பக்கங்கள்

சனி 20 2016

நீங்களும் இருக்கீங்களே...!!!


waterproof_002
« 

அன்று அம்சவள்ளி
தன்னை அலங்கரித்து
அம்சமாக இருந்தார்.

இன்று அம்சவள்ளியின்
நாத்தனார் வீட்டு
நிகழ்ச்சிக்கு செல்ல
கணவரின் வருகைக்கு
காத்து இருந்தார்.

ஏதேச்சையாக செய்தி
பத்திரிகையை படித்த
பின் அம்சமாக
இருந்த முகம்
மாறியது இப்போதும்
கணவனின் வருகைக்காக
காத்திருந்தார் அம்சு

வந்த கணவர்
அமர கூட
வாய்ப்பு தராமல் 
படபட வென்று
பொரிந்து தள்ளினார்.

என் கல்யாணத்திற்கு
ஒரு கிலோ
தங்கம் வரதட்சனையாக
கொண்டு வந்தேன்
நீங்கள் கூப்பிடும் 
போதெல்லாம் உங்களுடன்
படுத்து எழுந்தேன்
உங்க சொத்துக்கு
வாரிசை பெற்றேன்.
வகை வகையாக
சமைத்து போட்டேன்
உங்கள் துணி
மணிகளை துவைத்து
போட்டேன் சோர்ந்த
நேரம் உங்கள்
கால்களை அமுக்கி
விட்டேன் இன்னும் 
என்னென்வோ செய்தேன்
இத்தனை செய்தும்

நான் உங்களுக்கு
என்ன குறை
வச்சேன் இப்பவே
சொல்லி ஆகணும்



இந்த பேப்பரை
பாருங்க ஒரு
கணவரு அவரு
மணைவிக்கு ஒரு
லட்சம் மதிப்புள்ள
காபி          டீ
பட்டாலும் தவறி 
விழுந்தாலும் கறை
பிடிக்காத   ரெண்டு 
வருசம் ஆனாலும் 
துவைக்க வேண்டிய
வேலையே  இல்லாத
அப்படி ஒரு
பட்டுச   சேலை
ஒன்றை வாங்கி
கொடுத்து இருக்கிறார்.

நீங்களும் இருக்கீங்களே....!!!

கல்யாணத்து அன்னிக்கு
எடுத்துக் கொடுத்திங்களே
பாடாதி சேலையை
பட்டுச் சேலையென்று
அந்த சேலையை
கட்டிக்கிட்டு நான்
உங்க தங்கச்சி
 வீட்டு   நிகழ்ச்சிக்கு 
வரல........வரல..



வெள்ளி 19 2016

பார் வேந்தே...பேப்பரை..பார் வேந்தே...

படம்- இக்கரை




பார் வேந்தே
பேப்பரை பார்
வேந்தே........

தள்ளு வண்டிக்காரரிடம்
முள்ளு முருங்கை
ரொட்டி ஒன்று
வாங்கிய  போது
அவர் மடித்து
கொடுத்த பேப்பரை

பார்  வேந்தே..
பேப்பரை  பார்
 வேந்தே......

அக்கு கரைக்கு
இக்கு  கரை
பச்சை எதுவென்று

பார்   வேந்தே
பேப்பரை  பார்
 வேந்தே............

 கனடா நாட்டு
பார் ஆளும்
மன்ற தேர்தலில்
இந்தீய வம்சா
வளி வேட்பாளர்கள்
போட்டி  இட்ட
பதது  ஒன்பது
இடங்களில் வென்று
வரலாற்று சாதனை
படைத்து உள்ளார்கள்
என்பதை  தாங்கள்


பார் வேந்தே..
பேப்பரை பார்
வேந்தே........

இந்தீய தேசத்து
நாடாளு மன்ற
 உறுப்பினர் களையும்
கனடா  நாட்டு
வம்சா வளி
நாடாளு மன்ற
உறுப்பினர்  களையும்
ஒப்பீட்டு  பார்த்தால்


அக்.......கரைக்கு
இக்........கரை
பச்சை  என்பது
புரியும் வேந்தே

பார் வேந்தே
பேப்பரை பார்
வேந்தே........  

வியாழன் 18 2016

தலைவரைவிட..தலைவி சிவப்பு......

படம்-www.luckylookonline.com

தலைவனைவிட  தலைவி
சிவப்பா...!!! எப்படி..?
என்று  சீந்தித்த...
 போ......து...............

அந்தத் தலைவியின்
அரசு  ஊழியர்கள்
வித விதமான
போர் ஆட்டத்தின்
போது தலைவனின்
தலைவி ஆட்சி
செய்த நாண்கு
அரை ஆண்டில்
ஒரு         முறை
கூட     எங்களை
அழைத்து பேச
வில்லை  என்று
சொல்வதில் இருந்து

தலைவனை  விட
தலைவி  சிவப்பு
தான்........... என்று
 புரிந்து    விட்டது. 

புதன் 17 2016

காதலை கொன்ற சாதி வெறி வன்னியர்கள்.....


murugesan kannagi
வன்னியசாதி வெறியர்களால் கொல்லப்பட்ட காதலர்கள்

ஆண்டு: 2003
ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை
காதலர்கள்:
முருகேசன் (தலித்)
கண்ணகி (வன்னியர்)
என்ன கதை அது?:
இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து சாதிவெறி வன்னியர்கள் அடித்து உதைத்தனர்.

இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது.

பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர்.

விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர்.

செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் நடுவிலேய வைத்து எரிக்கப்பட்டனர் அந்தக் காதலர்கள்.

செவ்வாய் 16 2016

பகவானின் லீலைகளை...காணீர்..


பன்னிரண்டு ஆண்டுகளில்
செய்த பாவத்தை
போக்க மகா மகா.ம்
குளத்துக்கு போயி
குளித்து புண்ணியம்
தேட முடியாதவர்கள்

இருந்த இடத்திலே
பாவம் தொலைந்து
புண்ணியம் கிடைக்க
பகவானின் லீலைகளை
காணீர்.......  காணீர்...........


படம்உதவி--Mamta M



படம்.உதவி..YouTub

..


படம்-P M Hussaain

படம்-நேச மித்ரன்





பட்ம்-R.P. Karthik



திங்கள் 15 2016

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...???

படம்-malligai-thottam.blogspot.com

வீட்டுக்கு ஒரு
 மரம் வளர்ப்“போம்
 மழை நீர்
பெறுவோம். அதை
கோக் பெப்சி
கம்பெனிக்கு குறைந்த
விலையில் விற்று
அவர்கள் இடமிருந்து
அதிக விலைக்கு
பானம் வாங்கி
பருகி களித்திடுவோம்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...