பக்கங்கள்

சனி 06 2014

ஒரு ராஜா..இந்த உலகத்தை வெறுத்தார்...



அவர்க்கு அவரது தாய் தந்தையர் வைத்த பெயர் ராஜா,  அவர் நடுத்தர பள்ளியில் மாணவராக படித்துக் கொண்டு இருக்கிறார்.அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளையாய் இருந்த போதும் ராஜாவுக்கான செல்வாக்கு எதுவும்  கிடைத்தது இல்லை.

அவர் படிக்கும் பள்ளியின் இடைவேளையின்போது ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் பெற்றோர்களின் கொடுத்த காசில் தங்களுக்கு பிடித்தமான திண்பண்டங்களை வாங்கி தின்பதை ஏக்கத்தோடு பார்ப்பார்.

தனக்கும் தன் பெற்றோர்கள் காசு கொடுத்து உதவினால் தானும் தனக்கு பிடித்த திண்பண்டங்களை தின்னலாமே என்று நிணைத்து ஏங்குவார். ஒவ்வொரு முறையும் பள்ளிக்கு வரும்போது தனது தாயிடமும் தந்தையிடமும் காசு கேட்கும்போது திட்டும் வசவுமே கிடைக்கும்,  எப்போதாவது அவரது தாய் அபூவர்மாக காசு கொடுத்தப்போதும் தான் நிணைத்த தின்பண்டங்களை வாங்கித் தினபதற்கு பற்றாக்குறையாகவே இருக்கும்.


வகுப்பில் தனக்கு அருகில் இருக்கும் மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கித் தின்னும்போது ராஜாவுக்கு வாயில் எச்சில் ஊறும். கைநீட்ட மாட்டார். எப்போதாவது அவர்கள் தருவதை மறுக்காமல் வாங்கி தின்பார். பல தடவை அவர்கள் கொடுத்தபோது வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ஏனென்றால் பதிலுக்கு அவர்களுக்கு இவர் வாங்கித் தரமுடியாததால் மறுத்துவிடுவார். ஒரு மாணவர், நாங்களே, உனக்கு கொடுக்குறோம்டா... என்னிக்காவது நீ எங்களுக்கு வாங்கித் தந்து இருக்கியாடா என்று கேட்டு விட்டார்.

தனது தாய் தந்தையர்கள் தன்னை பெற்றார்களா..? அல்லது தத்து எடுத்தார்களா என்று ராஜாவுக்கு கேள்வி எழும். தனக்கு ஏன்? காசு தரமாட்டுகிறார்கள் என்று யோசிப்பார்.

சில வேளைகளில் பள்ளி விடுமுறை நாட்களில் தாயும் தந்தையும் அடித்துக் கொண்டு சண்டையிடுவார்கள். வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை வாங்கியக் கடனுக்கு வட்டி கொடுக்க முடியவில்லை, நீ வேலைக்கும் போகாம...கிடைத்த வேலையின் சம்பளத்தை குடித்து விட்டு வருகிறாய்யா. என்று தாய் சத்தம்போட....... எங்கடீ வேல கிடைக்குது....அப்படி வேலை கிடைத்தாலும் ரெம்ப கஷ்டமா இருக்குதுடி அதால மே ளும் அடித்து போட்ட மாதிரி வலிக்குதுடீ.. ஆஸ்பத்திரிக்கு போனா கொஞ்சோன்னு காசா வாங்குறாங்கே.... அதான்டீ கொஞ்சமா ஊத்துனேன்டிஎன்று தந்தை சொல்ல அன்று இரவு முழுவதும்  ரெண்டு பேரும் முரண்டு பிடித்து சோறும் ஆக்கமா இருந்துவிடுவார்கள்.

 ஒரு நாள் தனது தாயும் தந்தையும் கையில் காசு வைத்திருப்பதை பார்த்து விட்டு  தான் நிணைத்த திண்பண்டத்தை வாங்குவதற்குரிய பணத்தைக் கேட்டு அடம் பிடித்தார் ராஜா. வழக்கம் போலவே, அவருக்கு பத்தாத காசை கொடுத்தார்கள். காசு இருக்கும்போதாவது தர மாட்டுகிறீர்களே என்று கேட்டபோது.. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு மொய் செய்வதற்கு வேண்டும் என்று சொல்லி இவரை திட்டி பள்ளிக்கு போகச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அவர்கள் கொடுத்த காசை அவர்களிட்மே தூக்கி எறிந்து விட்டு, புத்தகப்பையை தோளில் சுமந்தக் கையோடு கண்களில் பொல பொல வென்று வழியும் கண்ணீரை  துடைக்க மனமின்றி பரிதாபமாக நடந்து வந்தார்.

ஏங்கி..ஏங்கி அழுததால் வந்த சோர்வைப் போக்குவதற்க்காக  ரயில் வண்டி வரும் பாதையில் உள்ள திண்டில் அமர்ந்து  அழுகையை நிறுத்த முடியாமல் கண்களில் வழியும் நீரை  துடைத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது விரைவு ரயில் வண்டி ஒலி எழுப்பியபடி வேகமாக வந்து கொண்டு இருந்தது.   வழியும் நீரை துடைப்பதை நிறுத்திய ராஜா சற்றும் தாமதிக்காமல் ரயில் முன் பாய்ந்து இந்த உலகத்தை வெறுத்தார்.


வெள்ளி 05 2014

துரோகச்சாரியை..துரோணச்சாரியாக கொண்டாடும் கதை...

படம்--https://www.facebook.com/mathimaranv?fref=photo



“ஏகலைவன்” என்ற வேடன் ஒருவர் அவர்.. பாண்டவர்களின் அக்மார்க் குருவான துரோணாச்சரிடம் சென்று தன்னையும் சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.சத்தியர்களுக்கு மட்டுமே நான் குருவாக இருப்பதால், மற்றவர்களுக்கு குருவாக முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த வேடன் ஏகலைவரோ... குருவாக இருக்க முடியாது என்று மறுத்துவிட்ட அந்த துரோணச்சாரியையே மனதில் குருவாகக் கொண்டு, வில் வித்தையில் தனியாக கற்று சிறந்த மாணவராக வலம் வந்தார்.  

வில் வித்தை விளையாட்டில்  யாராலையும் ஜெயிக்க முடியாதவராக ஏகலைவனைக் கண்ட , பாண்டவர்களின் குருவானவர். தன்னுடைய சத்திரிய மாணவனைவிட எவனும் சிறந்தவனாக இருக்கக்கூடாது என்று மனதில் அழுக்காறு கொண்டு சத்தரியர்களின்  குருவுக்கே உண்டான கைங்கரியத்தால்..................

துரோணச்சாரியார் துரோகச்சாரியாக மாறி துரோக்த்தனமாக, ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக பலி வாங்கினான். இதனால்  தான் துரோகச்சாரியாக புகழ் பெற்றான்.

 இத்தகைய துரோகச்சாரியின்  நிணைவைப் போற்றும் விதமாககத்தான் சிறந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளரான வாத்தி மார்களுக்கு துரோகச்சாரி விருது வழங்கப் படுகின்றன. துரோகச்சாரியின் துரோகத்தை மறந்துவிடாமல் இருப்பதற்க்காகத்தான்  ஆண்டுதோறும் குரு- உத்சேவ் கொண்டாடப்படுகின்றன.

 பார்ப்பன வர்ணசிரமமான, நாலு வர்ண நியாயத்தை நிலை நாட்டிய துரோச்சாரியின் தினத்தை போற்றித்தான் இந்தியாவின் பேரரசர், தொலைக்காட்சியில்... இந்தியாவின் பேரரசராக கணவு கண்டதில்லை என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில்  கலந்து உரை ஆடினார்.

வியாழன் 04 2014

உலா வரும் நாலுகால் ரவுடிகளால் வியாபாரிகள் அச்சம்...???

படம்--tamilandvedas.com

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம்,உருளைக்கிழங்கு முதல் அனைத்துவகை காய்கறிகள், மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் விற்கப் படுகின்றன. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் காலை 5 மணிமுதல்,காலை 11 மணிவரை மார்க்கெட் பரபரப்பாக இயங்கும்

அந்த நேரம் பார்த்து சமீப காலமாக  மார்க்கெட்டில் அதிகளவு நாலுகால் ரவுடிகள் சுதந்திரமாக உலா வருகின்றன.  இப்படி  உலா வரும்  நாலு கால் ரவுடிகள் சிதறிக் கிடக்கும் காய்கறிகளை மேய்வதோடு நில்லாமல், மூடைகளில் உள்ள காய்கறிகளையும் முட்டி  வாயை நுழைத்து அந்தக் காய்கறிகளையும் மேய்கின்றன.

இது குறித்து  நாலுகால் ரவுடிகளை பிடித்துச் செல்லும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, பிடித்துப்போகப் பட்ட நாலு கால் ரவுடிகளை அடைக்காமல் விட்டுவிடுவதால்....

பிடித்துச் சென்ற சில நாட்களில் அந்த ரவுடிகள் மீண்டும் சுதந்திரமாக உலா வந்து தங்களின் வாய் வரிசையை காட்டுகின்றன......

இதனால் காய்கறி விற்கும்  வியாபாரிகளும், காய்கறிகளை வாங்க வரும் பொது மக்குகளும் நாலுகால் ரவுடிகளைக் கண்டு மிகவும்  அச்சத்தில் இருக்கிறார்களாம். ..அப்படின்னு தினகரன் பச்சி கத்திச்சு..............

புதன் 03 2014

வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான உறவுமுறை..

படம-www.nhm.in


ஒருவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பொறந்தது. அந்தக் குழந்தை நடக்கும் காலத்தில் குழந்தை தனக்கு பிறக்க வில்லை என்று. கணவர் மனைவியை சந்தேகப்பட்டு  இம்சை செய்ய,. இம்சை பொறுக்க முடியாத மனைவியானவர். குழந்தையை  அந்த இம்சை காரனிடமே விட்டுவிட்டு, இன்னொருத்தியின் கணவருடன் எஸ்கேப் ஆகவிட்டார்.  

மூன்று பெண் குழந்தைக்கு தந்தையான் ஒருவர்,திடிரென்று அகால மரணமடைந்துவிட, மூன்று குழந்தைக்கு தாயான் பெண், வேறு ஒரு நபரின் துணையுடன் மூன்று குழந்தைகளுடன் கிராமத்தைவிட்டு,நகரத்துக்கு குடியேறி,கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை பார்த்து வர..

 அந்தத் தொழிலின் போது தன்னைவிட.இளவயது கொத்தானரை  சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டு வரும்பொழுது, இளவயது கொத்தனார்க்கு அவரது வீட்டார் ஒரு பென்ணைப்பார்த்து திருமணத்தை முடித்துவிட்டதால், இள வயது கொத்தனரால் சித்தாள் கைகழுவி விட.ப்பட்டார்.....


ஓடிப்போன மனைவிக்கு பிறந்த குழந்தையை மனைவியின் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு , கட்டுமானத் தொழிலில்  சென்ட்ரிங் பலகை  அடைக்கும் தொழில் செய்து வருகையில்...ஒரு சில மாதங்களில்  வேலைக்கு சென்ற இடத்தில் வாழா வெட்டியாய் இருந்த ஒரு பெண்ணை கூட்டி வந்து வாழ்ந்தபோது  அந்தப் பொண்ணுக்கு பிள்ளையே பிறக்கவில்லை...இது இப்படி இருக்க...

இளவயது கொத்தனாரால் கைவிடப்பட்ட சித்தாளும் பிள்ளை ஏக்கத்தில் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியும் ஒரே இடத்தில் வேலை பார்த்த முதல் நாளில்  முதல் பார்வையிலே இருவரும் காதல் கொண்டு கனவன் மனைவியாக   தனியாக ஒரு வீட்டில்  சேர்ந்து வாழ்ந்தனர்.

இப்படியாக, இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சித்தாளின் முன்னாள் இறந்துவிட்ட கணவருக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் மூத்தப் பெண்ணை, பெரிய அரசியல் பிரமுகர் வீட்டில், வீட்டு வேலை செய்வதற்கும் அவர்களே ! வளர்த்து திருமணம் முடித்து விடுவதாக பேசிய பேச்சில் சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தத்து கொடுத்துவிட.............

இரண்டாவது பெண்னோ... சித்தாள் வேலை பார்த்தபோது ஏற்கனவே, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கொத்தனாரை கட்டிக்கொள்ள....

மூன்றாவதாக உள்ள பெண்ணோ , தாயாருடன் சித்தாள் வேலை பார்த்து வரும் சித்தாள் மூலம் தாய் தந்தை இல்லாத ஒரு பையனுக்கு கழுத்தை நீட்டிவிட..

இந்நிலையில் செண்டரிங் தொழிலாளி, தனக்கு பிறந்தது .முதலாவதாக பிறந்த ஆண் மட்டும்தான் மற்ற இரண்டும் தனக்கு பிறக்கவில்லை அது  பில்டிங் கான்ட்ராக்ட்காரனுக்கு பிறந்தது என்று சித்தாள் பெண்ணுடன் சண்டையிட...............

அந்தச் சண்டையை சென்ட்ரிங் தொழிலாளியின்  சொந்த மச்சான் விலக்கி விடுவதற்க்காக அவ்வப்போது வந்து போகும் நிலையில், மனைவியான சித்தாள்  பெ்ண், அவரின் மச்சானை அண்ணா....அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிட்டு பழக..... அதே போல் எல்லாப் பிள்ளைகளும் மாமா....மாமா.....மாமா..... என்று கூப்பிட்டு குடியருக்கும் தெருவுக்கே “டமாரம்” அடித்து தெரிவிக்க்க..................

ஊடல் புரிவதும், ஊடல் முடிந்தவுடன் கூடுவதும், கூடி முடித்தப் பின் சண்டையிடுவதுமாக சென்று கொண்டு இருந்த காலத்தில்  ஒருநாள்.

அதிகமான டாஸ்மாக் போதையில் சென்ட்ரிங்தொழிலாளியும் சித்தாளின் தற்போதைய கனவனுமானவன் உயிர் துறந்தான். அவன் செத்த பின்.,பிள்ளை இல்லாதவள் சென்ட்ரிங் தொழிலாளியின் சகலையுடன் எஸ்கேப் ஆகிவிட்டாள்.

அவன் இறந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து, அடிக்கடி வந்து போய்க் கொண்டுருந்த செத்தவனின் மச்சான்காரன்.., அதாவது செத்தவனின்  மனைவியான சித்தாளால் அண்ணா..அண்ணா என்று அழைக்கப் பட்டவர் சித்தாளின் அத்தானாக மாறிவிட்டார். மாமா..என்று கூப்பிட்ட அத்தனை பிள்ளைகளும் பிளேட்டை மாற்றி போட்டு “ அப்பா” என்று அழைக்கத் துவங்கிவிட்டன.

இவர்கள் இருவரும் உறவு கொண்டு இருப்பதை நேரில் கண்ட செத்தவனுக்கு பிறந்த மூத்த மகன் ..  தெருவே ரணகளமாகச் சவுண்டுவிட்டு சண்டையிட்டுப் பார்த்தும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. 

வெறுத்துப் போனா அவன், பந்தல் தொழிலுக்காக சென்ற இடத்தில்,  தான் காதலித்த ,தந்தையின் சாதியைச் சேர்ந்த ஒரு பென்னை  திருமணம் முடித்துவிட்டு அந்தத் தெருவிலே இல்லாமல் வேறு தெருவுக்கு குடிபோகிவிட்டான்.

அண்ணாவாக இருந்து அத்தானாக மாறிவிட்டவருக்கு தனியாக குடும்பம் குட்டி எதுவும் இல்லை போலிருக்கிறது. மைத்துனனின் மனைவியை தன் மனைவியாக மாற்றிக் கொண்டார். மாமாவாக இருந்தவர் அப்பாவாக மாறி அந்தக் குடும்பத்தோடு ஒன்றிவிட்டார். இந்த மாதிரியான நிகழ்வுகள்.

 வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான் உறவு முறை..???????????

செவ்வாய் 02 2014

கதை கேட்ட தயாரிப் பாளரும்.,கதை சொன்ன இயக்கு நாரும்


படம்--babyanandan.blogspot.com

அவர் நடிகராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர்.

இவர் தயாரிப்பாளராக இருந்து இயக்குநாராக வளர்ந்தவர்.

ஒரு நாள் அந்த இயக்குநர் இயக்கிய படம் ஒன்று, சினிமா வரலாற்றிலே..சும்மா கண்ணு மூக்கு தெரியாமல் ஓடி சாதனை படைத்து வசூலை அள்ளி குவித்தது.

இதைக் கண்ட அந்தத் தயாரிப்பாளர், இந்த இயக்குநரிடம், தனக்கும்,இப்படியான கண்ணு மூக்கு தெரியாமல் ஓடி சாதனை படைத்து,வசூலை அள்ளி குவிக்கும்படியான ஒரு படத்தை இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்க்காக. அந்த பெரிய்ய்ய தயாரிப்பாளரும், இந்த புகழ் பெற்ற்ற இயக்குநரும், பெருமை வாய்ந்த ஐந்து நட்சத்திர உணவக விடுதியில் கதை விவாதம் நடத்திக் கொண்டு இருந்தனர்.

பல காலமாக யோசித்து,அதே சிந்தனையாக இருந்து சித்திரமாக வடிவமைத்தாக ஒரு கதையைக் கூறினார் இயக்குநர்.

தயாரிப்பாளர்- இயக்குநர்- முன்னே அதி உயர்ந்த அயல்நாட்டு சாராய பாட்டில்கள் கலர் கலராக அறை வெளிச்சத்தில் மின்னின. அதன் அருகில் விலை உயர்ந்த நீண்ட சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தன்.

சற்று தள்ளி.. இருவர்களின் உதவியாளர்களும். இவர்களின் கூப்பிடு குரல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

தயாரிப்பாளர் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தபடி, இன்னொரு சிகரெட்டை இயக்குநரிடம் நீட்ட, பெற்றுக் கொண்ட இயக்குநர்.

வாய் வழியாக புகையை இழுத்து, வாய் வழியாக கொஞ்சுண்டு புகையை வெளியே விட்டு, அதிகமான புகையை மூக்கு வழியே விட்டார்.

அப்படி... மூக்கின் வழியே புகையை விட்டபடியே .கதையின் ஓன் லைன்னை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு நதி, அந்த நதியில் தண்ணீர் பயமுறுத்தும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வெள்ளமாக மாறி விட்டால்,  அது நகரத்தை அழித்துவிடும். அதை தடுக்க

 கதை நாயாகின் தந்தையும், அந்த நகரத்து தந்தையுமானவர், அந்த நகரத்து மக்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார்.

எப்படி .....?

இப்படி!!

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கட்டுமஸ்தான உடல் கொண்டவர்கள் ஒருவர் வந்து நகரத்தை அழிக்க வரும் வெள்ளத்திலிருந்து நகரத்தை காப்பாற்ற, வெள்ளத்தை தடுக்கஃஃஃ நதிக்கரையில் மண்ணைக்கொட்டி  தடுக்க உதவ வேண்டும் என்று...........

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆட்கள் சென்று, நதியின் கரையை பலப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.

அப்போது. அந்த நகரத்தில் வடை சுற்று,கொண்டு இருந்த மூதாட்டிக்கு உறவுன்னு சொல்லிக் கொள்ள யாருமில்லாததால், வெள்ளத்தை தடுக்க, தன்வீட்டிலிருந்து செல்ல யாருமில்லையே என்று கண் கலங்குகிறாள் அந்த மூதாட்டி--- அபபோது அந்த மூதாட்டியின் கண்ணீரை துடைக்க வருகிறான் கதை நாயகன்.

கதையை நிறுத்தி இடைவெளி விடுகிறார் இயக்குநர், அந்த இடைவெளியல் உதவியாளர்களால் உயர் ரக சரக்கு பரிமாறப்படுகிறது. அதனுடே இறக்குமதியான புத்தம் புதியதான்  சிற்றுண்டி அயிட்டங்கள் காலியாக்கப்படுகின்றன.  எல்லாம் முடிந்த பின் புகையை விட்டபடியே அமைதியாக இருந்தனர்.

 கதை தொடர்கிறது.

கதையின் நாயகன் உதவுவதாக சொன்னதைக்  கேட்டதும், மூதாட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நாயகனுக்க ஏராளமாக வடை சுற்று பரிமாறுகிறாள்.

வடை தின்ற நாயகன் மூதாட்டியிடமிருந்து விடை பெற்று நதிக்கரைக்கு வருகிறான். பரபரப்பாக வேலை நடப்பதைக் கண்டதும் தானும் வேலையில் முழுமமூச்சுடன் ஈடுபடுகிறான்.

 முழு வீச்சில்  வேலை நடந்து கொண்டு வரும்பொழுது.   நதியை பார்ப்பதற்க்காக  நகரத்து தந்தையின் மகள் தந்தைக்கு தெரியாமல் கதை நாயகி தன் தோழிகளுடன்  வருகிறாள். ஒவ்வொரு இடமாக பார்த்து வரும்போது ஒரு இடத்தில் கதை நாயகி எதிர்பாராவிதமாக தடுமாறி, பாய்ந்தோடும் நதியில் விழுந்து விடுகிறாள். வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் சத்தமிடுகிறார்கள். கட்டமஸ்தான உடல் உள்ளோர் யாரும் பாந்தோடும் நீரில் குதித்து கதையின் நாயகியை காப்பாற்ற தயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது கதை நாயகன் மட்டும் சிறிதும் தாமதிக்காமல் பாய்ந்து செல்லும் நீரில் குதித்து வேகமாக நீந்தி கதையின் நாயகியை எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாறுகிறான்.

இந்த நிகழ்வில் நாயகன் நாயகியை பார்க்க,நாயகி நாயகனின் தழுவலை நிணைக்க.இந்த நிணைவுகளுடனே மிதக்கிறார்கள்.

நாயகன் நாயகியை பிரிய மனமில்லாமல் நாயகியை நிணைத்து மெய்மறந்து   வேலை செய்யாமல் படுத்திருக்க...அப்போது  அங்கு வந்த நகரத்து தந்தை  நாயகன் வேலை செய்யாமல் படுத்திருப்பதைக் கண்டு, நாயகனை அடிக்க , அந்த அடி , நாயகிக்கு வலிக்க...

வலி பொறுக்க முடியாமல் நாயகி நாயகனை தேடி வர.. நாயகனை தன் தந்தை அடிப்பதை தடுக்க முயன்றபோது ,நாயகி நதியில் விழ, அப்போது நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஆக்ரோசத்துடன் ஓடி வர.... இயக்குநர் கதை சட்டென்று நிறுத்தினார்.

ஒருவித பரபரப்புடன் கேட்டுக் கொண்டு இருந்த தயாரிப்பாளர்.. அடுத்து என்ன என்று கேட்க..

அடுத்து என்ன கிளைமேக்ஸ்தான் என்றார். இதில் நாலு பைட், ரெண்டு குத்து பாட்டு, ஒரு சீன் பாட்டு,இரண்டு டூயட்,..

வெளிநாட்டு சிறப்பு வரைகலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தண்ணிரீலே ஆரம்பித்து தண்ணீரே முடித்து பின்னி பெடல் எடுத்துவிடலாம்.  வசூலையும் அள்ளி குவித்து விடலாம் என்றார் இயக்குநர்.

தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கதையின் ஓன் லைன் தனக்கு ரெம்பவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

இருவருக்கும் சரக்குகளை பரிமாறிக் கொண்டிருந்த உதவியாளர் ஒருவர் தன் சக உதவியாளரிடம் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்.  இந்தப் பாவிய பாறேன் புட்டுக்கு மண் சுமந்த கதையை எப்படி லவிட்டி விட்டுருக்கான் .. அந்தப் பாவியப் பாரேன் ரெம்ப நல்லாயிருக்கன்னு குதிக்கிறத....




.

நிறம் மாறினாலும் குணம் மாறுமா....???

இந்தியாவை கைப்பற்றி  கொடூர ஆட்சி புரிந்து வந்த ஆங்கிலேயர்கள். தங்களின் பாதுகாப்புக்காகவும், தங்கள் ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும், எதிர்த்து கருத்து கூறுபவர்களையும் ,கொடுமையான சட்டங்கள் போட்டு, அந்த சட்டத்தின் மூலம் மக்களை கைது செய்து அடித்து, உதைத்து,அடக்கி ஒடுக்குவதற்க்காக 1659 ல்உருவாக்கப்பட்ட படைதான் போலீஸ் படை. அந்தப் படையின் அலுவலகங்கள்தான் காவல் நிலையங்கள்.

சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட காலத்திற்குப் பின்பும்,இன்றுவரை அரசுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கு  ஆதரவாக.பாதுகாப்பு அரனாக இருந்து வருகிறது.

குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் என்று சொல்லிக் கொண்டு, ஆங்கிலேயனைவிட கூடுதலாக அதிக அதிகாரம் பெற்று செயல்படுவது காவல்துறை.

இந்தக் காவல்துறை தமிழ் நாட்டில் ஆண்ட.,ஆளுகின்ற அரசியல் கட்சிகளால் விரிவு படுத்தப்பட்டு 16 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1452 காவல் நிலையங்களும், 196 மகளிர் காவல் நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 1,648 காவல் நிலையங்கள் இருக்கிறது.

355 ஆண்டுகளாக மக்களை ஒடுக்கி வந்த காவல் நிலையங்களுக்கு அடையாளமாக  இருந்தது சிவப்பு நிறம். தற்போது இந்த சிவப்பு நிறத்தை விட்டு பச்சை நிறத்துக்கு மாறுகிறது.

கம்யயூனிச சிவப்பு என்றால் சிலருக்கு பயம். அதே காவல் நிலைய சிவப்பு என்றால் மக்களுக்கு அச்சமோ அச்சம்., இந்த காவல் நிலைய சிவப்பு அச்சத்துக்கு காரணம்  அதன் கொடூரம்தான்.
 எவ்வளவுதான்  மக்களின் நண்பன்! நான் உங்களுக்கு உதவலாமா?, என்று ஒலறினாலும, மக்களிடம் நம்பிக்கையை பெற முடியவில்லை. ,மக்களின் அந்த அச்சத்தை மாற்றுவதற்க்குத்தான் என்னவோ..  கண்ணுக்காகவது பசுமையாக இருக்கட்டும் என்று காவல் நிலையங்கள். பச்சை நிறத்துக்கு மாறுகிறது போலும்  


என்னதான் இருந்தாலும்  நமது குலப் பெருமையை  பரம்பரை சின்னத்தை விட்டு ஒரு அங்குலம் கூட மாறக்கூடாது என்பது போல திரும்பவும் பழையபடி பழைய சிவப்பு நிறத்துக்கு மாறும் அதே காவல் நிலையம். படம்

படம்-2-http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_362281441689.jpg
இப்படி 355 ஆண்டாக மாறாத குணம் .நிறம் மாறுவதால் மாறவா போகப்போகிறது.

இதைத்தான் ஒருவர் அப்போதே பாடிவிட்டு  போய் சேர்ந்துட்டார். காவல் நிலையங்கள் நிறம் மாறினாலும். அதன் மணமும் குணமும் மாறாது என்று..

“ மாறாதய்யா.....மாறாது...........
மணமும் குணமும் மாறாது ” 






திங்கள் 01 2014

நான் மோடி...நீங்க.... மோரி.....

“ஜப்பானில் கல்யாணராமன்” என்று படம். அந்தப்படத்தில் கல்யாணராமன் என்னவெல்லாம் செய்தாரு என்பது மாதிரி..... இந்திய ஊடகங்களும் மோடி எனனென்ன செஞ்சாருன்னு டண்கணக்கா  “ஜப்பானில் மோடி”ன்னுபடம் புடுச்சு போட்டு இருக்குதுக...

“உலகம் சுற்றும் வாலிபன்” படம் முடுஞ்சு, கடைசியில டை்டில் போடுவாங்க.. அடுத்து “ஆப்பிரிக்காவில் ராசுன்னு”  அதுமாதிரி, ................

அப்படி  செய்தி ஊடகங்கள் அடுத்து போடாதது ஒன்னுதான் பாக்கி...........





படம்-Daily Thanthi

படம்--ஒன் இந்தியா        


பாட்டாளி வர்க்க அதிபரிடம் வாழ்த்துக்கள் பெற்ற இந்திய ஆசிரியர்..

stalin
படம்--https://vrinternationalists.wordpress.com/

உலகத்தில் மிகவும் கொடுரமானவர் என்று கொடூரமானவர்களால்  மோசமாக புழுதிவாரி துாற்றப்படும்   தோழர்  ஸ்டாலின் அவர்கள்  சோவியத்தின் பாட்டாளி வர்க்க அரசின் அதிபராக  இருந்த பொழுது

1950 ஆண்டு வாக்கில்   பாட்டாளி வர்க்க நாட்டில்  இந்தியத் தூதராக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

மரியாதை நிமித்தமாக  சந்திப்பின் போது இந்தியத் தூதுருக்கும்  பாட்டாளி வர்க்க அரசின் அதிபருக்கும் ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலின் போது.. இந்தியத் தூதர்...

எங்கள் நாட்டில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னால். இருந்த ஒரு அரசர் போர் புரிந்த போது,  போர்களத்தில்  சிதறிக் கிடந்த மனித உடல்களையும், பெருக்கெடுத்து ஓடிய இரத்த ஆறுகளையும் கண்டு , அதிர்ச்சி அடைந்து, பதறி, மனம் வருந்தினார்.

அதன் பயனாக, அந்தச் சம்பவத்திற்குப்பின் இனி, போரே.. வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார்.

அதே போன்று, தாங்களும் போரின் மூலம் ஏற்ப்பட்ட இழப்புகளை கண்டு, அவரைப்போல மாற வேண்டும் என்றார்.

அதைக் கேட்ட பாட்டாளி வர்க்கத்தின் அதிபர் , சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல்  இருந்தார்.

இந்த உரையாடலுக்கு பிறகு, இந்தியத் தூதராக பணியாற்றிய ஆசிரியரின் பதவிக்காலம் முடிந்து இந்தியா திரும்பும் போது, அப்போதும் மரியாதை நிமித்தமாக விடைபெறுவதற்க்காக சந்தித்த போது...

பாட்டாளி வர்க்கத்து அதிபர் தோழர் ஸ்டாலின் அவர்கள். அந்த ஆசிரியரின் முதுகைத் தட்டிக் கொடுத்து சொன்னார்.

என்னை கொடூரமானவராக பார்க்காமல், மனிதராக பார்த்த முதல் நபர் நீங்கள்தான்...“ நீங்கள் நீடுழி வாழ ஆசைப் படுகின்றேன். என்று வாழ்த்தினார்.

ஞாயிறு 31 2014

WTOவும்...... WTOவும்......

படம்--http://4.bp.blogspot.com/-


WTO------உலக வர்த்தக அமைப்பு

WTO-------- உலக கழிப்பறை அமைப்பு

முன்னது-- உலகத்து செல்வங்களை எல்லாம் ஒரு சிலரே அனுபவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

பின்னது---- உலகில் செல்வாக்கு இல்லாதவர்களிடம் கழிப்பறை குறித்த பயன்பாட்டு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்று வேலை செய்கிறது.

முன்னது---- ஜெனிவாவை தலைநகராகக் கொண்டு செயல்படுகிறது.

பின்னது--- சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு  இயங்குகிறது.

முன்னது--- அவ்வப்போது மாநடு நட்த்தி திட்டங்கள் தீட்டுகிறது.

பின்னது---தேவைக்கேற்ப  கூட்டங்கள் நடத்துகிறது.

முன்னது- உலக மக்களை கழிய விடுகிறது.

பின்னது- கழிவதை பாதுகாப்பாக கழியச் சொல்கிறது.


(   நிணைவுக்கு--உலக கழிப்பறை தினம்- நவம்பர்-19)



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...