்களுக்கு தெரியாதுங்க......நீங்க பாடியது நவம்பர் புரட்சியைத்தான் என்று அவரிடமும் , பாரதி தெரியாமல் சொல்றாரு   என்று உங்களிடமும் சொல்வாங்கே...............

திங்கள் 28 2014

ஜோடி மைனாவில் ஒன்றைக் காணோம்...........


ta.wikibooks.org













அடித்து பிடித்து எங்கப்பன்கூடப் பிறந்த சித்தப்பன்காரனுடனும் அவன்பொண்டாட்டி பிள்ளைகளுடனும்,  வழக்கு தொடுத்த என்அப்பனின் பண்ணையாரையும் எதிர்த்தும் போலீஸ ஸ்டேசனுக்கும் விடாமல் அலைந்தும்  என்இடத்தில் வீட்டருகே ஒரு கோயிலைக் (கழிப்பறை-கக்கூஸ்) கட்டிவிட்டேன்.

வீட்டோடு சாமி கும்பிட(வெளிக்கு போக கழிப்பறை) கோயிலு இருந்தாலும் பழைய பழக்க தோஷத்தின் காரணமாக வாரத்திற்கு ஒரு முறை,சற்று தொலைவில் உள்ள வயல்வெளிக்கு  நடை பயணம் செல்வேன்.

நடை பயணத்தின் போதே.நான் வழக்கமாக சாமி கும்பிடும்(வெளிக்கு இருக்கும்) இடத்தில் அமர்ந்து சாமி கும்மிட்டுகிட்டு இருக்கும்போது சற்று தொலைவில் இரண்டு மைனாக்கள், என்னைக கவனித்தபடி கிசு கிசுத்தவாறு  களிப்புடன் மெல்ல பூநடை நடை பயின்று கொண்டு இருந்தன.

நானும் அந்த இரண்டு மைனாக்கள் என்னைப் பார்த்து பயப்படாமல்.என்னை ஒரு பொருட்டாக  மதிக்கவில்லை என்பதற்க்காக கோபம் கொள்ளாமல் விறுட்டென்று எழுந்து நிற்காமல்.. அதுகள் பூ நடை நடைந்து நடை பயில்வதை பார்த்தவாறு நெடு நேரம் வரை ஆடாமல் அசையாமல் இருந்திருந்தும். எதன் பொருட்டோ.. ரெண்டும் விசுக்கென்று பறந்து சென்றன.

அந்த ரெண்டு மைனாக்களும் காதல் மொழியோ..அல்லது வேறு ரகசியமோ கிசுகிசுத்தவாறு பூநடை நடப்பதையும். இடையிடையே என்னைக் கவனிப்பதையும் எனது செல்போனில் படம் புடிக்க ஆசை இருந்தாலும்..

என்னில் சிறு அசைவு ஏற்பட்டாலும் அது அதுகளுக்கு இடைஞ்சலாக வோ பயத்தையோ ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்க்காக என் ஆசையை முறித்துக்கொண்டேன.

பிற்பாடு.உள்ளாடையை கழற்றி கையில் பிடித்தக் கையோடு, பம்பசெட்க்கு அருகில்சென்று கைகால்களை கழுவிவிட்டுக்கொண்டு திரும்பிய நேரம்.

அந்த ரெண்டு மைனாக்களும் எனக்கு கேட்கும்படியாக சவுண்டு விட்டபடி எனக்கு முன்பாக சென்று,நான்செல்லும் வழித்தட பாதையில் அமர்ந்தது. முன்பு போலவே, பூ நடை பயில்வதும், தலையை சிலிப்பி என்னைக் கவனிப்பதும் தங்களுக்குள் கிசுகிசத்தவாறு தரையை கொத்துவதும் நிமிர்வதுமாய் இருந்தது.

என் மிதியடி சத்தத்தால் அலறியடித்து பறந்துவிடக்கூடாதென்பதால் நடையை நிறுத்தி நின்று விட்டேன.

திடிரென்று  எனக்கு எதிர் திசையில் ஓடிவந்த ஒரு நாய்,என்னைக் கண்டதும்  தன்வழிப்பாதையை மாற்றி மைனாக்கள் இருந்த  பக்கம் திரும்பியது.

நாய் ஓடி வருவதைக்கண்ட ஜோடி மைனா ஒன்று சட்டென்று சிறகைவிரித்து பறக்க..,அதனைத் தொடர்ந்து மற்றொன்றும் சிறகை விரித்து பறந்தது.

நானும் வீட்டுக்கு வந்தபிறகு அதுகளை,அவைகளை மறந்துவிட்டேன்.

நேற்றைய வாரம்  ஞாயிற்றுக்கிழமை அந்த வயல்வெளிகளை அடைந்தபோது தான் இரண்டு மைனாக்களின் நிணைவு வந்தது. நிணைவு வந்தவுடன் அவைகளை தேடினேன்.வழக்கமான சாமி கும்பிடும் இடத்தில் சாமி கும்மிட்டவாறே அவைகளை தேடினேன். என் கண்களுக்கு தென்படவில்லை.

எழுந்திருக்க முயன்றபோது ஒரு மைனா மட்டும் பறந்து வந்து தரையில் நின்றது. தரையை தொட்டவுடன் அது பூ நடை பயிலவில்லை. ஓரே இடத்தில் நின்றது. வேண்டா வெறுப்பாக தரையை தொட்டது.

சற்று சந்தேகத்துடன் கண்களை கூர்மையாக்கிவிட்டு இன்னொரு மைனாவை தேடினேன். சுற்றியுள்ள இடங்களின் அக்கம்பக்கங்களை கவனித்தேன். இரண்டில் ஒன்றைக் காணவில்லை

ஜோடி மைனாவில் ஒன்றைக் காணாதது எனக்கு என்னவோ போலிருந்தது. அதை போக்க சட்டென்று எழுந்து நின்றேன்..என் சந்தேகம் உறுதியாயிற்று.
நான் எழுந்தவுடன் பதறியடித்து ஒரு மைனா மட்டுமே பறந்தது.வருத்தப்பட்டு போனேன்

என்ன நடந்திருக்கும்...அசை போடலானேன். சாதிப்பிரச்சனை ஏற்ப்பட்டு இருக்குமோ...? சாதிவெறி கொலை வெறியாய் மாறியிருக்குமோ....??மைனாக்கள் காதலினால் ஜோடி சேர்ந்து திரிந்தது. சாதிவெறி கொண்ட மனிதர்களின் கண்களை உறுத்தியிருக்குமோ.......???

சிந்திக்க தெரிந்த மனித இனத்தில் ஒப்பற்ற போற்றுதலுக்குரிய தாய் பாசமே...
சாதி வெறிபாசமாய் மாறி .தாய் பாசத்தையே கேடாக பயன்படுத்தி பெற்று வளர்த்த மகளையும் மகளின் கருவிலே வளரும் உயிரையும் கொன்று சாதிவெறியை நிலைநாட்டும்போது........

அய்ந்தறிவே பெற்றிறுக்கும் அந்த மைனா..சாதிவெறியின் கொடுருரத்தால் மாய்ந்திருக்கலாம்..................

சோகமாய் பறந்த அந்த ஒற்றை மைனா பறந்த திக்கை நோக்கி நடந்தேன். கண்ணில்பட்ட அந்த ஒற்றை மைனாவும் காணவில்லை.

மறு ஞாயிறை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். அந்த ஒற்றை மைனாவும் என் கண்ணில் தென்படுமா.........??? அல்லது நாயக்கன் கொ்ட்டாய் இளவரசன் மாதிரி......... மறைந்து போகுமா என்று.ஃஃஃ??????????????



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...