
செவ்வாய் 06 2012
அதுவுடன் இதுவும் கலந்தாள்........................
அதுவுடன் இதுவும்
கலந்தால் அது
நஞ்சு.....................
இதுவுடன் அதுவும்
கலந்தாள்- அது
விஷம்.................
எது எதிலோ கலப்பு
உண்ணும் உணவிலே
நஞ்சு!!
அருந்தும் பானத்திலே
விஷம்!!!!
தப்பிக்க வழியில்லை
தற்காத்துக் கொள்ள
சிலதுகள்...............
*தயிருடன்
மாமிசம்
சேர்ந்தால்....
*தயிருடன்
வாழைப்பழம்
கலந்தால்.........
*தேனுடன்
தாமரை வித்தை
சேர்த்தால்.........
*கரும்பு
தின்றவடன்
நீர் அருந்தினால்.......
*வெற்றிலையுடன்
எண்ணெய் சேர்த்தால்....
*மீன்,முள்ளங்கி,கீரை
புசித்தப்பின் பால்
அருந்தினால்.............
*பாலுடன்
மீன்,கிரை
கம்பு,புளிப்புள்ள பழங்கள்
கலந்தால்..................
*மீன்,மாமிசம்
பொறித்த
எண்ணெயை மீண்டும்
பயன்படுத்தினால்.............
“நஞ்சுக்கு மறுபெயர் விஷம்”
ஞாயிறு 04 2012
ஆளும் அதிகார வர்க்கத்தின் இன்னுமோர் மிரட்டல்
உங்களைப்பற்றி-உங்கள்
இருப்பிடத்தைப் பற்றி-குடும்ப
உறுப்பினர்களைப்பற்றி- அறிய
ஆளும் அரசியல் கட்சியின்
இலவச பிச்சைகளை பெற
அடையாள அட்டை- அது
குடும்ப அட்டை
மந்திரி நாற்காலில் அமரவும்
அரசியல் தொழில் வளரவும்
ஊழல் கட்சிகள் வாழவும்-
அய்ந்து வருடத்திற்கொரு
முறை வார்டு உறுப்பினர்
முதல் பிரதமர் வரை
தேர்ந்தெடுக்க மட்டுமே
உள்ள உரிமைச்சீட்டு-அது
வாக்காளர் அடையாள அட்டை
தங்கநகர அதிவிரைவு
சாலைகளிலும குண்டும்
குழியுமான நகரத்து
வீதிகளிலும் முதலாளிகளுக்கும்
அவரின் பரிவாரங்களுக்கும்
அதிகாரிகளுக்கும் கார் ஓட்டவும்
ஜனங்களுக்கு பஸ் ஓட்டவும்
உங்களுடைய இரு சக்கர
வாகனத்தை ஓட்டுவதற்கு
அனுமதி சீட்டுதான்
ஓட்டுனர் உரிமம்.......
வெளிநாடு சுற்று லா
செல்வதற்கும் வேலை
செய்வதற்கு போவதற்கும்
வருவதற்கும் தங்குவதற்கும்
அனுமதி அளிக்கும் ஒப்புகை
சீட்டுதான் பாஸ்போர்ட்.
பெருகியதை பாதுகாப்பதற்கும்
வருவதை சேமிப்பதற்கும்
பயன்படும் பாதுகாப்பு சீட்டு
வங்கி கணக்கு புத்தகம்.
தொழில் அதிபதிகளும்
அதிகாரிளும் வேலை
செய்து மாத ஊதியம்
பெறுபவர்கள் அரசுக்கு
வரிகட்ட பயன்படும்
துறுப்பு சீட்டு...வருமான
நிரந்தர கணக்கு எண்.
வசதியள்ளவரையும்
வசதியில்லாதவரையும்
அறிந்து கொள்ள,தெரிந்து
கொள்ள.புரிந்து கொள்ள
ஆதாரமாக இம்புட்டு இருக்க..
தேவையற்ற ஆதார் அட்டைக்கு
கருவிழி,கைரேகை போட்டோ
எடுத்தால்தான். குடும்ப அட்டை
புதுப்பிக்கப்படும்,புதிய குடும்ப
அட்டை வழங்கப்படும்-என்பது
ஆளும் அதிகார வர்கத்தின்
இன்னுமோரு மிரட்டல்!!!!!
.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...