பக்கங்கள்

சனி 05 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --46...

 


யார் இந்த படத்தில் உள்ள அருண் மிஸ்ரா
உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி சர்ச்சைக்குரியவராகப் பெயர் பெற்று இன்று பதவியிலிருந்து ஓய்வுபெறும் அருண் மிஸ்ரா எந்தெந்த முக்கியமான வழக்குகளில் பங்கேற்றார் என்ற கட்டுரைத்தொடர் வெளியிடுகிறது வயர் வலையிதழ். அதில் முதல் கட்டுரையில் வெளிவந்த விவரங்களிலிருந்து சில விஷயங்கள் மட்டும் இங்கே ஆங்கிலம் அறியாத தமிழ் வாசர்களுக்காக.
—————————————————————————
அருண் மிஸ்ராவின் அப்பா ஹர்கோவிந்த் மிஸ்ரா, மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். குடும்பமே வழக்குரைஞர் குடும்பம்தான். அருண் மிஸ்ராவும் பிறகு மத்தியப் பிரதேச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். பிறகு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். மோடி அரசு 2014இல் ஆட்சிக்கு வந்ததும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1. தம்பியுடையான் விதிகளுக்கு அஞ்சான்
கடந்த ஆண்டு, அருண் மிஸ்ராவின் தம்பி விஷால் மிஸ்ரா மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான குறைந்தபட்ச வயது 45. ஆனால் விஷாலின் வயது 43 இருக்கும்போதே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வயது விதியை மீறி இவரை நீதிபதியாக நியமிக்கலாம் என்றவர் ரஞ்சன் கோகோய். ஆமாம், அதே கோகோய்தான். நியமனக் குழுவில் அருண் மிஸ்ரா இருக்கவில்லைதான்; ஆனால் தம்பியை நீதிபதியாகப் பரிந்துரை செய்த குழுவில் ஐவரில் இவரும் ஒருவர்.
பி.கு.-1 - விஷால் மிஸ்ரா பாஜக ஆதரவாளர். பாஜகவுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதியவர். பாஜக அரைவேக்காடுகள் செய்வதுபோலவே, நேரு குடும்பம் முஸ்லிம் குடும்பம் போன்ற அவதூறுகளைப் பேஸ்புக்கில் பரப்பி வந்தவர்.
பி.கு.-2 - விஷால் மிஸ்ராவின் நியமனம், 2019இல் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு செய்யப்பட்டது. குறைந்த வயதில் உயர்ந்த இடத்தை அடைந்தவர் எப்படியும் உச்சநீதிமன்றத்தை எட்டிவிடுவார். அப்படி எட்டிவிட்டால், சீனியாரிட்டி படி, தலைமை நீதிபதி பதவியையும் பிடித்து விடுவார். அப்படிப் பிடித்து விட்டால், நீண்டகாலம் அந்தப் பதவியில் நீடிப்பார்.
2. சஞ்சீவ் பட் வழக்கு
குஜராத் அரசு பழிவாங்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளியது. அந்தக் குற்றச்சாட்டுகளை நியாயமான முறையில் புலனாய்வு செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார். அருண் மிஸ்ரா, புலனாய்வு ஏதும் தேவையில்லை என்று நிராகரித்து விட்டார். விளைவு - சஞ்சீவ் பட் இப்போதும் சிறையில் வாடுகிறார்.
3. சஹாரா-பிர்லா டயரி வழக்கு
மைய கண்காணிப்பு தலைமை ஆணையராக கே.வி. சவுத்ரி, ஆணையராக பாசின் ஆகியோரை நியமிப்பதறகு எதிரான இடையீட்டு வழக்கும் அடங்கும். காமன் காஸ் தொடர்ந்த இவ்வழக்கில், அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு 25 கோடி ரூபாய் தரப்பட்டதான குறிப்பு அந்த டயரியில் இருந்தது. இந்த வழக்கு அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு பெஞ்சுக்கு தலைமை வகிக்கும் அளவுக்கு சீனியாரிட்டி இல்லாதபோதும் அருண் மிஸ்ராவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து, கண்காணிப்பு ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பி.கு.-1 - மிஸ்ராவின் உறவினர் திருமணம் மிஸ்ராவின் வீட்டில் நடைபெற்றது. அதில் பாஜகவின் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உள்பட முக்கியத் தலைகள் பங்கேற்றனர். சஹாரா டயரியில் பணம் பெற்றவர்கள் பட்டியலில் சவுஹான் பெயரும் உண்டு.
பி.கு.-2 - மைய கண்காணிப்பு ஆணையர் சவுத்ரி 2019இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் நியமனம் பெற்றார்.
4. நீதிபதி லோயா கொலை வழக்கு
2018இல் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அதிருப்தி அடைந்து வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அதிசய நிகழ்வுக்கு அருண் மிஸ்ராவும் ஒரு காரணம். முக்கியமான வழக்குகள் வேண்டப்பட்ட ஆட்களுக்கு (அருண் மிஸ்ராவுக்கு) ஒப்படைக்கப்படுகின்றன என்பதும் ஒரு குற்றச்சாட்டு. பிறகு இந்த வழக்கு தலைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
பி.கு.-1 - லோயா மரணம் இயற்கையானதுதான் என தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ண கவய் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
பி.கு.-2 - சோராபுத்தீன் வழக்கு நீர்த்துப்போனது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாரும் விடுவிக்கப்பட்டடார்கள்.
5. மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு
காமினி ஜெய்ஸ்வால் தொடர்ந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும் என 2017 நவம்பர் 9ஆம் தேதி நீதிபதி செல்லமேஸ்வர் உத்தரவிட்டார். ஆனால், அந்த பெஞ்ச் விசாரணையை துவக்குவதற்கு முன்பாகவே நவம்பர் 10ஆம்தேதி அவசர அவசரமாக வேறொரு பெஞ்ச் அறிவிக்கப்பட்டது. அருண் மிஸ்ராவும் அடங்கிய பெஞ்ச், காமினி ஜெய்ஸ்வால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
6. ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு
2019இல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய வழக்கு பரபரப்பானது. தன்மீதான வழக்கை விசாரிப்பதற்கான குழுவில் அருண் மிஸ்ராவை நியமித்தார் தலைமை நீதிபதி. இறுதியில், ரஞ்சன் கோகோய் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதி அமைப்பைக் குலைக்க செய்த திட்டமிட்ட சதி என கூறப்பட்டது.
பி.கு. - ரஞ்சன் கோகோய் பணி ஓய்வு பெற்ற பிறகு, பாஜக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக பரிசு பெற்றார்.
மேலும் சில வழக்குகளைப் பற்றி அறியவும், விவரங்களை இன்னும் தெளிவாக அறிய...
- Shajakhan

வியாழன் 03 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --45...


தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு! | police security  increased for BJP head office in chennai | News7 Tamil


41F நம்பர் பஸ்ல ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க..


கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார்..


முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..


என்னம்மான்னு அவர் கேட்டாரு.. எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்னு அந்த அம்மா அழுதாங்க..


அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு..


அந்த அம்மா கிட்ட உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.., பயப்படாதீங்கன்னு ஆறுதல் சொன்னார்..


அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க..


ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை..


இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. என்ன கண்டக்டர் தம்பி செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையேன்னு கேட்டாங்க..


அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே உங்க செயின் 1நிமிஷத்துல கிடைக்க போகுதுன்னு புதிர் போட்டார்..


அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல..


அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் டபுள் விசில் கொடுத்தார்..


பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு...


அந்த சமயம் பார்த்து ஒரு குரல்.. யோவ் கண்டக்டர் பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுது"ய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்.. பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யான்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..


கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு..


அம்மா உங்க செயின் கிடைச்சாச்சின்னு..


சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு..


அவன்கிட்ட தான் செயின் இருந்தது.. அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர்..


இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..


அதெப்படி அவன் திருடன்"னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்கன்னு கேட்டாங்க..


அதுக்கு அந்த கண்டக்டர் அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்ததுன்னு சொன்னாரு.. 


அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேருன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க..


கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு...


 Bjp அலுவலகம் கமலாலயம்னு .....


                       படம் இதைக் கொண்டிருக்கலாம்: நபர்கள் அமர்ந்துள்ளனர், , ’பங்கஜம் கழுத்து அறுந்திட போகுதுடி நீயே கழற்றி அவனுக கிட்ட கொடுத்துடு நாம கமலாலயத்துல போயி இவனுகளை புடிச்சிக்கலாம்! Translate Tweet TPR’ எனச்சொல்லும் உரை                         -------------------------------




புதன் 02 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --44...

 




உடன் கட்டை ஏற முடியலன்னு

கோபமா?


எதுக்கு மார்பகம் மறைக்க

ஆடைத்தந்தாய் என கோபமா??


அடுப்பூதியே அடிமையாய்இருக்கலன்னு 

கோபமா???

படிக்க ஏன் சொன்னாய்

என கோபமா????


இல்லை வயதுக்கு

வந்ததும் மிராசு காரனுக்கு

முந்தானை விரிக்க விடலன்னு

கோபமா வேசியாய்

விடலன்னு கோபமா?????


இல்லை

ஏண்டா

செருப்பு போட வைத்தாய்ன்னுகோபமா????


அரசு வேலையை

பெண்ணுக்கும்ஏன் கொடுத்தாய்ன்னு

கோபமா??????


இல்லை ஆணுக்கு சரி நிகர்

சமமாய் நடமாட விட்டு விட்டாயேன்னு 

கோபமா ???????


சாதியை அழிச்சிட்டான்னு 

கோபமா????????


இல்லை சாணம் அள்ள

விடலன்னு கோபமா?????


பில்லி சூனியம்

சாமியாட விடலன்னு

கோபமா ????????


இல்லை சிந்திக்க வச்சு

மனிசியாமாத்திட்டானேன்னு

கோபமா?????????


தீண்டாமை ஒழிச்சிட்டான்னு 

கோபமா??????????


இல்லை கள்ளுக்கடை யை

அழிச்சிட்டான்னு கோபமா???????????


முற்போக்கு சிந்தனையை

பரப்பிட்டானானேனு

கோபமா ???????????


கோயில் உள்ளே போக வச்சிட்டானானேனு

கோபமா ????????????


இல்லை சாதியை அழிச்சிட்டானானே

கோபமா?????????????


அறியாமை யை அகற்றினானே

கோபமா ???????????????


திங்கள் 31 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --43..




 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’

------------------------------------------------------------------------


பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர். கான்பூர் ஐஐடியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தவர். இந்திய பழங்குடி மக்களின் சொல்லொண்ணா துயரங்களைக் கண்டு அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவே சட்டம் படித்தவர். அமெரிக்க குடியுரிமையை உதறித் தள்ளிவிட்டு இந்தியா வந்து சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்காகச் சட்ட போராட்டம் நடத்தியவர். டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக பணியாற்றி வந்த தொழிற்சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞர்தான் சுதா பரத்வாஜ். மாவோயிஸ்ட் என்று பழிசுமத்தப்பட்டு பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவருடைய உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது. இருப்பினும் சமூக ஆர்வலர் வரவர ராவ் போலவே இவருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதையும் அதை நீதிமன்றமும் கண்டிக்காமல் இருப்பதையும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உட்பட பலர் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சுதா பரத்வாஜின் 23 வயதான மகள் மாய்ஷா தன்னுடைய தாய் குறித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதனை இங்கு மொழிபெயர்த்துப் பதிவிடுகிறார்  ம.சுசித்ரா அவர்கள்.


“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அம்மா கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவரை அம்மாவை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை என்னால் தொட முடிந்தது, அவருடன் பேச முடிந்தது. ஆனால் அம்மா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தேன். பல மாதங்கள் விடாமல் அழுது கொண்டிருந்தேன். பூனா நீதிமன்றத்தில் அம்மாவை காண செல்லும் போதெல்லாம் போலீஸ்காரர்கள் சூழ குற்றவாளி போல அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். அது ஒரு கொடிய காட்சி. சிறைச்சாலையில் அம்மா எப்படி சமாளிக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்ற வளாகத்துக்குள் அம்மாவை அணைத்துக் கொள்ள ஒரு முறை முயன்றேன். ஆனால், ஈவிரக்கமின்றி என் கையை தட்டிவிட்டார் அங்கிருந்த பெண் காவல்துறை அதிகாரி. நான் வெகுண்டெழுந்தேன். ஆனால், அப்போதும் அம்மா நிதானம் இழக்கவில்லை. அவர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டார். 


கரோனா காலம் உலகைப் பீடித்ததை அடுத்து தங்களுடைய குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் பேச சிறை வாசிகள் அனுமதிக்கப்பட்டார்கள். எப்படியும் அம்மா என்னை அழைத்துப் பேசிவிடுவார் என்று தினமும் காத்துக்கிடப்பேன். ஒருவழியாக ஜூன் 9-ம் தேதி அம்மாவின் குரலைக் கேட்டேன். நான்கு மாதங்கள் கழித்து அம்மாவின் குரலைக் கேட்க நேர்ந்தபோது பூரித்துப்போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இங்குள்ள மக்களுக்குச் சேவை புரிவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர் என்னுடைய தாய். ஆனால், அரசுக்கு எதிராகச் செயல்பட ஏழை மக்களை தூண்டிவிடவே என்னுடைய தாய் அமெரிக்கக் குடியுரிமையை துறந்ததாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. அவர்களிடம் ஒன்றை கேட்க நினைக்கிறேன், ‘தன்னுடைய நாட்டு மக்களுக்குச் சேவை புரிய அமெரிக்காவின் சுகபோக வாழ்க்கையை விட்டுக்கொடுத்தவர் எவரேனும் உண்டா? அப்படிப்பட்ட ஒருவர் தேச துரோகி என்று முத்திரை குத்தப்பட்டதுண்டா? என்னுடைய பாட்டி கிருஷ்ண பரத்வாஜ் பிரபல பொருளாதார நிபுணர். அவர் தன்னை போலவே தன்னுடைய மகளையும் உருவாக்க ஆசைப்பட்டார். ஆனால் என்னுடைய தாய் தன்னுடைய பாதையை சுயமாக தேர்ந்தெடுத்தார். மக்களுக்கு சேவை புரிய அவர் முடிவெடுத்தார். இது தேச விரோதமாகுமா?’ தன்னுடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக இப்படி உழைக்க வேண்டுமா என்று அம்மாவிடம் நான் சண்டையிட்டிருக்கிறேன். அதற்கு அம்மா சொல்வார், ‘நம்மை போன்றவர்கள் உழைக்காவிட்டால் பிறகு ஏழை மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’ நான் சாதாரணமாக வாழ ஆசைப்பட்டேன். தினந்தோறும் சாப்பாடு கட்டிக்கொடுத்து பள்ளி, கல்லூரி வாசலில் இறக்கிவிடும் தாய் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னுடைய அம்மா சாதாரண தாய் அல்லவே. அவர் செய்தவற்றை செய்யக்கூடிய மனத் திண்மை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதனால்தான் என்னமோ இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். என்னுடைய தாயின் துணை இல்லாவிடிலும் நான் செய்யும் அத்தனையிலும் அவருடைய பிரதிபலிப்பு இருக்கவே செய்கிறது: அவர் உறுதியானவர், சுதந்திரமானவர், அச்சமற்றவர். என்னைவிடவும் உறுதியானவர் அம்மா என்பது எனக்குத் தெரியும். சிந்தனையாளர் பிராட் மெல்ட்ஜர் சுட்டிக்காட்டியதுபோல, நீங்கள் ஒன்றை நம்புவீர்களேயானால் அதற்காக போராடுங்கள். அந்த முயற்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதுவரை போராடியதைக் காட்டிலும் இன்னும் வலுவாக போராடுங்கள்”


நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம்


தமிழில்: ம.சுசித்ரா

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...