பக்கங்கள்

சனி 05 2015

மச்சான்களுக்கு சேவை செய்ய வருகிறார். வேண்டாம் மச்சான்.



படம்-Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்



இதுபற்றி அவர்,   நிருபர் மச்சானிடம், வேண்டாம் மச்சான் கூறியதாவது:-


“நான் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டேன். அதற்குப்பதில், பீட்சா, ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுவேன். என் உடல் எடை கூடியதற்கு அவைதான் காரணம் என்று கருதுகிறேன். 



உடல் எடையை குறைப்பதற்கு நவீன சிகிச்சை மையம் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். 1½ மணி நேரத்தில் 1½ கிலோ எடை குறைந்தேன். அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பயிற்சியை மே மாதம் வரை தொடர்ந்தேன். அதன் விளைவு 18 கிலோ எடை குறைந்திருக்கிறேன். 



தொடர்ந்து பயிற்சிகள்



நான் இப்போது அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதற்காக இன்னும் 8 கிலோ எடை குறையவேண்டும். தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருகிறேன். இப்போது நான் அரிசி உணவு எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. டீ, காபி அருந்துவதில்லை. என்னை பாதித்த மனஅழுத்தமும் குறைந்துவிட்டது”.



இவ்வாறு  வேண்டாம் மச்சான் கூறினார்.



மீண்டும் ,மச்சான் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு  வேண்டாம் மச்சான் அளித்த பதில்களும் 







மச்சானின் கேள்வி:- படவாய்ப்புகள் இல்லையென்றால், மற்ற கதாநாயகிகள் சொந்த ஊருக்கு பறந்திருப்பார்கள். கடந்த 5 வருடங்களாக உங்களுக்கு படவாய்ப்புகள் இல்லையென்றாலும், சென்னையைவிட்டு போகவில்லையே ஏன்?



சேவைக்கு வரும் வேண்டாம் மச்சானின்  பதில்:- என்மீது அன்புகொண்ட தமிழ் மக்கள்தான் காரணம். எனக்கு இங்கு நிறைய மச்சான்கள் இருக்கிறார்கள். அவர்களைவிட்டு நான் போகமுடியாது. என் வாழ்க்கை முழுவதும் தமிழ்நாடு என்று ஆகிவிட்டது. வடஇந்திய பண்டிகைகள் எனக்கு மறந்துபோய்விட்டன. பொங்கல், தீபாவளி தான் நினைவில் உள்ளது.



அரசியல் பற்றி மச்சான் கேட்ட கேள்வியும் அதற்கு வேண்டாம் மச்சான் அளித்த பதில்களும்,



கேள்வி:- திருமணம் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?( இந்தக் கேள்வி அரசியலாம்ப்பா)



பதில்:- திருமணத்துக்காக நான் உடல் மெலியவில்லை. படத்தில் நடிப்பதற்காகத்தான் நான் மெலிந்திருக்கிறேன், என்றாலும் நான் திருமணம் செய்துகொள்வேன். ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. எளிமையானவராக இருந்தால் போதும். திருமணத்துக்குப்பின் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வேன்.



கேள்வி:- நீங்கள் அரசியலில் ஈடுபட போவதாக பேச்சு அடிப்பட்டதே?



பதில்:- அரசியல் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது என் ஆசை. இரண்டு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை தேர்வு செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக நான் பிரசாரம் செய்வேன்.



மேற்கண்டவாறு மச்சான் கேள்வி கேட்க வேண்டாம் மச்சான்  நமீதா பதில் அளித்தார். 

ஏற்கனவே... புர்ச்சி தல்வரின் வா....வா.....ர்ரிசு...... புச்சி தலவி....தாலிக்கு தங்கம் கொடுத்து தாலிய அத்துக்கிட்டு இருக்கு.... வேண்டாம் மச்சான் வந்து எந்த சேவை செய்யப் போகுதோ... மச்சான்களுக்கே.... வெளிச்சம்.....!!!!






வெள்ளி 04 2015

அவர் யார். .தெரியும்.....ம்மா....? படித்தால் புரியும்....ம்மா..??

இரண்டாயிரத்து பதினாழாம்
ஆண்டின் அக்டோபர் ஐந்தாம்
தேதி அன்று ஒருநாள்.........

புகழ்மிக்க மருத்துவர்கள்
கூடியுள்ள அவையிலே
அவர் தன் மேதமையை
வெளிப்படுத்தினார்.......

பல ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
இங்கு இந்தீ...யாவில்

பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சை,மரபனு
சிகிச்சை எல்லாம்
செய்யப்பட்டு விட்டது.



இது மட்டும் அல்லாமல்
 புஷ்பக விமானம்
அனு குண்டு
தொலைக் காட்சிகள்
எல்லாம் பயன்
பாட்டில் இருந்தன.
என்றார்.....அவர்
யார் ..தெரியும்.....மா....???
படித்தால் புரியும்...ம்மா...???


தெளிவுரை:-


விநாயகரின் துண்டிக்கப்பட்டதலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாம்  (சிவபுராணம்)


குந்திதேவியை கருத்தரிக்காமல் செய்து  கர்ணனை பெற்றது மரபனு சிகிச்சையாம் ( மகா..(மகாபாரதம்)

நன்றி!!!
நன்றி! ...வினவு..


வியாழன் 03 2015

தாலிக்கு தங்கம் கொடுத்து தாலியை அறுத்த கதை.....






Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 5 பேர் ஆகியோருடன்
ஓட்டுக்கு காசு கொடுத்து தேர்தலில் ஜெயித்தது மாதிரி..தாலிக்கு தங்கம் கொடுத்து தாலிய அறுத்த கதைகளில் இது ஒன்று...

தாலிச்சூறையாடும் மது!

தமிழகத்தின் கல்லீரலை எப்படி மது கருக்கிக்கொண்டிருக்கிறது என்பதை ‘தி இந்து’ வெளியிட்ட ‘கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்’ பிரத்யேகச் செய்தி சொன்னது. அதைவிட நமக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது மது மரணங்கள்.

மது பாதிப்பு தொடர்பாக நம்முடைய செய்தியாளர்களும் நாம் நியமித்த பிரத்யேகக் குழுவினரும் மேற்கொண்ட ஆய்வில், திடுக்கிடவைக்கும் அளவுக்குத் தமிழகத்தில் மது மரணங்கள் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. ஏராளமான இளம் விதவைகள் உருவாகியிருக்கின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை படுமோசம்.

தமிழகத்தின் கிராமப்புறங்கள் மதுப் பழக்கத்தால் எப்படித் தத்தளிக்கின்றன என்பதற்கான ஒரு துளி உதாரணம், கடலூர் மாவட்டம் கச்சிராயநத்தம் கிராமம். “இந்தச் சின்ன கிராமத்திலிருக்கும் 450 குடும்பங்களில் 105 பெண்கள் கணவரை இழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோரின் மரணங்களுக்குக் காரணம் மது” என்கிறார்கள். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியோடு நாம் அங்கே சென்றபோது, அங்குள்ள ஒரு தெருவின் நிலைமையே நம்மை நிலைகுலைய வைத்தது.

ரஞ்சிதா - ராமச்சந்திரன், லட்சுமி - கந்தசாமி, ஜெயலட்சுமி - ஆதிமூலம், ஜெயலலிதா - பாண்டுரங்கன், ஆதிலட்சுமி - பழமலை, முத்துலட்சுமி -மகாதேவன், மலர்க்கொடி - சசிகுமார், கலாமணி - கோதண்டராமன், மந்திரிகுமாரி - செந்தில்குமார், ஜெயந்தி - ராஜ்குமார், தமயேந்தி - தேவநாதன், செல்வகுமாரி - கல்யாணசுந்தரம், வளர்மதி- வெங்கடேசன்,செல்வி - வெங்கடேசன். இந்தத் தம்பதியரில் ஒரு பெண்ணுக்குக்கூட கணவர் இல்லை. காரணம், மது. தற்போது இந்தக் கிராமத்தில் இயங்கிய மதுக் கடை மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கும் தனியாக இரு பெண்கள் உயிர்த் தியாகம் தேவைப்பட்டிருக்கிறது. கடைசியில் கிராமமே முற்றுகையிட்டதன் விளைவாகக் கடை மூடப்பட்டது.

இங்குள்ள பெண்களின் கதையைக் கேட்கவே நம்மால் முடியவில்லை. பேச ஆரம்பிக்கும் முன்னரே கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். “நம்மூர்லதான் அரசாங்கம் ஏழைப் பொண்ணுங்க கல்யாணத்துக்குன்னு அரை பவுன் தாலி தருது. ஆனா, இந்த ‘டாஸ்மாக்’ கடைங்க அந்தத் தாலியை அறுத்துடுதே… ஐயோ! என் மவராசன் போயிட்டாரே... என் வாழ்க்கையே போச்சே… நான் என்ன பண்ணுவேன்… என்ன பண்ணுவேன்?” என்று அடித்துக்கொண்டு அழும் முத்துலட்சுமி... “கல்யாணமாயி ஒன்றரை வருசம்கூட ஆகல... அது இருந்தப்பவும் நிம்மதி இல்ல, தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கும். செத்த பிறகும் நிம்மதி இல்ல.

இப்ப நான் பைத்தியக்காரி மாதிரி திரியறேன்” என்று கதறும் மந்திரிகுமாரி... “குடிச்சே அது செத்துப்போச்சு. எம் புள்ளைக்காகதாம் வாழ்ந்தேன். இப்ப அவனும் 15 வயசுலயே குடிக்கிறான். ஐயோ, எங்கதைய எங்கே சொல்லி அழுவேன்” என்று கலங்கும் ஜெயந்தி… இதையெல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை.

கதைகள் கச்சிராயநத்தத்தோடு முடியவில்லை. இன்னும், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல், திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டி என்று வரிசையாக நீள்கின்றன.

இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமே இல்லை என்கிறார்கள் மருத்துவர்களும் களப் பணியாளர்களும்.

“உலக அளவில் அதிகமான குடிநோயாளிகள் இருக்கும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுவிட்டது. இந்தியாவில் மது குடிப்பவர்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் ஏழை மக்கள் வாரத்துக்கு 2.5 - 3.5 லிட்டர்; நடுத்தர மக்கள் வாரத்துக்கு 1.5 - 2 லிட்டர்; மேல்தட்டு மக்கள் வாரத்துக்கு 0.75 - 1 லிட்டர் வரை மது அருந்துகின்றனர்.

ஆனால், இந்த அளவு தமிழகத்தில் இரு மடங்காக இருக்கிறது. இவ்வளவு மோசமாக மது உள்ளே செல்லும்போது, பாதிப்புகளும் அதற்கேற்பத்தானே இருக்கும்? ஒரு முறையான ஆய்வை மேற்கொண்டால், மிகப் பெரிய அதிர்ச்சிக்கு நாம் ஆளோவோம். அவ்வளவு கொடூரமாகச் சூறையாடிக்கொண்டிருக்கிறது மது” என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதார சங்கத் தலைவரும் மருத்துவருமான எஸ்.இளங்கோ. “தமிழகத்தில் 1.32 கோடிப் பேர் மது அருந்துகின்றனர். 2001-ல் நாங்கள் எடுத்த ஓர் ஆய்வில் மது குடிப்போரின் சராசரி வயது 40. அதுவே 2014-ல் 20 வயதாகிவிட்டது. மாதம் 40 புதிய குடிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தவிர, 20 பேர் சிகிச்சை பெறுவதற்காக முன்பதிவு செய்கின்றனர்” என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த போதை அடிமை மீட்பு மறுவாழ்வு மைய இயக்குநர் கே.ரத்தினம்.

எப்போது மீளும் தமிழகம்?

தி இந்து - 31/08/2015

புதன் 02 2015

சாதி வெறி போதையூட்டும் சினிமா.....

படம்- வினவு.( சுந்தர பாண்டியன்)

சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்த காலத்திலும், சரி, சினிமா தியேடடர்கள் குறைந்தவிட்ட இன்றும் சரி, சினிமா பார்க்காதவர்கள் யாருமே..இல்லை விதிவிலக்காக.. சகாமல் இருக்கும் பழையகாலத்து ஒன்றிரண்டு பெருசுகளைத்தவிர.....

தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தைப் பார்க்க ,தாய் சொன்ன சிறு வேலையை தட்டிவிட்டு சென்றார்கள்  அந்தக் காலத்தில் இருந்த போது இந்தக் காலத்தில் எப்படி இருப்பார்கள்.

அப்படி  ஆக்கிவிட்டது சினிமா....,சாராயக் கடையை திறந்து தமிழ்நாட்டு மானஸ்தர்களை ,மானம் கெட்டவர்களாக மாற்றிவிட்டது. இன்று ஆளும் கொமளவள்ளி அரசு.....

மக்களுக்காக ஆளுவதாக சொல்லிக் கொள்ளும் அரசே... மானங்கெட்டதனமாக நடந்து கொள்ளும்போது.... சினிமாவை இயக்கியவர்களும். அதில் நடித்தவர்களும், தயாரித்தவர்களும், கைகட்டி சும்மவா இருப்பார்கள்.

அவர்களும் தங்கள் பங்குக்கு மேலேயே போதையூட்டியுள்ளார்கள்... அவர்கள் ஊட்டியது சாராய போதை அல்ல.... சாதி வெறி என்னும் போதை... இந்த சாதிவெறி போதையிலிருந்து யாரும் தப்பியதாக இல்லை....

மலரும் நினைவுகளுக்கு ஒரு போட்டி  வைத்தால், அதில் இளமை துடிப்புடன் பூத்துக் குழுங்கும் கல்லூரி வாழ்க்கைதான் பலருக்கு முதலில் வரும். அத்தகைய கல்லூரி பருவத்தை தமிழ் சினிமா எப்படி சித்தரிக்கிறது.

கலரு,ஃபிகரு,கெத்து,கேலி,பேருந்தில் ஹீரோயிசம்,அடிதடி, பெண்ணின் காதலுக்காக நோயாய் அலைவது சுற்றுவது, இதுதான் கல்லூரி மாணவர்களைப் பற்றி வெள்ளித்திரை உருவாக்கி இருக்கும் முத்துக்கள.

காசு உள்ளவனுக்கே கல்வி என்று  சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளை அடிக்கிறது. அப்படியே படித்து வந்தாலும் வேலை இல்லை, பகுதி நேர வேலை செய்து கல்லூரி செல்லும் நிலை.. இதைக் குறித்தெல்லாம் எந்த சினிமா இயக்குநரும் பேசுவதில்லை...

ஆனால். இன்னொருபுறத்தில். இந்த சினிமா இயக்குநர்கள். இளம் பருவத்திலே எல்லோரையும் சாதி வெறியர்களாக மாற்றவும் செய்கிறார்கள்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வடிவழகன் என்ற பட்டி மன்ற பேச்சாளர் ஒருஉண்மையைச் சொன்னார்.  “ சாதி என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் தமிழ் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை, நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம் ” என்று கூறினார்.

உதாரணத்துக்கு, சில..

“சிங்கம.“ படத்தில் “என் சாதி,ஊர், குடும்பம், சொந்தம்தான் எனக்கு பலம்” என்று அதில் நடித்த நடிகன் சூர்யா சொல்வார்.  நல்ல கதையம்சம் படம்என்று சொல்பவர்கள், “நேர்மையும், சாதி பாராட்டாத என் ஊர் மக்களும்தான் என் பலம்” என்று ஏன்? பேசவில்லை... இயக்குநரும் ஏன் ?அந்த வசனத்தை சொல்லிவில்லை..

நட்புக்கு சாதி பார்ப்பதில்லை என்று சொல்லும் சினிமாதான். திருமணத்திற்கு சாதி வேண்டும் என்கிறது. அந்தச் தமிழ் சினிமா...“ சுந்தர பாண்டியன்” படத்தில் இப்படி ஒரு காட்சியில்..“ நானும் கள்ளன்தான், நீங்களும் கள்ளர்தான். அதனால் பெண்ணை கட்டிக் கொடுங்கோ” என்று ஒரு வசனம்..வரும், அதே கள்ளர் பெண்ணை வேறு சாதியை சேர்ந்தவர் காதலிக்கும் போது வெட்டுகிறார்களே.... அதை எந்த இயக்குநாராவது ஹீரோவாவது தட்டி கேட்டு படம் எடுத்து இருக்கிறார்களா..? கேட்டால் பல வசனங்களை அவர்கள் பேசுவார்கள்...

அதே சமயத்தில் அரிவாள், வெட்டுக்குத்து, பஞ்சாயத்து, ஏலம், ஊர்ப்பகை, சாதிப் பெருமிதம்,.... இப்படிபட்ட கேவலங்களை எல்லாம் தமிழர் வாழ்வியல் சிறப்புக்கள் என்று படம் பிடித்து க் காட்டுவார்கள்,

அந்த வரிசைகளில்  தேவர் மகன், விருமாண்டி, தேவர் வீட்டுப் பொண்ணு, மறவன் மகள்-மகன், சின்னக்கவுண்டர், எஜமான், நாட்டாமை, சேரன்பாண்டியன், சண்டைக்கோழி, மதயானைக்கூட்டம்----இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இப்படியான படங்களின் மூலம் சாதி வெறி போதையை  கிளப்புகிறார்கள்.இதனால் கல்லூரிகளும், பள்ளிகளும் ,விடுதிகளும் சாதி ரீதியாக பிளவுப்படுத்தப் படுகின்றன.இதன் பயனாக ஒரு கபடி போட்டிகூட வெற்றி தோல்வியில் முடியாமல் வெட்டுக்குத்தில்தான் முடிகின்றன..

கொம்பன் படத்தில் வரும் ஆப்ப நாட்டு மறவர், செம்ம நாட்டு மறவர் மோதலை .காட்டி சாதி பெருமையை வீரப் பெருமையைாக . காட்டுகிறார்கள்,
மறவர் குல மணிப்பிள்ளை என்று ஆடிப்பாடிய  அமரன் படத்தில் நடித்த கார்த்திக்  சாதிக் கட்சி தொடங்கி..இன்று காமெடி பீசாக வலம் வருகிறார்.

உலகமெல்லாம் சினிமா காட்டும் அமெரிக்காவில் கூட  கருப்பின மக்களையோ, செவ்விந்திய மக்களையோ சிறுமைப்படுத்தி படமெடுக்க முடியாது...ஆனால்.. கல் தோன்றா..மண் தோன்றா காலத்துக்கு முன்னே தோன்றிய தமிழ்நாட்டு  தமிழ் இனம் வாழும் தமிழ்நாட்டில் மட்டும்  சாதி வெறி ஊட்டி மற்ற சாதியை சிறுமைப்படுத்தி படம் எடுக்காமல் இருக்காமல் முடிவதில்லை..

கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி உதயக்குமார் போன்ற இயக்கு நார்கள் தங்கள் திரைப்படங்களில். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் கண்ணியமிக்க ஜமீன்தாரிகளகவும்.. அவர்கள்  வீதி வழியாக வரும்போது தலித் சாதியைச் சேர்ந்த மக்கள் சட்டை போடாமல் தோளில் போட்டு இருந்த துண்டை எடுத்து கம்புக்கூட்டுக்குள் வைத்துகொண்டு கூனிக்குறகி கும்பிடு போடும் அடிமைகளாக சித்தரித்து இருக்கிறார்கள்.

“உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை” போன்ற படங்களை இயக்கிய செத்தப்போன  பாலசந்தர்.அந்தப் படங்களில் உயர் சாதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடமில்லை என்று பொங்கி இருப்பார். அவரது வழியில் சாதிப் பாசத்துடன் சங்கர் என்ற இயக்கநாரும்.. “ஜென்டிமேன்” என்ற படத்தில்
இட ஒதுக்கீட்டை எதோ பிச்சை போலசித்தரித்து பொருமி இருப்பார். இவர்களை பார்த்தெல்லாம் இட ஒதுக்கிட்டில் மூலம்  பயன. பெரும் வீரப் பெருமையை  வெளிப்படுத்துவதற்க்காக மீசை வைத்துக் கொள்வதாக பீத்தும் மீசைகள்  கொதித்து எழுவதில்லை...

தன் சாதிக்காரன் என்பதால். கல்லூரி நடத்தும் தன்.சாதிக்காரன் இலவச இடம் தருவதில்லை. தன் சாதிக்காரனின் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்ல முடிவதில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த ஏழையும் பணக்காரனும் கூடிக் குலாவ முடிவதில்லை, ஒரே சாதி என்றாலும் வசதி  உள்ள பணக்காரன் வசதி இல்லா ஏழைக்கு பெண் கொடுத்து ஏற்றி விடுவதில்லை.

சாதிப் பெருமை பீத்திக் கொள்ளும்  கிராமங்களில் பெரிய சாதி. சின்ன சாதி என்ற   பாகுபாடு இல்லாமல் எல்லோரும் நாடோடி சாதியாகி நகரத்து டவுன் தெருக்களில்   பிழைப்பு தேடி அலையும் போதும் கூட் , வெட்டி சாதி பெருமையால் எந்தப் பயனும் ஏற்ப்ப்ட்டதில்லை..

நாமெல்லாம்  பிழைப்பு தேடும் ஏழை  மனிதர்கள்.  என்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலுபவர்கள் எல்லாம் மாணவர்கள் என்ற முறையில் ஒன்றிணைவதைக் குலைக்கும்   வகையில்தான் சாதி வெறி போதையூட்டுகின்றது  தமிழ்ச் சினிமா

மாணவப் பருவத்திலேயே கலை ஆர்வத்தை, சமூக அக்கறையை செதுக்கி சிற்மாக்கி கொண்டால்.. சாதி வெறியூட்டும் சினிமா போதையிலிருந்து நம்மை எளிதில் விடுவித்துக் கொள்ளலாம்....





செவ்வாய் 01 2015

படமும்...கருத்தும்..

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டை   சேர,சோழ,பாண்டியர்கள்  மூவரும் கூறு போட்டு ஆண்டனர்.

பின்னர் இடையில்  வியாபாரம் செய்ய வந்தவர்கள் கூறு போட்டதை ஒன்றாக சே்ர்த்து வைத்து கோலோச்சினர்.

கடைசியாக... தமிழ்நாட்டில் சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியன் வம்சத்து மரபு மீறாமல் சட்டமன்ற கூன் பாண்டியர்களின் படை சூழ ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம்..போதையும் போலீசும் துணை கொண்டு   ஆட்சி புரிந்து வருகின்றார்.

அதை விளக்கும் படமும் கருத்தும்..
அம்மா சட்டமன்றம்
தமிழநாட்டு சட்ட மன்ற கூன் பாண்டியர்கள்.

தலைவியின்  ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்

திங்கள் 31 2015

.காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ”

படம்-www.tamilvu.org

டிரிங்.........டிரிங்..................டிரிங்.............................

..................................................................

டிரிங்.......................டிரிங்.....................டிரிங்..............

.......................................................

டிரிங்......................டிரிங்...............ங்ங்ங்ங.........

“அலோ........ அலோ..... வணக்கம்.....யாரு  நீங்க...”

“வணக்கம்!”...நீங்க...யாரு.........

“முதலில் பேசியது நீங்க.....,நீங்கதான்......நீங்க யாருன்னு முதலில் சொல்லனும்”

ஓ....அப்படி...ஒரு முறை இருக்கோ...... மன்னிச்சிடுங்க........”

“சரிச்சரி......முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க.....”

“புலியை முறத்தால் விரட்டிய புளியம்மா மகன் புலியங் கொட்டை பேசுறேன்.”

“  ஆ.....ங்........ புளியங்கொடைடையா.......எங்கிருந்து பேசுறீங்க.......”

“ செவ்வா கிரகத்திலிருந்தா பேச முடியும், புலியூரிலிருந்து.........”

“ஒஙகளுக்கு என்ன வேணும்.”.......

நாலு புலியும், அஞ்சு புளியங் காயும் வேனு.ம்.....”.

புலியா.....  !!!!

................................................

யாரும்மா...பேசுறது....?

“ தாத்தா.....யாரோ...நாலு புலியும் அஞ்சு புளியங்காயும் கேட்குறாங்க...தாத்தா..

“இங்க...குடு.....

“யாருய்யா......நாலு புலியும் அஞ்சு புளியங்காயும் கேட்டது...”

“ வாய்யா...புளிமண்டி  நல்லாயிருக்கீயா........”

“ யோவ்...யாருய்யா.......”

“ இன்னும்  நானு யாருன்னு கண்டுபிடிக்கலையா.......?????

.........................................

“என்ன இன்னும் தெரியலையா... புளியம்மா மவன்னு.....”

“புலியங் கொட்டையா.....?????”

“ ஆமப்பா...ஆமா..... இப்பவாவது கண்டு பிடிச்சியே... ஆமா, முன்னாடி பேசியது யாரு....?
 ”பேத்தி”.....

“ என்னது பேத்தியா...!!!!!என்ன்ய்யா  ஔருற......நீதான் கல்யாணத்தையே மறந்தவனாச்சே....... எப்படி....!!!

“ யோவ்....என் அக்கா மகளோட மக..... என் அக்காவுக்கு பேத்தின்னா..எனக்கு பேத்தி இல்லையா..........

சரிய்யா...... சரிய்யா...தாத்தான்னு கூப்பிட்டது உன்னத்தானா.....!!! இப்போ புரிஞ்சு போச்சு......”

“ சரி,  நீ நல்லாயிருக்கியா.....”

“ நல்லாயிருப்பதால்தானே.... புளி மண்டி யின் ஞாபகம் வந்து புலீயங் கொட்டை பேசுகிறேன்.”

எனக்கு்ம். உன்  நெணப்பு வரும்... உன்னோட தொடர்பு எண் எனக்கு கிடைக்கல...மறந்திட்டேனு நிணைச்சுடாத.... என்னுடைய கைப்பேசி நம்பர குறிச்சுக்க.........

“ அப்பறம் .....பொழப்பு..தழப்பு எப்படி ஓடுகிறது........

“மூனு நேரம் குடிக்க கஞ்சி கிடச்சிருது....... அந்த கஞ்சி குடிக்கிறதுக்கு சில வேலைகளும் கிடைக்குது..... வேல வெட்டி இல்லாத நேரத்துல.... இணையத்தில  உலாவருவதில் பொழுதும் போகிறது........

“ கவலைப்படமா  இருக்கேன்னு சொல்லு....”

 கவலப்பட்டா எதுவும் நடந்து விடுமா, என்ன...!! “காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ” கவலைப்படாமல் இருப்பேன்  நண்பா................”

“அப்போ...கட்சிக்கெல்லாம்...போறது இல்லியா.”...

”அப்பப்ப....வேலை இல்லாதபோதும்....அதுக்கும் போவதுண்டு.”......

“ எப்படி  சலிப்பு இல்லாம.......”

காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ”தான்.

.....................................
........
....................
....................


நல்லது.... நாம ரெம்ப நேரம் பேசிட்டோம்.... எங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லாம்....என்னையே வெறித்து பார்த்த வண்ணம்   நிற்கிறார்கள்.

“ ஆமாம் .  அதிக நேரம் பேசிவிட்டோம்.., போனை வைத்துவிடு... நீ ஓய்வாக இருக்கும்போது..என் செல் நம்பர்க்கு .மிஸ்டுகால் பன்னு நான் பேசுகிறேன்.....

“சரி, நல்லது.. உன்னுடன் பேசியது எனக்கு பாரம் குறைந்து மகிழ்ச்சியாக  இருக்கிறது.

“சரி, கவலைபடாமல் தூங்கு.... மீண்டும் தொடர்பு கொள்வோம்.”..

“டொடக்.”................

“டொடக்”.........








ஞாயிறு 30 2015

“பட்டினி நாற்பதுகள்”..என்றால் என்னவென்று தெரியுமா???

படம்-
1830-ஜூலையில் பாரீஸ் நகரம் தெருப் போராட்டங்களாலும், சாலைத் தடையரண்களாலும் வெடித்து கிளர்ந்தது. 1831-ஆம் ஆண்டு, லியோன் நகரைச் சேர்ந்த பட்டு நெசவுத் தொழிலாளர்கள். தங்களைக் கசக்கி பிழியும் வியர்வைக் கூடங்களில்   இருந்து வெளியேறி ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். அப்பொழுது அவர்கள்.

“எங்களாட்சி வருகையில்
உங்கள் கொடுங்கோலாட்சி விழும்,
அப்பொழுது, பழைய உலகின் பிணத்துக்கு
பாடைத் துணியை நாங்கள்  நெய்வோம்!
கலகம் குமுறுவதைக் கேளுங்கள்!!
-எனப்பாடிச் சென்றார்கள்.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் எண்ணற்ற“ உணவுக் கலகங்கள்நடந்தன. அதனால் அந்தப் பத்தாண்டுகளை “ பட்டினி நாற்பதுகள்! என்று அழைக்கத் தொடங்கினர்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...