பக்கங்கள்

வியாழன் 02 2011

அட போங்கப்பா, நீங்களும் உங்க ஆராய்ச்சிகளும்.

செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய்
 தாக்குவதற்கு அதிக வாய்ப்புஉள்ளதாக
 உலக சுகாதார அமைப்பு (who) எச்சரிக்கை.

புகையிலை பிடித்தால் நோய் வரும்.
புகையிலை புகைந்தா போயிற்று
.புகையிலை பிடிக்காதோர் புதைந்து விட்டனர்.

மது குடித்தால் நோய் வரும்.
மது மறைந்தா போயிற்று.
குடிக்காதோர் மறைந்து போய்விட்டனர்.

மாதுவிடம் சென்றால் நோய் வரும்
.எயிட்ச் எட்டியா போயிருச்சு
செல்லாதோர் சென்று விட்டனர்.

செல்போன் பேசாமல் இருந்தால். புதையாமல்,
மறையாமல்,செல்லாம   இருப்பாறோ.

அட போங்கப்பா,நீங்களும் உங்க ஆராய்ச்சியும்.

உங்க ஆராய்ச்சியில் புண்ணாக்கு திண்ணும் மாடு
 கழியாமல் இருக்குமா? வேனா, புண்ணாக்கு
 தயாரிக்கும் புண்ணாக்கு ஓனரிடம் சொல்லுங்கள்

புண்ணாக்கு தயாரித்தால் உலகம் அழியும் என்று..

அட போங்கப்பா, நீங்களும் உங்க ஆரா......ய்ச்சீகளும் 

புதன் 01 2011

நீ.....என்ன ஆளு?

அவன் தனியார் கம்பெனிக்கு
வேலைக்கு சென்றான்
கவுஸ் கீப்பராக
பல நாள் வேலை பார்த்தான்
பிரச்சினையில்லை

ஒரு நாள் ஒருவர் கேட்டார்
நீ....என்ன ஆளு என்று.
பட்டென்று சொன்னான்
ஆம்பிள ஆளு என்று.

அது தெரியுது. உன் உடையை
பார்த்தா ஆம்பிள ஆள் என்று
வேலைய பார்த்தா பொம்பள
வேலையென்று. நான் கேட்டது
அது அல்ல. என்றார்.

மீண்டும் கேட்டார்
நீ...என்ன வர்ணம் என்று
சட்டென்று சொன்னான்
கருப்பு என்று.

கிறுக்கனா நீ...என்ன சாதின்னேன்.
அவன் சிரித்தான்
ஏன் சிக்கிறாய் என்றார்
இல்லே,முதலிலே கேட்டு
இருந்தால் சொல்லியிருப்பேன்ல

எடுத்த எடுப்பிலே கேட்கக்கூடாது
அது நாகரிகமில்லே எனறார்

மீண்டும் அவன் சிரித்தான்
என்ன சாதின்னு கேட்பது
மட்டும் நாகரிகமா?

உனக்கு உன் சாதியை
சொல்வதற்கு தயக்கமா?

இல்லே,இந்த வேலைக்கு
மேல் சாதிக்காரங்க வருவாங்களா?
என்ற சங்தேகம்.

எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே? என்றார்.

ஆமாமா,எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே என்றான்.

மொசைக்தரையை பளிங்காக்கிய
துடைப்பத்தை உதறும்போது
தண்ணிர் அவர்மேல் துளியாய்
பட்டுவிட்டது.

அவர் முகம் சுளித்தார்,முறைத்தார்
சுத்த இங்கிதம் தெரியாதவன் என்றார்.



செவ்வாய் 31 2011

தடை நீக்கப்பட்டது

தடை நீக்கப்பட்டது
இனி கடலுக்கு செல்லலாம் 
வலையை வீசலாம்
மீனை பிடிக்கலாம் 
அதிர்ஷ்டம் இருந்தால்
 குண்டுக்கு இரையாகலாம்
 தடை நீக்கப்பட்டது
 மீனவர்களுக்கு மட்டுமல்ல
சிங்கள இராணுவத்துக்கும்தான்.


 

திங்கள் 30 2011

நீ ...ஏன் ...புகைப்பதில்லை..........

நீ....... ஏன் புகைப்பதில்லை!
 புகை உடலுக்கு பகை என்பதாலா?

இல்லை,
புகை மற்றவர்களை பாதிக்கும் என்பதால்.

நீ மதுவும் அருந்துவதில்லையே!

என் சிந்தனையை காக்க விரும்பியதால்,

பெண்களிடமும் செல்வதில்லையே!
எயிட்ச் வரும் என்ற பயமா?

பய்மில்லை,
சீர்கெட்ட சமூகத்தை
மாற்ற வேண்டும் என்பதால்,

வாழ்க்கையை வீணடித்து விட்டாயே!

இல்லை,
வீணாகும் வாழ்க்கையை
உரமாக்கியிருக்கிறேன்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...