பக்கங்கள்

சனி 01 2012

நீதிக்கு அப்பாற்பட்டு தணடிக்கப்பட்ட வெளிநாட்டு இந்திய குற்றவாளி.....


இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த்படேல்  அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து விட்டு ஆஸ்திரேலியாவில் பண்டாபெர்பேஸ் மருத்துவமனையில் பணியாற்
றிவந்தார்.

தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களை ஜேம்ஸ் பிலிப்ஸ்,கேரிகெம்பஸ்,மெர்
வின்மோரிஸ் ஆகிய நோயாளிகளை அறுவை சிகிச்சையின்போது கொன்றார்
இதனால் அவர் “மரண டாக்டர்” என்று அழைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மரண டாக்டர். அந்நாட்டு பிரிஸ்மேன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தார். உயர்நீதிமன்றமோ, இந்திய குற்றவாளி ஆதாரங்
கள் அடிப்படையில் தண்டிக்கப்படாமல், நீதிக்கு அப்பாற்பட்டு தண்டிக்கபட்ட  குற்றவாளியாக  கருதி ஏழுஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தது..மரண டாக்டரின் வழக்கை மறு விசாரனை செய்யவும்.நீதிபதியான மார்டின்டப்ளே உத்தரவிட்டார்.

இந்தியாவில் இருக்கிற மரண டாக்டர்களோ, நீதிக்கு இப்பாற்பட்டே,பல கொலைகளை சட்டபூர்வமாகவே செய்வதை,நீதிக்கு உட்பட்டும் வழக்குகூட
தொடரமுடியாமல் தவிக்கின்றனர்.ஒருசிலர் பாதிப்பின் கொடுமையைர்ல் நீதிக்கு அப்பாற்பட்டு,தங்களால் மரண டாக்டர்களை தண்டித்து விடுகிறார்கள்.

இந்தியாவின் மரண் டாக்டர்கள் ஆதாரத்தை வைத்துக்கொண்டுதான் கொலையும் செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

புதன் 29 2012

இப்படியும் சில கே(ா)டிகள்.............


இந்தியாவின் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்.இதோடு ஒலக அழகியின் முன்னால் காதலர். இவர் நடித்த தபங்,ரெடி,பாடிகார்டு ஆகிய படங்கள் வசூலை அள்ளி குவித்துள்ளதாம்..தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் ஏக் தா டைகர் படமும் வசூலை கண்ணுமூக்கு தெரியாமல் வசூலை குவித்துக் கொண்டு இருக்குதாம்.

இதனால் இவரை தங்களின் படங்களில் நடிக்க வைப்பதற்காக பிரபலமான சுபாஷ்கய்,யாஷ்சோப்ரா,விஜெய்கலானி,ரமேஷ்தவுரானி,யு.டீ.வி,டிஸ்னி,ஸ்டுடியோ-8,சாஜித்நாடியாட்லால,சூரஜ்பார்ஜாத்யா,ராஜ்குமார்சந்தோஷி,பர.கான்கால்,ஃப்ரோகான்,கரன்ஜோகர்,போன்ற தயாரிப்பாளர்கள் எல்லாரும் அந்த நடிகரின் வீட்டுக்கு படையெடுத்தனர். இத்தனை தயாரிப்பாளர்கள் படை எடுத்தும் ரமேஷ்தவுரானி மட்டுமே ,அந்த நடிகர்க்கு ரூ100/கோடி சம்பளம் பேசி வெற்றி வாகை சூடிதான செய்தியே ! நிலக்கரி ஊழலைக்காட்டிலும் பரபரப்பாக இருக்கிறதாம்.

. இந்த கோடிகளுக்குஅச்சரானமானரசிகர்களோ.மானங்கெட்டுசுயமரியாதை
இழந்துஎப்படியோல்லாம்மோ இந்த கேடிகளுக்கு கோடிகளை குவிக்கிறார்கள். 

ஞாயிறு 26 2012

வல்லரசு இந்தியாவில் ”வதந் தீ” இதுக்கு மேலேயும் பரவும்....


செல்போன் இல்லாத காலத்தில் முன்பொரு சமயம் “  என் பெருமையை
எழுதி ஆயிரம் நோட்டீசாக அச்சடித்து தெருவெங்கும் ஊருகெங்கும்
கொடுக்கச் சொல்லி அச்சாபிசுக்காரன் பொழுப்புக்ககு ஆதரவாக பாம்பு
பேசியதாக “வதந்தீ” பரவியது.

பின்பு ஜவுளிக்காரனுக்கு அதரவாக, சகோதரனிடம் சென்று பச்சை கலர்
சேலை கட்டவேண்டும் .இல்லையென்றால் சகோதரன் செத்து போவான்
என்று பச்சைகிளி பேசியது....

அப்புறம்.இப்புறம், இப்படியாக பாம்பு,பல்லி,பூரான் கொசுவு, நான் ஈ என்று
வரிசையாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோரிக்கையுடன் பேசியது....

இப்போது பிறந்த குழந்தை ஒன்று தமிழில் பேசி அசத்தி யுள்ளது. ஊரெல்லாம்
காலரா,டெங்கு,மூளை காய்ச்சல் பரவி வருகிற நேரத்தில்  வெயிலின் கொடுமையும், பவர்கட்டு அநியாயமும் பெருகி இருக்கிற நேரத்தில்...........

நான் அதிகாலை 4 மணிவரைதான் இருப்பேன். அதற்குள் 4 ஆயிரம் குழந்தை
களை கொல்லுவேன் என்று பேசி, பரிகாரத்துக்கு ஆதரவாக குழந்தைகள்
ஆண்களின் மண்டையில் தேங்காயும் சூடத்தையும் மூனு தடவை சுற்றி
முச்சத்தியில் தேங்காயை உடைத்தால் நான் கொல்லமாட்டேன்.என்று..

அதாவது லஞ்சம் வாங்கும் போலீசு சொல்றமாதிரி, இவ்வளவு தொகை
கொடுத்தால் வழக்கு பதியாமல் விட்டுவேன்  என்று..... அந்தக் குழந்தையும்
தேங்காய்வியாபரிக்கு ஆதரவாக  ஒரு தேங்காய் சூடத்துடன்
பேசியிருக்கிறது.

 விக்கிரமாதித்தனுக்கு  கதை சொல்லும் வேதாளம் கதைக்கு விடை
தெரிஞ்சவுடன் சொல்லலேன்னா, ஓம் மண்டை சுக்கு நூறாக ஒடஞ்சு
போயிடுமுன்னு மிரட்டும், வேதாளத்தின் மிரட்டலுக்கு அப்பேற்ப்பட்ட
சூராதி சூரனே மிரண்டு போனாரு........

கேவலம் ஏட்டுக்கல்விய அரகுறைய படிச்சுபபுர்ட்டு வீட்டு வேலைகளில்
முடங்கி.டீவி தொடரே கதின்னு கிடக்கும் தாய் குலம்தான் பயப்படமா?
இருக்கத்தான் முடிமா?............

பொதுமக்களை அடிப்பதற்கும், திட்டுவதற்க்கும் சம உரிமை பெற்றுள்ள
பொம்பள போலீசே...! ஆம்பள போலீச பாத்து பயப்படுது.............

மேலும் தமிழகத்தை புடுச்சு ஆளும் ஆத்தாவே, வேள்வி நடத்துது இப்படி
கடைந்தெடுத்த பித்தலாட்டமும் அயோக்கியத்தனமும், மூட நம்பிக்கையை
பரப்புகின்றன சாதனங்களும் பல்கி பெருகி நம்ம நாடு அணுஆயுதம் பெற்ற
வல்லரசா இருக்குற நேரத்தில....“வதந் தீ” இதுக்கு மேலேயும் பரவாமா
முடியுமா.???????????????????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...