பக்கங்கள்

வெள்ளி 21 2012

இப்படியும் சினிமா கொ(டை)ள்ளை வள்ளல்கள்.......


UTV என்ற படக் கம்பெனி சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் தொழில் பண்ணிகிட்டு இருக்கிற நிறுவனம்.இந்நிறுவனத்தின் செயல்அதிபரு தனஞ்செயன் என்பவரு.. இவருடைய தயாரிப்பில் உருவான படம் தாண்டவம். இதில் சீ.......யான் விக்ரமும்.ரஷ்ய நாட்டு கால பைரவனின் உயிரை எமனிடமிருந்து மீட்ட நா(தா)யுள்ளம் கொண்ட அருந்ததி அனுஷ்காவும்( பார்க்க.வினவு காம்) நடிக்க  காப்பி விஜய் இயக்கி இருக்கிறார்.


இந்தப்படத்தில் சீ...யான் பழிவாங்குற பார்வையற்ற மாற்று திறனாழியாக நடித்து இருக்கிறார்..ஈ..யே காதலுக்காக பழிவாங்கம்போது. பார்வையற்றவர்
பழிவாங்குவது பெரிய விசயமில்லை என்றாலும். ஒலியை வைத்து எப்படி
பழிவாங்குறார் என்று கைடெக்கான டெக்னிக்கல்ல எடுத்து இருக்காங்களாம்

இப்படியாக, படத்தில் சீயான் மாற்று திறனாலியாக நடித்து இருப்பதால் பட
அதிபர்.தாண்டவம் படத்தின் முதல்  பிரிமியர் காட்சியில் வசூலாகும் பணத்தை அப்படியே மாற்று திறனாலிகளை நடத்தும் நாப் நிறுவணங்களுக்கு நன்கொடையாக அளிக்க போகிறாராம். இப்படியாக தொடர்ந்து சமூக நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்து இருக்கிறாராம் தனஞ்செயன்.

ஆக,  வள்ளல்கள் நிறைந்து இருக்கிற நாட்டில் இப்படியும் சினிமா கொ(டை)ள்ளை வள்ளல்களும் இருக்கிறார்கள்.

வியாழன் 20 2012

கழுத்தை அறுப்பவர்களை நம்பும் ஆடுகள்.........

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார்.அவர் சின்னதும் பெரியதுமாக நாலு ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த நாலு ஆடுகளுக்கு வேளா வேளைக்கு நல்ல தீனியும் நல்ல தண்ணீரும் கொடுத்து வந்தார்.அவருடைய வாழ்க்கை சீரான  நிலையில் சென்று கொண்டு இருந்த வேளையின்.....இடையில்

தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் என்ற வளர்ச்சி என்ற பெயரில்  விளை நிலங்களும் கருவக்காடுகளும்.மரங்களும் அழித்தொழிக்கப்பட்டு.பிளாட்டாக
மாறின.. கொஞ்ச நஞ்ச நிலங்களு  மழையுமில்லாம ,தண்ணியும் இல்லாம வறண்டு தரிசுசா கிடந்தன.

இதனால்.விவசாயமும் இல்லாம வேலையுமில்லாம தவியாய் தவித்து வந்த காரணத்தினால்,வளர்த்து வந்த ஆடுகளுக்கு முன்னப்போல் தீணியும் தண்ணீ
ரும்  அவரால் கொடுக்க முடியவில்லை.

இதைத் தெரியாத ,வேளா வேளைக்கு திண்டு வந்த ஆடுகள்.அந்த விவசாயி யை திட்டித்த்தீர்த்தன.“தீணி போட வக்குஇல்லாதவன் எதுக்கு நம்மல்ல கட்டி ஆளுறான். வெங்கம்பய..வளக்க  துப்பு இல்லேன்னா நாக்கப் புடுங்கி சாக வேணாம்.என்று மாறி மாறி திட்டி வந்தன.

ஒருநாளு அந்த விவசாயி வீட்டுக்கு லேவாதேவிக்காரன் வந்தான். வாங்கின
பணத்துக்கு வட்டி எதுவும் கட்டவில்லை என்று அவனும் பதிலுக்கு திட்டினான். வட்டியும் முதலுமாக கொடுக்கச் சொல்லி கெடு விதித்துவிட்டு
போனான்.

பல பிரச்சினைகளால் சிக்குண்டு தவித்த அந்த விவசாயி.தான் வளர்த்து வந்த
ஆடுகளை மனமில்லாமல்.கறிக்கடை வியாபாரிக்கு விலை பேசி விற்று விட்டான்.

ஆடுகளை வாங்கிய கறிக்கடை வியாபாரி.அந்த நாலு ஆடுகளுக்கு கொழுப்பும் கறியும வளர்வதற்க்காக ,அனுதினமும் நல்ல தீனியும் .கோகோலா தண்ணியும் போதாத குறைக்கு டாஸ்மாக் தண்ணியும் கொடுத்து வந்தான்.

நல்லா தீனியும், கோலா தண்ணியும் பருகி வந்த ஆடுகள்.ஆகா.....ஆகா.......
இவனல்லவோ மனுசன்.நம்மல கண்னும் கருத்துமாக பேணி பாதுகாத்து
 வருகிறான்.என்று புளகாங்கிதம் அடைந்து மெச்சி வந்தன.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கறிக்கடை வியாபாரி. நாலு ஆடுகளில் ஒன்றை
பிடித்து, மூன்று ஆடுகளின் முன்னால். அதன் கழுத்தறுத்து இரத்தத்தை சட்டியில் பிடித்து . தோலை உரித்து தொங்கவிட்டான்..

புளகாங்கிதம் அடைந்து வியாபாரியை புகழ்ந்து பேசிய மற்ற மூன்று ஆடு கள்  இதை பார்த்து அதிர்ச்சியில் வெலவெலத்து போயின.

அடடா.....நம்லேயும் இப்படித்தானே கழுத்தறுத்து தொங்கவிடப்போறான்
என்பதை உணர்ந்தன. உணர்ந்து என்ன பயன்...தப்பிக்க வழியில்லால்
பரிதாபமாக தவித்துக்கொண்டு இருந்தன. மற்ற மூன்று ஆடுகள்.




செவ்வாய் 18 2012

கொஞ்சுனு போதையும்...அதிகமான போதையும்.....


டாஸ்மாக்குக்கு அருகே உள்ள தெருவிலிருந்த ஒருவன். ஒரு பெக் மட்டும்
அடித்துவிட்டு,போதை தலைக்கு ஏறியது மாதிரி தள்ளாடி தள்ளாடி ஆக்ஸனுடன் நடந்து வந்தான். தெருவின் முச்சந்தியில் நின்று கொண்டு கத்த  ஆரம்பித்தான்.

அவன் கத்தலை.தெருவிலுள்ளவர்கள் கண்டுக்கொள்ளாமல் போவதும் வருவதுமாக தங்கள் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.இது
கொஞ்சுனு அடித்த போதை குடிமகனுக்கு பெரிய அவமானமாக போயிருச்சு.................போவோர்வருவோரை....ங்கோத்தா.....ங்கொம்மா........
அவனே...இவனேன்னு திட்டிக்கொண்டே தன்னுடைய அருமை பெருமைகளை கடை விரித்து கொண்டு இருந்தான்.

அப்போதும் தெருவாசிகள் அவன் கத்தலையும் வசவுகளையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்று கேட்கவுமில்லை. எதற்கு வம்பு தும்புன்னு காது இருந்தும் செவிடர்களாக இருந்தனர்.

இதற்கிடையில் இன்னொரு புல்அடித்த குடிமகன், ஒரு பெக் அடித்த குடிமகன்
போலவே தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து சேர்ந்தான். முதல் குடிமகனும்
இரண்டாவது குடிமகனும் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு இரு குடிமகன்களும் சேர்ந்து கத்த ஆரம்பித்தனர்.

திடிரென்று இரண்டு குடிமகன்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இரண்டாம குடிமகனுக்கு,முதல்குடிமகன் கத்தியது பிடிக்கவில்லை.

“ ஏணடா.ங்கொக்கா மக்கா, ஒரு பெக்க அடிச்சுகிட்டு இம்புட்டு மப்ப
காட்டுறியே, புல் அடிச்சுயிருக்கிற ஏ...ன் மப்ப பாருடா...ன்னு சொல்லிய
படி.பக்கத்தில் கிடந்த செங்கலை எடுத்து ஒரே போடா... முதல் குடிமகனின்
தலையில் போட்டுட்டான்.நான்தான் மூத்த குடிமகன் என்று அவன் மட்டும் கத்த ஆரம்பித்தான்
அப்போதும்  அந்த தெரு வாசிகள் அதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...