பக்கங்கள்

சனி 02 2015

அவன் ஒரு அண்டப்புளுகன்......


படம்-

ஓடும் ரயிலில்
பயணிக்கும்  பெண்ணே...

அவன்..உண்ணை
மானே...தேனே

என்று பொய்யாக
புகழ்வதை நம்பாதே..!!

ஏனென்றால்........ அவன்

 மானையும் பார்த்ததில்லை
தேனையும் ருசித்ததில்லை..

அவன்  ஒரு அண்டப் புளுகன்...

வியாழன் 30 2015

களவானிகள் களவானிகளிடம் புகார் செய்த கதை..

படம்-www.tamilsirukathaigal.com

தொழில் முறையில் பழக்கமான இரண்டு திருடர்கள் சந்தித்தபோது, தங்கள் தொழில் மற்றும் தொழிலின்பொது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை பற்றியும் கமிஷன்காரனைப்பற்றியும் அதாவது மாமூல் காரனின் தொல்லையைப்பற்றி பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஒருவன்.

அண்ணே, முன்ன மாதிரி,நம்ம தொழில்ல வருமானமே இல்லேண்ணே.... நமக்கு போட்டீயா தினுசா, தினுசா தொழில பத்தி தெரியாவதன்லாம் சக்கை போடு போட்டு இருக்காங்கேண்ணே. கிடைக்கிற ஒன்னு ரெண்டும், கிடைக்கிறதுல செலவுக்கே பத்த மாட்டுதுண்ணே, லம்பா, ஏதாவது கிடச்சா.. மாமூல்காரனுக்கு பாதிய கொடுத்துபுட்டு, இந்தத் தொழில விட்டுபுட்டு,இருக்கிற கொஞ்ச காலத்திலோவது நிம்மதியாக இருக்கலாம் பாக்குறேண்ணே....ஒன்னும் அமைய மாட்டுதுண்ணே என்றான்.

அப்படீயா  நீ..நிணக்கிற ...,அடப்போடா... நாம சும்மா இருந்தாலும் அடிக்கிற திருட்டுல பாதி வாங்கியே பழக்கப்பட்டவன். நம்மல சும்மா இருக்க விடமாட்டான்டா... இன்னிக்கி, நிலயில..அரசியல்வாதிகளும்.அதிகாரிகளும் களத்தில் குதித்து... நம்ம தொழில்ல இறங்கிட்டான் பாரு....இந்த லட்சனத்தில நம்மல நிம்மதியா இருக்க விடுவான்களா....???? அவிங்க திருடனத்துக்கு எல்லாம் நம்மளத்தான்டா புடுச்சு உள்ளே போடுவாங்கே......

என்னண்ணே..நீங்களே...இப்படிச் சொல்றீங்க.......

“நான்.என்ன..தமிழ்சினிமா பார்த்த கற்பனையிலா சொல்றேன். நாம அனுபவிச்சதையும்  நாட்டுல நடந்துகிட்டு இருக்கிறதையும்தாண்டா சொல்றேன்”.

“ஏண்ணே.....”..

ஏன்னா..? என்னத்தடா சொல்றது... அவனவன் அம்மாம் பெரிய படிப்பு படிச்சு வந்தது எதுக்கு தெரியுமா,?? கிடைப்பதையும்,கிடைக்கிறதையும், கொள்ளையடிப்பதிலும், சுருட்டுவதிலும்தாண்டா கண்ணும் கருத்துமா?? இருக்காங்கே... இவிங்க அடிக்கிற கொள்ள. கொலய கேட்க ஒரு நாதியமில்லடா, அப்படியே யாராவது கேட்டா...” ஆமா நாங்கதான் அடிச்சோம் செய்தோம் உன்னால முடிஞ்சத பாரு” இப்ப..என்னாங்கிற என்று 55 இங்ச் மார்ப தூக்கி காட்டுறாங்கேடா........

“அப்படி தூக்கி காட்டுற மார்ப வகுந்துதெடுத்துடுறும்ண்ணே...”

எங்கிட்டு எடுக்கிறது.,.அவிங்க படைய வச்சு நம்மல ரெண்டா பொளந்துதெடுத்தவாங்கே..... ஆந்திராவில இருபது பேத்த பொளந்தெடுத்த பாத்தியா......???? பெரிய பெரிய கொள்ளக்காரன்களை காப்பாத்த... இப்படி போட்டுத்தள்ளி கதை விடுறாங்கே.....

“ஆமாண்ணே........ரெம்ப கொடுமைண்ணே........”.

“நாமெல்லாம் அன்றாட வேல வெட்டி இல்லாத சின்னஞ்சிறு திருட்டு பயல்க...
ஆட்சியிலேயும் பதவிலேயும் இல்லாத பயல்க.... நமக்கு உதவ யாரும் இல்லாத பயல்க..... ஆட்சியிலும் பதவியிலும் இருக்கிற பெரிய திருட்டு பயல்களுக்கெல்லாம். யாருன்னு தெரியாதவனெல்லாம், சொந்தக்காரன் சாதிக்காரன் ,நண்பன்னு சொல்லிகிட்டு எம்புட்டு பேரு வாரங்கே பாத்தியா.......

நமக்கு கிடைக்கிற மரியாதையான, அடி,சித்ரவதை, வசவு, கொட்டடிச்சிறை, எல்லாம் அவிங்களுக்கெல்லாம் கிடைக்கா..தண்ணே.......

“யே..... அவிங்க எல்லாம் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறவங்கடா..... அதிலும் பரம்பரை பணக்காரன்க வேற, மக்களுக்கு சேவை செய்யனுமுனு  பரந்த உள்ளத்தோட வந்தவங்கேடா...... அவிங்க  எல்லாம் திருடமாட்டாங்க, ஏன்?பொது மக்கள் பணத்த மோந்துகூட பார்க்க மாட்டாங்கன்னு “ கக்கூல ஏசி வச்சுருயிருக்கிவங்கேடா.,அதுவும் அகில உலகமான மேலோகத்திலிருந்து அருள் பெற்று வந்தவிங்கன்னு சந்து பொந்துகளில் கூவுகிட்டு இருக்கிறத  கேட்கலியா....டா...”  

”ஆமாண்ணே....”.ஒரு ரூபா சம்ளம் வாங்கி 66கோடி கொள்ளை அடித்தவுக ஜெயில்ல இருந்தபோது எவ்வளவு ராஜ மரியாதை, எவ்வளவு வசதி வாய்ப்பு,. நாம ஜெயில்ல இருந்தபோது பேளுவதற்கு கூட வசதியில்லாம தவித்த  தவிப்ப நெணச்சா  ....கோபமா வருதுண்ணே.....

 கோபப்ப்படாதே.... கோபப்பட்டா உனக்குத்தான் நோக்காடு, உன் கோபத்தை குறைக்க இந்தக் கதையை கேளு......

 ..
திருச்சியிலே சுங்கத்துறைன்னு ஒரு அலுவலகம் உள்ளது. இந்தச் சுங்கத்துறையின் வேலை என்னான்னு தெரியுமா???  களவாடி கடத்திகிட்டு வருகிற களவானிகளிடமிருந்து அந்தப் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்கிற வேலை.. அப்படி களவானிகளிமிருந்து கைப்பற்றிய களவாடிட்டு வந்தப் பொருள்களை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள். அப்படி சமீபத்தில் களவாடிய பொருள்களில் பாதுகாப்பு பொட்டகத்தில் வச்சிருந்த  18 கிலோ தங்கத்தில் 15 கிலோ தங்கத்தை காணாம போச்சுடா...  காணமா போன தங்கத்தை இன்னும் தேடிக்கிட்டு இருக்காங்கேடா......!!!!


பெட்டகத்தில் இருந்தது எப்படியண்ணே..காணமால் போகும்...????

ஒரு தொழில் தெரிஞ்ச தொழில்காரன் கேட்குற கேள்வியாடா  இது...!!!

“இல்லேண்ணே....பாதுகாப்புடன் பெட்டகத்தில் வச்சிருந்தது., ......????


வடநாட்டு கொள்ளையர்களான கிரில்கொள்ளையர்கள், பீரோ கொள்ளையர்கள் கேள்விப்பட்டதில்லையாடா......????

“...............................”

அப்பேர்ப்பட்டவர்களுக்கு மேலான கடத்தல் கொள்ளையர்களையே பிடித்தவர்களுக்கு கொள்ளை அடிப்பதற்கு சொல்லியாடா..தரனும், மீன் குங்சுக்கு நீந்த கத்து தருவது மாதிரியில்ல பேசுற....”

“இல்லண்ணே....”

“என்ன  லொல்லண்ணே......”...

”அப்புறமென்ண்ணே.........”திருடன புடுச்சுட்டாங்களண்ணே....

“நீயோ,நானோ, இல்ல நம்மள மாதிரி யாராவது இருந்தா ஒடனே தூக்கி இருப்பாங்கேடா....???  


“.............................““

15 கிலோ தங்கத்தை கொள்ளை அடிச்சவன் ஆபீசருடா.....!!! அதுவும் மத்திய ஆபிசருடா..... என்ன ஆதாரம் கிடச்சிடுமா...? அப்படியே ஆதாரம் கிடச்சாலும் தணடிக்க முடியுமா,? ஓ,,,,,மயிரையும், ஏ..மயிரையும் புடுங்கிற மாதிரி..அந்த மயிர புடுங்க முடியுமாடா.....?  அப்படியே அந்த ஆபிசர்ரு மயிறு கீழே விழுந்தா......கூட.....“சார் உங்க மயிறு கீழே விழுந்திருச்சுன்னு எடுத்துக் கொடுப்பாங்கேடா......!!!

“ஆமண்ணே....சரியாச் சொல்லறீங்கண்ணே.....” இத விசாரிச்சு கொள்ளக்காரன புடுச்சு , தண்டனை கொடுத்து  எல்லா வசதியும் உள்ள அந்தச் ஜெயில்ல அடைக்கிறதுக்கு, 18, 20 வருசம் ஆகுமாண்ணே......

“ம்.ம்.,,,,,ஆகும்....,ஆகலாம்,...., அதுக்கு மேலேயும்  ஆகலாம், அப்படியே கழுவியும் ஊத்தி மூடலாம்”..டா,

“...?????????????????????????????????””











புதன் 29 2015

மகன் மூலம் ”மே நாள் சூளுரை”.யை தெரிந்து கொண்ட தந்தை........!!!

ndlf-may-day-notice-slider
படம்-வினவு


அந்தத் தெரு முச்சந்தியில் உள்ள டீக்கடையில்  ஒரு கூட்டமாக இருப்பதைக் கண்டதும். ஒருவர் சொன்னார்

“தோழர்  அந்தக் டீக் கடையில் கூட்டம் இருக்கிறது. நீங்கள் முன் சென்று பிரசுரத்தை கொடுத்து கொண்டு இருங்கள். தோழர்கள் இந்த வரிசைப்படியே நிதி வசூல் செய்து கொண்டு வருவார்கள் என்றார்.


அவர் கையில் பிடித்திருந்த பேனா சின்னம் வரையப்பட்டு இருந்த கொடியை தான் வாங்கிக் கொண்டு  மே நாள் பிரசுரத்தை கொடுத்தார்.


அதைப் பெற்றுக்கொண்ட தோழர் டீக்கடையில் கூடியிருந்த கூட்டத்திடம் மேநாள் பிரசுரத்தை விநியோகித்தார். கூடியிருந்த கூட்டமும் மறுப்பு ஏதும் சொல்லாமல் நீட்டிய பிரசுரத்தை வாங்கியது. சிறிது நேரத்தில் ஒவ்வொரு கடையாக நன்கொடை பெற்று வந்த தோழர்கள் அந்த டீக்கடைக்கு வந்தபோது கடைக்காரர், தோழர்களிடம் நிதி வசூல் நோட்டை வாங்கி ஒரு நோட்டம் பார்த்து விட்டு ஒரு நூறு ரூபாய் என்று எழுத்தால் எழுதிவிட்டு ரூபாயையும், நோட்டையும் கொடுத்தார். டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருந்த   பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்களும் தங்கள் பங்குக்கு நண்கொடை கொடுத்து நோட்டில் எழுத வேண்டாம் என்று மறுத்தபோது  வசூல் செய்து கொண்டு இருந்த தோழர் . அவர்கள் கொடுத்த ரூபாயை  நோட்டில் குறித்துக் கொண்டே...அடுத்த கடைக்கு நகர்ந்தார்.

மதிய வேளையில் வழக்கமாக வேலையை முடித்துவிட்டு வந்த மாரியப்பன் தான் உட்காரும் சீட்டீல் மேல்நாள் சூளுரை என்ற நோட்டீசை பார்த்தார். அதை பவ்வியமாக எடுத்து , பத்திரமாக மடித்து தன் அரைக்கால் டவுசரில் மடித்து வைத்துக் கொண்டார்.

 வேலை முடிந்து விட்டுக்கு வந்தவுடன் மகளை். மகனை பாரத்தார். மகள் தண்ணீர்பிடிக்க தாயாருடன் சென்றதை கவனித்ததும் மகனை தேடினார். மகன் விளையாடும் கிரிகெட் மட்டையை பார்த்தபோது அது சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டவுடன் சற்று அமைதியாகி மகன் வரவை நோக்கி காத்திருந்தார்.

முழு ஆண்டு தேர்வு முடித்திருந்த மகன்தன் நண்பர்களை சந்திவிட்டு வரும்போது தன் தந்தை விட்டில் இருப்பதைக் கண்டவுடன் விரைவாய் வந்தான். வந்தவுடன் தன் தந்தை வாங்கி வந்திருந்த தின்பண்டங்களைில் சில வற்றை எடுத்து ருசி பார்த்தான்.

தன் மகன் திண்டு முடிக்கும்வரை பொறுமை காத்த அந்தத் தந்தை, தன் பையில் மடித்து வைத்திருந்த  நோட்டீசை படித்துக் காட்டுமாறு வேண்டினார்.

அதை வாங்கிப் பார்த்த மகன், மடித்திருந்த பிரசுரத்தை பிரித்து, தன்தந்தையை கவனிக்குமாறு சொல்லிவிட்டு சத்தத்துடன் படிக்க ஆரம்பித்தான்.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
இந்த ஆண்டு மேதினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.
ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இதுதான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கேள்வியாகும்.
மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும், இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.
உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல், கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.
எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின்படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும், நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.
நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்கம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம், நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்குப் பயன்படுவதைவிட, பன்னாட்டு உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படும் சாதியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்சநிலையை எட்டிவிட்டன. நாட்டின் சமூக பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள்தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத்தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டுமொத்தச் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காணமுடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் திணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையுமே இவை காட்டுகின்றன.
இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்துவந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூட திவாலாகி, தோற்றுப்போய் விட்டன என்பதையும், சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள் கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் (blackhole) போயக் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் காட்டுகின்றன
இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாயவுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும்தான் இது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இதுதான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒரு உச்சநிலையை எட்டிவிட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களும் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இனி தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும், முழக்கங்களும் முன்வைத்து தனித்தனி இயக்கங்கள் நடத்தித் தீர்வுகாண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.
நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு
வெளியேதான் உள்ளன!
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின்
அதிகாரத்தைத் தட்டிக் கேட்க
வேண்டும்!
அவர்களின் அதிகாரத்துக்கு
சவால்விட வேண்டும்!
தங்களுக்கான அதிகார அமைப்புகளை
மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்!
மே நாள் சூளுரை :

ஆளும் அருகதையற்ற
அரசுக் கட்டமைப்பை
வீழ்த்துவோம்!

மக்கள் அதிகாரத்தை
நிறுவுவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர-இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

பேரணி- பொதுக்கூட்டம் 

மே நாள் கலை நிகழ்ச்சிகள்

மே-1 2015 மாலை 4.30 காந்தி மைதானம்,

கிருஷ்ணன் கோவில் தெரு.

 மாலை.6.30மணி

கோவில்பட்டி


தொடர்புக்கு--
கோவில்பட்டி-     மதுரை-       உசிலை
9944899190            9791653200       9894312290

கம்பம்-      சிவகங்கை-    ராஜபாளையம்
7502451019     9443175256       9751047902


புதியஜனநாயகம்  படியுங்கள் புதிய தொழிலாளி


----------------கடகடவென்று படித்து முடித்தபோதுதான் தன் தாயும் சகோதரியும் சேர்ந்து தான் படிப்பதை கேட்டுக் கொண்டியிருந்தது அந்த தந்தையின் மகனுக்கு தெரிந்தது. அந்த தந்தைக்கோ ஒரு கல்லில் ரெண்டு மங்காய் அடித்து விட்டதில் பெருமையாக இருந்தது.

செவ்வாய் 28 2015

விசுவாசத்தில் வண்டுமுருகனை விஞ்சிய ஒரு நீதிபதி...! ! !


படம்-www.newindia.tv
விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய அந்த நீதிபதி யார் என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அந்த ரெண்டு நண்பர்களுக்கு, அவர்களின் ஆர்வத்தை தீர்ப்பதற்கு தோதுவாய் ஒருவரை எதிர்பாரத்து கொண்டு இருந்தனர்.

வேண்டாத எதைஎதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருக்கும் நபர்களின் மத்தியில் அவர்களின் ஆர்வம் விசித்திரமாக இருந்தது. தங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் அந்த நண்பர்களின் ஆர்வத்துக்கு தடை போட்டவர்களாக இருந்தனர்.

தடையை மீறி... சோர்வையும் பயத்தையும் தூக்கி எறிந்ததன் விளைவாக அவர்களின் ஆர்வத்தையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொளவதற்க்காக ஒருவரை சுட்டிக்காட்டினார். ஒரு வக்கீல்

அதோ.. அந்த வக்கீலிடம் கேளுங்கள். அவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்.  விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி யாருன்னு” உங்களுடைய சந்தேகத்தை உடனடியாக தீர்ப்பார் என்று  ஒருவரை சுட்டிகாட்டியவரிடமிருந்து விடை பெற்றனர்.அந்த இரண்டு நண்பர்கள்.

 வந்தவர்கள் அந்த வக்கீலிடம் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர். தங்களின் ஆர்வத்தையும் எழும் சந்தேகத்தையும் தெரிவித்தனர்.

அவர் இரண்டு நண்பர்களிடம் கைக்குலுக்கிக்கொண்டு “ ஒரு நிமிடம் என்று சொல்லியவாறு ஒலி எழுப்பிய செல்போனில் சில நிமிடங்கள் பேசிவிட்டு இரு நண்பார்களை பார்த்தார்.

விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி யாரென்று  விளக்கமாக சொல்லுங்களேன் என்றார் ஒருவர். மற்றவர்களிடம் இதைப்பற்றி கேட்டபோது யாரும் சரியாக சொல்லாதததையும் சொல்லியவர்களில் பலர் தவறாக சொல்லியதையும்  அவர்கள்.கூறினார்கள்.

அவர். கைவசம் என்னிடம் பிரசுரம் எதுவுமில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்கமாக சொல்கிறேன். தற்போது சுருக்கமாக சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு தன் அலுவலக அறிமுகச் சீட்டை இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்துவிட்டு தொடர்ந்தார்.

 உச்ச நீதிமன்றத்தின் யோக்கியத்தைப்பற்றி சொல்வதற்கு ஒன்றா? இரண்டா?என்பதைவிட  எக்கசக்கமாக இருக்கிறது என்பதே உண்மை இருந்தாலும் நடப்பு விவகாரத்தில்“, விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” யைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

இப்போது தலைமை நீதிபதியாக இருப்பவர்  தத்து என்பவர். இவர் ஜெயலலிதாவுக்கு முறைகேடாக பிணை வழங்கியவர்., ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை மூன்றே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டவர். இவைகள் சட்ட விரோத நடவடிக்கைகள், மற்றும் அதிகார துஷ்பிரோயகங்கள். இவரின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை குற்றம் சாட்டியும், எதிர்த்தும்,“ ஜெயலலிதா வழக்கை தத்து விசாரிக்க கூடாது ”என்று ஆயிரம் வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளனர். கொடுத்த சில நாளில்  இந்த தத்து ஒரு படி மேலே போய், “ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வகேலாவுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தபோது, அவர்களை விடுதலை செய்ய காங்கிரசின் மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்ததால், நாடு முழுவதும் 14 ஆண்டுகள் சிறை வாசம் முடித்த சுமார் 1500 கைதிகள் விடுதலையாக முடியாமல் சிறையில் வாடுகிறார்கள்,

ஓராண்டு காலமாக இதற்கு ஒரு சிறப்பு அமர்வை நியமிக்க முடியாத தலைமை நீதிபதி  தத்து  ஜெயலலிதா வழக்கில்,குற்றவாளி ஜெயலலிதாவுக்கு
ஆதரவாக செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானிசிங் தீர்ப்பை தொடர்ந்து . உச்ச நீதிமன்றத்தின் இதுகாறும் கடைபிடித்து வந்த நடைமுறையை மீறி, பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று ஜெயலலிதாவுக்காக, ஒரே நாளில் சிறப்பு அமர்வை நியமித்தார். இத்தகைய காரண காரியங்கள்.மற்றும் அவரின் செயல்பாடுகளால்தான் ” விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” இவர்தான்.

 புரிந்துவிட்டது தோழரே.....!!! இதோடு தொடர்புடையதில் இன்னொரு   சந்தேகம். கேட்கலாமா..??? என்றனர்

“ ம்.... கேளுங்கள்..”

 “விசுவாசத்தில்  வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” விசுவாசத்தில் விஞ்சியது ”சாதி பாசத்தாலா...??? அல்லது  சூட்கேஸ் பாசத்தாலா...????  ..

..இரண்டிலும்தான்.... இதைப்பற்றி அடுத்த சந்திப்பில் பேசுவோம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினுடன் தொடர்பில் இருங்கள்.. தாங்கள் எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று சொல்லி இரண்டு நண்பர்களிடம் மீண்டும் கை குலுக்கிவிட்டு, நீதிமன்றத்திற்குள் சென்றார் அவர்.

திங்கள் 27 2015

கழுவி ..ஊத்துடா..........




“டேய் .....மச்சான்..ஒனக்கு ஜே.கே.வை தெரியுமா...?”


சேரனின்..“ஜே.கே எனும் நண்பனின் கதைதானே..மாப்ள.... தெரியும்டா...!!!

“அந்த..ஜே.கே இல்லடா..மச்சான்... இலிக்கீயவாதி..ஜே.கேடா...???

“ யாருடா..அந்தாளு...”..

“தெரிஞ்சா..தெரியுமுனு சொல்லு, தெரியலையன்னா...தெரியலைன்னு சொல்லுடா.....”

“ இலக்கீயமே...என்னான்னு தெரியாதப்ப....... இலீக்கீயவாதி  எப்படி..டா தெரியும்...”

“ம்.ம்........”

ஏன்டா......மாப்ள..... இப்ப..என்னாத்துக்கு இலீக்கீ...இலக்கீயவாதி..ன்ன.....

“ஜே. கே எனும் இலீக்கிவாதி செத்துப்பேனாருன்னு பேப்ர்ல போட்டு இருக்காங்கேடா...”.....!!!

“ அந்த இலீக்கியவாதி ரெம்ப.. பேமஸ் ஆனவராடா...?

“ஆமடா, சிலரால் தூக்கி வச்சு கொண்டாடப்பட்டு இருக்கிறார். பலரால் கழுவி ஊத்தி நாறாடிக்கப் பட்டு இருக்கிறார்.....

“போதுமடா...... பேப்பரு காரன் காலி இடத்த நெப்பு வதற்கு போட்டு இருக்கான்னு தெரிஞ்சு போச்சு...... ஆமடா... நிய்யி  அந்த இலக்கீயவாதியின் இலக்கீயத்த படிச்சியிருக்கீயாடா......,”

பேப்பர் படிக்கவே வழியில்ல... ,இந்த லட்சனத்துல அந்தாளு . இலக்கீயத்த..... எப்படிடா.. படிக்கிறது.. ????

“ தெரியாத ஆளப்பத்தி நாம என்னாத்துக்கு கதை அளந்துகிட்டு, பெரும்பாலன வுங்க கழுவி ஊத்துன மாதிரி, கழுவி ஊத்துடா...


.

ஞாயிறு 26 2015

விடுதலை வேண்டிய கூத்துகளில் புதுவிதமான கூத்து...!!!

படம்-makkalkural.net


ஒரு ரூபா சம்பளத்தில் 66 கோடியே 65 லட்சம் சம்பாதித்தவர். எப்படியாவது எந்த வகையிலாவது விடுதலை பெற வேண்டி.. ஆளும் கட்சியின் தொண்டர் என்ற மட்டத்திலிருந்து அமைச்சர்கள் என்ற மேல் மட்டம் வரையிலும். அரசு நிர்வாகத்தின் சாதாரண கடைநிலை ஊழியர்லிருந்து உயர் அதிகாரிகள் வரை

விதவிதமாக, டிசைன் டிசைனாக பல கூத்துக்கள் நடத்தியது எல்லாருக்கும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து அவ்வகையான கூத்துக்கள் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. இப்படியான கூத்துக்களின் புது வகையான கூத்து ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்ற எல்லா அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் கட்சி நிர்வாகிகளையும் ஓவர்டேக் செய்து முன்னேறி விட்டார்.

சாமியார் போல் தாடியுடன் காட்சி தரும் அமைச்சர், கரூரில் குடி கொண்டுள்ள மாரியம்மனுக்கு, அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி தூக்கி, மூன்று கிலோ மீட்டர் காவடியோடு நடந்து வந்து............

கோயிலுக்குள் நுழைந்து காவடியை இறக்கி வைத்த கையோடு தரையில் விழுந்து கோயிலை, சுற்றி சாஷ்டங்கமாக உருண்டு  வந்தார்.

இவருடைய கூத்தில்...,  மாரியம்மனுக்கு  மஞ்சள் நீராடி மஞ்சள் ஆடை உடுத்தி கையில் வேப்பிலையுடனோ, தீச்சட்டியுடனோ  வலம் வந்து ஆட்டம்போடுவதை  தமிழ் சினிமாவில் காட்டப்படும் விதிகளுக்கு மாறாக...“ஆம்பளை சாமியான முருகனுக்கு காவடி தூக்கி வரும் மரபை மாற்றி.... மாியம்மனுக்கும் காவடி தூக்கி ஒரு புது வகையான கூத்தை அரங்கேற்றி உள்ளார்.

 இதைப்பற்றி கேள்வி கேட்கும் ஆன்மீக ஊடகவியலார்க்கு, கோழி, குருடோ? நொண்டியோ? அதுவா முக்கியம் ருசி தானே முக்கியம் !!என்று சினிமா நடிகர்களான செந்திலிடம் -மணி கூறுவது போல...

 முருகனோ, மாரியம்மனோ, காவடியோ, வேப்பிலையோ, அதுவா முக்கியம், வேண்டுதல்கள் தானே முக்கியம் என்கிறார் இவர்.

பத்து தேங்காய்க்காக பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றும் பிள்ளையாரைப்போல.......  அமைச்சர் பாலாஜியின் வேண்டுதல்களினால் மனம் குளிர்ந்த அம்மன்....  அமைச்சரின் அம்மாவை விடுதலை ஆக்கிவிட்டால்.......

 அமைச்சர் அய்யாவுக்கு அடுத்த 2016ல் அமைய போகும் அம்மாவின் ஆட்சியில்  தன் பக்தனின்  பக்தியை மெச்சி பக்தனின் ஆசையை  மக்களின் அம்மா நிறைவேற்றாமலா  ..இருப்பார்.???????????

படம்-senthilvayal.com



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...