![]() |
| படம்-முல்லைப்பெரியாறு அணை குறித்து பீதி ஏற்படுத்த கூடாது: கேரள அரசியல்வாதிகளுக்கு கே.டி.தாமஸ் அறிவுரை முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள அரசியல்வாதிகள் பீதி ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பெரியாறு அணை உயர்நிலைக் குழு உறுப்பினருமான கே.டி.தாமஸ் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்தால் அணை உடைந்து விடும் என கடந்த 35 ஆண்டுகளாக கேரளா கூறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், தானும் இதனை முதலில் நம்பியதாக குறிப்பிட்டார். |
புதன் 23 2015
நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு....சண்டி மாடுகளுக்கு....???
செவ்வாய் 22 2015
தில் இல்லாத ஜால்ரா டீவிகளுக்கு ஒரு கேள்வி........
படம்.....ஜால்ராவில் நம்பர் ஒன் தந்தி டீவியா..? புதியதலைமுறை டீவியா?
ஜால்ரா அடிப்பதில் முதலிடத்துக்கு
போட்டி போடும் ஜால்ரா டீவிக்களை
பார்த்து கேட்டாராய்யா...ஒரே ஒரு கேள்வி....
குன்கா தீர்ப்பு சரியா...?
குமாரசாமி தீர்ப்பு சரியா? ன்னு
விவாதிக்க தயாரா..............???
![]() |
| படம்- |
திங்கள் 21 2015
அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல......
உலகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நாவின் அமைதிப்படைகள் செல்கின்றதே ..அதன் வேலை என்ன ? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்ப்படுத்த அவர்கள் ஏன்? சிரமப்படவேண்டும்? அப்படி, ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் ? விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம்தான் ”Whistle Blower"..இந்தப்படம் ஐ.நாவின் அமைதிப்படையின் கோர முகத்தை உரக்கக்கூறும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாகும்.
ஐ.நாவின் அமைதிப்படைகள் ,வெள்ளை சமாதான புறாக்கள் அல்ல, பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்த படையின் அட்டூழியத்தை எதிர்த்து போராடிய ஒரு சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி கேதரின் போல்கோவாக்கின் பயணம்தான் இந்தப்படம்.
“The Whistleblower ”
நன்றி! புதியகலாச்சாரம்.:- ஹாலிவுட் கவர்ச்சி ஆக்கிரமிப்பு வெளியீட்டிலிருந்து
ஞாயிறு 20 2015
ஒரு இன்னோவாவுக்காக..ஒரு புல் மப்பின் உளறல்....
| படம்-www.tamilcnnlk.com |
ஒரு பெக்கு சாரயம் இலவசமாக குடிக்க கொடுத்தற்க்காக..“ அவனப்போல மனுசன் ஒலகத்திலே இல்லே” ங்கிறியே... ஏன்டா...இந்த மப்பு ஒனக்கு...
அடப் போடா...“உலகம் தெரியாதவனாக இருக்கியே...” ஒரு பெக்கு சாராயம் வாங்கித் தந்தான் என்பதற்க்காக புகழுறேன்னு சொல்றியே.... நான் எந்த விதத்திலும் போட்டி போட முடியாத ஒரு ஆளு ஒரு இன்னனோவாவுக்காக எப்படியெல்லாம் புகழ்ந்து தல்லியிருக்காரு தெரியுமா....????
“அப்படியா..”...??
“என்ன நொப்படியா”...?? அந்தப் புகழ... சொல்றேன் கேளு.............
“பூவின் மெட்டு மலரும்போது.,
ஒரு மெல்லிய சத்தம் வரும்
இதை யாரும் கேட்டதில்லை
ஆனால்,ஒலிப்பதிவு செய்கிற
ஆற்றல் நொம்மாவுக்கு மட்டும்தான்
உண்டு. கடல் அலை சத்தத்தின்
அகராதி அந்த நொம்மாவுக்கு தெரியும்
அப்படிப்பட்ட..அந்த நொம்மாவை
யாராலும் வீழ்த்த முடியாது....
“டேய்...ஒரு பெக் சாராய மப்பை விட.... புல் மப்பு ஔறல்டா.......
“ இப்பப் புரிதா.....டா..நான் ஏன்? ஒரு பெக்கு சாராய மப்பில ஔருறேன்னு....
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...

