பக்கங்கள்

சனி 04 2015

…ஆதலினால் காதல் செய்!

காதல் கவிதை
படம்-வி-னவு

தோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!
சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!
வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!
கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!
அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.
பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!
– துரை.சண்முகம்.
(திவ்யா ; தர்மபுரி நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து மணமுடித்த வன்னியப் பெண்)
______________________________________________________________________________________________________________

வெள்ளி 03 2015

டேய் மச்சான் மெட்ரோ ட்ரைன்ல..போகாதேடா....!!!

பட்ம-அன்சாரி முஹம்மது

“டேய்..மச்சான்..மெட்ரோ ட்ரைன்லயா  போற....”

ஆமாண்டா..மச்சான், “எல்லா பிரபலமும் ஒக்காந்துகிட்டு,நின்னுகிட்டுன்னு போயிட்டு வந்துருச்சுக”....“நம்ம போகலாட்டி  நம்ம கொல தெய்வம் குத்தமாயிரும்டா மச்சான்”

“அதுல போகாதடா மச்சான்...”

ஏன்டா.?.மச்சான்.., “இப்படி..அபசகுனமா.. சொல்ற....”.

அப சகுனமில்லடா. மச்சான். உண்மடா.......

 அப்படி என்னடா...மச்சான் . எனக்கு தெரியாத உண்ம..???

மெட்ரோ ட்ரையின்ல... கக்கூஸ் இல்லேன்னு . இப்பத்தாண்டா நம்ம மச்சி ஒருத்தன் கண்டுபிடிச்சு சொன்னான்....

“என்னது..மெட்ரோ ட்ரையின்ல கக்கூஸ் இல்லயா....!!!! 

“ஆமாண்டா மச்சான்”


எவன் செஞ்ச வேலடா மச்சான, “தரையில ஓடுனா..ஆத்ர.அவசரத்துக்கு ஒதுங்கிக்கிறலாம்..இந்த மெட்ரோ ட்ரைனு ரெண்டு பாலத்துக்கு மேலேலடா  ஓடுது... எப்படிடா போறது......”

“ அதுக்குத்தாண்டா,. மச்சான் .மெட்ரோ ட்ரைன்ல போகாதேன்னு சொல்றேன்....


.

வியாழன் 02 2015

ஒரு தந்தையின் நிறைவேறாத பிரார்த்தனை

படம்-www.tamilpaper.net

ஒரு நாட்டில்
பிறந்த மக்களுக்கு
வேண்டப்படும் பற்றுகளுள்
தலையாயப் பற்று
மொழிப்பற்று........

அந்த மொழிப்பற்று
இல்லாதரிடத்தில் தேசப்
பற்று இராது
என்பது உறுதி....

ஒரு தேசம் மொழியை
அடிப்படையாக கொண்டு
 தான் இயங்குகிறது......

ஆதலால்....
தமிழர்க்குத் தாய்
மொழிப்பற்று பெருக
வேண்டும் என்பது
எனது பிரா்த்தனை.

குறிப்பு :
(நடப்புகளோ தமிழர்க்கு தமிழ்பற்று குறைந்து ஆங்கில பற்றுதான் மிகுந்துள்ளது)

புதன் 01 2015

அம்மான்னு அழைக்காத ஓர் உயிரினம்.....

படம்- நக்கீரன்



சக்சஸ் ......சக்சஸ் .. சக்சஸ்
வெற்றி..வெற்றி..வெற்றி
மகத்தான வெற்றி  வெற்றி
.................
டம்....டம்....டமார்...
அதிர்வேட்டு முழங்கியது
நின்றவன் போனவன்
திரும்பி வந்தவன்
அனைவருக்கும் லட்டு
கொடுத்து ஆட்டம்
பாட்டத்துடன் தங்கள்
மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள்..
அம்மாவென்று அழைத்த
உயிரினங்கள்................

வெடித்த வேட்டு
சத்தத்தில் ஒர்
உயிரினம் மட்டும்
உதிர்ந்து கிடந்த
லட்டுகளை முகர்வதை
நிறுத்தி விட்டு
அம்மா என்று
அழைக்காமல் ..லொள்
லொள் என்று அழைத்தது..
...........

செவ்வாய் 30 2015

முடிந்தவரை நடை ராஜா...முடியவிட்டால் சேர் ஆட்டோ....!!!!!!

படம்-www.tamilpaper.net
 

எண்ணப்பா...வீரா   ! ஹெல்.மெட் வாங்கிவிட்டாயா... அவகாசம் இன்று முடிவடைகிறதப்பா...என்று   ஏரியா..அண்ணன் . கேட்க...

“இவிங்க நிணச்சு நிணச்சு சொல்லுவாங்கேன்னுதாண்ணே..வண்டி வாங்கும்போதே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேண்ணே...அத இனி பயன்படுத்திக்க வேண்டியதுதாண்ணே..” பதிலுரைத்தான்.

“ நீ...தப்பிச்சிட்டேடா” என்றார் அண்ணன்..

அடுத்தவரை கேட்டபோது , அவர் சொன்னார்.

“ காசு கையில இல்லாததால மாசக் கடைசியில வாங்கலாம்னு போயி விலய கேட்டா”...650 ரூபாய்க்கு வித்தத...2500ரூபான்னு சொன்னாங்கண்ணே... அதனால வாங்கம வந்திட்டேண்ணே...”

“ நீ தப்பாம..தண்டம் கட்டியே ஆவணும்டா” என்றார் அண்ணன்.

 எக்ஸல் ஹெவ்வி டூட்டியில போயி  கடை கடைக்கு சரக்கு போடும் ஈஸ்வரனை கேட்டபோது....... தன் கோபத்தை பழைய  பாடலை தனக்கேற்றார்போல் வார்த்தைகளை சேர்த்து பாடலாகவே பாடி விட்டார்.

கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்
அவன் தன் தலையில்
 ஹெல்மெட்டை அணிந்து
 டூ வீலர் ஓட்ட
வேண்டும் ரோடென்றால்
என்னவென்று புரிய
வேண்டும், பாவி
அவன் அந்த
வேதனையை பட
வேண்டும்......”

அண்ணனைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டு சிரித்தார்கள்.

அண்ணன் சொன்னார்.  சத்தியமா கடவுள் மனிதனாக பிறக்க மாட்டாருப்பா..... உன் பாடல்படி ஹெல்மெட் எல்லாம் அணிந்து ஓட்டமாட்டாருப்பா..... அவரு ரேஞ்சே தனிப்பா.....


எல்லோரையும் கேட்ட , அந்த அண்ணனைப் பார்த்து வண்டியே இல்லாத ஒருத்தன் கேட்டான். அண்ணே..நீங்க.. ஹெல்மெட்” டு வாங்கிட்டீங்களா....???

நீ இப்படி கேட்பேன்னு எனக்கு தெரியுமடா.... என்ற அண்ணன் பாட்டாலே பதில் சொன்னார்.

“சட்ட திட்டம் எதுவும்
எனக்கு சரியில்ல- இந்த
சண்டாளப் பய நாட்டுலே
நான் டூ வீலர் ஓட்ட
வழியில்ல.......
சட்ட திட்டம் எதுவும்
 எனக்கு சரியில்ல...”

-பெட்ரோலும் நாளுக்கு நாளு ஏறுது... தண்டமும் கூடுது.-அதனால நான் வாங்கிய டூவிலர வித்துட்டேன்..டா..... ”முடிந்த வரைக்கும் நடை ராஜா.. ” முடியாவிட்டால் சேர் ஆட்டோ” டா.. அதுவும் முடியவிட்டால் அரசு போக்கவரத்து 50 ரூபா பயணச்சீட்டுடா என்று சொன்ன அண்ணன் ஒரு கருத்தையும் சொன்னார்.


படம்-www.yarl.com

படம்-www.vinavu.com


கஞ்சா இழுத்தவன், தண்ணி அடித்தவன்கள் ,எப்படி அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறானோ.அதேபோல..டூ வீலர் ஓட்டி பழகியவனும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது.. அதுபோல வழிபறி தண்டம் வசூலிப்பவனும் விடமுடியாது..தண்டம் அழகாமல் தப்பித்து விடவும் முடியாது. ஆகு தண்டம் அழுக விரும்பாதவர்கள் எல்லாம் வாய் பொத்தி மெய் வருத்தி, தண்டத்தை(ஹெல்மெட்)தலையில் மாட்டித்தான் அவதிப்படனும் என்றார்.




திங்கள் 29 2015

இரண்டில் ஒன்றைத் தொடு....???

படம்-tamil.filmibeat.com


இடப்பிரச்சிணையில்
விசாரணைக்காக காவல்
நிலையத்தில் காத்திருந்த
போது....................

இந்தியப் பிரஜையும்
தமிழ்நாட்டு குடிமகனுமான
ஒருவர் இரண்டு
விரலை நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடு என்றார்

என்ன என்று
கேள்வி கேட்டபோது
முதலில் தொடு
பிறகு சொல்கிறேன்
என்றார் அவர்.

மறு பேச்சில்லாமல்
இரண்டில் ஒன்றைத்
தொட்டேன் அவர்
முகம் மலர்ந்தார்.

இப்படி நின்ற
நான்கு பேர்களிடம்
இரண்டு விரல்களை
நீட்டி ஒரு விரலைத்
தொடச் சொன்னார்.

அவர்களும் கேள்வி
எதுவும் கேட்காமல
இரண்டில் ஒன்றைத்
தொட்டார்கள் அகம்
மலர்ந்த அந்த
தமிழ்நாட்டு குடிமகன்.
...........

சத்தம் போட்டுச்
சொன்னார் ஆர்.கே
நகர் இடைத் தேர்தலில்
அவருடைய அம்மாமதான்
வெற்றி அடையுமாம்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...