பக்கங்கள்

வெள்ளி 12 2021

பீனிக்ஸ் பறவையும் தியாகச்சுடரும்...................

 


A1 பீனிக்ஸ் பறவை, A2 தியாகச்சுடர்








திருடி A2க்கு

 தியாகி பட்டம்....

செத்து போன

 A1 க்கு எண்பது 

கோடியில பீனிக்ஸ்

பறவை பட்டம்..


இத்தகைய பீத்த

சிரிகளுக்கு பட்டம்

கொடுக்கிறவன்களுக்கு

தொண்டன் பட்டம்....


பத்து கோடிஅபதாரம்

கட்டிய திருடிக்கு

தியாகச்சுடர். கருணை வடிவம்

நூறு கோடி அபதாரம்

கட்டிய திருடிக்கு

நிணைவுச் சின்னம்....

 வாழ்க! வளர்க!!

மானமும் அறிவும்......






புதன் 10 2021

அதிகாரம் நிறைந்த அரச மனிதன் செய்யும் படுகொலைகள்

 






அது ஓர் அற்புதமான 7ம் தேதி காலை. எப்போதும் வரும் விரல் நுனி தள்ளல் செய்தியாக உத்தரகாண்ட் பற்றிய செய்தி வந்து சேர்ந்தது. இமயமலையின் மீது இருக்கும் ஏதோவொரு க்ளாசியல் ஏரி உடைந்து வெள்ளமாகி, இருக்கும் ஆறுகளில் நிரம்பி வழிந்து ஓடி, சில கணங்கள் பார்த்து வியக்கும் அற்புதமான காணொளி காட்சியாக அது இருந்தது.
ஏற்கனவே இமாலாயன் சுனாமி என 2013ம் ஆண்டில் உத்தரகாண்டில் நேர்ந்த வெள்ளத்துக்கு பெயர் சூட்டினோம். கிட்டத்தட்ட எட்டு வருடங்களில் இன்னொரு சம்பவம். ‘உலகத்துல ஏதோ நல்லது நடந்திருக்கு’ என கற்பனை செய்து கொள்ளும் தர்மத்தின் தலைவன் ரஜினி போலோ, எல்லாமே சரியாயிடும் ஓம் க்ரீம் என்கிற நம்பிக்கைகளில் உழலுபவர் போலோ இருந்தால் இதற்கு பின் வரும் பத்திகளை படிக்காமல் இப்போதே விரல் நுனியால் தள்ளி அப்புறப் போய்விடுங்கள்.
க்ளாசியல் லேக் என்பதை பனிப்பாறை ஏரி என சொல்லலாம். பனிப்பாறையில் எப்படி ஏரி உருவாகும்? அதிக பனியால் பனிப் படிமங்கள் படிந்து பாறைகளாகி விடுகின்றன. வெப்பம் அதிகமாகும் நேரங்களில் அந்த பாறைகள் உருகி ஏற்கனவே பனிப்பாறை இருந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும். அந்த வெற்றிடத்தில் பனிப்பாறைகள் உருகி ஓடி வரும் நீர் தேங்கி ஓர் ஏரியை உருவாக்கி விடுகிறது. பெரும்பாலான இத்தகைய பனிப்பாறை ஏரிகளுக்கு கரையாகவே பனிப்பாறைகள்தாம் இருக்கும். இயற்கையான அணை போல் பனிப்பாறைகள் தேக்கி வைக்கும் நீரைத்தான் Glacial Lake என்கிறோம்.
நந்தா தேவி என்பது இமயமலையில் இருக்கும் உயரமான மலைச்சிகரப் பகுதி. கிட்டத்தட்ட 8000 மீட்டர் உயரம். 2200 மீட்டர் உயர ஊட்டிக்கு போனாலே தாடை வெடவெடக்கும்போது அதையும் தாண்டி ஒரு 5000 அடி உயரத்தை கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக பனிதான் இருக்க முடியும். அங்கிருக்கும் பனியில்தான் ஒரு பகுதியில் பனிப்பாறைகள் சேர்த்து ஓர் ஏரியை உருவாக்கி இருக்கிறது. ஏரியின் கரையாக இருந்த பனிப்பாறை உருகி உடைந்ததில்தான் தேக்கப்பட்டிருந்த நீர் வெள்ளமாக பாய்ந்து அடுத்தடுத்த ஆறுகளை தொற்றி பெருவெள்ளமாக மாறி மண், பாறை, சுவர் என எல்லாவற்றையும் தனக்குள் அரைத்து பிரம்மாண்டமாக ஓடி வந்திருக்கிறது. பேரிடர் நேர்ந்திருக்கிறது.
இதில் ட்விஸ்ட் என்னவென்றால் பனிப்பாறை உருகுமளவுக்கு வெப்பம் கொண்டிருக்க இது ஒன்றும் அங்கு கோடை காலம் அல்ல. குளிர்காலம்! சும்மாவே வட நாட்டில் குளிர் கொடுமையாக இருக்கும். உயரமான சிகரத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும்?
அங்கும் குளிராகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பனி பனியாகவே இருக்குமளவுக்கான குளிர் இல்லை என்கிறார்கள். அதாவது நந்தா தேவியின் பனிப்பாறை பனியாக இத்தனை காலமும் இருந்த காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காலநிலை மாற்றம்!
உலகளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்கள் காடழிப்பு, நீர்நிலை அழிப்பு போன்றவற்றை சொன்னாலும் இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும் ஒற்றைக் காரணமாக சொல்லப்படுவது புதைபடிம எரிபொருள். அதாவது பெட்ரோல், டீசல் முதலியவற்றை பயன்படுத்திதான் நம் உற்பத்தி, வாழ்க்கை, அலுவலகம், போக்குவரத்து எல்லாமும் இருப்பதால் பெரும் அளவுக்கான புதைபடிம எரிபொருட்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. விளைவாக அவை வெளியேற்றும் கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்குகிறது.
பூமிக்குள் வரும் சூரிய வெளிச்சம் மீண்டும் வெளியேற முடியாமல் இந்த கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்கி திரை கட்டுகிறது. அந்த திரையில் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அதாவது ஒரு முறை பூமிக்குள் வரும் சூரிய வெப்பம் இரட்டிப்பாக்கப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இரட்டிப்பு சூரிய வெப்பம் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. விளைவாக, பனிப்பாறைகளை உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. கடலோட்டம் மாறுகிறது. கடலை சார்ந்து உருவாகும் காலநிலையும் மாறுகிறது.
ஆகவே நாம் ஒரு முடிவுக்கு உடனடியாக வந்து விடுகிறோம். ‘இந்த பூமி அழிவதற்கு காரணம் மனிதன்தான். மனிதனே பூமியை அழிக்கிறான். ஆகவே அவன் deserved to go extinct!’
நாம் சற்று யோசித்தாலும் ஒரேயடியாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். இல்லையெனில் உணர்வேயின்றி மரத்து கிடக்கிறோம். இருவேறு தீவிர நிலைகளுக்கு நடுவே நின்று தர்க்கப்பூர்வமாக யோசித்து எல்லாவற்றுக்கு சரியானதை அலசி தேர்ந்தெடுத்து, அதை தடுப்பது என்னவென்பதை அனைவருக்கும் சொல்லி தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும். நாம் செய்வதில்லை.
மனிதனே இயற்கை அழிவுக்கு காரணமாக இருக்கிறானெனில் எந்த மனிதன்?
நந்தா தேவி பனிப்பறை உடைந்து பேரழிவை உருவாக்கியதற்கு எந்த மனிதன் காரணம்? நீங்களும் நானுமா?
2019ம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சமோலி கிராமத்தின் ரேனி என்கிற மனிதன் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த மனிதனின் பெயர் குந்தன் சிங். அவர் வாழும் கிராமமான சமோலிதான் தற்போதைய வெள்ளத்தில் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டில் அவர் தொடுத்த வழக்கின் சாரம் என்ன தெரியுமா?
அவரின் கிராமத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் ரிஷி கங்கா மின் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும் ஆற்றையும் வனஉயிர்களையும் பாதிக்கும் வகையிலும் இருப்பதாக வழக்கு தொடுத்தார். முக்கியமாக அவரின் கிராமத்தில் இருக்கும் மக்களின் வாழ்வுரிமையையும் கலாசாரத்தையும் அழிக்கும் விதத்தில் திட்டம் இருப்பதாக வழக்கில் சொல்லியிருந்தார். ரிஷி கங்கா மின் திட்டம்தான் இப்போது நேர்ந்திருக்கும் வெள்ளத்தில் முதலில் பாதிப்புக்குள்ளான கட்டட அமைப்பு.
ரிஷி கங்கா திட்டம் என்பது நீரிலிருந்து மின்சாரத்தை எடுக்கும் திட்டம் ஆகும். Hydro Electric Project! இதை போல் நந்தா தேவி பனிப்பாறை வெள்ளம் ஓடிய வழியில் நான்கு திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு தனியாரின் திட்டங்கள். நான்கு திட்டங்களுமே அப்பகுதி கிராம மக்களின் வாழ்வுக்கும் சூழலியல் ஓர்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன.
உயரத்திலிருந்து பெரும் வேகத்தில் வீழும் நீர் இன்னொரு ஆற்றுடன் சேர்ந்து வருகையில் ஒரு கட்டுமானம் எதிர்ப்பட்டால் அது நொறுக்கப்படும். நொறுங்கினால் கூட பிரச்சினை இல்லை. அதன் கட்டுமான அழிவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இன்னும் வேகமடையும். இந்த வேகத்தில் கட்டுமான அழிவுகள் கிராமத்தையும் சுற்றுச்சூழலையும் என்ன செய்திருக்கும் என சற்று யோசித்துப் பாருங்கள். ரிஷி கங்கா திட்டம் மட்டுமின்றி அடுத்தடுத்த மின் திட்ட கட்டுமானங்களையும் வெள்ளம் சேதப்படுத்தியிருக்கிறது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் கதியை சொல்லவே வேண்டாம்!
கடந்த 25 வருடங்களாகவே இமயமலையில் அதீத மழையும் வழக்கத்தை மீறிய வெப்பமும் நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றுக்கு நடுவேதான் நம் அரசுகள் அந்த இடங்களை மொட்டையாக சுரண்ட தனியாருக்கு தாரை வார்த்தன. வளர்ச்சி என்ற பெயரில் சூழலின் ஓர்மையை அழித்தன.
பனிப்பாறைகள் மிகவும் இலகுவானவை. சிறிய சரிவும் கூட திரண்டு avalanche எனப்படும் பேரழிவை உருவாக்க முடியும். பனிப்பாறைகள் அதிகரித்தால், அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்து நகரும். லேசான ஆட்டம் கூட பனிப்பாறையை அசைத்து ஏரியை உடைத்துவிடக் கூடும். இத்தகைய இலகுத்தன்மை கொண்ட பனியை ஏற்கனவே காலநிலை மாற்றம் கரைத்து ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு சென்று கட்டுமானங்களை கட்டுவதற்கு ஒருவனுக்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? எத்தனை அகங்காரம் இருக்க வேண்டும்? எத்தனை முட்டாளாக இருக்க வேண்டும்? எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்?
அந்த மனிதன்தான் பிரச்சினை. அந்த மனிதன் வேறு யாருமல்ல, அரச மனிதன்!
அதிகாரம் நிறைந்த அரசின் பிரதிநிதியாக இருந்துகொண்டு லாபவெறி கொண்ட மனிதர்களுக்காக மொத்தத்தையும் அழித்து கையில் கொடுக்க தயாராக இருக்கிறான் பாருங்கள், அந்த அதிகாரம் நிறைந்த அரசியல் மனிதன்தான் நமக்கு பிரச்சினை. அவனுடைய அரசியல் மனிதகுல வளர்ச்சிக்கு என இல்லாமல், வளர்ச்சி என்கிற பெயரில் அழிவை ஊட்டுவதாக இருந்தால் அவன் நமக்கு ஆபத்தாகிறான். அவன் சொல்லும் அரசியலிலும் வளர்ச்சியிலும் நீங்களும் நானும் குந்தன் சிங்கும் கிடையாது.
உத்தரகாண்ட் சம்பவத்தில் இன்னொரு நுணுக்கமான விஷயம் மறைந்திருக்கிறது. புதைபடிம எரிபொருள்தான் பிரச்சினை என சொல்லி நாம் கட்டும் மாற்று ஆற்றல் திட்டங்களும் பிரச்சினையாகி இருப்பதை இதில் காண முடியும். உடனே நாம் மீண்டும் மறுதீவிரத்துக்கு சென்று ‘எல்லாவற்றுக்கும் குறை சொன்னால், எப்படிதான் வாழ்வது’ எனக் கேட்டு ‘இதெல்லாம் சரிதான்’ என முடிவெடுப்பதற்கு முன் சற்று நிதானத்துடன் யோசித்து பாருங்கள்.
பிரச்சினையாக இருப்பது இயற்கை ஆற்றல் அல்ல. அவற்றை வணிகமாக்கி, பெருவிகித உற்பத்தி கொண்டு பெருநாசம் செய்து பெருலாபம் எடுக்க விரும்பும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.
இனியும் பேரிடர்கள் வரத்தான் போகின்றன. மனித இனம் அழிந்து போகக் கூடச் செய்யலாம். ஆனால் அழிவுக்கு காரணமாக இருப்பது என்ன என்கிற உண்மையை அழியும்போதேனும் தெரிந்திருப்போமா என்பதே கேள்வி.


செவ்வாய் 09 2021

பாம்பின் கால் பாம்பு அறியும்........

 சினிமா பட பாணியில்

பெங்களூரிலிருந்து

சென்னை வரும்வரை

தண்டனை பெற்ற

A2 குற்றவாளி

அடுத்தடுத்து பல

கார்களை மாற்றின்னார்

துரோகிகளை விட எதிரிகளை

எளிதில் ஜெயித்திடலாம்

என்ற கணக்கில்.......







திங்கள் 08 2021

தமிழக தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூக காட்சிகள்

 









நடக்கும் சம்பவங்களும் கிடைக்கும் தகவல்களும் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது.


பாஜக திட்டத்தின்படி...


காட்சி-1

சொத்துகள் முடக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்ட சூழலிலும், தினகரனோடு டெல்லியில் பாஜக தலைவர்கள் பேசிய பின்னணியில் பிப்-7 சென்னை வருகிறார் சசிகலா.


காட்சி-2

அதிமுக கட்சி சார்ந்த நீதிமன்ற வழக்கு விரைவு படுத்தப்படும்.


காட்சி-3

எழுதிக் கொடுக்கப்பட்ட அடிப்படையில் காட்சிகளை நகர்த்துவதற்கும், ஒழுங்கா எங்க சொல்படித்தான் நடக்கணும் என்று ஸ்கிரிப்ட்டை இறுதிப்படுத்துகிறார் பிப்-14 சென்னை வரும் மோடி.


காட்சி-4

சசிகலாவை ஏற்க முடியாது என, திட்டத்தின்படி சொல்லிக் கொண்டே இருப்பார் பழனிசாமி.அவரோடு ஊழல் பெருவெளிச்சத்தில் இருக்கும் மந்திரிகள் உடன் இருப்பார்கள். இது ஏனெனில் ஆட்சிக்கு எதிராக கோப மனநிலையில் உள்ள மக்களுக்கு, இவர்கள் வெளியேற்றப்பட்டு காட்டப்பட வேண்டும் என்பது திட்டம்.


காட்சி-5

அண்ணன்-தம்பிகளுக்குள் சண்டை இருக்கும், மீண்டும் இணைவோம் என்ற ஓபிஎஸ்க்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசனத்தின் படி, ஓபிஎஸ் சார்ந்தோர்  சசிகலாவுடன் இணைவார்கள். இதற்கு முக்கிய காரணம் தேவர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு மட்டுமே.


காட்சி-6

இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மூலம் தான் இரட்டை இலை கிடைத்தது. மீண்டும் இருவரும் பிரிகிற சூழல் உருவாகுவதால், இரட்டை இலை முடக்கப்படலாம். இல்லையேல் சசிகலாவுக்கு இரட்டை இலை வழங்கப்படலாம். அதிமுகவை பாஜக விழுங்குவது தான் திட்டத்தின் அடிப்படையாக இருப்பதால் இரட்டை இலையை முடக்கவே முனைவார்கள். ஏற்கனவே குக்கர் பொதுச்சின்னமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.


காட்சி-7

காட்சி அமைப்பின்படி கோபப்படுத்தப்பட்ட இபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புண்டு. அதற்கு எம்.ஜி.ஆர்.அதிமுக எனப் பெயர் வைக்கப்படலாம்.


காட்சி-8

சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாலும், தினகரனோ அல்லது ஓபிஎஸ்ஸோ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இதுவரை செய்யப்பட்ட பின்னணி ஏற்பாடுகளை பார்த்தால் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம்.


காட்சி-9

கவுண்டர் சார்ந்தவர்களில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா-ஓபிஎஸ் சார்ந்த அதிமுகவில் இணைக்கப்பட்டு சமன் செய்யப்படுவார்கள். முதல்வர் ஓபிஎஸ்- துணை முதல்வர் செங்கோட்டையன் என்ற திட்டமும் உண்டு. 


காட்சி-10

இந்தக் காட்சிகளில் மந்திரிகளுக்கும் வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 8 பேர்  இபிஎஸ் பக்கம் நிற்பார்கள். 15 க்கும் மேற்பட்டோர் சசிகலா-ஓபிஎஸ் பக்கம் நிற்பார்கள். ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட இருவர் நேரடியாகப் பிஜேபிக்கு செல்ல வாய்ப்புண்டு.


காட்சி-11

இந்த சண்டைக்காட்சிகளை மக்கள் பார்த்து ரசிப்பதற்காகவும், தயாரிப்புகள் செய்து கொள்ளவும் தான், பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரம் அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும். 


காட்சி-12

திமுகவை வீழ்த்த சசிகலா என்ற சாக்கடையையும் பயன்படுத்த வேண்டும் என்ற முன்னறிவிப்பின் படி, சசிகலா-ஓபிஎஸ் அதிமுகவுடன், பாஜக, அன்புமணி வழக்கால் மிரட்டப்பட்ட பாமக, பணம் கொடுத்தால் போதும் தேமுதிக, பாஜகவின் கொள்கைகளை ஏற்கனவே பரப்பிக் கொண்டிருக்கும் புதிய தமிழகம், 60 இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தின் படி அறிவுசார் அர்ஜூனமூர்த்தி கட்சி, இன்னும் சில உதிரிகளோடு கூட்டணி ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்தக் கூட்டணி "வழக்கு மிரட்டல் கூட்டணி" என்று  மக்களால் அன்போடு அழைக்கப்படும்.


காட்சி-14

கூட்டணி என்று பெயர் இருந்தாலும் பெரும்பாலான எல்லாக் கட்சி வேட்பாளர்களும், பாஜக சித்தாந்த ஆதரவு மனநிலை கொண்டவர்களே நிறுத்தப்படுவார்கள். ஏன்னா பாஜக உருட்டு அப்புடி.


காட்சி-15

வழக்கு மிரட்டல் கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடையும். ஆனால் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பாஜக வலைக்குள் வந்து சேரும். இதுவே அவர்கள் திட்டம்.


மொத்தத்தில் 2021 தமிழக தேர்தலானது,

வழக்கு மிரட்டல் கூட்டணிக்கும்,

தமிழகம் மீட்போம் கூட்டணிக்கும் இடையே நடக்கும் போராட்டம்.


பாஜகவின் அரசியலை புரிந்து கொண்டால், நடக்கப்போவதை எளிதில் புரியலாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம்..


இறுதியாக,

ஆட்சியை திமுக பிடிக்கிறது.

அதிமுகவை பாஜக பிடிக்கிறது 



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...