பக்கங்கள்

வெள்ளி 03 2013

முதுமையை ஒத்தி போட ஆசையா?.......




இன்றைய சூழ்நிலையில் ஆசை படாதவர்கள் எவருமில்லை,
அந்த ஆசையானது சிலருக்கு நிறைவேறும் பலருக்கு நிறைவேறமல்இருக்கும் அதற்கு காரணம் இந்த 
சமூகத்தின் அவலம்தான் 

இருப்பவர்களும் சரி.இல்லாதவர்களும் சரி, எந்தச் செலவும் 
எந்த கஷ்டமும் இல்லாமல் முதுமையை தள்ளிப்போடலாம். 
அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால்.....

முதுமையை தள்ளிப்போட்டு. இளமையாக,இளமை 
உற்சாகத்துடன் இருக்கலாம்.எந்த வயதினராலும் இந்த 
அக்குபிரஷர் பயிற்சியை அதன் வழிமுறைகளுடன் விடாது 
செய்து வந்தால் முதுமையை தள்ளிப்போடலாம்.

நமது வலது கையின் முன்பக்கத்தில்,மணிக்கட்டுக்கும்,
முழங்கைக்கும் மத்தியில் ஒரு அங்குல வட்டத்தில் 
அக்குபிரஷர் மையம் உள்ளது.இந்த மையத்தில் தினமும் 
இரண்டு நிமிடங்கள் விட்டு  விட்டு அழுத்தம் கொடுத்து 
வந்தால் முதுமையைத் தள்ளிப்போடலாம்.

இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்.எந்த வயதானாலும் சீக்கிரம் களைப்படைய மாட்டார்கள்.

 உதவி.. மேற்படி நூலிருந்து..










புதன் 01 2013

இறையச்சம் கொண்ட மக்கள்........



 
ஒரு ஊருக்கு ஒரு சாமியார் அவரது சீடர்களுடன் வந்தார். அந்த ஊருக்க வெளியே உள்ள தென்னந்தோப்பில் டேரா போட்டார். காலையில் தியாணமும் உடற்பயிற்சியும் மாலையில் அவ்வூர் மக்களுக்கு ஞான உபதேசமும்  ஆசீர்வாதமும் செய்து வந்தார்.

மாலையில்  நடந்த உபதேசத்தில், கோபத்தைப்போலவே அச்சத்துக்கும் நாம் பயப்படவேண்டும் என்று ஊர் மக்களுக்கு அருள் பாவித்தார்.

நம்மைப் படைத்து பரிபாலித்து காக்கும் கடவுளுக்கு மட்டும் பயந்தால் போதுமானது என்றார். கடவுளுக்கு பயப்படாமல் போனதால்தான் நாட்டில் வன்முறையும் சீர்குலைவும் தலைவிரித்தாடுகிறது என்றார்.

 சாமியாரின் கூட்டத்தில் அமர்திருந்த அவ்வூர் மக்களில் பலர்

“சாமி, நீங்கள் சொன்னபடியேதான் நாங்களும் எங்கள் முன்னோர்களும்  இறைவனுக்கும் ஊரில் உள்ள பெரிய  மேன்மக்களான பணக்காரர்களுக்கும் பயந்து இறை அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். அப்படியிருந்தும் இறைவன்   எங்களை  ஏறேடுத்தும் பார்ப்பதில்லை எங்களுக்கு எந்த ஆசியும் வழங்குவதில்லை. பணக்காரர்களை மட்டும்தான் அவர் பார்த்துக் கொள்கிறார்.  நீங்கள்தான், கடவுளிடம் சொல்லி, எங்களையும்  பணக்காரர்கள் ஆக்க ஒரு வழி காட்ட வேண்டும் என்றனர்.

பணக்காரர்களுக்கு இறையச்சம் இல்லாமல் போனதினால்தான் இவ்வளவு விளைவு என்றுவிட்டு  இருந்தாலும் பணக்காரர்கள் செய்யும் தான தருமங்களில் கடவுள் மயங்கி விடுகிறார். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும்  இறையச்சத்துடன் இருந்தால் கடவுள் உங்களுடனே துணையிருந்து உங்களுக்கும் அருள் காப்பார் அதற்கு நான் கேரண்டி என்றார்.

அந்த ஊர் மக்களும்,  சாமியார் சொன்னதை அருள்வாக்காக நிணைத்து கொண்டு,அச்சம் என்பதை அறிவுடமையாக்கி,  தனக்கு மேல் இருப்பவர்களுக்கு பணிவு காட்டி மனதில் அச்சம் கொண்டு  தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கோபம் கொண்டு  மிரட்டி அடக்கி ஒடுக்கி வந்தனர். 

இப்படி ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை மிரட்டியும் அடக்கியும் அதிகாரம்  செலுத்தி ஆண்டான் அடிமை  என்ற அச்சத்தை விதைத்து    இறைவனிடம் இறையச்சம் கொண்டவர்களாக  வாழையடி வழையாக வாழ்ந்து வந்தனர்.



செவ்வாய் 30 2013

சிரித்தால் வலி குறையும்


வேலைக்கு சென்ற ஒரு மனைவி,கொஞ்சம் தாமதமாக வீடு வந்து சேர்ந்தால், சிறிது ஓய்வு எடுப்பதற்க்காக தனது படுக்கை அறைக்குள் வந்தபோது படுக்கையில் போர்வைக்குள்ளிலிருந்து நாண்கு கால்கள் தெரிந்தன.

கோபம் கொண்ட மனைவியானவள் வெளியே வந்து கிரிகெட் மட்டையை எடுத்துக்கொண்டு கை வலிக்கும்வரை போடு போடொன்று போட்டுவிட்டு சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினாள். எதிரே அவள் கனவன் நின்று கொண்டு இருந்தான்.

என்ன டியர், இன்னிக்கு லேட்டா, உன் அப்பா,அம்மா வந்திருக்காங்க, நான்தான் நம்ம பெட்ரூம்ல படுத்துக்கச் சொன்னேன். அவுங்கள பாத்தியா  டியர் என்றான் கனவன்



திங்கள் 29 2013

நடிப்பில் விஞ்சிய திருவோடு தந்த அன்னலெட்சுமி............

படியுங்கள் புதிய கலாச்சாரம் - மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்

இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களில் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி தெரியாது.தெரிந்திருக்கவும் அவர்களுக்கு வாய்பிருக்காது.


தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். தமது உடமைகளை துறந்து பறிகொடுத்து ஏதிலிகளாக வந்துள்ள இம்மக்களில் சுமார் 70.000 பேர் தமிழமெங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அனுதாபத்துக்குரிய அகதிகளாக தமிழக  அதிகாரிகளும்,போலீசும் கருதுவதில்லை, ஈழவிடுதலைஇயக்கத்தை நசுக்குவது என்ற “ இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில் நக்சல்பாரி இயக்கத்தவரை உள்வு பார்ப்பதற்க்காக தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட கியூபிரிவு உளவுத்துறையால்  அன்றைய தி.மு.கஅரசும், இன்றைய அதிமுக அரசும் ஈழ அபகதிகளை கண்காணித்து கட்டுப்படுத்தி ஒடுக்கியே வந்துள்ளன. வருகின்றன.

சிங்கள இனவெறிபாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர்களின் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள,வரவிருக்கும் நாடாளமன்ற தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்க்காக அணைத்து ஓட்டு கட்சிகளும் மாணவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக நடிக்கின்றன.

இந்த நடிப்பில் விஞ்சியிருப்பது தமிழனுக்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்

“ இலங்கையின் மீது பொருளாதாரத்தடை, போர்க்குற்ற விசாரனை,பொது வாக்கெடுப்புஎன்று அடுத்தடுத்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மற்ற எல்லா ஓட்டு கட்சிகளைவிட நடிப்பில் முன்னணியில் இருப்பது திருவோடு தந்த அன்னலெட்சுமி என்ற அரசியல்வாதிதான்.
எவ்வித குற்றமும் இழைக்காத ஈழத்தமழ் அகதிகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கு, ஒரு கையெழுத்து போட்டு அரசானை வெளியிட மறுக்கும் இந்த திருவோடு தந்த அன்னலெட்சுமிதான் சிங்கள அரசிடமிருந்து  ஈழத்தமிழர்க்கு விடுதலை  வாங்கித் தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்.
சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ்அகதிகளுக்கு,இந்த சித்திரவதை கூடாரத்தை உருவாக்கியது, தாய் தமிழகத்தை பேய் தமிழமாக்கி ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் தமிழர்க்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்.


உதவி    .ம.க.இ.கவின் மேநாள் பேரணி, டிஜிபி அலுவலகம் முற்றுகை என்ற பிரசுரத்திலிருந்து

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...