பக்கங்கள்

வெள்ளி 09 2018

நினைவலைகள்-17.

சொன்னவரையே கடவுளாக்கிய   உத்தமர்கள்.......


மகா புத்தர் க்கான பட முடிவு




மக்களை கோவில்களும்
 புராணங்களுமே அறியாமையிலும்
அடிமைதனத்திலும் ஆழ்த்துகின்றன
என்று முதன் முதலில்
 சொன்னவர் அவரையே
கடவுளாக்கி வழிபடுகின்றனர்..
மூட நம்பிக்கையாளர்கள்...

வியாழன் 08 2018

நினைவலைகள்-16.

கருப்பு சட்டைக்கும் ஒரு காரணம்--




கருப்பு சட்டை க்கான பட முடிவு










என்னது தீபாவளி
அதுவுமா..கருப்பு
 சட்டை ய போட்டுருக்க.

என்னாது இதுதான்
தீபாவளி சட்டையா...
யோவ் கருப்பு
சட்டைய போட்டா
என்ன காரணமுன்னு
தெரியுமா? தெரியாதா.

நீ ...விசித்திரமாகத்தான்
இருக்கே..யா..தீபாவளிய
புறக்கணிக்கிறதுக்கு தீபாவளி
அன்னிக்கு புதுசா
கருப்பு சட்டை
எடுத்து போட்டு
கிட்டு தீபாவளிய
புறக்கணியுங்கள் என்று
சொல்லாம சொல்ற
பாத்தியா.....விவரம்ய்யா..

என்னது பழைய
சட்டையா அட
பாக்கிறதுக்கு புதுசு
மாதிரியே இருக்கு.

சரி..உன்
கருப்பு சட்டய
பாத்து தீபாவளிய
கொண்டாடத
வுங்க யாரு
இருக்கா..எங்க
ஒரு நாயக்
காட்டு பாப்போம்..

என்னாது.... நாயி
வேட்டு போட்டத
நான் காண்பிக்கவா
நான் எப்படியா
காட்டுறது..யோவ்
கருப்பு சட்டை

..

செவ்வாய் 06 2018

நினைவலைகள்-15.

 நேரம் ஒதுக்கீடும்...!!!!!!!!!! பூ சுற்றும் வேலையும்

தீபாவாளிக்கு வேட்டு போடும் நேரம் காலை  ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் பின் மாலை ஏழு முதல் எட்டு மணிவரை நேரம் நிரண்யித்து இருப்பதை  நான் படித்த போது  அம்பேத்கர்  பேசிய பேச்சில்  நடந்த சம்பவம்தான் (படித்தது)  மறதி என்ற பாகுபாடு இல்லாமல்  என் நினைவுக்கு வந்தது.


ஸ்டெர்லைட்டால் காற்று மாசு க்கான பட முடிவு





பேஷ்வாக்கரின் ஆட்சியில், அவர்களின் தலைநகரம் பூனா( புனெ) அந்த நகருக்குள் பகல் ஒன்பது மணிக்கு முன்பும், பிற்பகல் மூன்று மணிக்கு பின்பும் தீண்டப்படாதவர்கள்  நுழையக்கூடாது.

இதற்கு காரணம் என்னவென்றால் காலை ஒன்பது முன்பும் மாலை மூன்று மணிக்கு பின்பும்  தீண்டப்படாதவர்களின் உருவ நிழல் நீளமாக இருக்குமாம்
அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகி விடுவார்களாம்

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறமே நஞ்சாகி. பலவித.. கொடிய நோய்களால் பதிக்கப்பட்டு குற்றுயிறும் கொலயிறுமாக செத்து கொண்டிருப்பவர்களை காக்க  ஸடெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்று அமைதியாக போராடியவர்களை துப்பாக்கி குண்டுகளால் 14 பேரை சகாடித்து விட்டு  இப்போ அதை திறக்க முயற்சி செய்துகிட்டு இருப்பதை மறைத்துவிட்டு... வேட்டு போடுவதால் காற்று மாசு படுவதாக சொல்லி இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் மட்டும் காற்று மாசு அடையாமல் நின்று விடுவது போல்  நல்லாவே காதில் பூ சுற்றுகிறார்கள்......

நினைவலைகள்-14.

அவர்கள் என்ன சொல்வது.....
இவர்கள் என்ன கேட்பது..........

வெடி கட்டுப்பாடு க்கான பட முடிவு



உச்ச நீதிமன்றம் சொன்னது
இரண்டு மணி நேரம்
மட்டும்தான் வெடி வெடிக்க
வேண்டும் என்று..........

மாநில ஆட்சியாளர்களும் அதை
வழி மொழிந்தார்கள் காலை
ஆறு டூ ஏழு மாலை
ஏழு டூ எட்டு என்று

சட்டத்தின் காவலர்களும் உறுதி
செய்து  எச்சரிக்கை செய்தார்கள்.
குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பிறகு
 வெடி வெடித்தால் ஆறு
மாதம் சிறை மற்றும்
அபதாரம் அல்லது இரண்டு
சேர்ந்தும் விதிக்கப்படும் என்று
பய முறுத்தினார்கள் .அவர்கள்

யாரும் அவர்களின் எச்சரிக்கைக்கோ
அல்லது பய முறுத்தலுக்கோ
பயந்தவர்களாக தெரியவில்லை நீ
என்ன சொல்வது நான்
என்ன கேட்பது நாளைக்கு
தானே வெடிக்க நேரம்
குறித்தாய் நாங்கள இன்றே
வெடி வெடித்து ஒரு
பயலையும் தூங்க விடாமல்
புலம்பச் செய்து விடுகிறோம்
என்று பறை சாற்றுகிறார்கள்.






ஞாயிறு 04 2018

நினைவலைகள்-13.

 நான் நாத்திகனான கதை............

நான் நாத்திகன் ஏன் க்கான பட முடிவு




பல வேலைகளுக்கு சென்றேன் நான். எந்த வேலைகளிலும் நிலைத்து நிற்க முடியவில்லை அதற்கு காரணம் பல அதில் சில இவை..

வேலை முடிந்தவுடன் கூலி கிடைக்காதது வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் இன்னால்கள். கடைசியாக எனக்கிருக்கும் அறிவுக்கு கேற்றபடி எந்த வேலை கிடைக்கும் யோசித்தபோது...

அச்சாபிசில் பசை தடவுவதற்கும், டீ வாங்கி வரும் உதவியாளராகவும், டெலிவரி பாய் என்ற வேலைக்குத்தான் நான் லாயக்கு என்ற எனது எண்ணப்படி கடைசியாக அச்சாபிசு வேலைக்கு சேர்ந்தேன்.

சில வருடங்களாக உதவியாளர், டெலிவரி பாய் பதவியில் இருந்தபோதிலும். கிடைக்கும் நேரங்களில் கம்பாசிடராக, பைண்டராக...  பிரிண்டிங் மிஷின் ஓட்டுனராக கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்துக் கொண்டேன்.

அந்த அச்சாபிசில் வேலையின் போதுதான் பெரியாரின் சிந்தனையை அறியாமலே வாழ்நிலை நிகழ்வின் மூலம் நான் நாத்திகனானேன். அதில் குறிப்பிடும்படியாக சில...

பொதுவாக அச்சாபிசில் பேப்பர்கள் இருக்கும். அதோடு அந்த அச்சாபிசில் எலித் தொல்லைகள் இருக்கும். கம்போஸ் செய்ய  எழுத்துக்கள் போட்டு வைப்பது மரத்தால் செய்யப்பட்ட பல குழிகள் அடங்கி இருக்கும்

நான் வேலை செய்த மூன்று பிரஸ்களில்...  ஒன்றைத் தவிர மற்ற பிரஸ்களில் தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய அடையாளங்கள்  சுவர்களில் மாட்டப் பட்டு இருந்தாலும் , சிறிய பூ மாலை மட்டுமே மாட்டப்பட்டு இருக்கும் அதுவும்
செவ்வாய் வெள்ளி நாட்களில் மட்டும்தான்..  சூடம் கொளுத்துவதோ.. வாசனை பத்தி சொறுகி வைப்பதோ சுத்தமாக கிடையாது..

ஏனென்றால்..இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ-க்கு என்ன வேலை என்ற கணக்கு போலவே... பேப்பர். மரப்பலகை.. அட்டை இருக்கும் இடங்களில்  சூடம். வாசனை பத்தி. எலுமிச்சை. தேங்காய், வாழைப்பழம் எதுவும் வைத்து வழிபடுவது இல்லை.. கடவுள் அடையாள படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கொள்வதுதான்.



நான் வேலை செய்த இடங்களில்  கடவுள் தொழுகை , வழிபாடு மாதிரியான செய்கைகள் பழக்கங்கள்  இல்லாததால்.. என் வீட்டிலும் கடவுள் அடையாளப் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததும் பெரியாரின் சிந்தனைக்கு முன்பே நான் கடவுள் மறுப்பு காரனாக இருக்க வழி பிறந்தது.   அதற்கு பின்னர்தான்  கடவுள் மறுப்பு கொள்கை உடைய என் பாஸ் -ன்(முதலாளி) நடவடிக்கைகளை கண்டும் வரட்டு தனமான இல்லாமல் அறிவியல் பூர்வமான கடவுள் மறுப்பு காரனாக மாறினேன்.


அதன் மூலம்தான். அன்று முதல் இன்று வரை..(இனிமேலும்)... மத மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்த விழாக்களை கொண்டாடுவதில்லை.. அவைகளை ஊக்கப்படுத்துவில்லை...  அத்தகைய விழாக்களோடு சமரசமும் செய்து கொளவதில்லை.














ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...