பக்கங்கள்

சனி 30 2013

சாதி வெறிப்பிடித்த பெண்கள் !!!


ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த வீரர்கள் தனியார்மயம்.தாராளமயம்,உலகமயமங்களின் 
வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பற்பல வழிமுறைகளை 
கையாண்டு வருகிறார்கள்.

அவற்றில் ஒன்று தங்கள் சாதிப்பெண்களை ஆணாதிக்கத்தால் அடக்கி ஒடுக்குவதை மறைத்து தங்கள்  சாதிப்பெண்களுக்கு சாதிவெறியேற்றி பெருங்கூட்டமாக கூடச்செய்வதும் அவர்களை முன்னிலைப்படுத்தி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வதுமாக செயல்படுகிறார்கள்.

சாதி வெறியேற்றி கூட்டமாக திரட்டிய பெண்களை  கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள் பெண்களை கீழ்த்தரமாக திட்டி வசைபாடுவதற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் வாழும் தெருவுக்குள் வீட்டிற்க்குள் புகுந்து அடிப்பதற்கும் தாக்குவதற்கும் சேதங்களை உண்டாக்குவதற்கும்  புதுப்புது வழிமுறைகளை பயன்படுத்து கின்றனர்.

ஆதிக்க சாதிவெறிக்கூட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் ஆதிக்கச்சாதிப் பெண்களும்.சாதிவெறி ஆண்கள்  ஆணாதிக்கத்தால் தங்களை அடக்கி ஒடுக்கி வருவதை மறந்து சாதிவெறி தலைக்கேறி தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் களத்தில் குதித்து விடுகின்றனர்.

இப்படித்தான்,தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி நகரில் சங்கரலிங்கபுரத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சாதிவெறி குலதெய்வத்தின் சிலை உடைக்கப்பட்டது.

அதிகார வெறி கொண்ட போலீஸ் படையும், ஆதிக்க சாதிவெறிகொண்ட படையும் கைகோர்த்து குத்தாட்டம் போட்டது.

ஒரு வழியாக குத்தாட்டம் முடிந்து பிரச்சினை ஓய்ந்த இருந்த நேரத்தில் ஆதிக்க சாதிவெறிப்பிடித்த பெண்கள் கையில் கம்பு,செருப்பு,விளக்குமாறு சகிதமாக சென்று ஒடுக்கப்பட்ட சாதித் தெருவுக்குள் சென்று தாக்கத் தொடங்கினர். (பார்க்க..வினவு.- கோவில்பட்டி சிலை உடைப்பு.)

ஆணாதிக்கத்தால் செத்து மடியும் ஆதிக்கச்சாதி பெண்கள் படித்திருந்தாலும் படிக்காதிருந்தாலும் நிலவும் சமூக அமைப்பின் கொடுமையால், ஆதிக்கச் சாதிவெறிப்பிடித்த ஆண்களின் பகடைக்காய்களாக மாறி சாதிவெறிப்பிடித்த பெண்களாக வலம் வருகிறார்கள்.



வெள்ளி 29 2013

ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் ஆயுதம் ஏந்தாத சிப்பாய்!!!



1987ம் ஆண்டில் IPKFஎன்று அழைக்கப்பட்ட இந்திய இராணுவப் படையானது. இந்திய அமைதிப்படை என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு ஈழத்துக்கு சென்ற மறுநிமிடமே ஆக்கரமிப்பு மாறி களத்தில் இறங்கியது.

அப்போது இந்த ஆக்கிரமிப்பு படையில் ஆயுதம் ஏந்தாத சிப்பாயாக ஒருவர் மும்மரமாக பணிபுரிந்து வந்தார். அதோடு ஆக்கிரமிப்பு படைக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்து வந்தார்.

அவர் யாரென்றால், அவர்தான் இன்று ராஜபக்சேக்வுக்கு எதிரான தீர்மானம்,ஈழத்துக்காக போர்க்குரல் எழுப்புகின்ற வலது சொரிக் கட்சியில் இருக்கிற முன்னணித் தலைவர் தா பாண்டியன்.

இந்திய ஆக்கிரமிப்பு அமைதிப்படையை ஆதரித்து பிரச்சார பீரங்கியாய் இருந்தவர். ஈழப் பேராட்டத்தை எதிர்த்தவர். s

ம.க.இ.க.வின் “ ராஜபக்சேவை தண்டிப்பது எப்படிஎன்ற நூலிருந்து



வியாழன் 28 2013

ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்!!!


 
 கருணாநிதியின் திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிருந்து விரட்டப்பட்ட கோமாளி  முறையான கணக்கு காட்டாததால்  திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிறுந்து விலகி அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்தை தொடங்கியதாக கோமாளி கூறினார்.

ஆரம்பத்தில் அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகம் என்றுதான் கோமாளி தொடங்கினார். திருடர்களையும் திருட்டுப் பொருட்களையும் சட்டப்படி பாதுகாக்கும் நோக்கத்துடன்  அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்றக் காப்பகம்  என்று அறிவித்தார்.

செத்து சந்தனக் கட்டையில் வெந்து சாம்பலாகும் வரைக்கும் தொப்பியுடனே காட்சியளித்தார்.

அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திற்கு கொள்கை என்னவென்றால் அது அண்ணாயிசம். அண்ணாயிசம் என்றால்   கேப்பிடலிசம்,காந்தியிசம், கமயூனிசம் மாதரி  அண்ணாவுடன் ய்யிசம் சேர்த்தால் வருவது அண்ணாயிசம். திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “உடன் பிறப்புகளேமாதிரி அண்ணா திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “ரத்த்த்தின் ரத்தமேஎன  மயக்கும் வார்த்தைகள்

இது மாதிரி மயக்குவது அண்ணாயிசம். ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்தான் என்ன?

அது வேறு ஒன்றுமில்லை.
1.       சொத்தை பெருக்கிவதற்கு காப்பிடலிசம்.
2.       திருடிய சொத்தை சிறு பகுதியை சில்லரையாக சிலருக்கு தானம் செய்வது கம்யூனிசம்.
3.       அடக்கு முறைக்கு ஆதரவாகவும்,போராடும் மக்களுக்கு எதிராகவும் இருப்பது காந்தியிசம்- இந்த மூன்றும் சேர்ந்த்துதான் அண்ணாயிசம்.

இதுதான் வேஷம் கட்டிய கோமாளி ஏமாளிகளுக்கு சொன்ன அண்ணாயிசம்.


புதன் 27 2013

சாதி மறுப்பு திருமணத்தைப் பற்றி கேட்டது






சாதி மறுப்பு திருமணம் என்றால்

மேல்சாதி அல்லது( ஆறுஅடி,ஏழு அடியில)  உயர்ந்த சாதியில இருக்கிற ஆணோ,பெண்ணோ……..கீழ்  சாதிஎன்ற தாழ்ந்த சாதியில் பிறந்த ஆணையோ,பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதுதான் சாதி மறுப்பு திருமணமாகும். 

ஒரே சாதியில் உள்ள உறவினர்கள் அல்லாதவரையோ,மேல் சாதிக்காரர்கள் மேல் சாதியை சேர்ந்தவர்களையோ மணமுடிப்பது சாதி மறுப்பு திருமணமல்ல. 

ஒரே சாதியை சேர்ந்த,அல்லது  பல உயர்ந்த சாதியை  செர்ந்த பனக்காரர்கள் முடிக்கும் திருமணம் ஆடம்பர திருமணம் 
அல்லது பகுமான திருமணம். இதுக்கு உதாரணம் இருண்டகாலம் 
நடத்திய வளர்ப்பு மகன் திருமணமாகும்

ஒரே சாதியைச் சேர்ந்த ஏழையை அதே சாதியை சேர்ந்த வசதியானவர் திருமணம் முடிப்பது பொருள் இல்லா திருமணமாகும். 

அய்யர் இல்லாமல் சடங்கு சம்பிராதயம் மற்றும் தாலி கயறு இல்லாமல் திருமணம் முடிப்பது சீர்திருத்தக் திருமணமாகும்.

மனிதனுக்கும் கழுதைக்கும்,  கழுதைக்கும் ஆடுக்கும் நடத்தி வைக்கப்படும் திருமணம் ராமதாசு வகையாறாக்களான அனைத்து சமுதாய கூட்டம் கூறும் கலப்புத்திருமணமாகும்.




திங்கள் 25 2013

தியாக வேடமணிந்த துரோகத்தின் உண்மை முகம்!!!




 
1921,1930,1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளி காலங்களில் ஒத்துழையாமை இயக்கம்,சட்டமறுப்பு இயக்கம்,வெள்ளையனே வெளியேறு இயக்கம் என மூன்று இயக்கங்கள் காந்தியின் சத்தியாகிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன.

பேராட்டத்தின் வளர்ச்சிப்போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்கத் துவங்கினால்........அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால்...........

தியாக வேடமணிந்த காந்தி உடனே பேராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன் பிரிட்டீஷ் அரசு காந்தியை கைது செய்துவிடும்.

பிறகு “ செண்டிமென்டஅலை அடிக்கத் துவங்கிவிடும்., இறுதியில் இந்திய விடுதலையை மறந்து. கபட வேடதாரி காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகிவிடும்.

இப்படித்தான். ஒவ்வொரு  விடுதலை பேராட்டத்திலும் துரோகத்தின் உண்மை முகம் மறைக்கப்பட்டு தியாக வேடம் அணிவிக்கப்பட்டது.

நன்றி...புதிய கலாச்சாரம்  நவம்பர்2006.இதழ்


ஞாயிறு 24 2013

இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை.....



புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ அல்லது மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக,உறுதியான பேராட்டம்,துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.

முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்களை உதறித்தள்ளுங்கள். இப்போது செயல்பாட்டை துவங்குங்கள்.
எந்த துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்து விடக்கூடாது.எந்த துரோகமும் தோல்வியும் உங்களை மனம் தளரச் செய்யக் கூடாது. உங்கள்மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்றுவிடக்கூடாது.

தாய்நாட்டின் மீதான என் நேசம் மரணத்திற்குப் பிறகும் என் நினைவில் நிலைக்கட்டும். இறந்த என் உடலிரந்து வீசும் என் தாய்நாட்டின் நறுமனம் நாளைய இளைஞர்களுக்கு கிளர்ச்சியூட்டும்.

இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை. எங்கள் வாழ்நாளோடு மட்டும் முடியப்போவதுமில்லை என்றார் பகத்சிங்.

காலனியாதிக்கம் மடியவில்லை.
இன்று மறுகாலனியாதிக்கம்.
துப்பாக்கி கரங்களுக்கு எதிராக
வேல் கம்புகளையும்
தூக்கு மரத்திற்கு எதிராக
நெஞ்சுரத்தையும் செலுத்திய
அந்த வீரர்களுக்கு
நாம் என்ன காணிக்கையை
செலுத்தப்போகிறோம்.
மறுகாலனியாதிக்கத்தை
எதிர்த்து போராடுவதைத் தவிர....

 நன்றி.....ம.க.இ.க

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...