பக்கங்கள்

சனி 17 2012

கவிதையின் கதை!

இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்---

-இந்தப் பாடலை எழுதியவர் யாரென்று சத்தியமாக
தெரியாமல் இருக்காது. முன்னொரு காலத்தில் கவிதையைப்
பற்றி புரியாத காலத்தில் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று கூப்பாடு போட்டவன்.பாரதியை . பாரதிதாசனே,
 குருவாக ஏற்றுக் கொண்டபோது பெருமையாக இருந்தது


பொதுவுடமை அமைப்பில் அணி சேர்ந்து இருந்தபோது
தோழர் ஒருவர்,“அப்பனே. முருகா! என்னைமட்டும்
காப்பத்துப்பா?  என்று விளையாட்டாக வேண்டியபோது
எழுந்த வாதங்களின் போதுதான் பாரதியின் கதை தெரிந்தது.

பாரதி புரட்சிக்கவிஞனில்லை, கஞ்சாக் கவிஞன் என்று
புகழ் மாலை சூட்டிய காலத்தில். பழத்தினால் வந்த தோஷம்
இறக்கும்வரை இருந்ததா? என்று தெரியவில்லை.

இப்போது பாரதியின் ஜகத்தினை அழித்திடுவோம் கவிதையின்
கதை தெரிந்தது.அன்றையஆங்கிலயேஆட்சியின்க
கொடுங்கோண்மையினால் பட்டினியால் பரிதவித்த
மக்களுக்காக ஜகத்தினை அழிக்க அவர் கவி பாடவில்லை.


நீல கண்ட பிரம்மச்சாரி என்ற தேச பகதர். பாரதியின்
வீட்டுக்கு வந்து, சாப்பாடு எதாவது கொடுங்கள் சாப்பிட்டு
நாலு நாள் ஆச்சு என்றாராம் அப்போது

பாரதியின் வீட்டில் வழங்கிய உணவை உண்ணும் போது
நீல கண்ட பிரம்மச்சாரி கண் கலங்கியதை கண்டு கொதித்து
எழுந்த பாரதி நீல கண்டரை தனி மனிதராக்கி அவருக்கு
உணவில்லாதததையே “ இனியொரு விதி செய்து..............
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார். நீலகண்டருக்காக
பாடியதையேபாரதியின்குலக்கொழுந்துகள்,அவரின்பக்தர்கள்
நின்றதுகள்.போனதுகள்எல்லாம் பாரதியை புரட்சிக் கவியாக,
உலக மகா கவியாக கொண்டாடி அக மகிழ்கிறார்கள். இடது கள்
வலதுகள் மற்றும்தினமணி வைத்தி உள்பட.



செவ்வாய் 13 2012

அது எப்படி ? கூடங்குளத்தை திறந்துவிட்டால் மின்வெட்டு தீர்ந்து விடும்! அதுஎப்படி?

தமிழ்நாட்டின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்டு
,உற்பத்தி செய்வதோ 8ஆயிரம் மெகாவாட்டு
பற்றாக்குறையோ 4ஆயிரம் மெகாவாட்டு,
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கினால்
 கிடைப்பது 750 மெகாவாட்டு !!அது எப்படி?

கூடங்குளம் அனுமின் நிலையம் திறந்தால்
தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்கமுடியும்.
 அது எப்படி? பற்றாக்குறையைபோக்காத
அனுமின்நிலையமா? அதுஎப்படி?

அது அப்படித்தான் என்றால்
மின்சாரத்தை உறிஞ்சி தேக்கி வைத்து
பயன்படுத்தும் இன்வெட்டர்,
டீசல்,மண்ணெண்ணெணய் பயன்
படுத்தும் சாதனங்களில் விற்பனை
அமோகமாக இருக்கிறதே? அது எப்படி?
இழவு விழுந்த வீட்டில் புடுங்கின
வரைக்கும் ஆதாயமா? அது எப்படி?

புறம்போக்குத்தமிழன் ஆளும்போது
ரெண்டு மணிநேரமாக இருந்தமின்வெட்டு
“அங்கிள் நான் லண்டல்ல படிச்சவ”
பட்டிக்காடா-பட்டணமா வில் வசனம் பேசி
ஆறே மாதத்தில் மின்வெட்டைபோக்குவேன்
வாக்குறுதி விட்ட ஆத்தாவின் ஆட்சியில்
மின்வெட்டு பத்து மணி நேரமாக அமுலாகுதே!
அது எப்படி? கூடங்குளம்போராட்டக்காரர்களால்
மின் பற்றாக்குறையா?  அது எப்படி?

சென்னையில் ரெண்டுமணிநேரம் மின்வெட்டாமே?
அதுஎப்படி? ஊரெல்லாம் துாங்காமல் கொசுக்கடியால்
 புளுக்கத்தால்  கொட்ட கொட்ட விழிச்சிருக்க,
பித்தம் புடிக்காமல் தவித்திருக்க,பண்ணாட்டு
நிறு வனங்களுக்கு தடையில்ல மின்சாரமா?
அது எப்படி?? அது எப்படி?..........................

அதுவும் குறைந்த விலையிலா? அது எப்படி?
அதுக,போராடாவும் இல்லை, அவதிப்படவும்
இல்லை.! அது எப்படி? ஊரை அடிச்சு உலையில்
போடும் கணக்கீடா? அது எப்படி?

கூடங்குளம் திறந்தால் மின்வெட்டு தீரும்
 கெட்டிக்காரன் புளுகை அறியாமை
இல்லாதவனும் அறியாமை உள்ளவனும்
நம்புறானே?  அது எப்படி? .

அஞ்சு வருடத்துக்கு ஒருவாட்டி வந்து
எனக்கு போடு ஓட்டு! நான் காட்டுறேன்
பாரு வேட்டு என்றானே?  என்றாளே?
அது எப்படி?.................................

 காட்டிக் கொடுப்பவனுக்கும்
கூட்டிக் கொடுப்பவனுக்கும்
துரோகிக்கும். ஓட்டுப் போடாதே!
புரட்சி செய்!  என்றார்களே!

ஓட்டுப்போட்டு ஏமாறுவது எமது பிறப்புரிமை!
போலீசிடம் அடி வாங்குவது எமது தனியுரிமை!
சொல்லாமல் சொல்கிறார்களே! அது எப்படி?

( ஓ.......ஓ......அதுவா? அது அப்படித்தான்)
அது அப்படித்தான் என்றால் அது எப்படி??????ஃஃஃ



















ஞாயிறு 11 2012

போக்கத்தப்பயலுக்கு கொழுப்ப பாருங்கோ????

போக்கத்தவன் பொண்டாட்டி முழுகாம இருக்காளாம். அட, இது
வேறையா.இவனே போக்கத்து போயி இருக்கான் இவனுக்கு
பொண்டாட்டி வேறையா?அதுவும் அவ முழுகாமா இருக்களா???
கிழிஞ்சு போச்சு போங்க.........................

இத எதுக்கு சொல்ல வரேன்னா, இந்தியாவுல மக்கள் தொகை
120 கோடியாம் இந்த வேகத்துலயே போனோம்னா, சீனாக்காரன முந்திருவோம்ல,

அந்தப்படிக்கு பாத்தா, 120 கோடியில முக்கால்வாசிபேரு எந்தக்
 கணக்கிலும்வராதவுக.மீதி கால்வாசி. அந்தக் கால்வாசியில
பாதிபேருராயல்ஃபேமிலிஅந்தப்பாதியிலபாதிபேருரெண்டுக்
கெட்டானுக.ஆணுமில்லாமா,பொண்ணுமில்லாமஇருக்குற
வங்களநிணைக்கக்கூடாதுஅங்குமில்லாமா,இங்குமில்லாமா. இருக்குறவங்கதான் ரெண்டுங்கெட்டான்.

இந்தியாவில் இருக்கும் வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்
என்று ஒருத்தரு கேட்டாரு, அதுக்கு நான் ,முடிச்சு அவிக்கி, மொள்ளமாரி,கேப்மாரி, குத்தாமா.குடல உருவுருவன்,கத்தவிடாமா அமுக்குறவன். இப்படி இருக்கிற பெரிய பெரிய தொழில் அதிபர்களுக்கும்,தொழில் முதலைகளுக்கும்தான் கொடுப்பார்கள். இவர்கள்தான் சட்டப்படி,ஞாயப்படி நேர்மையாக பட்டையை
போட்டு ,அதுக்கு மேல பட்டை தெரியம நாமம் போடுகிறவர்கள்.
இவர்கள்தான்ஒழுங்காமரியாதையாநாமம்போடுவார்களாம்.
இவர்களால்தான் வேலைவாய்ப்பு, புடலங்கா.கத்திரிக்கா
ஏற்படுகிறதால , இவர்களுக்குத்தான் கூப்பிட்டுகொடுப்பாங்க
 இதோடு இவர்களால்தான் இந்தியா பெரிய வல்லு அரசாகுமாம்


அப்படியா? என்று வாய பொளந்தார். வாய பொளக்காதே!
 விசயத்த சொல்லுஎன்றபோது சொன்னார். அம்மா ஆட்சியில
 வீடு கட்ட ஆர்டர் வந்திருக்குஆனா அவுக கொடுக்கிற காச
வச்சு வீட்ட கட்ட முடியாததல, பேங்க்ல லோன்கேட்டேன்பா,  வாங்கினவனெல்லாம் ஒழுங்கா கட்டிபுட்டானுக, இப்ப நீ லோன்
கேட்டு வந்தியிருக்கியாக்குமினு டாப்பு,டாமர்.டுமார்னு விரட்டிட்டானுகப்பா.........என்றார்

அகில இந்திய வங்கிகளில் கடன் வாங்கி அடைக்காதவர்கள்
2011 வரை கோடி பேராம். இந்த கோடி பேர்கள் வாங்கிய
தொகை மட்டும் 70 எழுபதுகோடியாம்... ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை மாத்தினதையே ஒழுங்கா என்னச்தெரியாதவுகளா? வாங்கியிருப்பாக???

 இந்த வாராக் கடன்தொகை எழுபது கோடிய வசூலிக்க நடவடிக்கை எடுத்தாலே! இந்தியப் பொருளாதாரத்தை சிர்படுத்திவிடலாம். என்று

அகில இந்திய வங்கி ஊழியர்சங்க இணை செயலாளரும் தமிழ்நாட்டு
வங்கிஊழியர்சங்கசெயலாளருமானவிஜயகுமார்என்பவர்தெரிவித்தாராம்.
.இதுஎப்படிஇருக்குஅந்தவிஜயகுமாருக்குதெரியாதவாங்கியவன்கள்
யாருன்னு?அப்படியே தெரிஞ்சாலும் நிணைவுட்டு கடிதமாவது
அனுப்பத்தான் முடியுமா?

போக்கத்தவன் பொண்டாட்டி முழுகாம இருந்தாலென்ன, பிறக்க
போகிற குழந்தைக்கு அப்பன் யாரான்னு தெரிஞ்சுதான் என்ன செய்ய போறோம்.தெரிஞசுக்க வேண்டியவங்களே! ரோஷம்கெட்டு,
மானம்கெட்டு,மருவாதி கெட்டு  நமக்குத்தான் ஓட்டு என்ற துட்டு
இருக்குற மப்புலலஇருக்காக!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...