பக்கங்கள்

வெள்ளி 08 2011

ஓட்டு போட................


ஓட்டு போட இன்னும் நாலு நாள்தான் இருக்கு
இந்த நாளுக்குள்ள. அதாகப்பட்டது. அதிகாரிகள
காப்பாத்த அதிகாரிகள் சங்கம் இருக்கு.முதலாளிகள
காக்க முதலாளிகள் சங்கம் இருக்கு.இதுபோல
வாக்காளர்களை காப்பாத்த சங்கம் வேனாமா?
1,வருத்தப்படாத வாக்காளர் சங்கம்
2,வருத்தப்டும் வாக்காளர் சங்கம்
3,நேர்மையாக ஓட்டு போடுவோர் சங்கம்
4,கள்ள ஓட்டு போடுவோர்சங்கம்
5,ஓட்டு போடாதோர் சங்கம்
6,ஓட்டுக்கு பணம் வாங்குவோர் சங்கம்
7,ஓட்டுக்கு பணம் எதிர்பார்ப்போர் சங்கம்
8,ஓட்டுக்கு பணம் வாங்கிகொடுப்போர் சங்கம்
9,ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு மாற்றுகட்சிக்கு ஓட்டு போடுவோர் சங்கம்
10,கடசி தலைமையிடம் பணம் வாங்கி வாக்காளர்க்கு பொடுக்காமல்
பதுக்குவோர் சங்கம்
11,ஓட்டுக்கு பணம் வாங்குவதையும, ஓட்டு போடாமல் இருப்போரை
எதிர்போர் சங்கம்.
     இன்னும் சனத்தொகை மாதிரி சங்கங்கள் இருக்குதுங்கன்ணா!
நீங்க எந்த சங்கத்துல இருக்கீங்கன்னு சொல்லிட்டு போனிங்கன்னா,, இந்த தளத்துக்கு வந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்குங்கண்ணா !!!!

திங்கள் 04 2011

அது என்னங்க? சொல்லிபுட்டு போங்க!



பள்ளிப்படிப்பை முடிக்காம சுற்றிதிரிந்த நேரம்.எனக்கு அறிவுரை சொல்ல என் அம்மா ஒரு பெரிசுவிடம் இழுத்து
சென்றார்கள்.அந்த பெருசு என்அம்மா அடிப்பதை தடுத்து
நிறுத்தி என்னை அவரிடம் விட்டுட்டு போகச்சொன்னார்.

பிறகு, என்னைப் பார்த்து, நான் கைகட்டி நிற்பதைப் பார்த்து
கைகளை பிரித்துவிட்டு அருகில் அழைத்துக் கொண்டார்.
  
“டேய்,ய்....எத்தனாப்புடாபடிக்கிற”..                                                        

ஒன்பதாப்புல மூனுவருஷம்”.

வாத்தியார, டீச்சரா,

டீச்சரு,

அதான் மூனு வருஷமா படிக்கிறியா,

இல்ல,அந்த டீச்சரு என்ன சும்மா அடிச்சுகிட்டே இருக்கும்

நீ,நல்லா படிச்சா அந்த டீச்சரு ஏன்னடா அடிக்க போறாங்க,
நல்லா படிச்சாதாண்டா அறிவு வளரும். தெரியுமா?

எனக்கு அறிவெல்லாம் இருக்கு.

“நிஜமா அறிவு இருக்கா”.

.தலையாட்டினேன்.

சரி,ஒ.ஒ அறிவ சொதிக்கட்டுமா? அதுக்கு முன்னடி நமக்குள்
ஒரு பந்தயம். நா.....ன் சொல்ற கதைய சொல்லிட்டினா, நீ
பள்ளிகூடம் போகவேணாம். சொல்லமுடியலைன்னா...!

“நா..பள்ளிகூடம் போறேன்

“சாபஷ், பேச்சு மாறக்கூடாது.எங்க என் கையில சத்தியம்
அடுச்சு சொல்லு”.

“சத்தியம்.-

என்னத்த சொல்லிடப் போறராரு பெருசு”””.- மப்புல இருந்தேன்

கதைய கேட்டபிறகுதான். “ஆகா..நம்மல நைசா பேசி மாட்ட
வச்சுட்டாருன்னு தெரிஞ்சது.
     
ஒரு ஊருல ஒருபுருஷனும் ஒரு பொண்டாட்டியும் இருந்
தாங்க. ஒரு நாளு வெளி வேலைக்கு போயிருந்த வேளையில.அந்த புருஷனத்தேடி ஒருவன்.வந்தான்.வந்தவன்
கடைத்தெருவிலருந்த அந்த பொண்டாட்டியிடம் அவ புருஷ
னைப்பற்றி கேட்டான். அவன் பொண்ட்டாட்டியோ இப்படி
சொன்னாள்.

“அய்யா, எம்புருஷன் சுட்டவனை,சுடப்போயிருக்காரு.

“சரி, ஓம்புருஷன் எப்ப வருவாரு? வந்தவன் கேட்டான்.

அதற்கு அவள், அய்யா.நீர் வந்தால் வரமாட்டர்.நீரு வரா விட்டால் வருவார்.

“உன் வீடு எங்க இருக்கு –என்றான்.

“என் வீடா, என்வீடு பாலுக்கும் பானைக்கும் நடுவுல­என்றாள்

-பல பதில்களைச் சொன்னேன். தப்பு என்றார். என்னை யோசிக்க அவகாசம் கொடுத்தார். சில வழிமுறையும் சொன்
னார். மறுநாள் அவரை பார்க்காமல் பள்ளிகூடம் சென்றேன
                    ----------
படிச்சிடிங்களா?...........
          
“இந்த இடுகையை படிச்சுட்டு போறவங்களே!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!........
    
இந்த மூன்று  கேள்விகளுக்கும் அர்த்தத்தை சொல்லிவிட்டுப் போங்க?.............

x

ஞாயிறு 03 2011

அடபோங்கப்பா!!


அரசியல்,சமுகம்,அனுபவம் அதைப்ற்றியும் இதைப்பற்றியும் நிறைய யோசன
பண்ணி எழுதி வச்சுருந்தேனா, அதை வெளியீடுவதற்க்காக தமிழ்மணம் சசி சார்,சொன்ன மாதிரி என் அறிவுக்கு எட்டிய அளவில் முட்டி மோதி ஒரு
வலைத்தளம் தொடங்கினேன்.
     எல்லாம் “டமால்ஆகி போச்சு, என்னான்னா நா எழுதி வச்சிருந்த பேப்
பரெல்லாம் காணல,போனால் போகட்டும் போடா ன்னு  எழுதின மறுபடியும்
யோசிச்சா ,டமால்,டுமீல்ன்னு ஒரு சத்தம்கூட திரும்பி வரமாட்டேன்குது..
உள்ளதும் போச்சுதடா.
     வலைதளம் தொடங்குவதற்கு முன்னாடி புதுசு புதுசா சிந்தனை வந்திச்சு
அப்போ எழுதி வைக்கிறதுக்கு பேனா கிடைத்தா பேப்பர் கிடைக்காது.பேப்பர்
இருந்தா பேனா இருக்காது..இப்போ பேனாவும் பேப்பரும் இருக்கிறப்போ,
ஒன்னுமே வரமாட்டேன்கிது.
     “வினவுதோழர்களின் ஒரு பதிவை நெஞ்சிலே ஏற்றி,அது மாதிரி  போராடி சிந்தித்து குறிப்பெடுத்து டைப் அடிக்க உட்கார்ந்தா கரண்ட் ஓடிபோயிருச்சுஅது வர்ரதற்கு மூன்றுமணி நேரமத்துக்கு மேல் ஆகும். அதுவரைஎன்னசெய்வதுன்னு,சரி பொழப்ப பாக்கலாம்ன்னு, பொழப்ப பாத்தா  ஓட்போன கரண்ட்வந்துடும் பொழப்ப பாதியில விட்டுட்டு வரமுடியாது. மறுநாள்பாக்குமாதிரிபொழப்அரைகுரையாகமுடித்துவைத்துட்டுசாப்பிட்டுட்டுவந்தால்,துர்க்கமும்சோர்வும்வந்திடும்.துர்க்கத்தையும்சோர்வையும் ஒதுக்கிட்டு போனா.....
    
அடபோங்கப்பா?
ஊரு, நாட்டுல எருமை மாடு மேய்க்க முடியலைன்னு, இங்க வந்தா...................
 “என் எருமை மாட்டையே காணோம்
 உளரல்கவி, தனிஒருவனுக்கு(எனக்கு)எருமை மாடு மேய்க்க வழியில்லையெனில் இணைய(என்) இணைப்பையே நிறுத்திடுவே(ன்)ம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...