பக்கங்கள்

வெள்ளி 13 2013

குளிக்காதவர்கள் குளிக்க தடை!!!!!!!



என் நண்பருக்கு நண்பர் ஒருவர்  குளித்து சில நாள்கள் ஆனதால் நன்றாக குளிக்க வேண்டும் என்ற ஆசையில் தேனி மா வட்டம் பெரிய்ய.........
குளத்திலிருந்து 8.கி.மீ தூரம் உள்ள கும்பக்கரை அருவிக்கு சென்றார்

 அவர் சென்ற நாட்களில்  அப்பகுதியில் வானத்திலிருந்து  கொட்டோ கொ்ட்டுன்னு  தண்ணீர் கொட்டுவதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் ஓடுவதால், குளிக்காதவர்கள் (டாஸ்மாக்)குடித்துவிட்டு குளிக்க  முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது

இதனால்.பலநாள் குளிக்காமல் அருவியில் குளிக்க வருபவர்கள் சேர்ந்துள்ள அழுக்கோடு குளிப்பவர்களும் அடித்து செல்லப்படும்  காரணத்தால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நண்பர் குளிக்காதவர்களுக்கு குளிக்க தடை போட்டதால் அம்புட்டு தூரம் போயிட்டு குளிக்காமல் வந்துவிட்டதை பெருமையாக நண்பரிடம் சொன்னார்.

 எதெதுக்கு பெருமை படுவது என்பதற்கு வித்தியாசமில்லாமல் போய்விட்டது.

வியாழன் 12 2013

இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி யார்?..........

இருவருமே திரை துறையிலிருந்து வந்தவர்கள்

ஒருவர் எழுத்திலும் பேச்சிலும் வல்லமை காட்டியவர்.
மற்றெருவர் ஆடலிலும் நடிப்பிலும் திறமையை செலுத்தியவர்.

ஒருவர் மூச்சுக்கு அண்ணா வழியில் என்பார்.
மற்றெருவர் எப்பொழுதாவது புரட்சி தலைவர் என்பார்.

ஒருவர் அய்ந்து முறை நாற்காலியில் அமர்திருந்தார்.
மற்றெருவர் மூன்றாவது முறையாக நாற்காலியில் கோலோச்சுகிறார்.

ஒருவர் இல்லாத மக்களுக்கு டி.வி,கேஸ் அடுப்பு கொடுத்தார்.
மற்றெருவர் பாவப்பட்ட ஜனங்களுக்கு பேன்.மிக்ஸி,கிரைண்டர் வழங்கினார்.

ஒருவர் சமச்சீர் கல்வியை உசுப்பேற்றினார்.
மற்றெருவர் சமச்சீர் கல்வியை புதைகுழிக்கு தள்ளினார்.

இப்படி இந்த இருவரைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஒவ்வொரு மத்தியகட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் ஒவ்வொன்றும் மாநிலத்துக்கு தகுந்த மாதரி இரட்டை வேடம் போடுவது அறிந்திருந்தாலும்,

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த இருவருமே,வாய்வீச்சிலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் சளைக்காதவர்கள் என்று தெரிந்திருந்தாலும்

இந்த இருவர்களில் தமிழ்நாட்டு நாற்காலியின் அதிகாரத்துக்காக, அந்த நாற்காலியில் அமர வைக்கும் ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி யார் ??????????

புதன் 11 2013

நாகரீகமா,எழுதச்சொல்லி அநாகரீகமா திட்டிய கடவுள் ரஜினி பக்தன்

அன்புமிக்க பதிவர்களே! வாசகர்களே! இந்தக் கதையையும் படித்துப் பாருங்கள்

திரைப்பட சங்கத் தேர்தலில் ரஜினி ஓட்டு போட்டதை,மாலைப் பத்திரிக்கைகாரன் வால்போஸ்டரில் கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக போட்டதை அந்த வழியாக சென்ற நான் படிக்க.......

நான் படிப்பதை நண்பர் ஒருவர்,கேலியாக வினவ, நானும் பதிலுக்கு கேலியாக வினவ,  நாங்கள் வினவியதை நான் அப்படியே பிளாக்கில் பதிவிட்டேன்.

அதை படித்த கடவுள் ரஜினியின் பக்தன் ஒருவர். நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற கதையாக....... என்மேல் கடுங் கோபம் கொண்டு

பெண்ணின் அடையாளக்குறியை முன்போட்டு போக்கன் கூறியது என்று குறிப்பிட்டு “நாகரீகமா எழுதுடா?தே.......யா........ மகனே! பரதேசி நாயே! ஓம்போது என்று அநாகரீகமாக கருத்துரைத்தார்.


இந்தக் கருத்தை என் பிளாக்கிற்கு வருகை தந்தவர்கள் படித்திருப்பார்கள் என்றே நிணைக்கிறேன்.  மறுநாள் பிளாக்கிற்கு வந்தபிறகுதான் கடவுள் ரஜினி பக்தனின் கருத்துரையை படித்து பார்த்து அதை முற்றிலுமாக நீக்கினேன்

முன்பு ஒருதடவை, ஒரு பதிவர் சொன்னார். “ இது போன்று கடவுளின் பக்தர்கள் வசவுகளால் சாமியாட்டம் போடுவார்கள் என்ற காரணத்தில்தான் பல பதிவர்கள் ஒப்புதலுக்குப்பின் கருத்துரை வெளியிடப்படும் என்ற சாட்டையை சுழற்றுகிறார்கள்.  அது போல் தாங்களும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

 அதையும் தெரிந்து கொள்வமே என்றும், அப்படிபட்டவர்களை பதிவர்களும் வாசர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்தில்தான் சாட்டையை சுழற்றவில்லை.

இதை சாதகமாகவும், கூகுள் வழங்கும் “பெரியில்லா” என்ற வழிகளையும்  சாதகமாகக் . கொண்டு, “என்னை நாகரீகமாக எழுத சொன்ன கடவுள் ரஜினி பக்தன்.  அந்த பக்தனே,அநாகரீகமாக எழுதியிருக்கிறார். ரஜினி குசு போட்டார் என்பது. கடவுள் ரஜினியின் பக்தனுக்கு அநாகரீகமாக இருந்திருந்தால். நாகரீகமாக சுட்டிக் காட்டி இருக்கலாம்.

 அதவிட்டுட்டு, கடவுள் ரஜினி, எப்படி காரியத்தனமா இருப்பது மாதிரியே, அவரது பக்தனும் காரியத்தில் கவனமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளா மல் திட்டி இருக்கிறார்.

இது காணமல் திட்டியதாக எடுத்துக்கொண்டாலும். ரஜினி பக்தனின் இந்த செய்கையானது “ அநாகரீகம் நிறைந்த காட்டுமிரண்டிதனத்தையே வெளிப்படுத்துகிறது.



திங்கள் 09 2013

பூட்டிய வீடு என்ற நிணைப்பே இல்லாத களவாணிகள்.............



முன்பெல்லாம் கதவு இல்லாத வீட்டில்தான் எந்த சிரமம் இல்லாமல் களவாணிகள் திருடிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது,பொருளை பறி கொடுத்தவர்களுக்கு ஆதரவான வார்த்தைகளை சிலர் சொல்வார்கள். கதவு இல்லாத வீட்டில களவு போகத்தான் செய்யும்,கதவு இருந்தும் பூட்டப்படாமல் இருக்கும் வீடுகளிலும்  திருடு போவது சகஜம்தான், களவு போனதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று.

இவர்கள் மட்டும்மா ?....,போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, அய்யா.என் வீட்டுல களவு போயிருச்சுய்யா...?என்று புகார் கொடுத்தால்.........

போலீஸ் அய்யா அவர்கள் சொல்வார்கள்.கதவ,நன்றாக பூட்டிவிட்டு போனீயா....ய்யா,  என்பார். அடுத்த நிமிடத்தில்,கதவ...பூட்டாம போனா, களவு போகாம மயிரா...போகும், என்பார். அதற்கு அடுத்த நொடியில், ஏய்ய்யா... எங்க உயிர வாங்க வர்ரீங்க.............என்பார். அதோடு....

தெருவுக்கு பக்கத்தில போனாலும் கதவ...பூட்டிட்டு ஒருதடவைக்கு இரு தடவையாக இழுத்து பார்த்துட்டு போகனும் ...என்ன தெரியுதா      என்றுவிட்டு அஞ்சாறு வசவுகளோடு அறிவுரையும் கூறுவார் அநத போலீஸ் அய்யா........

ஆனா,பாருங்கள்! நன்றாக பூட்டிய வீட்டிலும் அஞ்சாறு தடவை இழுத்து பார்த்து விட்டு சென்ற வீட்டிலும்.......... அதுவும் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே உள்ள வீட்டீலேயே  களவு போயிருக்கும்......

செய்தி--- பழநீ அருகே பூட்டிய வீட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை. இப்படி  பல இடங்களில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்தோ.கதவை உடைத்தோ களவு  செய்கிறார்கள் களவாணிகள்.

 வரவர பூட்டிய வீடு என்ற நிணெப்புகூட இல்லாம போகுது களவாணிகளுக்கு....

அவர்களும் நாளொரு  தடவையாக புது புது உத்திகளை பயன்படுத்தி களவு செய்கிறார்கள்   இவர்களை பார்த்துதான் நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறுகிறது  என்கிறார்களோ..!!!!


ஞாயிறு 08 2013

சூப்பர் ஸ்டார் குசு போட்டார்.........!!!


நேற்றைய மாலை செய்திபத்திரிக்கை ஒன்றில்  கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வால்போஸ்டரில்.ரஜினி ஓட்டு போட்டார் என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக இருந்தது.

 கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வால் போஸ்டரில் உள்ள வற்றை நானும் எல்லோரையும் போல் அந்த கடைக்கு முன் நின்று, ரஜினி ஓட்டு போட்ட அதிசியத்தை படித்து பார்த்துக் கொண்டு இருந்தபொழுது.

என்ன தோழர். சூப்பர் ஸ்டார் குசு போட்டார் என்ற செய்தியைத்தான் படிக்கிறீங்களா என்று கேட்டார். நண்பர் ஒருவர்.

திரும்பி அவரைப்பார்த்து புன்முறுவலுடன், ஆமாங்க.... சூப்பர் ஸ்டார் குசு போட்டார் என்ற செய்தியை தமிழக மகா ஜனங்களுக்கு தெரிவிக்க,அந்த பத்தரிக்கை நிருபரும்,அந்த பத்திரிக்கை நிர்வாகமும் எப்படியெல்லாம் பாடு படுறாங்க என்றேன்.

பதிலுக்கு அவரும்.ஆமாமா, அந்தாளு குசு போட்ட நாத்தத்தை அந்த நிருபரும் அந்த பத்திரிக்கை நிர்வாகமும்  முகர்ந்து பாத்ததை,எல்லோரும் முகர்ந்து பார்க்க செஞ்சுருக்கிறது ரெம்ப கஷ்டம்தான் என்றார்.

இனி, அடுத்த செய்தியாக, சூப்பர் ஸ்டார் வெளிக்கு போனார் என்று வரும்  என்றேன்.

ஆமா, நாட்டுல அதுதானே முக்கியம்,........என்றார். 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...