பக்கங்கள்

சனி 02 2011

கேட்டீரா?......ஒரு.....சேதீய........!!!

மச்சான்,மச்சான் என்னய கோடை பண்பலை
விழவுக்கு கூட்டிட்டு போ.......... மச்சான்

உன்னய  கூட்டிட்டு போகாம இருந்திருவேனா
பிள்ள!

மறந்திறமாட்டியே மச்சான்,”

உன்னய மறப்பேனா பிள்ள,”

இந்த வசனம் கோடை பண்பலை அலை
வரிசை ஒலிபரப்பில் ஒலித்த வசனங்கள்


காலையில் இருந்து கரண்ட் போனாலும்
ராத்திரிவரைக்கும்  இடைவேளை இல்லாமல்
குத்துப்பாட்டு,கொத்துப்பாட்டு,டப்பா பாட்டு,
நின்றபாட்டு,நிக்காதபாட்டு இப்படி பல வகை
பெயர்களில் தனியார் பண்பலை அலைவரிசை
ஒலிபரப்புடன் போட்டிபோட்டுக் கொண்டு
கலைச்சேவையினை ஒலிபரப்பிவரும்


இந்தியஅரசு நடத்தும் தமிழ்மொழி கோடை
பண்பலை ஒலிபரப்பு நிலையத்தின் பதினோ
றாவது பிறந்தநாள் விழாவாம்.அந்த விழாவுக்கு
தான் அந்தப்பொன்னு,தன் மச்சானை கூட்டிட்டு
போ....மச்சான்னு கொஞ்சும் மொழியில் கூவியது.


பண்பலையில் வரும் எந்த விளம்பரமும் நடப்பு
குடும்பத்தோடு  எள்ளவுவிற்குகூட சம்பந்தம்
இருக்காது.ஆனா,இருக்கிறமாதிரி மயக்கத்தை
உண்டு பண்ணிவிடும் அலைவரிசை.


தனியார் பண்பலை ஒலிபரப்பு தோன்றாத காலத்தில்
பாட்டு கேக்கிற பொழுதுபோக்குகிற்கு கோடை
பண்பலை ஒலிபரப்புதான் முதன்மையாக
இருந்தது.


தோழர் சார்லி சாபடளின் நடித்த மாடர்ன் ஆப்
டைம்ஸ் படத்திதல் அவர்  எப்பொழுதும் ஸ்பானருடன்
இருந்த மாதிரி .இருபத்தொன்றாம் றுாற்றாண்டு
தொடக்கத்தில் ஒவ்வொருத்தரும் தங்கள் வீடு
களிகளிலும்,சின்னஞ்சிறிய,நடுத்தர தொழிற்
கூடங்களிலும் பண்பலை ஒலிபரப்பு எப்எம்வுடன்
தான் இருந்தார்கள்.பாட்டுகேட்டுக்கொண்டே
இருக்கும் நிலைதான் அன்று இருந்தது.


இந்த பண்பலை ஒலிபரப்பின் தாக்கத்தைப்
பற்றி அன்றைய புதிய கலாசாரம் மாத இதழில்
ஏராளமான கட்டுரைகளும் கவிதைகளும்
வெளிவந்திருந்தன.

தனியார்மயம்,தாராளமயம் புன்னியத்தால்
ஏராளாமான தனியார் பண்பலை ஒலிபரப்பு
நிலைய்கள் தோன்றியது

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் செல்
போன் கம்பெனிகள் மாதிரி  ஒவ்வொரு 
நிலையமும் தங்கள் கொள்கைக்கேற்ற
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வயது
வித்தியாசமின்றி பாரபட்சபாராமல் எந்த
ரசிகனும் தப்பித்து ஓடிவிடாமல் கட்டி
போட்டு இருந்தன. அதில் தப்பித்தவர்கள்
காது கேளாதவர்கள்தான்.


அப்படி முதன்முதலில் இசை கயிற்றால்
கட்டி போட்ட கோடைபண்பலை ஒலிபரப்பு
நிலையத்துக்கு  பதினோராவது பிறந்த நாள்
விழா.சேலம் நகரத்தில் அதுவும் கல்லுாரி
வளாகத்தில்.


பண்ணைபுரத்து இசைக்கலைஞனின் வசீகரத்
இசை தாலாட்டுடன் பல இசைக்கயிற்றால்
கட்டுண்டு கிடப்பவர்கள்.அந்தக்கட்டுகளிலி
ருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமானதா??


காற்று மண்டலத்தையே!  காந்த மண்டலமாக
ஆக்கியவர்கள் அவ்வளவு  சுலபத்தில் விட்டு
விடுவார்களா??????????????????



வெள்ளி 01 2011

உங்களுக்கு 12 வது இடமா? எப்படி எப்படி? அது எப்படி???

பணக்காரர்கள் வரிசையில் இந்திய பணக்காரர்கள்
12வது இடமாம்.அட,ரெம்ப பெருமைப்படுற
விஷயமாச்சே!.இந்திய பணக்காரர்கள்
எல்லாம் நெற்றி வேர்வை சிந்தி  24நாளுமணி
நேரமும் ஓடா உழைத்துஊர அடிச்சு உலயில
போடாம,முடுச்ச அவுக்காம,மொள்ளமாரித்தனம்
செய்யாம,கேப்மாரி வேலைகள் வுடாம ,
உலக பணக்காரர்களின் வரிசையில்
பனிரெண்டாவதாக வந்துயிருக்காங்கப்பா
.அடுத்து ஆறு, அப்புறம் நம்பர்
ஒன்னுதான்.எவ்வோளோ!  முன்னேற்றம்
.இந்த முன்னேற்றத்துக்கு
தாப்பா,கல்லுஊளி மங்கன்,அதிமேதாவிகள்
மற்றும் ஜிஞ்சக்கா,ஜிஞ்சக்கா போன்றவர்கள்
புலம்பி தவிச்சாங்க,

கேப்மாரிகளே!!.மொள்ளமாரிகளே!
இந்தியாவிலுள்ள காடு,மலை,ஆறு
ரோடு,ஆகாயம்  எல்லாவற்றையும்
 நாட்டுக்காக அர்பணிக்கிறாராம்
கல்லுாஊளிமங்கன்..
இப்பத்தானய்யா புரியுது.

நாடு என்றால் நீங்கதான்.
நீங்கள் என்றால் நாடு என்று
சுயபுத்தியையும்ஒழிச்சு கட்டியாச்சு,
சொல்புத்தியும் கேட்கவிடாம தடுத்துபிட்டிங்க.
ம்....ம்..ம்..குளுமுட்டையா ஆக்கிபுட்டீங்க
குளுமுட்டையில எப்போகுஞ்சு வரப்போகுது
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை
உங்க வாரிசு பரம்பரையா,தானாதி
விற்கிரையங்களுக்கு உட்படுத்தி
ஆண்டு அணுபவித்து வருவீர்களாக!!!!
ஆமென்.

திங்கள் 27 2011

நல்ல......... தம்பி

என்ன தம்பி !ஆளையே காணோம்.
பார்த்து ரெம்ப நாளாச்சு!
வெளியுர்க்கு போயிட்டீங்களா!
குடும்பம்,குட்டி எல்லாம்
சௌக்கியமா இருக்காங்களா?

உங்கள பாத்து ரெம்ப நாளாச்சு!
ஆளே,மாறிட்டிங்களே தம்பி!
வேல அதிகமோ தம்பி
என்ன செய்யறது நாம வாங்கி
வந்த வரம் அப்படி!!


ஆமா,தம்பி உங்க அம்மாவ
சைக்கிள்ல கூட்டிட்டு போவிங்கள
அவுங்க நல்லா இருங்காங்லா தம்பி?
நல்லா பாத்துகுங்க தம்பி!அவுங்கள
பாத்து ரெம்ப நாளாச்சு!  நா....ன்
கேட்டதா சொல்லுங்க தம்பி!


டீ.....  யா.வேணாம் தம்பி 
உங்கல பாத்ததே ரெமப
சந்தோஷம் தம்பி.நீங்க
டீ..குடிக்கிறது இல்லயா?
மாறாம இருக்கிறீங்க தம்பி!


காசா,அதெல்லாம் வேணாம்
தம்பி. நீங்க நல்லா இருந்தா
போதும் தம்பி!வயசாச்சுல!
 நடக்க முடியல அதான் இங்க
உட்காந்து இருக்கேன்.பஸ்சு
வந்துருச்சு தம்பி! நீங்க போங்க
நா.....பத்திரமா வீட்டுக்கு
போயிருவேன்  தம்பி!!!
கவலப்படாமா போங்க தம்பி!
......................................................
.......................................................
........................................................


பிச்சக்கார பயலே,எங்க ஊரு கார
தம்பிடா!!! நல்ல தம்பி.... 
நாம பிச்சையெடுக்கிறது
நல்லதம்பிக்கு தெரிய வேணான்டா????









 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...