பக்கங்கள்

சனி 06 2019

அதிகாலை கனவு-37

கேள்வி கேட்டது குத்தமாய்யா.........



நந்தினி ஆனந்தன் க்கான பட முடிவு









உங்க பெயர் ...?.

நந்தினி

அப்பா பெயர்...??

ஆனந்தன்.

இருப்பிடம்...???

புதுார். மதுரை.

உங்க மேல் என்ன வழக்கு என்று தெரியுமா..????

தெரியும்...பொய் வழக்கு...


அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும்  .அரசு ஊழியரை தாக்கியதாகவும் வழக்கு

(நடப்பு  என்னவென்றால்....டாஸ்மாககை எதிர்த்து தனிநபராக எந்தவொரு கட்சி, அமைப்பு எதுவும் ஆதரவின்றி தனியாக தந்தையும் மகளுமாக    தொடர்ந்து டாஸ்மாக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். இவர்கள் மேல் நூற்றுக்கும் குறையாத வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்குதான் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில்  டாஸ்மாக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பதை தடுத்து கைது செய்யப்பட்டடு வழக்கு பதியபட்டது அந்த வழக்கில்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது..  வழக்கின் சாட்சியான வரை பார்த்தும் விசாரணை நீதிபதியிடம் கேட்ட கேள்வி  )

 இபிகோ செக்சன் 328ன்படி போதை பொருள் விற்பது கடுமையான குற்றம். அப்படி இருக்கும்போது...  அரசே மதுபானம் விற்கிறது. அந்த மதுபானம் உணவு பொருளா..? அல்லது வேறு பொருளா? அல்லது மபோதை பொருளா..??



இந்தா...? இப்படியெல்லாம்.. கேள்வி கேட்க உரிமை இல்லை.. இப்படி கேள்வி கேட்பது நீதிமன்ற அவதிப்பாகும்...!!!

இல்லை இது என் வழக்கு.. பொய் வழக்கில் குற்றசாட்டப்பட்டுள்ளேன்..இதில் கேள்விகேட்டு வழக்காட எனக்கு உரிமை உள்ளது...

கத்தி பேசினாலும் நீதிமன்ற அவமதிப்புதான்  இவர்களை சிறை வைக்க உத்தரவிடுகிறேன்.

இது அநியாயம்... இது என் கருத்துரிமையை பறிக்கும் செயல்....


மகளும் தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்....


முகநூல், வாட்ச்சாப், டிவிட்டர் அணைத்திலும் நந்தினிக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்படுகின்றன..


நந்தினி சார்பாக இருவருக்கும் விடுதலை  செய்யகோருகிறோம்.-சமூக ஆர்வலரான-வக்கில்கள்.


நல்லது...அவர்களை கேள்வி கேட்டது தவறு, சத்தமிட்டது, தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதிதரச் சொல்லுங்கள்..! விடுதலை செய்கிறேன்

நந்தினியும் அவர் தந்தையும்   மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மாட்டோம். மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆக வேண்டிய அவசியம் இல்லை. எப்போது விடுதலை செய்கிறார்களோ.. அப்போது சட்ட விரோத கைதால் நின்று போன  நந்தினியின் திருமணத்தை நடத்திக் கொள்கிறோம்...


  தந்தையையும் சகோதரியையும் சட்ட விரோதமாக சிறையில் வைத்ததைக் கண்டித்து சட்டக்கல்லூரியில்  ஐந்தாம் ஆண்டில் படிக்கும் நந்தினியின் தங்கை சட்டக் கல்லூரியின் முன்  திங்கள் கிழமை காலையில் உண்ணாவிரதம் இருக்கிறார்...


திடுக்கிட்டு விழித்தபோது....மேல நெடந்தவைகள் எல்லாம் நிணைத்து கொண்டு மீண்டும் படுத்தக் கொண்டேன்... அதிகாரமில்லாதவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள்.. அதிகாரம் செலுத்து வேண்டியவர்கள் எல்லாம் அடி உதையிலும் பொதையிலும் மிதந்து கொண்டு இருப்பதுதான் கனவில் தெரிந்தது..

வியாழன் 04 2019

அதிகாலை கனவு-51









ஆட வாங்க..
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆளப்
பாத்து மயங்கி
நிக்காதிங்க அண்ணாச்சி..

ம்ம்ம் ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஒரு
தடவ ஆடிவிட்டா
தகிடுதத்தோம் ஆகாது.

அட... ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆட
வாங்க அண்ணாச்சி.----

--என்னாது ஒரே கொழப்பமா..இருக்கு ஆட(ஆடை) வாங்க கூப்பிடுறாகளா? இல்ல ஆட்டம்போட கூப்பிடுறாங்களா?.அதுவும் அண்ணாச்சின்னு வேற கூப்பிடுறாங்க......கண்விழித்து நிதானத்துக்கு வந்து யோசித்தால்.--அடேங்கப்பா... எப்பயோ பார்த்த கரகாட்டத்த  நிணவு....இப்ப கனவா வந்து தொலையுது.. அய்ய.............வர கனவுக்கு வேலைவெட்டி இல்ல போலிருக்கே...









அதிகாலை கனவு-36..

போறவன் வாறவன்
எல்லாரும் அந்தப்
பக்கம் பாக்குறானே
அப்படி என்னத்த
பாத்தாங்கேன்னு நானும்
எட்டி பாத்தேனுங்க
அப்படி பாத்ததுக்கு
எனக்கு தண்டனைங்க

நேத்திலேருந்து இன்னி
வரைக்கும் வாயில
வந்து நாறுதுங்க..




“வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

காசில்லாத மைனர்க்காரன்
ஓசியில பாத்தானாம்
உதட்டாலே சப்பு
கொட்டி  மரம்
போல நின்னானாம்
கற்பனையால் நிணச்சு
நிணச்சு எதுவும்
கிடைக்காம அலைந்தானாம்”

அதனால வாங்க
மச்சான் சும்மா
வாங்க  மச்சான்..


செவ்வாய் 02 2019

அதிகாலை கனவு-35.

மர்மம் ஒரே மர்மம்..........!!!







பிறந்தது மர்மம்
வளர்ந்தது மர்மம்
கட்டிக்கிட்டது மர்மம்
 வச்சுகிட்டது மர்மம்
பெத்துகிட்டது மர்மம்
சம்பாதித்தது மர்மம்
 செத்து போனது மர்மம்
 காலு இருந்ததா இல்லையா
என்பது மர்மம்
ஆவியா சுத்துதா
இல்லையா  மர்மம்
ரகசிய அறையில் சிக்கிய
பணமும் மர்மம்
அந்த ரெண்டு
இட்லி தின்டதிலும் மர்மம்
கடைசியா என்
அதி காலை கனவில்
வந்ததும் மர்மம்
ஒரே மர்மம்
தான் போங்க சார்...........

ஞாயிறு 30 2019

அதிகாலை கனவு-34.

வெறுப்பால் வந்த விழிப்பு




எனது ஏரியாவில் யாரும் சென்ற ஆண்டில் பிளஸ்டூ  படிக்கவில்லை. படித்திருந்தாலும் லேப்டாப் கேட்டு வீதியில் இறங்கி இருக்க மாட்டார்கள். பக்கத்து நகரத்தின் தெருவில் உள்ள மாணவர்கள் அனைவரும் சென்ற ஆண்டில் பிளஸ்டூ படித்தவர்கள்... எந்தவித பயம் இல்லாமல்  சக மாணவர்களுடன் தெருவில் இறங்கினார்கள்...


அடுத்தவன் சொத்தையும் காசையும் அடுத்தவன் மனைவியும் பயன்படுத்தியவர்கள் சும்மா இருக்க மாட்டாமல்...? தங்கள் ஏவல் படையை ஏவி விட்டனர். அந்த ஏவல் படைக்குதான் எதுவுமே   தெரியாதே!

முதலாளி சூ... என்று ஏவி விட்டால் கடிக்க வேண்டும் கடிக்காவிட்டால்..என்ன நடக்கும் அந்த நாய்க்கு..? என்பது நாய் வளர்த்தவர்களுக்கு தெரியும்...அதனால்தான் நாய்கள் முதலாளிகளுக்கு ஏவலால்களுக்கு பாசமாய் இருக்கின்றன.


லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்களை தெரு நாயை  போல விரட்டி, அடித்து இழுத்து ச்  சென்ற காட்சியைக் கண்டு..இப்படியொரு எண்ணம் தோன்றியது.. போராடிய மாணவர்களின் தாய் தந்தையர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுப்பினர்களாகவோ..ஆதரவாளர்களவோ இருப்பார்கள்  அவர்கள் இந்த அடவடித்தனத்தை.  கண்டு அந்த கட்சியை விட்டு விலகுவார்களா?

இந்த எண்ணம் தோன்றிய சில நொடிகளில்...மயித்த விலகுவார்கள் என்று அசிசீரி போன்று தோன்றிது..அறிவு கெட்டதுகள். அறிவு இருந்தாலும் சுயநல பேர்வழிகள், சந்தர்ப்பவாதிகள், இன்னும் சொல்லப்போனால் சாய்ந்தா சாய்ற பக்கம் செம்மறி ஆட்டுக் கூட்டமாகத்தான் இருந்து வருகிறார்கள்.....

நியாயமான எந்த போராட்டமானாலும். சரி..முதல் ஆளா குறுக்கே  வந்து அடாவடி செய்து வீரத்தை காட்டும் போலீசு படையானது. சுதந்திரம் பெற்றதாக சொல்லபட்ட பிறகு, நியாயமாக நேர்மையாக மக்களுக்காக பாடுபட உருவாக்கப்பட்ட படை அல்ல....200 நூற்றாண்டா ஆண்ட. பிரிட்டீஷ் கம்பெனிக்காரன் தனக்காக உருவாக்கப்பட்ட . ஏவல் படையே இந்த படை..அன்றைக்கு அவனைது கோட்டை கொத்தங்களை காக்காவும் போராடுவர்களை கடித்து குதறவதற்குமாய்.. கறியும் சோறும் சரக்குமா ஊற்றி வளர்க்கப்பட்ட படையே!  இன்றும் அதன் மனமும் குனமும் மாறமல் வீரநடை போட்டு வந்து. மிரட்டுவது, குலைப்பது, கடிப்பது..பின் ஒரே போடாக போடுவதுமாக செயல்பட்டு வருகிறது.

இப்படியாக...ஒவ்வொரு போராட்டத்தின் இந்தப்படை எப்படியெல்லாம் தன் வீர பராக்கிரமத்தை காட்டி வந்ததை சமூகத்திலும்  சரி,என் சொந்த பிரச்சினையின்அனுபவத்திலும் சரி,  எப்படியெல்லாம் இந்த படை நடந்து கொண்டு வந்ததை வெறுப்போடு நிணைத்துக் கொண்டு வந்தபோதே  விழிப்பு வந்துவிட்டது.










ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...