பக்கங்கள்

சனி 15 2013

பஞ்சத்துக்கு காரணமானவர்கள்-----சிறுகதை


ஊரை கொள்ளையடித்து உண்டு களிக்கும் ஒரு குண்டனும்,

ஊரிலுள்ள பொதுச் சொத்தை பட்டாபோட்டு விற்பனை செய்து செல்வத்தை பதுக்கி வைத்த ஒரு ஒல்லியனும்.

பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொண்டார்கள். 

குண்டனும், ஒல்லியனும் பணக்கார பிரபலங்களாக இருந்ததால். விழா கொண்டாடும் முக்கியஸ்தர்கள் குண்டனையும் ஒல்லியனையும் ஒருவருக்கொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அந்த அறிமுகத்தின்போது குண்டன்,ஒல்லியனை பார்த்து
என்னப்பா, உங்க ஊருல அவ்வளவு பஞ்சமா........? அநியாயத்துக்கு இப்படி ஒல்லியா இருக்கயேஎன்று கிண்டலாக கேட்டான்.

குண்டனின் கிணடலால் கோபம் கொண்ட ஒல்லியன் பதிலுக்கு, அத ஏன்? கேக்ரப்பா, எங்க ஊரு  பஞ்சத்துக்கே காரணம் நீதானப்பா, எல்லாத்தையும் நீயே சாப்பிட்டு இப்படி பெருத்து போயி இருக்கிறயேப்பா...? என்றான்.

கிண்டலுக்கு பதில் கிண்டல் கிடைத்தவுடன். சிரித்து மழுப்பிய குண்டன். ஊரு மக்களுக்கு நாம வேறு வேறானவர்கள் என்று காட்டிக் கொள்ளத்தானப்பா? நான் உன்ன கிண்டல் அடிச்சேன் என்றான்.

நானும்,அந்த அர்த்த்த்தில் தானப்பா பதிலுக்கு கிண்டல் அடிச்சேன் என்றான் ஒல்லியன்.

ஆக,ரெண்டு கொள்ளையர்களும், உள்ளுக்குள் கூட்டு சேர்ந்து ஊரை கொள்ளையடிப்பதுதான் பஞ்சத்துக்கு காரணம் என்று, . அந்த ஊரு மக்களுக்கு கடைசி வரைக்கும் தெரியவேயில்லை...........


வெள்ளி 14 2013

”லண்டன்” ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய நகரம்--நூல் அறிமுகம்....











பலருக்கு கணவில் வருவது,நிஜத்தில் வராது.சிலருக்கு கணவில் வராதது நிஜத்தில் வந்துவிடும்.அந்த சிலரில் ஒருவராக தோழர்.மு.சங்கையா அவர்கள் தன் பயணத்தின் அனுபவங்களை தன் மனதிற்குள் வைத்து பூட்டி வைக்காமலும் ,பெருமிதத்துக்காக ஏட்டில் எழுதி வைக்காமல் தன் அனுபவத்தை பலருக்கும் பகிர வேண்டி நூலாக அச்சிட்டு  படிக்க கொடுத்துள்ளார்

லண்டன்ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய நகரம்.—நூலாசிரியர் மு.தங்கையா அவர்களின் லண்டன் பயணத்தின் போது நிஜத்தில் பார்த்ததை பதிவுகளாக்கி வாசிப்போர்களம்- மதுரை.வெளியீட்டுள்ள முதல் நூல்

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் தான் ஆக்கிரமித்த காலனி 
நாடுகளில் நிகழ்த்திய கொடூரங்கள் மறக்கமுடியாதவை,மன்னிக்க முடியாதவை,

ஊரையே கொள்ளையடித்தவன் ஓலைக்குடிசையிலா குந்தியிருப்பான். மாடமாளிகை கட்டி அதிலேதான் நித்திரை கொள்வான்.அவனே அப்படி என்றால் உலகத்தையே கொள்ளையடித்தவன் தன் தலைநகரை, மும்பை தராவி குடிசைப்பகுதி மாதிரியா வைத்திருப்பான்.


அந்த அழகிய நகரில் பெருகிவரும் குற்றங்களையும். அந்த கொடூர சாம்ராஜ்யத்தின் அரண்மனையின் கொடூர மரண ஓலத்தின் விபரங்களையும்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல,3டமளர் அரிசிக்கு குக்கரின் 4 விசில் சத்தம் பதம்போல,

,ஈழத்திலிருந்து விரட்டப்பட்டு தமிழகத்து சித்ரவதை கூடமான முள்வேலியில்அடைபடாமல்  தப்பித்த ஈழத்தமிழரின்,
இனக்கலவரத்துக்கு முன்வந்தவர்களின்பொருளாதரநிலை
வசதியாகவும், இனக்கலவரத்துக்குப்பின் வந்தவர்களின் 
பொருளாதார நிலை பின் தங்கி இருப்பதும்,அதோடு 
தமிழகத்தில் ஒப்பாரி முழக்கமான  தொப்புள் கொடி உறவு 
அங்கு வேறாக உள்ளதையும். பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமாகவும்முத்தாய்ப்பாகவும் அதன் விபரங்களை கூறுவதோடு முன் பின் நடந்த வரலாற்று குறிப்புகளையும் தெரியப்டுத்தியுள்ளார். 

இது படிப்பவர்களுக்கு பழைய சம்பவங்களை தெரிந்து கொள்வதற்கும்,நிணைவு படுத்திக் கொள்வதற்கும் உதவிகரமாக உள்ளது.

புகழ் பெற்ற எழுத்து(ஆசாமிகளின்) ஆளர்களின் பயணக்கட்டுரைகளை படித்தறியாத எனக்கு லண்டன்ஒரு சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்  புதியதாக  இருந்தது.

விமானத்தையே பார்த்தறியாதவன்,தூரத்தே சிறிய உருவாமாக பறந்து செல்லும் விமானத்தை பார்த்தது போல...............எனக்கு இருந்தது. 

உங்களுக்கு வேறுவிதமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.

படித்துப்பாருங்கள்.

 நூல் கிடைக்குமிடம்.
வாசிப்போர் களம்- மதுரை
எம்.எம்.எஸ்.காலனி,
8வதுதெரு,மதுரை-14,

செல்.9486102431.

புதன் 12 2013

உழைப்பார் உழைத்துக்கொண்டே இருப்பார்........

எனது 90 வது பிறந்த நாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் கொண்டாடியுள்ளனர்.

எங்கோ ஒரு கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்..என் குடும்பத்திற்கென்று தனிப்பட்ட எந்தப் பெருமைகளும் கிடையாது. எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி முரசொலி மாறன்தான்.

5முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும்,12 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்றேன். அண்ணாவின் மறைவக்குப்பின்1969ல் திமுகவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டேன்.
தமிழகத்திலுள்ள 7கோடி மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே எதிரியாக இருக்கிறேன்.

மாநிலக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் அகில இந்திய தலைவர்களிடம் மிகவும் பழக்கமாயிருந்தேன்.

இந்திரா முதல் இன்றுவரையுள்ள பிரதமர்களிடம் வெறுப்பு காட்டும் அளவுக்கு நடக்காமல் அன்பாக பழகி இருக்கிறேன்.

இத்தனைக்கும் அகம்பாவம்,அலட்சியம்,எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற குணம் இல்லாமல் பேசாதவன்.

90வது பிறந்தநாள்  கொண்டாட்த்தில் மூன்று நாள் தூக்கம் கெட்டாலும்.தொடர்ந்து உழைப்பேன்,உழைத்துக்கொண்டே இருப்பேன்.




செவ்வாய் 11 2013

சூ” தந்திரம் வாங்கித் தந்தவரின் வாக்குமூலம்.........


நகைகள் அணிந்த பெண்னொருத்தி நடுநீசி நேரத்தில் சாலையில் எந்த பயமும் இல்லாமல் சென்று வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் பெற்றதற்க்கான அர்த்தம் என்றார். அரையாடை 

கத்தியின்றி.ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்தவரே, தான் வாங்கித் தந்தது உண்மையான சுதந்திரம் அல்ல என்று மேற்கண்ட கருத்தின் மூலமாக சொல்லி விட்டார்.

அறுபாத்திஆறு வருட சுதந்திரம் கொண்டாடும் நாட்டில் நகை அணிந்த பெண்களோ, நகையில்லாத பெண்களோ, சுதந்திரமாக சென்று வர முடியாத நிலையே நிலவுகிறது.

இந்திய சுதந்திரத்தை பற்றி

புரிந்தவர்கள் “சூ தந்திரம் என்றார்கள்
அறிந்தவர்கள் போலி சுதந்திரம் என்றார்கள்
கொள்ளையர்களும்.கொலைகாரர்களும் சுதந்திரம் என்று கொண்டாடுகிறார்கள்

திங்கள் 10 2013

ஜனநாயகப் பாஞ்சாலி...........

அன்று ஒருத்தின் மனசு ஒருவனுக்கே என்று பிரிட்டீஷ் சாம்ராஷயத்துக்கு மட்டுமே பாய்விரித்தாள் இந்தியச் சீதை

இன்று ஒருத்தியின் மனசு அய்வருக்கே என்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு பாய்விரித்தாள் இந்திய ஸனநாயகப் பாஞ்சாலி....

இந்த பன்னாட்டு கம்பெனிகளுக்கு பாய் விரிக்கும் பாஞ்சாலியின் ஜனநாயகத்தில் நக்சல் வன்முறைக்கு இடமில்லை என்று கூறிக்கொண்டே பகலில் பத்தினிவேஷமும் இரவில் வேசியாகவும் இரட்டை வேடம்போடும் இந்தியாவின் இரவல் ஜனநாயகத்தில்......

ஒரு பக்கம் நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ளது அதனால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் சட்டம் வேண்டும் என்று கூறிக் கொண்டே....

மறுபக்கம் நாட்டின் பாதுகாப்பு துறையான இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே,இராணுவத்துறையில் பயன்படுத்தப்பட்டுவரும் 26 சதவிதத்தை 49 சதவிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்

இதற்கு,ஜனநாயகவாதிகள் சொல்லும் காரணம், 

ஏற்றுமதியைவிட.இறக்குமதி அதிகமாக இருப்பதால் நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதை சரிகட்டுவதற்க்காக இராணுவம் போன்ற பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த அய்வருக்கு பாய்விரிக்கும் ஜனந.யகத்தை எதிர்க்கும் நக்சல்களை ஒடுக்குவதற்குத்தான் தேசிய பயங்காரவாத தடுப்பு மையம்.(என்சிடிசி)



ஞாயிறு 09 2013

புல்லரிக்கச்செய்யும் சொரிக்கவிதைகள்


தொண்ணூறாவது வயதை
கொண்டாடும் தலைவனின்
பாதையில்  தளபதி....அந்தத்
தளபதியின் வழியில்
தமிழகம்.................
--------------------------

இன்று தமிழகத்தின்
முதல்வர்-.நாளை
தமிழகத்து பிரதமர்
-------------------------------------- 
அன்று மரத்தலான
ஓட்டுப்பெட்டி
இன்று எலக்ட்ரானிக்
ஓட்டுப்பெட்டி...........



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...