பக்கங்கள்

சனி 03 2016

வாக்குறுதிக்கு வாக்கரிசி போட்ட நூறாவது நாள்...


தலை  இல்லாதவர்களே!
வெட்கி தலை குணிந்த
நிகழ்வான இரண்டு
முறை பதவி
நீக்கம் செய்யப்
பட்ட நாளிலிருந்து

ஆறாவது முறையாக

தேர்தல் ஆணையம்
காவல் துறை
ஆதரவோடும்

மற்றும்

அரசு சாராயம்
கண்டெய்னர் லாரி
கருப்பு பணம்
துணையோடும்

வாக்குறுதிக்கு வாக்கரிசி
போட்டு ஆட்சிக்கு
வந்தது இன்றோடு
நூறாவது நாள்..

வெள்ளி 02 2016

சாவுறதலிலும் நோகாம சாகனும்முனனு இருக்குதுண்ணே..



அண்ணே...... நேத்து பேப்பர பாத்தீங்களா..ண்ணே....????

வேலையில பாக்கலேடா...... ஆமா...என்ன போட்டு இருந்தாங்கே....

தூத்துக்குடியில ஒரு பயங்கரம்ண்ணே.....


என்னது தூத்துக்குடியிலா...மணல் கொள்ளையன் விவகாரமாடா...?

அது இல்ணே்ணே.....

பின்னே......

சர்ச்சுல சாமி கும்பிட்டு இருந்த போது ஒரு தலையா காதலிச்ச டீச்சர போட்டுத்தள்ளிவிட்டு, அவனும் தூக்குல மாட்டிகிட்டு செத்து போனாண்ணே ..
ஒருத்தன்...

அவனாவது பரவாயில்லடா... கர்த்தரு எதுக்கும்  உதவ மாட்டாருன்னு. நெணச்சி நெணச்சவ..கிடைக்காத விரக்தியில போட்டுத்தள்ளிவிட்டு அவனும் தூக்கு கயிறுல மாட்டிக்கிட்டான்...

நம்ம நாட்டில பாரு, மத்தியிலும்... மாநிலத்திலும் ஆட்சிக் கட்டிலில் உக்காந்துகிட்டு..  பரதேசி பண்டாரங்க .கூத்தாடிக ஆடுற ஆட்டத்துக்கு காரணமானவிங்க.,  இன்னும் சாகம இருக்காங்கே அதுதாண்டா இப்ப படு பயங்கரமா இருக்கு......

 யார்ண்ணே....அவிங்கே....?

நல்லா கேட்ட போ..... அதாண்டா ஓட்டு போடும் எந்திரமான. வாக்காள ..பெரு மக்கள்.....கொலைகாரனையும் கொள்ளக்காரியையும் தேர்தெடுத்துவங்களை சொல்றேண்டா.....?ஃ

எவன்ண்ணே  சாகாம இருக்கப்போறாங்கே....ஒரு கூட்டம் தூக்கு கயிறுயில தொங்கப் போறேன்னு போராட்டம் நடத்துது.. இன்னொனு...உண்ணாவிரதம் இருந்து சாகப்போறேன்னு கத்துதுண்ணே......மற்றதுக எவன் செத்தா நமக்கென்னான்னு ரெம்ப சந்தோசமா இருக்குன்ண்ணே.. அதுவும் எதுவும் சாகாமே இருக்காதுண்ணே....  சாவுறதலிலும் நோகாம சாகனும்முனனு இருக்குதுண்ணே..

சரியா.. சொன்னடா....


புதன் 31 2016

வாழ்க! குடி அரசு!!..ஒழிக!!! குடிமக்கள்!!!.



குடி..குடிப்பது
குடி அரசுக்கு
வருமானத்தை கொடுக்கும்

குடிக்காமல் இருப்பது
குடி அரசின்
வருமானத்தை கெடுக்கும்...

குடிக்க..குடிப்பவர்களுக்கு
இருப்பவர்களுககு.தில்லுமுல்லு
இல்லாதவர்களுக்கு வீட்டீன்
அண்டா..குண்டா போக
கட்டிய தாலி........

வாழ்க! குடி அரசு!!
ஒழிக!!! குடி(க்காத) மக்கள்!!!!

திங்கள் 29 2016

மூடநம்பிக்கையும் தலையில் விழுந்த கொட்டும்....

“என்னடா...தலையில கைய வச்சுகிட்டு வர்ர......”

“ அது ஒன்னுமிலண்ணே.... சும்மா..ண்ணே...”

“என்னடா...சும்மா... இங்க வாடா.....கிட்டத்துல வாடா....”  ...“ டேய் என்னடா...மண்ட இப்படி புடச்சு போயிருக்கு...யாருடா கொட்டுனா...”

“ அது எங்கம்மாண்ணே...”

“என்னாது. ஒங்க அம்மாவா...?”  “ எதுக்குடா..ஒங்கம்மா..தலையில கொட்டுச்சு... சேட்ட ...பன்னுகீயா...” சொல்லுடா....

“சேட்ட..எதுவும் பன்னலண்ணே..... எங்கம்மா... பக்கத்துவீட்டு அக்காகூட புதுசா சேல கட்டிகிட்டு வெளியே போனாங்கண்ணே....நானு..“ எங்கம்மா பேறேங்கன்னு கேட்டேனண்ணே.... வுடனே எங்கம்மா கோபமா...“ வெளியே போகும்போது எங்க போறேன்னா ...கேக்குற...ன்னு... னங்குன்னு..என் தலையில கொட்டிட்டாங்கண்ணே... அதான் இப்படி வீங்கிப்போச்சு....

“ ஒங்கம்மா... இப்ப வீட்ல..இருக்காங்களா..... வெளியே போயிட்டாங்களா..“

“ வெளியே போயிட்டாங்கண்ணே...”

“ சரி, ஒங்கம்மா வந்தப்பிறவு, நா..ன் சொன்னதா நீ கேளு.... ஏம்மா... நான் எங்கே போறேன்னு கேட்டதுக்கு என் தலையில கொட்டுனியே.....பஸ்சுல போகயிலே.... டிக்கெட் கொடுக்கும் கன்ட்டக்டர்ர்ரு... எங்கம்மா போறீங்கன்னு
கேட்டு இருப்பாருலம்மா.... அவர நீ கொட்டுனீயாம்மான்னு  கேளுடா...”


“அட.கரெட்டுண்ணே......”

“இத கேட்டு பிறவு, ஒங்கம்மா..என்னா சொல்லிச்சுன்னு வந்து சொல்லுடா...” அப்புறம் பார்ப்போம். என்ன நா..ன் சொல்றது ஒனக்கு  புரியுதா...????”



ஞாயிறு 28 2016

செய்த சத்தியத்தை மறுத்த சத்திய சீலர்கள்.....



“ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்; ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை எந்த அளவிற்கு நீதியானதோ, நியாயமானதோ, அது போலத்தான், “காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக் கோருவதிலும் அரசியல் நியாயம் உள்ளது. 1947- இல் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒத்துக்கொண்டதோடு, அதனை ஐ.நா.மன்றத்திலும் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தது இந்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு முசுலீம்கள் இந்திய அரசிடம் புதிதாக எதையும் கோரவில்லை. “நீங்களே ஒப்புக்கொண்டபடி பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்ற வரலாற்று நியாயத்தைத்தான் கோருகிறார்கள்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாஜ்பாயி ஆட்சியின் போதும், அதன் பிறகு வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போதும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள், குழுக்கள் குறித்துப் பிரமாதமாகப் பேசப்பட்டாலும், அவைகளில் ஒன்றுகூட காஷ்மீர் மக்களின் மையமான அரசியல் கோரிக்கையான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேச மறுத்தன. குறைந்தபட்சம், காஷ்மீர் மக்களுக்கு அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட உத்தரவாதம் செய்ய மறுத்தன. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது அமைக்கப்பட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா மோகன், முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைய ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட மூவர் குழு, காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒப்புக்குச் சப்பாணியான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அளித்தது. அதனை வெளியிடக்கூட காங்கிரசு அரசுமறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்யும்காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பதிலாக, சிறிய இரக இரும்புக் குண்டுகள் அல்லது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதையே பெரிய சலுகையைப் போல அறிவித்தது. இந்த துப்பாக்கியால் ஒருமுறை சுடும்பொழுது ஐநூறுக்கும் குறையாத குண்டுகள் மழை போல ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதால், அவர்களின் தலை தொடங்கி பாதம் முடிய உடம்பின் எந்தப் பகுதியும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, சல்லடைக் கண் போலாகிவிடும். நிரந்தர ஊனமாக்கி நடைபிணமாக்கி விடும். உலகிலேயே இந்தக் கேடுகெட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி வரும் நாடுகள் இரண்டுதான். ஒன்று யுத இனவெறி கொண்ட இசுரேல், மற்றொன்று பார்ப்பன தேசிய வெறி கொண்ட இந்தியா.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது இருக்கட்டும்; அம்மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காகித அளவில் நீடிப்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.
காங்கிரசு அப்பிரிவைக் கொல்லைப்புற வழியில் நீர்த்துப் போகச் செய்தது என்றால், இந்து மதவெறிக்கும்பலோ அப்பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது

காஷ்மீர் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்
தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதைச் சட்டவிரோதமாகத் தடை செய்த மாநில அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சிறீநகரில் பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
நன்றி! வினவு

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...