பக்கங்கள்

சனி 01 2019

அதிகாலை கனவு-25.

அதே கேள்வி? அதே பதில்!!




சரிப்பா..அவரு
புராணம் எல்லாம்
இருக்கட்டும் உன்
புராணத்துக்கு வருவோம்.

நீ ஏன்?
திருமணம் முடிக்கவில்லை.
சுத்தி வளச்சு
பேசக்கூடாது நேரடியாக
சப்செட்ட சொல்லு..

நீ சொல்வது
எல்லாம் உண்மையாடா

அடப் பாவி நீ
சத்தியம் தவறாத
உத்தமன்   னடா...

டேய் உன்னப்
போயி யாருடா
தியாகின்னு சொன்னா

நீ தியாகி
இல்லடா..வெள்ளந்தி
ஏமாளி. கேணடா

.....................


(  அய்யா நான்
எதுவாகவும் இருந்திட்டு
போறேன் எனக்கு
எந்த பட்டமும்
வேணாம்..எந்த
பெருமையும் வேண்டாம்..)

வியாழன் 30 2019

அதிகாலை கனவு-24.

கனவில் வந்த ஆத்திரம்...????
.....



சார் வணக்கம்....

வாப்பா.....வா... வா..... உட்காரு.....என்ன விசயம்....  

ஒன்னுமில்ல சார். ஒரு கூட்டத்துல...நடந்து முடிந்த தேர்தலைப் பற்றியும் அதில் ஓட்டுபோட்ட வாக்காளர்களைப் பற்றியும்   கருத்து சொன்னிங்களாம்...
அதப்பத்தி உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டு  போகலாமுன்னு வந்தேன் சார்...

அப்படியா...!!! நானா..!!! ஒனக்கு யாரு சொன்னது...

.டீக் கடையில பேசிக்கிட்டு இருந்தாங்க சார்.....

அவுங்க..யாருன்னு தெரியுமா...?

தெரியாது சார்,.....

நீதான் டீயே  குடிக்க மாட்டியே..பின்ன எப்படி  டீ கடைக்கு போன.....

“ சிகரெட் வாங்க பேனேன் சார்...”

“ என்னது சிகரெட் வாங்கப் போனீயா.... என்ன கத விடுறீயா....உனக்குதான் சிகரெட்ட ஆகாதே.... பின்ன எப்படி..சிகரெட்..”

“ இல்ல சார் ..சில்லரை மாத்த போனேன்.. சார்....”

“நீ...சில்லரை மாத்த டாஸ்மாக்குக்குல்ல போவ..... எப்படி ..டீ கடைக்கு போனே ?  ஏய்....பொய் சொல்ற...”

“ இல்ல சார்...எங்க ஏரியாவுல இருந்த டாஸ்மாக் கடைய எடுத்துட்டாங்க சார், அதிலிருந்து டீக் கடையிலதான் சில்லரை மாத்துவது வழக்கம்..”

“ ஓ...அப்படியா.....”

“ஆமாம் சார்”

“ ஆமா... உனக்கு சில்லரை மாத்துற அளவுக்கா காசு பொளங்குது”

“ அப்படி எல்லாம் இல்ல சார், சும்மா ஒரு ஐறூறு ரூபாய்க்கு , சில்லர மாத்தப் போனேன்... சார்...”

“ஆமா... நா...பேசினத..கேட்டு..நீ என்ன செய்யப்போற.......”

“ஒன்னும் செய்யப் போறதில்ல சார்”

“ ஒன்னுமே செய்யப் போறதில்ல... பிறகு எதுக்கு நான் பேசினத கேட்டுகிட்டு...”



 “ஏலே....நாதாரி.. 
இத முன்னமே சொல்லி 
தொலைக்க வேண்டியதானடா...” 
பெரிய வெங்காயம் மாதிரி 
இம்புட்டு கேள்வி கேட்டுபுட்டு..
கடைசியில என்னாத்துக்குன்னு.

.ஆத்திரத்தில் வாய் ஒலம்பியபடி கண் முழித்தபோது.... பக்கத்தில் யாருமில்லை.. ஆத்திரம் தணியாததால் பின் தூக்கமும் வரவில்லை.....


















செவ்வாய் 28 2019

அதிகாலை கனவு-23.

என் வீட்டுக்கு வந்த கூட்டம்,...






டேய்.... இங்க வாடா
யாருக்கு ஓட்டு போட்ட
ம்..ம்...ம்..சொல்லுடா..

அத தெரிஞ்சுக்க எனக்கு
உரிமை இல்லை என்று
நீ சொல்லக் கூடாது


ஏய்.. ஒழுங்கா மருவாதியா
சொல்லிடு இல்ல அடி
வாங்கி பிறகு சொன்னீன்னா
அது உனக்குத்தான் கஷ்டம்
ம்..ம்..ம்..சொல்லுடா..

என்னாது ஓட்டு போடலீயா..
கையில மை இருக்கு
உன்ன பூத்துல பாத்திருக்காங்க
என்னடா கதை விடுறீயா....

உன்ன யாருடா நோட்டாவுக்கு
போடச் சொன்னது வழிப்போக்கனா
என்னாது இல்லையா வலிப்போக்கன்
வலிப்போக்கனா...யார்ரா அவன்




(நாந்தான் வலிப்போக்கன் நீங்க
யாரு என்று வந்த
கூட்டத்தைக் கண்டு மிரண்டு
விழித்தபோது யாரும் இல்லை..)


ஞாயிறு 26 2019

அதிகாலை கனவு-22

கண் மூடும் வேளை......













கண்ணை மூடினதும்
கும்மிருட்டாய் இருந்தது
அதனால் எதையும்
கண் கொண்டு
பார்க்க முடியவில்லை.

அந்த கும்மிருட்டில்
ஒலியையாவது  கேட்கலாம்
என காதை
விழித்து கேட்டால்
 நிசப்தமாக இருக்கிறது
அதனால் காதும்
கேட்காமல் போனது

மூச்சு விடும்
சத்தமாவது
தெரிகிறதா என்று
மூக்கையாவது தொட்டு
பார்த்தால் அய்யோ
மூக்கையே காணவில்லை

குரல் கொடுத்தாவது
பார்ப்போம் என்றால்
பல்லெல்லாம் விழுந்து
குரல் எழும்ப
மறுக்கிறது..ஆ..ஆ
வென்று பதறி
கண்விழித்து எழுந்தால்
எல்லாம் கனவென்று
தெரிகிறது. சேவென்று
சொல்லி மீண்டும்
படுத்து கண்
மூடினால் இருட்டாகத்தான்
 எல்லாம் தெரிகிறது.

அட..நான்
என்ன பூனையா...???.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...