பக்கங்கள்

சனி 07 2015

மூத்திரத்தை குடிக்கச் சொன்ன தாய்...............!!!!!!!


படம்-smuthukumaran.wordpress.com



அவனின் சிறு வயது பருவத்தில்
காலை ஒன்பது மணிக்கு மேல்தான்
படுக்கையை விட்டு எழுவான்...

பேருக்கு பல் துலக்கி, வாய்
கொப்பளித்து  மூடி வைத்திருக்கும்
பாத்திரத்தின் உணவை உண்டு
பத்துமணிவாக்கில் ஆரம்ப
பாடசாலையின் வாசலில் நிற்பான்.

இப்படியான பழக்கத்தால்
படிப்பில் தேறாதவனாக
மக்காக இருந்தான்.

தந்தையில்லா அவனை
அடிக்க மனமின்றி  திட்டினாள்..
அவன் தாய்...........

டேய்..பயலே.......
எதிர் வீட்டுத் தனத்தை
பார்..அதிகாலை எழுவாள்,
குளித்து முடித்து நேரத்தில்
பள்ளிச் செல்வாள்......

வீட்டில் சொல்லும் வேலையை
தட்டாமல் செய்வாள். அவள்
பிள்ளையா...? நீ... பிள்ளையா...?
அவள் மூத்திரத்தை வாங்கி
குடி...அப்பவாவது உனக்கு
புத்தி வரும்....என்று   ......

பின்குறிப்பு...

ஐம்பது வருடம் கழித்து அவன் “அந்த தனத்தை”    பார்த்தபோது  அவள் சொன்னார் 

“.ஒனக்கு என்னப்பா.. புள்ளயைா..... குட்டியா...... எம்பாடு இன்னும் தீரல”... என்று.


வெள்ளி 06 2015

புறாக்களை...காக்கைகளாக காட்டி ஏமாற்றியவர்கள்

படம்-https://mathimaran.wordpress.com/2010/01/04/artical-268/
சக்சஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன் என்று  சினிமாக்காரர்களின் உண்மையை முதல் வசனமாக பேசிய நடிப்புலக  மேதை, ஒலகத்தில் இந்த மேதை நடிக்காத நடிப்பே இல்லை என்று ஏற்றி வைத்து துதிபாடப்படும் நடிகர் ஒருவர் நடித்த முதல் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில்... காக்கைகளுக்கு பதிலாக  வீட்டில் வளர்க்கும் புறாக்களுக்கு வர்ணம் பூசி...  “ பட்சி சாதி  நீங்க ....எங்க பகுத்தறி வாளர்கள பாக்காதீங்கன்னு” என்று பாட வைதத்து,  வந்தது காக்காடா...என்று அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்..

இப்படித்தான் சினிமா , அன்றிலிருந்து  இன்றுவரை... நாயை நரி என்றும், பூனையை புலி என்றும் காட்டி சினிமா பார்த்தவர்களை எல்லாம் ஏமாற்றி வந்து இருக்கிறார்கள். 

திருந்துவதற்கே வாய்ப்பு இல்லாத ரசிக மடக் கொழுந்துகளும் இத்தகைய  பூனைகளையும் நாயை்களையும்  உண்மையான புலி,நரிகளாவும் பார் பூரித்து போயி, புரட்சி என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை புரட்சி நடிகர் என்றும்,  காரிய கிறுக்கரை எல்லாம் இரண்டாம்  பென்னிகுயிக் என்றும் கருப்பு, கேப்பு ..தல, தளபதி என்றுபலப்பல பட்டங்கள் பல கொடுத்தும் இந்த சினிமாக்காரர்களை ஆட்சிக் கட்டிலில்  (அமர்த்தி)அமர அழகு பார்த்தும்....தங்களுக்கு தாங்களே தங்கள் தலையில் மண்ணை  அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வைத்துதான் ஏகப்பட்ட சினிமாக்கள்

சினிமாவில் காட்டுவது புலியுமல்ல,நரியுமல்ல.... என்று  தெரிந்திருந்தும் பாசணம் பிடித்து கெட்டிதட்டிப்போன சிந்தனையை மாற்றமுடியாமல் பாழ்படுத்தப்பட்ட ஏமாறும் சிந்தனை நிலையிலே வீழ்ந்து கிடப்பதால்..

இந்த சினிமாக்காரர்கள் , தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி   முன்பு புறாக்களை காக்கைகளாக காட்டி ஏமாற்றியது மாதிரி பிரமாண்டம் என்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது என்றும் தத்துருபம் உள்ளதுஉள்ளபடி  என்று  வாய்பந்தலில் இன்னும் ஏமாற்றி வருகிறார்கள்.

“புறாக்களை ..காக்கைகளாய்” பற்றிய தகவல்.. திரு.கே.என். சிவராமன்.

வியாழன் 05 2015

திருவரங்க திருவாத்தான் .. பேத்தினது.........!!!!!!!!!!!


 திருவரங்கம் இடைத்தேர்தல பத்தி  திருவரங்கனை கோர்த்துவிட்டு ஆத்தா  பேச்சுக்கு... திருவருங்க அய்யன் திருவாத்தான் பேத்தினது....!!!!!!!!!



படம
மனிதம் மட்டும்Surya Born To Win இன் புகைப்படம்ஐப் பகிர்ந்துள்ளா


புதன் 04 2015

பவர்...புல்லுக்கே மிரட்டல்....?????

படம்- தினமலர்

இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றக் கொள்ள வேண்டும். இந்து துரோகியை சுட்டுக் கொன்ற தியாகி கேட்சேவுக்கு  பூலோகத்திலும் மேலோகத்திலும் சிலைகள் அமைக்க வேண்டும் இப்படி  இந்து நாட்டுக்கு பல நல்ல கருத்துக்களை பரப்பி வருபவர். உத்தரகண்ட மாநிலத்தில் கங்கை நதிக் கரையில் ஆசிரமம்  ஒன்றை நடத்தி வருபவரும் ஊத்தரபிரதேச மாநில  பா.ஜ.எம்பியான சாக் ஷி மகராஜ் என்பவர்.

இந்த பவர்புல்லான் சாக் ஷி நிருபர்களை கூப்பிட்டு  தனது பவரை காட்டி  பவர் புல்லுக்கு மிரட்டல் விட்டு அருளீயது

“நான் சக்தி வாய்ந்தவன். நான் நிணைத்தால் அரசுகளை அமைப்பேன். அரசுகளை கவிழ்ப்பேன். பிரதமர் என்ற படகை ஓட்டுபவர், ஒரு துடுப்பை பொருளாதாரத்திற்க்காகவும்,இன்னொரு துடுப்பை இந்துகளுக்காகவும் போட வேண்டும்   இந்துக்களின் மத.மன உணர்வகளை புரிந்து கொண்டு பிரதமர் மோடி செயல்பட வேண்டும். இல்லையேல், அவர் வெறும் படகைத்தான் ஓட்ட வேண்டியிருக்கும்...  ”என்றார்.




செவ்வாய் 03 2015

சந்திக்க அழைத்தவரை..சந்திக்க சென்ற கதை....

யாழ்பாவாணனின் எழுத்துகள்
படம்-யாழ்பாவணன்.


வழக்கம்போல் வலிப்போக்கன் தனது பிளாக்கர் தளத்தை திறந்து “ அட கொக்கா..மக்கா” -பதிவுக்கு கருத்துரை பதிவிட்ட பதிவர்களுக்கு மறு மொழி பகிர்வதற்க்காக பார்த்தபோது கடைசியாக யாழ்பாவணன் கருத்துரை பதிவிட்டு இருந்தார்.

யாழ்பாவணின்  கருத்துரை பதிவைப்படித்த போது, தாம்  தமிழகத்தில் .கடலூர் வடலூர் வருவதாகவும். அவ்வமயம் வரும்போது மதுரையில் விமானம் மாறும் போது இருக்கும்  இடைப்பட்ட நேரத்தில் தன்னை சந்திக்கலாம் என்று பதிவு செய்து அழைப்பு விட்டு இருந்தார். அதோடு நேரத்தையும் தொடர்பு எண்ணையும் பதிவு இட்டு இருந்தார்.

 வலிப்போக்கன் அவருடைய பதிவை படித்துவிட்டு, இது பெரிய வி.ஐ.பி. களுக்கு அழைப்பு விட்டு இருப்பார். வி.ஐ.பி.யில் தன்னையும்  தெரியாமல் கோர்த்துவிட்டுருப்பார் என்று நிணைத்து விட்டு அவருடைய பதிவில் கருத்துரை பதிவு செய்தவர்களின் கருத்துக்களை  படித்தார்.

அந்த கருத்துரையில் முதலாவதாக மதுரை வி.ஐ.பி.யும் தமிழ் மணத்தில்  முன்னணி வலைப் பதிவில் முதலிடத்தில் இருக்கும் “ஜோக்காளி” வலைப்பதிவின் பதிவர் திரு. பகவான்ஜி   அவர்கள் தகவலுக்கு நன்றி! தான் சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

அதை படித்துவிட்ட விலிப்போக்கன்,   தனது தளத்தில் வந்து,சந்திக்க அழைப்பு விட்டும்.. சந்திக்காமல் இருப்பது தமிழ் பண்பாக இருக்காது. என்பதாக நிணைத்தக் கொண்டு, அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் ..மதுரை .வி.ஐ.பி.யான பகவான்ஜீ யுடன்  ஒட்டிக் கொண்டு. அறிமுகமாகி சந்தித்து வரலாம் என்று முடிவெடித்து,.. பகவான்ஜி யைப் போலவே  தகவலக்கு நன்றி மறு மொழியிட்டார்.

 பிற்பாடு யாழ்பாவணன் தெரிவித்துள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டபோது..“ தங்களின் தொடர்பு எண்ணை சரி பார்க்கவும்” என்று பதில் வந்தது. வலிப்போக்கனும் சொன்னதை சரி பார்க்காமல்.திரும்ப திரும்ப தொடர்பு கொண்டபோது   மீண்டும் மீண்டும் “ தொடர்பு எண்ணை சரி பார்க்கவும் ” கோபப்படாமல் பதில் வந்தது. வலிப்போக்கனும் கோபப்படமால் சற்று சலித்துக் கொண்டு தொடர்பு எண்ணை சரி பார்த்தார்.தொடர்பு எண் தப்பாக இருந்தது.( சுஷ்ரூவா-09087 54979451 ) 

சரி, சந்திக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்று இருமாந்து இருந்தபோது..வலிப்போக்கன் மூளைக்குள் தாமதமாக ஒரு யோசனை தோன்றியது.

வலிப்போக்கனின் பூர்வீகம் மதுரையாக இருந்து, பிறந்து வளர்ந்து மதுரையையே சுற்றி சுற்றி வந்தாலும் மதுரையின் முக்கியமான இடங்களை பார்த்தது கிடையாது. பார்ப்பதற்க்கான வாய்ப்பும் வசதியும் கிடைக்கவில்லை.. அப்படியான மதுரையின் முக்கியமான இடமான் விமான நிலையத்தை பார்த்தது கிடையாது.

அப்படி பார்க்காத அந்த  மதுரை விமான நிலையத்துக்கு “ சாதிவெறி குல தெய்வமான முத்துராமலிங்க பெயரை சூட்டுக” என்று சாதிவெறி கூட்டமும்

மதுரை விமானநிலையத்துக்கு “சாதிவெறி எதிர்ப்பு போராளி, இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்டுக” என்று இவர்களும் அவர்களும் மாறி மாறி கோரிக்கை வைப்பதும்,

இதோடு மதுரையில் உள்ள  “பெரும் தொழில் அதிபர்கள். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துக”என்று வேண்டுவதும் வந்து தொலைத்தது.

அப்பேர்பட்ட மதுரை விமான நிலையத்தை யாழ்பாவணன் சந்திப்பின் மூலமாக பார்த்துவிட வேண்டும் என்றும் ஆசை வந்துவிட்டது.

வலிப்போக்கனால் விமானத்தில் பறக்க  முடியாது போனாலும். பறந்து செல்லும் விமானத்தையும். விமான நிலையத்தையாவது பார்த்துவிடலாம் என்று நிணப்பு வந்தது.  கூடவே.. நிணப்பு தாண்டி பொழப்ப கெடுக்குது என்று ஒரு பழ மொழியும் குதித்தது.

அந்த பழமொழியை சாந்தப் படுத்தும்விதமாக வலிப்போக்கன் இப்படி நிணைத்துக் கொண்டார். சினிமாவில் காட்டப்படும் விமான நிலையத்தகூட... நடிகனையும் நடிகையுமா பார்த்துகிட்டு இருந்ததால.. சரியாக பார்க்க முடியலப்பா.....  பாழ்பாவணன் மூலமா...  நேரடியாக...பார்த்துவிடலாம்..என சாந்தப்படுத்திக் கொண்டார்.

நேரம் கடந்து கொண்டு இருந்தது. கடைசியாக மதுரை வி.ஐ.பி.யான பகவான்ஜிக்கு போன் செய்தார். எதிர் முனையில் ஒரு அம்மா பேசினார்கள்.

“ வலிப்போக்கனாம்.. என்றபடி  பகவான்ஜீயிடம் கொடுத்தார்.

“வணக்கம் ஜீ சொல்லுங்க”... என்றார் பகவான்ஜீ

பதிலுக்கு வலிப்போக்கன் “ வணக்கம் ஜீ” என்று சொல்லிவிட்டு தாங்கள் யாழ்பாவணன் அவர்களை சந்திக்க செல்வதாக தங்கள் கருத்துரையில் பார்த்தேன் ஜீ, தாங்கள் செல்வதாக இருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள் தங்களுடன் இணைந்து சந்திக்க வருகிறேன் ஜி என்றார்.

“சரி, ஜி செல்வதாக இருந்தால் தகவல் சொல்கிறேன்” என்று பதிலுரைத்தார் பகவான்.

 மறுநாள் காலை. வலிப்போக்கனுக்கு, “வேலை இருக்கும் நாட்கள் எல்லாம் வேலை நாட்கள்,” , “ வேலை இல்லா நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள்தான். இருந்தாலும் வேலை நாட்களைவிட, வேலை இல்லா நாட்கள்தான் அதிகமாக இருந்தது.

அன்று வேலை நாட்களாக அமைந்துவிட்டது. பகல் ஒரு மணிவரை பகவான்ஜி யிடமிருந்து  தகவல் வரவில்லை. ”நிணப்புதாண்டி பொழப்ப கெடுக்குது” என்ற பழமொழி அப்பப்ப  அவருக்கு வந்து தொலைத்து.

அவர் தன்  கைப்பேசியை தேடிய பொழுது .  ரிங், ஒலித்தது. “ பகவான்ஜீதான் பேசினார்.
“ அவரை பார்க்கச் செல்கிறேன் ஜி வாங்க” டூ வீலரா...என்றார்.

“இல்லங்க ஜி .நான் பஸ்ஸில் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்”. என்று பதில் உரைத்துவிட்ட வலிப்போக்கன் செய்து கொண்டிருந்த வேலையை பத்திரமாக ஒதுங்க வைத்துவிட்டு புறப்பட்டார்.

காரியாபட்டி பஸ்ஸில் வரும் போதே வலிப்போக்கன், பைக்கில் வந்து கொண்டு இருந்த பகவான்ஜீ யை பார்த்துவிட்டார். தான் பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதை தெரிவிக்க தன் கைகளை வெளியே நீட்டிகாட்டிக் கொண்டார். பஸ் மண்டேலா நிறுத்தத்தில் நின்றபோதுஇ முதல் ஆளாக இறங்கி,பின்னால் வந்து கொண்டு இருந்த பகவான்ஜீ க்கு வணக்கம் சொல்லி பின் இருக்கையில் அமர்ந்து விமான நிலையத்திற்கு பயணமானார்.

அவர்கள்  பைக் விமான நிலைய  சாலையில்  சென்று கொண்டு இருக்கும் பொழுது வழிப்பறியர்களால் வழி மறிக்கப்பட்டது. பகவான்ஜீ ஒரு இருபது ரூபாயை கொடுத்ததும் ஒரு சீட்டை கொடுத்து வழி விட்டார்கள்.. 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு விமான பயணிகள் வரும் வாயிலை அடைந்தபோது. விமாணப் பயணிகளை வரவேற்கவும், அழைத்துச் செல்லவுமாக கூட்டம் இருந்தது.

யாழ்பாவணன் குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்தும் கடைசிவரை “ “யாழ்பாவணன் அவர்களை சந்திக்கவில்லை”, “அவர்களும் யாழ்பாவணனை சந்திக்கவில்லை..


சந்திக்க சென்ற இருவருக்கும் யாழ்பாவணன் எப்படி இருப்பாரென்று தெரியவில்லை, அவரின் தொடர்பு எண்ணும் இல்லை.

சந்திக்க அழைப்புவிட்ட யாழ்பாவணனிடம் சந்திக்க வருபவர்களின் பெயரும்,தொடர்பு எண்ணும் இல்லை..

படம்- மதுரை விமானநிலையம்.










ஞாயிறு 01 2015

பழைய சோத்துல உள்ள மருத்துவம்.

பழைய  சோத்துல இவ்வளவு விஷயமா? 

உணவே மருந்து மருந்தே உணவு
 திரைப்படங்களில்  கிராமத்து சீன் 
 கதாநாயகி பித்தளைத் தூக்கில்  பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய்  கதாநாயகனுக்குத்தருவாள்.

 நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.
 இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. 

ஆனால் முதல் நாள்  சோற்றில் 🚰 நீரூற்றி, மறுநாள் சாப்பிடும்  இந்த பழைய சாதத்தில் தான்
வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

⏩ கூடவே இரண்டு சிறிய 󾁌 வெங்காயம் சேரும்போது,  நோய் எதிர்ப்பு சக்தி  அபரிமிதமாக பெருகுகிறதாம்.
 அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

 பழைய சாதத்தின் நன்மைகள் சில 
1. ⛅ "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 󾰀

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 󾰀

3. ☀ மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 󾌸󾰀󾌰

4. ☝ அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, 󾌽 மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 󾌸󾌰󾰀

5. ☝ இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் 󾍁 இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும். 󾌸󾌰󾰀

6. ✅ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான 󾭞 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
󾰀󾌰󾌸

7. 󾌡 அலர்ஜி, 󾍆 அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 󾌸󾌰󾰀

8. 󾓶 அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ❗ ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 󾰀󾌰󾌸

9. ✅ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 󾌸󾌰󾰀

10. 󾭞 ஆரோக்கியமாக அதே சமயம் 󾆫 󾆝 இளமையாகவும் இருக்கலாம். 󾰀󾌰󾌸
படமும் தகவலும்-யாதுமாகி



பழைய சோத்துல உள்ள மருத்துவம்.

உணவே மருந்து மருந்தே உணவு திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத்தருவாள்.


நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் 🚰 நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான்
வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு தவிரவும்   உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

⏩ கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

பழைய சாதத்தின் நன்மைகள் சில
1. ⛅ "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல்லேசாகவும்,  அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 😀

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 😀

3.  மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 

4.  அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 

5.  இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால்  இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும். 

6. ✅ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான  சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7.  அலர்ஜி,  அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 

8.  அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 
9. ✅ எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 

10. 💪 ஆரோக்கியமாக அதே சமயம்  இளமையாகவும் இருக்கலாம். 😀😃😄

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...