பக்கங்கள்

சனி 27 2013

வலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்....


15வது ஆண்டைக்கடந்து 16 வது ஆண்டில் மெதுவாக அடி எடுத்து வைக்கும் என் வீட்டு  வழக்குக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றால் என்வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு அறைக்கதவு பெரிய பூட்டால் பூட்டியிருந்த்து வாய்தா தேதிக்கு  அரிய வழியில்லாமல்....

பஸ்பிடித்து இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரும்போது,
டீக்கடையில் நின்ற ஒருவர் என்பெயரைச்சொல்லி அழைப்பது எனக்கு கேட்காததால்,கைளை தட்டி அழைத்தவாறு என் அருகில் வந்து என்னுடனே நடந்து வந்தார்.

அவர் வாய்க்குள் ஒன்றை மென்றவாறே,நான் போய்வரும் விபரத்தை கேடக, வீட்டுப்பிரச்சனை,கோர்ட்டு பிரச்சனை,என்வீட்டை சுற்றியுள்ள இம்சை அரசன் அரசிகளின் பிரச்சினையை சொல்ல,.......

அதுக்கு அவரும்.அவரு வீட்டுப்பிரச்சனை,கூடவே நாட்டுப்பிரச்சனையை சொல்ல,இருவரும் பேசிக்கொண்டே நடந்து செல்ல......

அவர் தின்று கொண்டுயிருந்த மசால்கடலைபொட்டலத்தை நீட்ட. நான் வேண்டாம் மறுக்க, இப்படியாக மூன்று தடவை அவர்நீட்ட,நான் மறுக்க,

கடைசியாக, அவர் கொஞசுன்னு தின்னுப்பா........ என்று நாலஞ்சு கடலையை கையில் திணிக்க, பேச்சு பேச்சா இருந்ததினால், மறுத்ததை மறந்து கைகைளில் வைத்ததை. பார்க்காமல் வாயில் போட்டு மெல்ல...........

கடுக்கென்று சத்தம் அவருக்கு கேட்க, மசால்கடலைக்குள் கல்லா, பாத்து தின்னக்கூடாதுன்னு பதற...............

மசால் கடலை உருவில் கல்லாக, எனக்கு தொடர்ந்த இம்சை, என்வலது பக்க மேல கடவாய்பற்களில் ரெண்டு பிளாப்பாகிவிட்டது. மசால்கடலை கொடுத்தவர் என்னை சமாதனம் படுத்த, ஒன்னுமில்லேன்னு அவர சமாதனப்படுத்தி அனுப்பி வச்சு வீட்டுக்கு வந்தால் என்னால் பற்களில் வலியை தாங்க முடியவில்லை, எப்பாடா? சாயந்தரமாகுமுன்னு காத்திருந்து பக்கதில் உள்ள பல் கிளினிக்கு சென்றால் ,டாக்டரு வர 
நேரமாகும் என்று சொன்னார்கள்.

 சற்று தூரத்திலுள்ள அமெரிக்கவில் படிச்ச டாகடரின் கிளினிக்  சென்றால்

அவரு என்பற்களில் நிலமையை ஒலி-ஒளியாக காட்டி பற்களை புடுங்க வேண்டாம் வேர் சிகிச்சை செய்தால் பற்களை காப்பாத்தி விடலாம் என்றார்.

பல்வலியில் என்னால் எதுவும் பேசாமல் வலியை நிறுத்துவதற்க்காக டாக்டர் பேசிய 6000-ல் ஆயிரத்தைக் குறைத்து, வேறு வேலைக்காக என்மறுமகன் வைத்திருந்த 2000த்தை கொடுத்து  மீதியை அடுத்த சிகிச்சையின் போது கொடுப்பதாக பேசி வேர்சிகிச்சை செய்யப்பட்டது.


வேர் சிகிச்சையின்போது பல்வலியோடு,பல்கூச்சமும் சேர்ந்து என்னை படாய் படுத்திவிட்டது.

ஆங்கில மருந்தே சாப்பிடாத எனக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரகளை சாப்பிட்டதால் வாய்புராவும் கொப்பளித்து புண்ணாக வெடித்து விட்டது. அடுத்த வேர் கிசிச்சையும் செய்யமுடியாமல் போய்விட்டது.

தலவலி,காதுவலி,கண்வலி,தாடைவலி,வயித்துவலி,பல்வலி, முதுகுவலி, கைகால்வலி, எலும்புவலி இப்படி எத்தனையோ வலிகள் இந்த உடம்புக்குள்ளே.........

இப்படிபட்ட வலிகளை அனுபவிச்சாத்தான்........ வலிகள் 
பலவிதம்.அவைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று புரியவரும்.


வியாழன் 25 2013

ஒரு கூத்துக்கும் ஒரு கும்மாளத்துக்கும் ஒரு தசவதாரம்.....


கிருஷ்ணர் மோகினி  அவதாரம் எடுத்து மகாபாரதப்போரில் அரவானை பலியிடுவதற்கு முன் திருமணம் செய்து கொண்டதை குறிக்கும் வகையில்  கூவகம் கூத்தாண்டவர் விழா கொண்டாடுகிறார்கள்.

அதே கிருஷ்னர் என்ற பெருமாளு கள்ளஅழகர் அவதாரமெடுத்து மலையிலிருந்து இறங்கிவந்து வைகை ஆற்றில் இறங்கிவந்து மண்டூக முனிவருக்கு சாவு விமோசனம் கொடுத்துவிட்டு தசவதாரத்தின் ஒரு அவதாரமாக வைப்பாட்டி வீட்டுக்கு சென்று அங்கு அவதாரம் செய்வதை விழவாக கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய  கூத்து கும்மாளத்தில் ஆயிரக்கனக்கான கூட்டம்,இதே சித்திரையில் ஐபிஎல் என்று  கிரிகெட்என்ற கூத்தும் கும்மாளத்துக்கும் ஆயிரக்கனக்கான கூட்டம்.


இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும்  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவிழா,அதுக்கு ஒரு தசவதாரம்,அடுத்து  ஒரு தெருவுக்கு இருக்கும் கோயில்களுக்கும் ஒருவிழா, அதுக்கு ஒரு தசவதாரம். நாட்டிலே ஒரே கூத்தும் கும்மாளமும் விதிவிலக்கு எதுவுமில்லாமல் தொடர்நது நடந்துகிட்டு இருக்கு.....

 நாடே நாறிக்கிடக்குது,நாடு மட்டுமில்லாமல் வீடும் சேர்ந்து நாறுது. வீட்டீலே இருக்கிற ஆம்பிளைக்கு டாஸ்மாக்குன்னா, வீட்டீல இருக்கற பொம்பளைக்கு சீரியலு. பயல்களுக்கும் பொன்னுகளுக்கும் செல்லு,சினிமா, ,கிரிகெட்டு, இதுவும் பத்தாதுன்னு தேரோட்டம்,கல்யாணம் என்று இப்படியோரு கூத்தும் கும்மாளமும்

எப்படியும் தப்பித்து மாற்றுவழியை பற்றி சிந்தித்துவிடக்கூடாதுன்னு ஏகப்பட்ட தடைகள் ஒன்றா ரெண்டா எடுத்து சொல்ல, இப்படி நாறிக்கிடக்குதப்பா, நாட்டிலேயும் சமூகத்திலேயும்..........



செவ்வாய் 23 2013

தமிழக மக்களின் மரியாதைக்கு நன்றி கடன் செலுத்திய மனித நேயமுள்ள ஒருநடிகர்


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு2012ல் செப்டம்பர்5தேதி அன்று தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 38 பேர் பலியாகி 100க்கு அதிகமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

தீக்காயம் அடைந்தவர்கள்க்கு சிகிச்சைக்கான மருந்துகளை கேரள மாநிலம் அருகே உள்ள ஒற்றைப்பாலத்தில் அமைந்தள்ள “பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யில் வாங்கப்பட்டது.
வாங்கப்பட்ட மருந்துகளின் மொத்த மதிப்பு 38 லட்சத்துக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த தகவல் “பதஙஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யின் உரிமையாளர்க்கு தெரிவிக்கப்பட்டது.

கேள்விப்பட்ட அதன் உரிமையாளரோ, தமிழக மக்கள் தனக்கு அளித்து வந்த மரியாதைக்கு நன்றிக்கடனாக ஒரு பைசாகூட வாங்காமல் தீக்காயங்களுக்கான மருந்துகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதோடு மேலும் மருந்துகளுக்கான ஆர்டர் வந்தால்.இலவசமாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார்.

பணத்தை பொருட்படுத்தாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட அந்த உரிமையாளர் யார் என்று தெரியுமா?

முன்ணனி பின்ணனி உள்ள எந்த நடிகரும் நடிக்க மறுத்த,தயங்கிய நிலையில் துணிச்சலாக “டாக்டர் அம்பேத்கார்ஆக நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்கள்தான் அந்த நடிகர்.



திங்கள் 22 2013

கருவறைக்குள் நிலவும் சட்டபூர்வமான சாதி தீண்டாமை..........


முன்னோரு காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போதைய மீனாட்சி கோவில் அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியை அம்போன்னு தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள்தான் ஆதி சிவாச்சாரியர்கள் என்ற பட்டர்கள் .

பிரிட்டீஷ் ஆட்சி போனவுடன் எங்களது அதிகாரமும் போய்விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய “தேசபக்தர்கள்தான் இந்த சிவாச்சாரியார்கள். இன்றைக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களும்  இவர்கள் வழிவந்த சிவாச்சாரியர்கள்தான்.

இநத சிவாச்சாரியார்களிடம் பக்தி மட்டும் அல்ல,கடவுள் மீது மரியாதைக்கூட கிடையாது. இருந்திருந்தால்.கோவில்நுழைவப் போராட்டத்தின் போது மீனாட்சியை  புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளையின் உரிமை பறிபோய்விடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம்.

அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர்.

பெரியார் பிறந்த மண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசினாலும் பயன் ஏற்ப்படுமா? கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈனசாதியாய்,சூத்திரர்களாய் வாழ்வதைவிடகருவறைக்குள் நிலவும் சட்டபூர்வ சாதி திண்டாமைக்கு எதிராக   கிளர்ச்சி செய்துவது மேல் அல்லவா?



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...