பக்கங்கள்

சனி 15 2016

வைத்தியர் சொன்ன பிரம்ம ரகசியம்.

................................

................................


 பிரபலமான வைத்தியசாலையில்
பிரபலமானவர்க்கு வைத்தியம்
செய்த வைத்தியர்
ஒருவர்  தன்
சக வைத்தியரிடம்
ரகசியமாய் சொன்னார்

நானும் ஒருநாள்
பிரபலமானவர்க்கு வைத்தியம்
செய்த உண்மைகள்
என்ற ஒரு
வரலாற்று  புத்தகம்
எழுதுவேன் என்று...

வெள்ளி 14 2016

யார்..அங்கே...அங்கே...என்ன........

தட் ....தட்..தட்...
யார்.... அங்கே..
அங்கே என்ன
கூட்டம்...ம்ம்

மாட்சிமை தாங்கிய
மன்னர்க்கு வணக்கம்
அந்த கூட்டம்
மழை கால
கூட்டத் தொடருக்காக
கூடிய கூட்டம்
மன்னர் பிரானே..

முன்பு ஒரு
சமயம் கூடினார்களே..
அது என்ன......

அது வெயில்
கால அதாவது
கோடை கால
கூட்டத் தொடர்
மன்னர் பிரானே....

அப்படி கூடி
என்ன செய்வார்கள்.

மன்னர் பிரானே
அதை என்
வாயால் சொல்லக்
கூடாது இருந்தாலும்
தங்கள் உத்தரவுக்கு
கீழ் படிந்து
சொல்கிறேன்  அவர்கள்
ஜல்லி அடிக்க
கூடுகிறார்கள். மன்னா


புதன் 12 2016

உனக்கும் ஒருநாள்....

 நண்பா..  கவலை
கொள்ளாதே கேள்

மாலையே விழாத
உன் கழுத்துக்கும்
ஒரு நாள்
மாலை விழும்
கவலையை விடு..


என்ன பார்க்கிறாய்
எப்படி உன்
கழுத்தில் மாலை
விழும் என்றா

நீ... இறந்து
சவமாய் கிடக்கும்
போது உன்
கழுத்தில் மாலை
விழும்  நண்பா.....

செவ்வாய் 11 2016

நானும்தான் வேண்டுகிறேன்..........




நண்பா... கேள்...
நானும்தான் வேண்டுகிறேன்
நான் சாகும்போது
நோய் நொடியில்லமல்
 சாக வேண்டுமென்று...

ஒருவர் பிழைக்க பலர்
வேண்டும்போது கண்
திறக்கும் கடவுள் நான்
ஒருவன் வேண்டுவதை
 நிறைவேற்ற மாட்டாரா...
என்ன...?

திங்கள் 10 2016

அண்ணே..... நீங்களா....ண்ணே...

அண்ணே.... அண்ணே.....என்னண்ணே....பேசமாட்டுறீங்க......

நா..... எப்பப்பா...பேச மாட்டுறேன்னு சொன்னேன்....செல்போன்ல வேறு ஒருத்தருகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்பவே..... பொறு பொறுன்னு கை சாடை காட்டினேன் நீங்க....தாப்பு கவனிக்க மாட்டுறீங்க........

ஹா.....ஹா.....ஹா.........

என்ன..‘ஹா....ஹா..... கூப்பிட்ட விவரத்த சொல்லுங்கப்பா.....

அது வேற ஒன்னுமில்லண்ணே...... எல்லோரும் ஆயுத பூஜை கொண்டாடிகிட்டு இருக்காங்க....... நீங்க கொண்டாடலயா..ண்ணே...... ன்னு கேட்கத்தாண்ணே  கூப்பிட்டேன்ணே....

ஏண்டா...டேய்.......ஆஸ்பத்திரியில.. அம்மா. கெடக்குது... அது செத்துச்சா...பொழச்சுச்சா  இல்ல .உயிரோடு இருக்கா இல்லயா, அட என்னதான் ஆச்சுன்னு ஒரு எழவும்   தெரியல..... இதுல.. ஆயுத பூஜை கொண்டாடலயா.... சுன்டலு, பொரி கடலையும்  குடுக்கலியான்னு கேள்வியா கேட்குறீங்க.....நீங்க எல்லாம் என்ன ஜென்மம்டா.....இந்தத் தெருவுல எத்தன ஒர்க் ஷாப்பு இருக்கு எவனாச்சும் ரேடியா போட்டு  உங்க காதையேல்லாம் கதற விட்டு இருக்கானுங்களடா.....நிலமகேத்து கேளுங்கடா.......


அண்ணே..... நீங்களா....ண்ணே..... பேசுறிங்க......எனக்கு புல்லரிக்குதுண்ணே...

என்னது புல்லரிக்குதா..... போடா...போயி... அம்மா கடையில ஒரு புல்லு வாங்கி அடி..எல்லாம் சரியா   போயிடும்.....

போங்கண்ணே   சும்மா...... இங்கே சுண்டலுக்கும் பொரிக்கும்மே வழியக் காணோம்   இதுல  அம்மா கடையில புல் அடிக்கச் சொல்லிட்டாரு போங்கண்ணே........


ஞாயிறு 09 2016

பாவி, அவன் காந்தி மன்றத் தலைவனாம்....

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்,


அவன் வீட்டு
பண்ணை அடிமையாக
பணி ஆற்றிய
 என் தந்தையை
ஏமாற்றி என்
தந்தை பெயிரில்
உள்ள வீட்டு
வரியை அவன்
பெயரில் மாற்றி
விட்டு நான்
வசிக்கு வீட்டை
வாடகை கொடுக்க
வில்லை என்று
சொல்லி குடி
இருக்கும் வீட்டை
காலி பன்னச்
சொல்லி வக்கீல்
நோட்டீஸ விட்டான்

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்,

அரை குறை
விபரத்துடன் என்
தாயும் பதில்
நோட்டீஸ் விட்டார்

வழக்கு பத்து
வருடம் நடந்தது
இறுதியில் உரிமை
இயல் கோர்ட்டீல்
தீர்த்துக் கொள்ளச
சொல்லி பாவி
அவன் போட்ட
வழக்கு தள்ளுபடி
ஆக்கியது கோர்ட்டு

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்

மீண்டும்  அவன்
உரிமையில் கோர்ட்டில்
வழக்கு தொடுத்து
என்னையும் என்
தாயையும் கோர்ட்டுக்கு
இழுத்து அடித்தான்

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்

கோர்ட்டில கருப்பு
அங்கி அணிந்த
சாத்தான்களோ சமர்பித்த
ஆதாரங்களை வைத்து
தீர்ப்பு சொல்ல
வக்கற்று போயி
இருபது ஆண்டாக
வாய்தா போட்டே
வழக்கு தொடுத்தவன்
சாக  அவனுக்கு
வழக்கு நடத்துவனும்
சாக, வழக்கு
தொடுத்தவனின் மூத்த
மகனும் சாக
இடையில் வழக்கில்
சேர்ந்தவனும் சாக
கடைசியாக என்
தாயும்  போய்
சேர்ந்த பின்பும்
காந்தி படத்தை
மாட்டி வைத்து
இருக்கும் கோர்ட்டில்
21 ஆண்டாக
இன்னும் வாய்தா
போட்டுகிட்டு இருக்காங்கே...

பாவிகள் அவர்கள்
இன்னும் இந்த
நாட்டை காந்தி
தேசம் என்கிறாங்கே..




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...