பக்கங்கள்

வெள்ளி 01 2019

நினைவலைகள்-56.








பெரிய்ய.... கோவிலை பற்றி...........

தஞ்சை கோயிலை பார்த்த பெரியார் க்கான பட முடிவு








தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா  பெரியார்  ... என்று கேட்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்...

பார்த்தார் .. கோவிலை  பார்ப்பதற்கு முன் .. கோவிலை கட்டிய, அருள்மொழிவர்மன் என்ற அழகிய தமிழ்பெயரை விட்டுவிட்டு ராஜராஜசோழன் என்று மாற்றிக்கொண்ட சமஸ்கிருத பித்தரை பார்த்தார் ... 

அதே கோவிலில் தேவரடியார் என்கிற பெயரில் பெண்களை தாசிகளாக்கிய அவலத்தை பார்த்தார் .. 

கோவிலை மய்யமாக வைத்து அக்ரஹாரம், ஊர், சேரி என்று மனிதர்களை பிரித்த கொடுமையை பார்த்தார் ... 

கோவிலுக்கு உள்ளே சிலருக்கு அனுமதியில்லை, கோவில் கருவறைக்கு உள்ளே பலருக்கும் அனுமதி இல்லை என்று கோவிலின் பெயரால் நடக்கும் தீண்டாமையை பார்த்தார் .. 

கோவில் நிலம் என்கிற பெயரால் பார்ப்பனரகளுக்கு பொது நிலத்தை வாரி வழங்கிய பார்ப்பன அடிமை புத்தியை பார்த்தார் .. 

இத்தனையையும் பார்த்துவிட்டு பின் அந்த கோவிலை பார்த்து இது வானளாவிய குட்டிச்சுவர் என்று சொன்னார் ... 

தான் பார்த்ததையெல்லாம் ஒழிப்பதே தன் வாழ்நாள் பணி என்று ஒரு அழிவுவேலைக்காரனாக  கலகக்காரனாக வாழ்ந்தார் ... 

அன்றிலிருந்து இன்றுவரை கோவில் கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அறிஞர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் பைத்தியங்கள் .. வாயை பிளந்துக்கொண்டு ... 

கல்லிலும் மண்ணிலும் அறிவியலை பார்த்தவர் அல்ல பெரியார் .. மக்களின் வாழ்க்கையில் அறிவியலை தேடியவர்  பெரியார் .. என அறிவோம் அரசியல்!!


வியாழன் 31 2019

நினைவலைகள்-55.

கோட்சேவும்- காந்தியும்..











காந்தியிசம் ஒழிந்தது
அகிம்சையும் ஒழிந்தது
கொட்சேயின் இம்சை
தொடர்கிறது......காந்தியை
கொன்ற கோட்சேவுக்கு
சிலை  காந்தியை
பழித்து கோட்சேயை
புனிதராக மாற்றம்

கோட்சே காந்தியை
கொன்றதுக்கு காரணம்
என்னவென்று தெரியுமா?
காந்தீயின் இந்துத்துவா
கொள்கைக்கும் RSS
இந்துத்துவா கொள்கைக்கும்
ஏற்பட்ட முரண்பாடே
கொலைக்கு காரணம்
RSSன் இந்துத்வாவும்
காந்தியிசமும் வேறுவேறல்ல
இரண்டும் படு
பயங்கரமானது காந்தியிசம்
அழிக்கப்பட வேண்டிய
தத்துவம் என்றால்
இந்துத்துவா எரிக்கப்படவேண்டியது


கோட்சே நினைவுதினம் க்கான பட முடிவு
காந்தி நினைவுதினம் க்கான பட முடிவு










புதன் 30 2019

நினைவலைகள்-54.

சைவம் அகிம்சையாகது ஏன்?





மாட்டுக்கறி க்கான பட முடிவு



மாமிசம் சாப்பிடுவதில்லை
என்பது மாத்திரமே
அகிம்சை ஆகாது
மக்களை கஷ்டப்படுத்தாமல்
அந்த மக்கள்
மன வேதனை அடைய
செய்யாமல் இருப்பதும்
அவர்களுடைய அடிமைதனத்தை
நீக்க உழைப்பதும்தான்
அகிம்சை ஆகும்
மாமிசம் சாப்பிடமாட்டேன்
மாடு புனிதம்
என்று சொல்லிக்கொண்டு
மாட்டைக் கொல்வது
ஒரு போதும்
அகிம்சை ஆகாது

திங்கள் 28 2019

நினைவலைகள்-53.


சாகட்டும் விடுங்க சார்..







தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை?

காரணம் 1:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள பிளவுகள். 

காரணம் 2:
இடஒதுக்கீடு தவறு, தகுதியும் திறமையும் முக்கியம் என்ற தொடர்ச்சியான தவறான பரப்புரைகள்

காரணம் 3:
50% இடஒதுக்கீடு வைத்திருக்கும் BC, MBC கூட்டம் 18% இடஒதுக்கீடு வைத்திருப்பவனை பார்த்து இவனால் தான் தன் வாய்ப்பு பறிபோகிறது என்று நம்பிக்கொண்டிருப்பது

காரணம் 4:
இந்த 10% இடஒதுக்கீடு தன்னுடைய 69% இடஒதுக்கீட்டை மறைமுகமாக விழுங்கும் என்ற அறிவில்லாமல் இருப்பது.

காரணம் 5:
தன்னுடைய உண்மையான சுயவரலாறு மறந்து இல்லாத ஆண்ட பெருமை அளப்பரைகளை பேசியதால் பறிபோன இடஒதுக்கீடு உரிமை பற்றி பேச வேண்டிய இளம் தலைமுறை தன் சாதியை பற்றி பெருமை பீத்திக்கொண்டிருப்பதோடு, உயர்சாதியா இருந்தா என்ன? அவங்களும் பாவம் ஏழைகள் தானே ப்ரூ...என்று லூசுத்தனமா பேசிக்கொண்டு அலைவது

காரணம் 6:
இத்தனை ஆண்டு இடஒதுக்கீட்டின் மூலம் படித்து பொறியாளராகவும், மருத்துவராகவும், பல்வேறு சிறப்பு பட்டங்களும் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், வெள்ளைக் காலர் வேலையிலிருப்போர் பெரும்பாலனோர்...தான் ஒருவன் ஒரு குறிப்பிட்ட BC, MBC, SC சாதியில் பிறந்து முன்னேறிவிட்தால் தன்னுடைய மொத்த  சமுதாயமே தன்னைப்போல சிறப்பாக முன்னேறிவிட்டதாக எண்ணுவது, நம்புவது.

காரணம் 7:
வர்ணாசிரம படிநிலையில் ஒருவன் எத்தனை கீழான இடத்திலிருந்தாலும் அதையே அவர்களில் பலர் பெருமையாக நினைத்து வீரவன்னியன்டா!, கவுண்டனா கொக்கா?, கோனார்டா! நாடார்டா! முதலியார்டா! தேவன்டா! என்று அறிவில்லாமல் சீறிக்கொண்டிருப்பது. இதில் தாழ்த்தப்பட்டவர்களான ஆதிதிராவிடர்களும் விதிவிலக்கல்ல.  

நீங்கள் கவனித்து நோக்கினால், இப்படி இல்லாத பெருமைகளை பேசுவோர் எல்லோரும் 
♦ வீதிக்கு வீதி பிள்ளையார் சிலை வைப்பது,  
♦ தீபாவளிக்கு ஏன் திமுக வாழ்த்துவதில்லை என்று அலறுவது,
♦ ராகவேந்திரா, சாய்பாபா பெருமைகளை பேசுவது, 
♦ விபூதியை சுத்தமாக மறந்துவிட்டு செந்தூரத்தை பூசிக்கொண்டு அலைவது 
♦ ஐய்யப்பனுக்கு பெண்களே ஆகாதென்பது, 
♦ அமெரிக்காகாரனே சமஸ்கிருதத்தை படிச்சு மிரண்டுட்டான் என்பது,
♦ சிதம்பரம் நடராஜர் சிலை நாசாவிலிருக்கு...நம்ம நடராஜர் ஆடுவது தான் Cosmic Dance என்று கதைவிடுவது,
♦ தான் கோழி, ஆடு சாப்பிடுவது தவறில்லை, அடுத்தவன் மாடு சாப்பிடுவது தவறு என்பது,
♦ தன் உண்மையான சமூக வரலாறு & உணவுப்பழக்கம் தெரியாமல் புரட்டாசி, அமாவாசை, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி அசைவம் சாப்பிடாமலிருப்பதில் பெருமைக்கொள்வது
♦ ஒரு பக்கம் சிவனுக்கு பிள்ளைக்கறி சமைத்தான் தமிழன் என்று பெருமை பேசுவது, மறுபக்கம் அசைவம் சாப்பிட்டால் கோயிலுக்கு வரமாட்டேன் என்று ஜபுர் காட்டுவது
♦ திராவிடத்தால் வீழ்ந்தோம், தேர்தலை புறக்கணிப்போம், நோட்டாவை ஆதரிப்போம், நல்லக்கண்ணு நல்லவர், கக்கன் எளிமையானவர், Sagayam4CM, AbdulKalam4PM என்று உளறுவது
♦ உண்மை தமிழன் என்பதில் பெருமைக்கொள்வது, 
♦ ஓவர்டோஸ் இந்தியனாக சவுண்ட் விடுவது, 
என்ற மேற்சொன்ன பட்டியலில் அடங்கிவிடுபவர்கள் தான்.

இவர்களை நொந்து எந்த பயனுமில்லை. இவர்களை அப்படியே விட்டு வேடிக்கை பார்ப்பதே நல்லது. அடுத்து ஒரு மூன்று, நான்கு தலைமுறைகள் வீணாகப்போனால் தான் என்ன?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வீணாய் போனவர்கள் ஏதோ இந்த 50 ஆண்டுகளில் தலை நிமர்ந்தார்கள். 

நிமிர்ந்து என்ன பெரிசா கிழிச்சிட்டாங்க?
தன்னிலை மறந்தது தான் மிச்சம்!

சாகட்டும் விடுங்க...சார்.

ஞாயிறு 27 2019

நினைவலைகள்-52.

யார் இவன்..

gobackmodi trending க்கான பட முடிவு

இதைத்தான்
சாப்பிட வேண்டும் என்றான் 

இதைத்தான்
வணங்க வேண்டும் என்றான்.

திடீரென
ரூபாய்கள் செல்லாது என்றான்

 எல்லாத்தையும்
பேங்குல போடு என்றான் 

இதற்கு மேல்
போடவே கூடாது என்றான் 

இவ்வளவு தான்
எடுக்க வேண்டும் என்றான் 

அடுத்த மாதம் வரை
செல்லுபடியாகும் என்றான் 

அடுத்த வாரமே
அந்த மாதம்  இதுதான்  என்றான் 

பணமில்லா
பரிவர்த்தனை மட்டுமே என்றான் 

வாணவில் கலரில்
நோட்டுகள் அடித்தான் 

மாட்டை
கோமாதா என்றான் 

மாட்டிறைச்சியை
பின் வாசலில்  விற்றான் 

பசு மாட்டை  மட்டும்
சாமி என்றான் 

காளை மாட்டை
இறக்குமதி செய்தான் 

நான் கல்யாணம் ஆகாத
பிரமச்சாரி என்றான் 

பிரமாணபத்திரத்தில்
மனைவி யசோதா என்றான் 

வீட்டை விட்டு போனது
நாட்டுக்காக என்றான் 

பிற நாட்டுக்கு  போவதும்
நாட்டுக்காக  என்றான் 

முஸ்லிம் பெண்கள்
பாவம் என்றான் 

முஸ்லிம் பெண்களைக்கொன்று
சிசுவையும் எரித்தான் 

கூட்டுப் பாலியல்
வன்முறை செய்துவிட்டு

முத்தலாக் சட்டம் 
கூடவே கூடாது என்றான் 

காங்கிரஸ் ஒழிப்பே
ஊழல் ஒழிப்பென்றான் 

வியாபம் நடத்தி
ஊழலிலே ஏப்பம் விட்டான் 

நாட்டுக்காக
தியாகம் என்றான் 

வியாபம் பற்றி
கேட்டவனை எல்லாம்
பரலோகம் அனுப்பினான்.

இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவேன் என்றவன் உலகில் வளரும் நாடு பட்டியலில் இந்தியாவை தூக்க செய்தான் .

பல்லாயிரம் கோடி ரபேல் ஊழல் செய்தான், ஆனால் பொய் தகவல் தந்து உச்சநீதிமன்றத்தினை ஏமாற்றினான்..

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தினான். 

ஜல்லிக்கட்டு கூடாது என்றான்

மக்கள் மல்லுக்கு வரவும்
வாடி வாசல் திறக்கும் என்றான்

தற்காலிக விலக்கு
நீட்டுக்கு என்றான் 

அறிவுப் பெட்டகம்
அனிதாவை கொன்றான் 

சீர்திருத்தமே
ஜிஎஸ்டி என்றான் 

ஐம்பது லட்சம் பேரை
வீட்டுக்கு அனுப்பினான் 

நாடெங்கும்
ரெய்டை ஏவினான் 

தனக்கு பிடிக்காதவனை மட்டும்திருடன் என  கவ்வி பிடித்தான்...

ஓவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவேன் என ஏமாற்றியவன்.

மக்கள் ரத்தத்தை ஒவ்வொரு நாளும் உறிஞ்சுபவன்.

மீண்டும் பொய்யை சுமந்து வருகிறான்...
ஏழைத்தாயின் மகன் என்று வேசம் போட்டு வருவான்.
🔥🔥
2019 யிலும் இவன் வந்தால் 2022 ல்
 இந்தியா சோமாலியா வாக ஆகிவிடும்...

Whatsup பகிர்வு.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...