பக்கங்கள்

சனி 25 2015

ஒரு குடிமகன் குடிக்காமல் சொல்லியது....!!!

படம்-tamil.oneindia.com



அய்யா..வணக்கம்... 

66 கோடியே 65 இலட்சம் சம்பாதித்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி..சிங்கை  நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரி நடந்த வழக்கில் பாவானியின் நியமனம் பற்றி இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பற்றி இந்தியக் குடிமகனான தங்கள் கருத்தை சொல்லுங்கள் அய்யா...


ஓ....அதுவா....? அந்தத் தீர்ப்புதான் ரெண்டுக் கெட்டான் தீர்ப்பு என்று இந்தக் குடிமகனுக்கு தெரியுமே???  நல்லது.. தங்களுக்கு அரசியலை பற்றிய அக்கறையெல்லாம் இருக்கிறதுக்கு .வாழ்த்துக்கள்.

“ உங்கள் கணிப்பு படியே,அந்த ரெண்டுக் கெட்டான் தீர்ப்பை பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்”

இந்தியக் குடிமகன் பார்வையில் நிணைப்பது என்றால், “ சத்தியமா..நான் குடிக்கிற குடிமகன் இல்லப்பா,“ குடிக்காத குடிமகன் சொல்லியது என்று தலைப்பிட்டுக் கொள்ளவும்...

“..........................““

மதுரை தெற்கு மாசி  பழைய டி.எம் கோர்ட்டிலிருந்து வடக்குமாசி வீதி சந்திப்பு வரை  ஒரு வழிப் பாதையின்னு  அறிவிச்சா...... வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி வரக்கூடாது. இது அணைவருக்குமான ஒரு சட்டவிதி.. இது உதாரணமாக வச்சுகுங்க...

.....“..............”

.... ஒருவழிப்பாதையின்னு அறிவிச்ச சட்டத்தை மதித்து எல்லோரும் ஒரு திசை வழியிலே போய்கிட்டு இருக்கும்பொழுது. ஒரு ஆளு மட்டும் அந்த விதிய மீறிக்கிட்டு எதிர் திசையில் வருவான், அவன யாரும் கேள்வி கேட்க முடியாது.. பெரும்பாலனவர்கள் நமக்கு எதுக்கு வம்புன்னு  வாய்மூடி, மெய்பொத்தி  எதையும் கண்டுக்கிடாமா போய்கிட்டே இருப்பாங்க..... எதிர்திசையிலே போறவனும் நம்மல எதித்து எவன் கேப்பான் என்ற அதிகாரத்துல   எந்தவித கூச்சம் இல்லாமல் எதிர் திசையிலே போவான் அவரு யாருன்னா??  சட்டம் ஒழுங்கை காப்பத்துரதா சொல்லிக்கிற காக்கி சட்டை அணிந்த போலீசு

“..........???????????”

.”என்னப்பா..”.

“ ஒன்னுமில்லங்கய்யா.......  நீங்க சொல்லுங்க........”

“என்னடா, சட்டம் ஒழுங்கை காப்பாத்துற நீயே சட்டத்த மீறிப்போற என்று தைரியமுள்ள ஒரு மனிதன் ஒருவர் கேட்டால்.... திருடனை பிடிக்கப் போறேன்  என்பான்.      இதுமாதிரிதானாப்பா.....

பாவனி சிங் வழக்கில தீர்ப்பு அளித்த வழக்கிலே ரெண்டு பேர்ல ஒருத்தரு சட்டத்தை மீறி  சொல்லி இருக்காரு...... மற்றவர்கள் பார்வையில் சொல்வதென்றால் சட்டத்தை வளைத்து இருக்கிறாரு 

”அத வளச்சது யாருன்னு சொல்லங்கய்யா....”

“ அது யாருன்னு  இன்னுமா...அல்லாருக்கும் தெரியல......?????? எனக்கு முன்பு இருந்த  மூத்த குடி மகன் சொன்னதுதான் என்  நிணைவுக்கு வருதய்யா....

“அது என்னாதுங்கய்யா........

” தின்னுவது ஒருத்தனாம் பேளுவது இன்னொருத்தனாம்.. கேட்டா, நான் தின்னுவதை அவன் பாத்தான். அதான் எனக்கு பதிலாக பேளுறான்னு சொன்னானம்.”    அது மாதிரி இருக்குதுய்யா    இந்த நடப்பு....

வேறு ஏதாவது.........

அடுத்து என்ன.. ரெண்டு கெட்டான் தீர்ப்புக்கு அடுத்து   மூம்முர்த்திகள்  சொல்லப் போறாங்கள.. அவுக என்னா சொல்லப்போறாங்கன்னு பாப்போம்....

”நல்லதுங்கய்யா...”


புதன் 22 2015

ஒரு அமைச்சர் சீமானின் நகைச்சுவை அனுபவம்.....


படம்-voiceofmannar.com


உலகில் பரப்பளவு கொண்ட நாடுகளில் ஏழாவதும்,,அணு ஆயுதம் வல்லமை   இராணுவ வலிமையில் உள்ள நாடாக ஐந்தாவதாகவும்  மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவதாகவும் உள்ள ஒரு தேசம் அது.

 அந்த தேசத்தில்  நீண்ட காலத்துக்குபின் ஆட்சி பொருப்புக்கு வந்தப் உள்துறை அமைச்சரும்,அவரது பாதுகாப்பு படை பரிவாரங்களின் அதிகாரிகளும் அந்த நாட்டின் உள்ள உயர்ந்த பல மாடிகளை கொண்ட பங்களாக்களில் நடக்கும் நிகழ்ச்சிக்களுக்காக... அந்த மாடியின் உயரத்துக்கு செல்லும் லிப்டில் பயணித்தனர்.

அந்த லிப்டில் அமைச்சர் உள்பட பாதுகாப்பு படை அதிகாரிகளைச் சேர்த்து நான்கு பேர்கள் பயணித்தனர்.   இந்த நான்குபேர்களுடன் ஐந்தாவதாக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரியும் லிப்டில் பயணிக்க முயன்றபோது அவருடைய உருவம் மற்றவர்களுடன் சேர்ந்து நிற்பதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அடுத்த முறையில் வருவதாக அமைச்சரிடம் உத்தரவு பெற்று  அடுத்த முறைக்காக காத்திருந்தார்.

 நால்வருடன் சென்று கொண்டு இருந்த லிப்டானாது திடிரென்று பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. பதறிப்போன பங்களா நிர்வாகம், அவசரமாக இயங்கி லிப்டுக்குள் தவித்துக் கொண்டு இருந்தவர்களை மீட்டது.

எப்போதும் போலவே அமைச்சருக்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு படை அதிகாரிகளை முதலில் மீட்டு,கடைசியாக அமைச்சரை மீட்டது..

லிப்டுக்குள் சிக்காமல், லிப்டு மீட்புக்குழுவிற்கு தப்பித்த  எல்லை பாதுகாப்பு படை அதிகாரியைப் பற்றி ,  தான் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன் அனுபவத்தை கூறினார்அமைச்சர்.

பெருத்த உருவமான எல்லை பாதுகாப்பு படை அதிகாரி எங்களுடன் லிப்டுக்குள் சிக்கியிருந்தால்.. அந்த எல்லை பாதுகாப்பு அதிகாரியால் நாங்களும், அந்த அதிகாரியால் லீப்டு மீட்பு குழுவினரும் ரெம்பவும் சிரமப்பட்டு  கஷ்டப்பட்டு இருப்போம்.

நல்லவேளையாக நாங்களும், லிப்டு மீட்பு குழுவினரும்  அந்த கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி அந்த தேசத்தின் அமைச்சர். எல்லை பாதுகாப்பு படை அதிகாரியிடமிருந்து தான் தப்பித்த அனுபவத்தை பகிர்ந்தார்....


செவ்வாய் 21 2015

மகிழ்ச்சி.....!!!


மகிழ்ச்சி.................


அமைதி நிறைந்த ஸிம்பீர்ஸ்க் நகருக்கு மேலே மகிழ்வுடன் இசைத்தன வானம்பாடிகள். வோல்கா ஆற்றக்கு உயரே அவை பண் பொழிந்தன. நகரின் அருகாமையில் ஆறு சட்டெனத் திரும்பியத. பனிக்கட்டிப் பாளங்கள் அண்மையில்தான் உருகிப் போயிருந்தன.தடையின்றிப் பெருகிய ஆற்றில் சென்றது நீராவிக்கப்பல்.

“வெள்ளைக் கப்பலே, எங்கே போகிறாய்? “

ஸிம்பீர்ஸ்க் நகரில் வசந்தம்

விதிகளும் தோட்டங்களும் பட்சிகளின் கீச்சொலிகளால் நிறைந்திருந்தன. காற்று பிர்ச் மரக் கிளைகளை ஆட்டி உலுக்கியது. தெருக்களில் இளவேனிலின் ஆட்சி புரிந்தது.

உல்யானவ் குடும்பத்தாரின் இல்லத்திலும் மகிழ்ச்சி நிலவியது. அவர்கள் வீடு வோல்கா அற்றுக்குப் பக்கத்திலேயே இருந்தது. ஜன்னல் வழியே சுள்ளென்று வெயில் அடித்தது. நீராவிக் கப்பல்களின் சங்கொலிகள் கேட்டன.

அம்மா தொட்டில் மீது குனிந்தாள்.  தொட்டிலில் கிடந்தான் மகன். தாயார் அவனை உற்று நோக்கினாள்.

“நீ எப்படிப்பட்டவனாக வளர்வாய்? எந்த மாதரி வாழ்க்கை உனக்கு கிட்டும்?” என்று அம்மா சிந்தித்தாள்.

தகப்பனார்  இல்யா நிக்கலாயெவிச் அறைக்குள் வந்தார்.

“மரியார. கண்ணே!” என்று அழைத்து, “நற்பகல், மரியா என்றார்.

தகப்பனாருடன் கூடவே மூத்த குழந்தைகள் ஆண்ணாவும்அலெக்ஸாந்தரும் தாயாரிம் வந்தார்கள். கருவிழிகளும் சுருண்ட கேசமும் கொண்ட ஆண்ணாவுக்கு ஆறு வயது. அலெக்சாந்தருக்கு நான்கு வயது. ஆவல் பொங்க அவர்கள் தொட்டிலை நெருங்கினார்கள்..

“ குழந்தைகளே! உங்களுக்குத் தம்பி பிறந்திருக்கிறான்“ என்றார் இல்யாநிக்கலாயெவிச்.

“ எவ்வளவு சின்னூண்டுப் பயல்! ” என்று வியந்தாள் ஆண்ணா...

“ வளர்ந்ததும் பெரியவன் ஆகிவிடுவான்” என்று பதில் அளித்தார் தந்தை.

“ இவன் பெயர் என்ன?“ என்று தம்பியை நன்றாக பார்ப்பதற்க்காக நுனிக் கால்களில் எம்பி நின்றபடியே கேட்டான் அலெக்சாந்தர்.

“ விளாதீமிர் என்று கூப்பிடுவோமே” என்றார் தாயார்.

இவ்வாறு,வோல்கா நதிக்கரையில் உள்ள ஸிம்பீர்ஸ்க் நகரில், 1870 ஆண்டு ஏப்ரல் மாதம் 22ந்தேதி பிறந்தார்  விளாதீமிர் உல்யானவ் என்னும் புதிய மனிதர்.. பிற்காலத்தில் இவரே மாபெரும் லெனின் ஆகப் புகழ் பெற்றார்.





'மரீயா பிரிலெழாயெவா-" அவர்கள் எழுதிய “ லெனினின் வாழ்க்கைக் கதை என்ற பிரதான நூலிருந்து...

ஞாயிறு 19 2015

மனிதாபிமானத்தை மறக்கடித்த செல்போன் காதல்...

படம்- மாலைமலர்


கோட்டயம் ரயில் நிலையம். அந்த வழியாக செல்லும் ரயில்கள் யாவும் எப்போதுமே மெதுவாகத்தான் நகர்ந்து செல்லும். அந்த ரயில் நிலையத்துக்கு சற்று தள்ளி ஒரு லெவல் கிராசிங். அந்த லெவல் கிராசிங்கில் கேட் கீப்பராக தாமஸ் செயஸ்டியான் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

வழக்கம் போல் அன்று..மங்களுர்- நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் வருகைக்காக தாமஸ் செபஸ்டின் தன்பணியை செய்து கொண்டு இருந்த பொழுது ...

சற்று தொலைவு தள்ளி ,தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்த பெண் ஒருவர் தண்வாளத்திலே மயங்கி விழுவதைக் கண்டார். கண்டவுடன் பரபரப்பு அடைந்தவராக...

வந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முயற்சியாக, சிவப்புக் கொடியை விடாமல் ஆட்டிக் கொண்டே யாரவது உதவிக்கு வருவார்களா என்று சுற்றும் முற்றும் விடாமல் பார்த்தார்.

அப்போது தண்டவாளத்தில் மயங்கி விழுந்த கிடக்கும் பெண்ணுக்கு அருகில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் தன் பலம் கொண்ட மட்டும் கத்தி, அந்தப் பெண்ணை காப்பாற்றுமாறு கூக்கிலிட்டார்.

கேட் கீப்பரின் கூக்குரலை காதில் வாங்கிக் கொள்ளாமல் புறந்தள்ளிய இரண்டு வாலிபர்களும், மயங்கி விழுந்த கிடந்தப் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல்  உதவி கூட செய்யாமல் தங்களது “செல்போனில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண்ணையும், ரயில் வருவதையும் நேரடிக் காட்சிகளாக மிக ஆர்வத்துடன்  பதிவு செய்து கொண்டு இருந்தனர்.

 கேட்கீப்பர் தாமஸ்செயஸ்டியான் கூக்குரலிட்டபடியே ,சிவப்புக் கொடியை ஆட்டிய வண்ணமிருந்தார். வாய் பார்த்துக் கொண்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் சிவப்பு கொடியை ஆட்டுவதை கண்டவுடன் அவரும் பதறிப்போய் ரயிலை நிறுத்தினார்.

எஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்தியும், தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த பெண்ணின் மீது மோதிய பிறகே நின்றது.

ரயில் நின்ற பிறகு வேகமாக ஓடிவந்த தாமஸ் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடலைத்தான்  பார்த்தார்.

ரயில்வே போலீஸ் வந்து விசாரித்தபோது. தாமஸ் சொன்னார். “ நான் ஓடிவந்து அந்தப் பெண்ணை காப்பற்றுவதற்க்குள் ரயில் வந்துவிடும் என்பதால்தான். அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர்களை பார்த்து, அந்தப் பெண்ணை காப்பாற்றும்படி கத்தினேன்.

ஆனால், அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர்களோ, அந்தப் பெண்ணின் மீது ரயில் மோதுவதை படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.. அவர்கள் உடனடியாக செயல்பட்டு இருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.

பின் குறிப்பு-- இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார்.  பலவகையான பழக்கங்கள்படியே இந்த செல்போன் காதல் பெரும்பாண்மையானவர்களின் மனிதாபிமானத்தைதை  கொன்றொழித்து வருகிறது .உடனடியாக வாட்ஸ் அப்பிலும், சிறிது நாள்கழித்து பேஸ்புக்கிலும் இந்தக் கொடூரம் வரும் .இதையும் பெரும்பாண்மையானவர்கள் பார்த்து இரசிப்பார்கள்.  என்றார்


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...