பக்கங்கள்

சனி 13 2017

நிணைவில் நின்ற நிணைவுகள்....

என் தமக்கையின் மகள்வழி பேத்தி என்னிடம் கேட்டார் தாத்தா   மதர்டே வருகிறது. அதை முன்னிட்டு என் அம்மாவுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்றார்

நான் என்ன செய்ய வேண்டும்..என்று கேட்டபோது, என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்தார் பிறகு நான் சொன்னேன். சினிமாவில் தொலைக்காட்சியில் வருவது மாதிரி பரிசு பொருள்கள் எதுவும் கொடுக்க வேண்டாம் அதனால் எந்த பயனுமில்லை  அதெல்லாம் காசு உள்ளவர்கள் செய்யும் வெட்டி பந்தா... அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக இருந்தால்
உன் அன்னை சொல்லும் வேலைகளை மனம் கோணாமல் எரிந்து விழாமல் உனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் என் அன்னையிடம்  எப்படி நடந்து கொண்டேனோ அதுபோல் நடந்து கொண்டாலே போதும்.

எனக்கு எதிரியாக இருந்த என்தாய்- தந்தைவழி உறவுக்காரர்களின் பேச்சைக் கேட்டு உன் தந்தை உன் தாய்க்கு கொடுத்தசித்தர வதைகளாலும் உன் தாயின் எதிர்த்து நின்று பட பட வென்று பேசும்  குணத்தாலும் நீ  பிறந்த ஒரு வருடத்தில் உன் தந்தையிடமிருந்து உன் தாய் பிரிந்துவிட்டபோதிலும் உன் தாய் என் தாயைப்போல் தந்தையின் ஸ்தானத்திலும் என்னை வளர்த்து ஆளாக்கியது போல் உன் தாயும் உன்னை வளர்த்து  பத்தாவது படிக்கும் வரை வளர்த்துவிட்டார்..அதனை நன்றிக் கடனாக நிணைக்காமல் பெற்றக் கடனாக நிணைத்து உன் தாயை திட்டாதே உன் தாய் உனக்கு பிடிக்காத வேலையைச் செய்தாலும் கோபப்படாதே....பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்ட நேரத்தில்தலை சீவி சடை போட்டுக் கொள்வதில்  நீயும் உன் தாயும் சத்தமிட்டுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்.  விடுமுறை நாட்களில் உன் தலையை சீவி சிக்கெடுத்து பேன் பார்க்கும் நேரங்களில் உன் தாயுடன் முரண்பட்டு மருமகளும் பேத்தியாளு்ம் வாய்ச் சண்டை போட்டுக் கொள்வதை தீர்க்க திண்டாடும் நிலையை எனக்கு ஏற்ப்படுத்தாதே ...

உன்னைப் போல்தான் நானும் சிறு வயதில் என் தாய்அதாவது உன் பாட்டி என் தலையில் பேன் பார்த்து, சீப்பால் இழுத்துவிடுவதற்கு பல முறை முயன்று தோற்று போய் இருப்பார். அவர் இறப்பதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் தனது தள்ளாத வயதிலும் என் தலையில் பேன் பார்த்து சீப்பால் பேன் இழுத்த போது அவர் மடியிலே தூங்கி விட்டதை பார்த்திருப்பாயே....    

தலையில் பேன் பார்க்கும்போது  அக்கு பஞ்சர் மாதிரி ஒரு சுகம் கிடைக்கிறது என்பது எனக்கு பின் நாட்களில்தான்  தெரிந்து...என் தாய் என்னை விட்டு போன பிறகு என் தலையில் பேன் பார்த்து மஜாஜ் செய்துவிட என்தாய் இல்லை. என் தாயின் அன்பு கட்டளையில்தானே நான் உன்தாயையும் உன் சித்தி மற்றும் உன் மாமன்மார்களை பெற்றெடுக்காத பிள்ளைகளாக வளர்த்து வருகிறேன்..உன்னையும் பேத்தியாக வளர்த்து  வருகிறேன். என்னைப்போல் இருக்க முடியாவிட்டாலும் உன்னிடம் உள்ள சிறு சிறு குறைகளை களைந்து தாய் அன்பை மதிக்கத் தெரிந்த பெண்ணாக,  இந்த அன்னையர் தினத்தில் மாறிக் கொள்.. 


உனக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய உன் தாய் இருக்கிறார்..அந்தத் தாய் அன்பை ஊதாசினப்படுத்தாதே தெரியாமல் கோபத்தில் உன் அன்னை பேசிவிட்டாலும் அதனை மனதில் வைத்துக் கொள்ளாதே ,. இந்த அன்னையர் தினத்திலிருந்தாவது அன்னையை திட்டுவது,எதிர்த்து பேசுவது.. உன் மாமன்கள் உன் அன்னையையோ உன்னையையோ திட்டும்போது.. மாமன்களை திட்டாமல் சண்டை போடாமல் சமதானமாக பேசக் கற்றுக் கொள்,....இதுவே அன்னையர்தினத்தில் என் அன்னையை பற்றி என் நிணைவில் இருந்த சில துளிகள்தான் இவை..

நான் பேசி முடித்துவிட்டு பேத்தியின் பதிலை கேட்பதற்கு முன்“ என் அம்மா கூப்பிடுது தாத்தா என்றபடி எழுந்து ஓடிவிட்டார்”..... நான் பேசியது எனது பேத்திக்கு அறுவையாக இருந்திருக்கும் போல  நான் படுக்கும் வரை என் பக்கம் வரவே இல்லை...


  

வெள்ளி 12 2017

த்தூ..என்ன ஜென்மமோ.......


அம்மணமாக வந்தால்தான்
நீட் தேர்வு எழுத
அனுமதிப்போம்ன்னு சொன்னாலும்
அதுக்கும் அம்மணமாக
போய் தேர்வு
எழுத போவார்கள்
இந்த மானங்கெட்ட
ஜென்மங்கள்.. கேட்டால்
டாக்டராகி மக்களுக்கு
சேவை செய்வதற்கக்காக
எந்த இழிவையும்
ஏற்ப்பேன்னு சொல்லுவார்கள்

த்தூ என்ன ஜென்மமோ..

முறத்தால் புலியை
விரட்டிய வம்ச
பரம்பரையில் இருந்து
வந்ததாக பெருமை
வேறு .....த்தூ
மானங்கெட்ட ஜென்மங்கள்

வியாழன் 11 2017

யார்....சார்... அந்த...அவர்...????

சார்..... லந்துக்கு
கேட்கிறேன்னு தப்பா
நிணைக்காதீங்க சார்

யார் சார்
அந்த அவர்

மலையிருந்து புறப்பட்டார்
மதுரைக்கு வந்தடைந்தார்
வைகையில் இறங்கினார்
மக்களுக்கு காட்சியளித்தார்
எழுந்து அருளினார்

பத்திரிக்கைகளும் செய்தி
ஊடகங்களும் ரெம்ப
பீத்திகிட்டு எழுதுக

யார் ....சார்
அந்த  அவர்

எந்த நாட்டு
மன்னர் சார்
அவரிடம் நீட்
தேர்வு என்ற
பெயரில் பெண்களை
மானபங்க படுத்தியதாக
புகார் செய்தால்
வில்லாதி வில்லன்கள்
மீது நடவடிக்கை
எடுப்பாரா சார்

யார் சார்
அந்த அவர்

புதன் 10 2017

கூடா நட்பு அல்ல...அது...

அந்தச் செய்தியைப்  படித்தவர்களில் பாதிப்பேருக்கு காரை ஏற்றிக் கொன்றவன் மேல் கோபம் வரவில்லை. செத்தவளின் மேல்தான் கோபம் வந்தது. அதுவும் அது நியாயமாக இல்லை. வேறு கோணத்தில்இருந்து 
பேசினார்கள்.

அட. ஆசிரியையா இருந்து  இப்படி கூமுட்டக் கழுதையாகவுல்ல இருந்திருக்கு...என்றுதான் கோபப்பட்டார்கள்.. செய்தி ஏட்டில் வந்த கூடா நட்பு கேடா முடியும் என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது அவர்களின் கருத்து.

கட்டிட வேலையில் இருக்கும் சித்தாள்களை உதாரணமாகச் சொன்னார்கள்.கூடவே சினிமா நடிகைகளைப்பற்றியும் உதாரணமாக சொன்னார்கள்....

இன்றைய காலத்தில் வாய்ப்பு இல்லாதவர்கள் கிடைக்காதவர்கள்தான் விதியை நொந்து போக்கிடம் கிடைக்காமல் ஏக்கப்பட்டே கவலையால் பத்சாதினியாய் சாவார்கள், வாய்ப்பு உள்ளவர்கள்  அணைத்தையும் அனுபவித்து சந்தோசமாக சாவார்கள்....சாவில்கூட இதுதான் வித்தியாசம் என்றார்கள்..

அவர்களின் வீட்டருகில், தெருவில் கண்ட பார்த்த தெரிந்த காட்சிகளை தெரிந்த விபரங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு... மறைக்கத் தெரியாமல் செத்துபோனஅந்த ஆசிரியை யை திட்டித்தீர்த்தார்கள்..

அவர்கள் இப்படியும் பேசிக் கொண்டார்கள்.நம்ம தெருவில் எத்தன பேருடா யோக்கியமா இருக்காங்கஆ..அந்த பிள்ளை ரெண்டு மூனு பேருகூட தொடர்பு வச்சு இருக்கிறது..நமக்கு தெரிஞ்ச அளவுக்கு அந்த பிள்ள வீட்டுக்காரனுக்கு தெரியாதுல.....நாலோ அஞ்சோ படிச்சு இருக்கு எப்படி லாவகமா எல்லாப் பயலையும் சமாளித்து ஒரு..ஈ.காக்கா மூச்சுகூட வருதா.... இப்படி அவர்கள் தங்கள் குடியிருக்கும பகுதியில் உள்ளவர்களின் ஒவ்வொருத்தரின் யோக்கியத்தை அக்கு வேறு அணி வேறாக பிரித்து தொங்க விட்டதோடு  பேசிய பேச்சின் ஊடாக படித்தவளுக்கு புத்தி மட்டு என்று தங்களின் குடி மயக்கத்தினால் விளைந்த அறிவை  தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

தசரதனை கட்டிக் கொண்ட அறுபதாயிரம் மனைவியரை  உதாரனத்துக்கு
இழுத்து பேசினார்கள்... கடைசியாக அவர்களின் முடிவு 

கூடா நட்பால் வந்த சாவு அல்ல அது. பிறர்க்கு தெரிய செய்ததால் வந்த சாவு என்றார்கள் அவர்கள்,


திங்கள் 08 2017

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில். !

.

தோழர்களே... நண்பர்களே...! 

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில். ! 

அரசியலில்  நாம் #ஜனநாயக_பாதையில்_தொடர்வதா அல்லது #ஆயுதம்_ஏந்தி_போராடுவதா என RSS முடிவு செய்துவிடும்..! 

ஆம் தோழர்களே... 
RSS மிக பெரிய பாசிச திட்டத்தோடு செயல்படுவதாக தகவல் வருகிறது...  

அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன்... இந்தியாவில் தேர்தல் முறையை  ரத்து செய்துவிட்டு.!  முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு கொடுத்து ஜனாதிபதி ஆட்சியை கொன்டுவருவதே.. அந்த திட்டம்.!  

பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் தேர்தலே இல்லை என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளது RSS கூட்டம்...  

அதற்கான பனிகளை  மோடியை வைத்து தொடங்கிவிட்டது RSS. !  

அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் இதை அனுமதிக்காது.!  

ஆகவே கம்யூனிஸ்டுகளை அழித்தொழிப்பது என RSS முடிவு செய்துள்ளது...  

கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல... 
இதர ஜனநாயக சக்திகளையும் முற்போக்கு சக்திகளாயும் இந்தியாவில் தடை செய்வது... அதன் மூலம் முக்கிய தலைவர்களை கைது செய்து கதையை முடிப்பது... அவர்களே முக்கிய இடத்திற்க்கு வெடிகுண்டு வைத்துவிட்டு... அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு அவர்களையும் அழிப்பது... போன்ற பாசிச திட்டத்தை RSS தீட்டியுள்ளது... 

அதற்காக பத்து லட்சம் RSS தொண்டர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெறிவிக்கின்றன..! 

இந்திய அரசு ரகசியமாக அனு ஆயுதங்களை தயாரித்து  வருகிறது.  அந்த ஆயுதங்கள் அனைத்தும்..  அரசை எதிர்ப்போர் மீது பயன்படுத்த.! 

இந்த தயாரிப்புக்கு உதவியது மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் என தெறிகிறது... 
ஆணால் RSS.யின் திட்டம் கலாமுக்கு தெறியாது...  

ஒருவேளை கலாம் அவர்களுக்கு தெறிந்தால் அவர் சம்மதிக்க மாட்டார்... ஆகவே கலாமின் சேவை போதும் அவரை கொன்றுவிடுங்கள் என RSS.உத்தரவிட்டதாக அதன் காரணமாக அப்துல் கலாம் கொல்லப்பட்டதாக சொல்லபடுகிறது...  

நண்பர்களே நீங்கள் ஒரு விசயத்தை நன்றாக சிந்தித்து பாருங்கள் ... கலாம் அவர்கள் இமாசல பிரதேசத்தில் மாணவர்கள் இடையே பேசிகொண்டிருந்த போது மயங்கி விழுந்து  உயிர் விட்டதாக சொல்கிறது அரசு... ஆணால்

அப்படி ஒரு புகைப்படமோ அல்லது  வீடியோவோ நீங்ககள் யாராவது இதுவரை பார்ததுண்டா.???  

ஏன்.? ஆயிரகணக்கான மாணவர்கள் இருக்கும் அரங்கில் ஒரு மாணவர் கூட தனது மொபைலில் படமோ வீடியோவோ எடுக்காமல் இருந்திருப்பாரா.? 

அல்லது கலாம் போன்ற தலைவர்கள் பேசும் போது கல்லூரி நிர்வாகமே வீடியோ பதிவு செய்திருக்குமே.? 

ஆணால் இதுவரை.. கலாம் அவர்கள் மயங்கி  விழுவதை போல புகைப்படமோ வீடியோ வெளியாகவில்லையே ஏன்.?  

இதே போல தான். ஜெயலலிதாவின் மரணமும் RSS.யின் உத்தரவின் பேரிலேயே நடந்தது... காரணம்.. இவர்களின் விருப்பம்போல் சட்டத்தை மாற்ற மாநிங்களவையில் மெஜாரிட்டி வேண்டும்...  

இப்போது ஓ.பி.எஸ்.யை வைத்து மாநிலங்களவையில்  மெஜாரிட்டியை பெற்றுள்ளது பா.ஜ.க ... ஜெயலலிதா இருந்தவரை இது சாத்தியமில்லை.! 

தற்போது ராணுவம்.. போலீஸ்..  அதோடு RSS.யின் பத்து லட்சம் குண்டர் படையையும்  சேர்த்து சமாலிக்க வேண்டிய நிலையில் நாம்  உள்ளோம்..!

நன்றி- அசுரன் பொதுவுடமை காதலன்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...