பக்கங்கள்

சனி 06 2016

இது..! உண்மையா..? இல்லையா..??




இரண்டா ஆயிரத்தி மூன்றாம்
ஆண்டில் ஜெயலலிதா அரசு
மது விற்பனைக்காக டாஸ்மாக்
நிறுவனத்தை தொடங்கி. ஊருக்கு
ஊர் மது கடையை
திறந்தது.. உண்மையா ? இல்லையா??

அந்த  டாஸ்மாக்  கடைகளு்க்கு
2,280 கோடிக்கு மது சப்ளை
செய்த மிடாஸ் நிறுவன
உரிமையாளர் யார்? யார்??

வெள்ளி 05 2016

தம்பி ஞான பிரகாசம்........


தம்பி ஞான பிரகாசம்
உனக்கு என்னப்பா ஆச்சு

பகல்ல தூக்கம் தூக்கமா
வருதா..! உடம்பு சோர்வா
இருக்குதுன்னு அர்த்தம் மப்பா

ராத்திரியில தூக்கம் வராம
புரண்டு புரண்டு கிடக்கிறீயா..
மனசு சோர்வா இருக்குன்னு
அர்த்தம் மப்பா தம்பி.............
ஞானப் பிர காசம்.........






வியாழன் 04 2016

பல நாள் பஜனையில் ஒரு நாள் பஜனை ...!!!

..

ஜனநாயகம் வழிந்து ஓடும்
தமிழக சட்ட மன்றத்தில்
பல நாள் பஜனையில்
ஒரு நாள் பஜனையின்
போது எதிர் வரிசையில்
அமர்ந்து இருந்த 89
உறுப்புகளை வயற் காட்டு
பொம்மைகள் என்றது எதிர்
வரிசைக்கு எதிரே அமர்ந்து
இருந்த உறுப்புகளில் ஒன்று

இது கேட்டு அந்த
89 உறுப்பகளும் சேர்ந்து
எதிர்த்து குரல் கொடுத்தது

பொம்மைகள் குரல் கொடுத்ததை
கண்டு அதிசியத்த சபை
முதல்வர் உடனே எழுந்து
அது ஒன்றும்அன்லி
பார்லிமெண்டவார்த்தை அல்ல
அதனால் சபை குறிப்பில்
இருந்து நீக்க வேண்டிய
அவசியம் இல்லை என்று
தன் மேதமையை காட்டினார்

அடுத்து எதிர் உறுப்பு
தலைவர் ஜனநாயக சபை
தலைவரிடம் மன்று ஆடி
போர் ஆடி பெற்ற
உரிமையின் படி எதிர்க்கு
எதிரே அமர்ந்து இருக்கும்
131 உறுப்புகளும் கொத்த
அடிமைகள். சோற்றால் அடித்த
பிண்டங்கள் எனறு பேசிய
போது அந்த அவையின்
சபை தலைவர். சபை
நாளை தொடரும் இன்று
ஒத்தி வைக்கப் படுகிறது
என்று விட்டு சென்றார்.

பஜனை சபைக்கு உறுப்புகளை
அனுப்பி வைத்த 5.79கோடி
வாங்கு வங்கிகள். புட்பால்
விளையாட தெரியாமல் திரும்பத்
திரும்ப சேம் சைடு
அடித்துக் கொண்டு இருக்கிறது.




புதன் 03 2016

இந்தியா என்பது ஒரு நாடல்ல.......


இந்தியா என்பது ஒரு நாடல்ல
அங்கு நிலவும் இந்து மதம்
என்பது ஒரு மதமும் அல்ல..

ஆங்கிலேய காலனி ஆட்சி ஆளர்களால்
இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும்
உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு
அந்த ஆங்கீலேயன் வைத்த பெயர்தான்..
இந்து என்ற சாதிவெறி மதம்


அதற்கு முன்பு..இங்கே பலதேசியஇனங்கள்
அவைகளின் கலாச்சார பிரிவுகள் பல்வேறு
மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள்
என்ற பன்முகத் கொண்ட தனித்தனி
பிரிவகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது.

இன்றைய இந்தியா தேசிய இனங்களின்
சிறைக்கூடம் ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம்

இந்தியா என்பது ஒரு நாடல்ல....
அங்கு நிலவும் இந்து மதம்
என்பது ஒரு மதமும் அல்ல.

செவ்வாய் 02 2016

நடுச்சாம வேளை......

நடுச் சாம வேளை
விக்கல் எடுத்தான்
ஒருவன். பக்கத்தில்
படுத்து இருந்த
மற்றவனுக்கு தூக்கம்
கலைந்தது. எழுந்த
அவன் தண்ணீரை
ஒரு மொடக்கு
குடி என்றான்

விக்கல் எடுத்தவன்
மறுத்துவிட்டு சொன்னான்
என்னவள் இந்நேரம்
என்னை நிணைப்பதை
தண்ணீர் குடித்து
தடுக்க விரும்பவில்ல
என்றான்...........

தூக்கம் கலைந்தவன்
கோபம் கொண்டு
அவனை ஒரு
எத்து எத்திவிட்டு
கேட்டான்  இப்போது
உன்னவள் உன்னை
நிணைக்கிறாளா என்று

நீ எத்தின
எத்தில் அவள்
தூங்கிவிட்டாள்
என்றான் அவன்...


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...