பக்கங்கள்

வெள்ளி 04 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -89.....

 



















இன்றைய கொள்ளையர்களின் இந்தீயா


ஒரு கிராமத்தில் குடி  தண்ணீருக்காக  ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிராம அதிகாரியும்  செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.

மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.

ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராம மக்கள் கோரிக்கையான கிணறு ஞாபகம் வந்தது.

உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு  இரண்டு லட்சம் ரூபாய் செலவு ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து. அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.

கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.

முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டினார்.

அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.

ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாச்சாரம் என்னவாயிற்று?

 பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார்.

அதற்கு புதியவர் சொன்னார்.

அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.

முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல், எப்படி சார் என்றார் ? 

அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து.

அதை மூடுவதற்கு 3 லட்சம் செலவு என்று சொல்லி, நான் 3 லட்சம் எடுத்தேன் என்றார். 

இது தான்  இன்றைய இந்தீய  நாட்டின் அரசியல் நிலை.

 யாராவது  வருவார்களா?நல்லது செய்ய மாட்டார்களா  ?என்று மக்கள்  ஏங்கி நிற்க இந்தீய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சி கொண்டு இருக்கிறார்கள்..

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -88.....

 



Part 1.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மோசடி என்ன என்று கேட்டால், அது 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பார்கள். ஆனால் அது ஊழல் இல்லை என்று நீதிமன்றமே கூறினாலும் ஏற்கமாட்டார்கள். "ஒரு பொய்யை திரும்ப திரும்ப  சொன்னால் அதை உண்மை என்று மக்கள் நம்புவார்கள்" என்ற கோட்பாட்டை ஹிட்லரின் ஆலோசகரான கோயபல்ஸ் நிருபித்து காட்டினார். அவரை விட மிக தீவிரமாக அந்த கோட்பாட்டை பயன்படுத்தி கொள்பவர் இந்திய பாசிச கட்சியின் தலைவர் அமித்ஷா. 


November 8, 2016. Demonetization அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் இந்தியாவிலே அதிகபட்சமான பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்குள் ரூ. 745.59 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அந்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக புதிய நோட்டுகள் பெற்ற வங்கி இதுதான். இது நடந்த போது ஏழை மக்கள் எல்லோரும் பணத்தை மாற்ற அல்லாடி கொண்டிருந்த காலம்.


விஷயம் என்னவென்றால், இந்த அகமதாபாத் வங்கியின் அப்போதைய இயக்குனர் அமித்ஷா தான். Demonetization நடந்த பிறகு அமித்ஷா வின் சொத்து மதிப்பு திடீரென்று 81% உயர்ந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம். 

ஜன்டாவிற்கு மாயாஜாலம் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். 


Demonetization போது குஜராத் மாநில கூட்டுறவு வங்கி வங்கியே 1.1 கோடி தான் பெற்றது. ஆனால் அமித்ஷா வின் அகமதாபாத் மாவட்ட வங்கி 700 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. அதும் ஐந்து நாட்களில்.. 


பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் தான் அதிக அளவு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அதாவது மற்ற மாநிலங்களை விட 64% அதிகம். ஏனென்றால் தேசிய வங்கிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கும். கூட்டுறவு வங்கிகளை பெரும்பாலும் பாஜக தலைவர்கள் தான் நிர்வகித்தனர். அங்கு பணபரிமாற்றம் சுலபமாக நடந்தது. 


உண்மையில் இந்த நாட்டில் நடத்த மிக பெரிய மோசடி என்பது 2கி ஊழல் இல்லை, அது Demonetization தான். அதன்மூலம் தாங்கள் ஊழல் செய்த 'கறுப்புப் பணத்தை' 'வெள்ளை' ஆக மாற்றியது தான் பாஜக வின் திறமை. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று சொன்னார்கள் அல்லவா..அதற்கு அர்த்தம் புரிகிறதா.


இப்படி சட்ட நுணுக்கம் தெரிந்து, சாதகமான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கி, நூதனமாக மோசடி செய்வதால் தான் மோடி அரசின் ஊழல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஆதாரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உயிர் பிழைப்பதில்லை. 


2016 ல் Demonetization நடந்தது.

2017 முதல் உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார கட்சியாக பாஜக மாறியது.

மற்ற தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தை விட 66% அதிகம் பாஜக வின் வருமானம்.

எல்லோரும் அருண் ஜெட்லீ யையும், மோடியை யும் திட்டி தீர்த்து கொண்டிருக்கும் போது,

திரைமறைவில் இருந்து கொண்டு மிக பெரிய மோசடிகளை செய்தார் அமித். 


வரும்....





புதன் 02 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -87.....






 சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?

 சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்..மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,  சென்னை - சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக  அறிவித்துள்ளார்..

இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலையானது

 கார்ப்பரேட் நிறுவனமான# ஜிண்டாலுக்காக.. ( Jindal steel)

ஆம்,  ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது. அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.🥱

இரண்டாவது  திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன்மலையில்

இருந்து  இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ,சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.

அது தான் இந்த சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை.இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும். நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது.இதற்கு  தமிழக அரசும் உடந்தை. தயவு செய்து  தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்த கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள், எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.தொடர்ந்து வரும் ஆபத்துகள்? தப்புமா தமிழகம்! உயிர்வாழ எங்கே செல்வார்கள் தமிழர்கள்? சேலத்தில் ஏன் விமான நிலையம் இப்போது தொடங்கப்பட்டது. இவையனைத்தும் இந்த பதிவில்...

மூனு மாதத்திற்கு ஒரு செயற்கை கோள் யாருக்காக இஸ்ரோ அனுப்புகிறது?

மிகச்சரியான இடத்தில் எப்படி மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பிளாட்டினம் திட்டங்கள் தொடங்கபடுகிறது.இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் அதிக அளவு பிளாட்டினம் நமது நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கோவை, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்கள் தான் அடுத்த இலக்கு. குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியில் 27 சதுர கிலோமீட்டர் அளவிலும் மேட்டுப்பாளையத்தில் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ளதாக...இந்திய புவியியல் ஆய்வுத்துறை இஸ்ரோவின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தமிழக கனிம வளத்துறையுடன் (TAMIN) இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

மிகக்குறைவாக 30 மீட்டர் ஆழத்திலேயே தாதுக்கள் அதிக அளவாக கிடைத்த நிலையில், 500 மீட்டர் ஆழத்தில் அதிக அளவிலான பிளாட்டினத்தாதுக்கள்கிடைப்பது உறுதி என நம்புகிறார்கள்.இதில் சத்தம்பூண்டியில் கிடைக்கபெற்ற

பிளாட்டினத்தாதுக்கள் 2500 முதல் 2700 மில்லியன் ஆண்டுகள் பழமையானமதிப்புமிக்கதாகும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ள பகுதிகளில் கூடிய விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.கொங்கு மண்டலமும் கொலையாக போகிறது தற்காத்து தப்பி பிழைத்திடு எம் தமிழினமே!

காசுக்கு ஓட்டு போட்டு அழிந்து போகாதே!

கடலுக்குள் போகக்கூடாதென்று! என்று கச்சதீவை விற்றுவிட்டார்கள் .காட்டுக்குள் போகக்கூடாதென்று நீயூட்ரினோக்கு விற்று விட்டார்கள்,காவேரிகரைக்கு போகக்கூடாது என்று மணலை  விற்றுவிட்டாரகள்.

விவசாயம் செய்யக்கூடாது என்று ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டார்கள்

மருத்துவம் படிக்கவேண்டமென்று வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டார்கள்.

TNPSC எழுதக்கூடாதென்று  தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டார்கள்.


நெல்லைக்கு போகாதே என்று ரஷ்ய அனுஉலைக்கு விற்றுவிட்டார்கள்.

தூத்துக்குடிக்கு வராதே என்று ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டார்கள்,

.இராம்நாடு போகாதே என்று அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டார்கள்,

தஞ்சாவூர்க்கு போகாதே  என்று மீத்தேனுக்கு விற்றுவிட்டார்கள்.

நாகை வராதே என்று  பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டார்கள்,

மலையேற வராதேன்று க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டார்கள்

வெள்ளயங்கிரி உனக்கில்லை என்று  ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டார்கள்,

சதுரகிரி மலை    விற்க விலை பேசிக் கொண்டுயிருக்கிறார்கள்,..

எந்த கருமத்தையும் கண்டுக்காமல்  உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...

 உன் வாக்கை விலைகொடுத்து வாங்கியதை  அவர்கள் லாபத்திற்கு விற்றுவிட்டார்கள்...


திங்கள் 30 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -86.....


 சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலையும் போது - தவசி.

சினிமா வாய்ப்பு கிடைத்து புகழ் பெற்றபோது- தவசி தேவர்

மருத்துவமனைக்கு கட்ட பணம் இல்லாமல் உதவி கேட்டபோது- தவசி

மரணம் அடைந்த பின்- தவசி தேவர்

இவ்வளவுதான் சாதி..

கஷ்டப்படும்போது  சரியான நேரத்தில் ஓடி வந்துருவாங்கே.......!!!

சாதி சங்கங்கள் உங்களுக்கு என்ன செய்யும்?
தவசி எனும் துணை நடிகர் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார். சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்கிறார்.
அவரை உரிமை கொண்டாடும் சாதி சங்கங்கள் எதுவும் அவருக்கு உதவ முற்படவில்லை. குறைந்தபட்சம் உதவி செய்யும்படி கேட்டதாகக்கூட தெரியவில்லை. ஆனால் அவர் செத்ததும் ஜாதியை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் மேற்படிப்பு படிக்க இயலாமல் உதவி கேட்கும் செய்திகள் வருகின்றன. எந்த சாதி சங்கமும் உதவுவதாகவோ அல்லது உதவி கேட்டு பேசியதாகவோ நினைவில்லை.
திருமணம் ஆகாத ஏராளமான இளையோர் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எல்லாம் இவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி காதல் திருமணம் செய்துகொண்டால் அவன் குடும்பத்தை குற்ற உணர்வில் சாக வைக்க மட்டுமே இவர்கள் வருவார்கள். அதிலும் பணக்காரனுக்கு விலக்கு உண்டு.
உங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் எந்த பயிற்சியையும் அவர்கள் தந்ததில்லை. ஆனால் ரவுடிகளை உருவாக்கி சப்ளை செய்யாத சாதி சங்கங்களே கிடையாது.
இவர்களை ஆதரிப்பது மட்டுமல்ல, சகித்துக்கொள்வதே அசிங்கமான செயல் ....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...