பக்கங்கள்

சனி 11 2014

கருப்பு சட்டையின் நோக்கத்தை மாற்றிய கயவர்கள்..


untitled1


சுழற்சி முறையில் அன்று   நான்  அணிந்த சட்டை கருப்பு சட்டையாக அமைந்துவிட்டது.. நான் எதைப் பற்றியும்  நிணைக்காமல் கருப்பு சட்டையுடனே வெளியே சென்றேன.

வீதி வழியாக கடைக்கு சென்று கொண்டு இருந்த போது என்னைத் தெரிந்தவர்கள் என்ன கருப்பு சட்டை...“ அம்மா...கைதுக்கா.......” என்றார்கள்.

என்னைப் பார்த்தா ...அப்படியா...தெரியுது என்றேன்.

“பின்னே கருப்பு சட்டை போட்டு இருக்கிறது அதுக்குத்தான் என்றதானே காட்டுகிறது. என்றனர்.

அப்பொழுதுதான் அவர்கள் கருப்பு சட்டையை  எழவுக்கும் ,துக்கத்துக்குமான அடையாளம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்என்பது தெரிந்தது

கேட்ட..அனைவரையும் நகர விடாமல். கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கருப்பு சட்டையின் அடையாளம் எதுவென்று விளக்கினேன்

அட.. சாம்பிரானிகளா....... பெரியாரைத் தெரியுமா?? என்றேன்

தெரியும் என்றார்கள்.

 அவர் என்ன சட்டை அணிந்திருப்பார்” என்று கேட்டேன்..

கருப்பு சட்டை என்றார்கள்.

பெரியார் கருப்பு சட்டை அணிந்தது எழவுக்கும் துக்கத்திற்கும் இல்லப்பா....
 என்று விட்டு.. நான் கருப்பு சட்டை அணிந்திருப்பதற்கு , நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன், சுயமரியாதைக் காரன் என்பதற்கு அடையள.. மப்பா..
அந்த நோக்கத்தில் அந்த கருத்தில் தானப்பா... நான் கருப்பு சட்டை அணிந்திருக்கிறேன். என்றவுடன்..

நான் சொல்வதைக்  கேட்டுக் கொண்டு இருந்தவர் களில் ஒருவர் சொன்னர்

ராசபக்சே அய் நாவில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காரங்கெல்லாம் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்  செய்தார்கள் ...... இப்போது  ஆத்தாளை களி தின்ன வச்சுதுக்காக  அதிமுக காரர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!! என்று தகவலைச் சொல்லி கேள்வி கேட்டார்

உங்கள்  கருத்துப்படியே வைத்துக்கொண்டால் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்கள் கருப்பு  நிறத்தில் பர்தா அணிவதும், நீதிமன்றங்களில் வக்கீல்கள் கருப்பு கோட்டு அணிவதும்  அய்யோ அப்பா கோவிலுக்கு செல்பவர்கள் கருப்பு சட்டை அணிவதும் எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காகவா அணிகிறார்கள் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றபோது...

அவர்கள் பேசாமல் இருந்தார்கள்...நானே தொடர்ந்தேன். ஒவ்வொரும் கருப்பு சட்டை அணிவதற்கு பல காரணங்கள் கூறினாலும். கருப்பு சட்டை அணிந்துள்ள எனக்கு ஒரு காரணம்தான் .

கருப்பு சட்டை அணிவது கடவுள் மறுப்பு கொள்கைக்காரன் என்பதையும் சுயமரியாதைக்காரன் என்பதையும் பறை சாற்றி தெரிவிப்பதற்க்கத்தான் ஒழிய நீங்கள் சொல்வது போல் எழவுக்கும் துக்கத்துக்கும் அணியும் ஆடை அல்ல.....

இது  தெரியாமல் அறியாமல் கருப்பு சட்டை அணிபவர்கள், கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கொள்கையையும் மாற்றிய கயவர்களாக இருப்பார்கள். என்றேன்.

அப்போது ..வேறு ஒருவர்.... அவ்வழியாக கருப்பு சாக்கெட் அணிந்து வந்த பெண்ணொருத்தியை காட்டி எண்ணை மடக்கினார்.

கூட்டத்தில் ஒருவர்  அந்தக் கருப்பு மேடசீங்.... அன்டு கவர்ச்சி என்றார்

இன்னொருத்தர்  பர்தா அணிந்த பெண்ணைப்பற்றிச்   சொன்னார்..............
வீதியில் கூட்டம் சேர்ந்தது ஆட்டோவும் டூவிலர்களும் ஒலி எழுப்பியதால் கூட்டம் கலைந்தது.

நானும் பாதியிலேயே பேச்சு பேச்சாக இருக்கட்டும்  என்றபடி  அவ்விடத்தை விட்டு வந்த வேலையை கவனிக்கத் நகர்ந்தேன்

வெள்ளி 10 2014

அம்மா அமிர் சும்மா கட்டிபிடுச்சினு நினைச்சா ..........











Kathir Nilavan 3 புதிய படங்களைச் சேர்த்தார்.
கேரள பெண் சாமியார், சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலம்!
நியூயார்க்: கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியா அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து
அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன்.என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார்.அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.
பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயியின் மடம் வாக்குறுதி அளித்தது.மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் எழுதிய ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளின் பெயரால் அப்பாவி ராமசாமி,லூர்து சாமிக்களை ஏமாற்றும் "காம"சாமிக்களை தோலுரிக்க லைக் பண்ணுங்க

அம்மா அமிர் சும்மா கட்டிபிச்சினு நினைச்சா......... காரணமாதான் பிடிச்சி இருக்கு....

வியாழன் 09 2014

மகஇக வை வாழ்த்திய பேரறிவாளன்

Perarivalan.jpeg
படம்--http://ta.wikipedia.org/s/cz8


நான் கைதான உடனே “  என்னைச்சேர்த்து சாந்தன்,முருகன்.நளினி உள்பட 26 தமிழர்களை உடனே விடுதலை செய்” என்று குறிப்பாக பெயர் குறிப்பிட்டு சுவரொட்டி போட்டது தமிழ்நாட்டிலேயே மக்கள் கலை இலக்கிய கழகம்தான் என்றார் பேரறிவாளன்.

 மற்றும் புதிய ஜனநாயகம் பத்தரிகையை என் அம்மா கொண்டு வந்து கொடுப்பாங்க.. ஈழத் தமிழர்களுக்காக மகஇக நடத்தி வரும் எல்லா போராட்டங்களும் எனக்குத் தெரியும் என்றார். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் பேரறிவாளன்.


தகவல்---வினவு.

ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

http://www.vinavu.com/2014/10/01/prison-experience-strengthens-ndlf-workers/





புதன் 08 2014

“ நீதித்துறையில் ஒரு மாவீரர்”

படம்--நீதித்துறையின் மாவீரர்

 “ஊழல் சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது. தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது. மனசாட்சியை கொல்கிறது. மனித நாகரீகத்தை குலைக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ காட்டினால் அது ஒட்டு மொத்த சமூக வாழ்க்கைக்கும்  கேடாக முடியும்”-- --பெங்களுரு சிறப்பு நீதி மன்ற நடுவர் ஜான் மைக்கேல்  டி குன்கா

பார்ப்பன அதிகாரப் பரிவாரங்களின் குறுக்கீடுகள், நிர்ப்பந்தங்கள், ஜெயா- சசி கும்பல்களின் மிக மோசமான சீண்டல்கள், குரூரமான ஆத்திர மூட்டல்களை எல்லாம் சகித்துக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் கடுமையாக உழைத்து, குற்றவாளிகள் எந்தச் சந்து பொந்துகளில் தப்பிவிட முடியாதவாறு சட்ட நுட்பங்களை ஆய்ந்து, இதுவரையிலான சட்ட- நீதிகளிலும் விதிவிலக்கான ஒரு தீர்ப்பை, நீதியரசர் ஜான் மைக்கேல் டி குன்கா வழங்கி இருக்கிறார்.

வாய் சொல்லில் பறை சாற்றி  வந்து ஆட்சி செய்தவர்களும்,உயர் அதிகார பதவிகளில் இருந்து கொண்டு கோலோச்சியவர்களும், நீதி பரிபலானை செய்த நீதியரசர்களும்...

செய்யும் தொழிலிலே தெய்வம் என்று சொல்லிக் கொண்டு, செய்யும் தொழிலுக்கு எதிராகவும், அந்தத் தெய்வத்துக்கு விரோதமாகவும்தான் நடந்து வந்தார்கள் ..வந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு மத்தியில் சிறு துறும்பாக..... 

திறமையும் தகுதியும் இல்லாத சமூகமாக ,பார்ப்பனியத்தால் தள்ளி வைக்கப்பட்ட சமூகத்தை  சேர்ந்த  நீதியரசர் ஜான் மைக்கேல் குன்ஹா,  ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம், உமா சங்கர்  போன்ற  திறமையும் தகுதியும் மட்டுமல்ல நேர்மையும் உறுதியும் வாய்த்தவர்களால்தான்... ஜனநாயகம் என்ற இல்லாத ஒன்று உலாவுகிறது.

 ஊழலை தடுக்க வேண்டும், ஊழல் கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்

ஊழலுக்கு எதிராக “ நீதித்துறையில் ஒரு மாவீரர்” நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும், அதிகார பலத்திற்கு அடிபணியாமல் நீதியை நிலை நாட்டிய   நீதிபதியை  பாராட்ட வேண்டும். இருக்கும் ஊழல் வாதிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப  நேர்மையை விரும்பும், ஜனநாயத்தை விரும்பும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

நீதித்துறையின் மாவீரர் வாழ்க!!!








செவ்வாய் 07 2014

கொள்ளைக்கார ஆத்தாவை.. வெளியே விட்டா....ஆத்தா.. என்ன செய்யும்...??.

jaya areest poster
படம்--http://www.vinavu.com/wp-content/uploads/2014/10/jaya-areest-poster.jpg


அடிமைகளில் ஒன்று கேட்டது....
அம்மாவை வெளியே  விட்டால்
என்ன செய்வாங்க...என்று.....

இன்னொரு அடிமை சொன்னது
அம்மாவை வெளியே விட்டால்

அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு
சொன்ன நீதபதி மேல் .....
ஒரு கஞ்சா கேசு போடும்.

அதை விமர்சித்தால்  தன்னுடைய
மதிப்பை கெடுப்பதாக அவதூறு
வழக்கு போடும்..............

அம்மாவுக்கு எதிராக
போஸ்டர் ஒட்டினால்......

ஊட்டி வளர்த்த அம்மா
போலீஸ்  போஸ்டர்
ஒட்டியவர்களை கடுச்சு
இழுத்துகிட்டு போயி
சிறையில் தள்ளும்.....

முதல் அடிமை திரும்பவும்
கேட்டது.......அம்மாவுக்காக
விதவதமாக போஸ்டர்
ஒட்டியும் இவ்ளோ. அராஜகம்
பண்ணியும்  ஒலக மகா
 வசவு வார்த்தைகளில்
திட்டியும் நம்மல.. அது
ஒன்னும் செய்யல.....................!!!

 சற்று சவுண்டு விட்டு
சொன்னது இரண்டாவது அடிமை

அது  அம்மா போலீஸ்....
அம்மாவின் அடிமைகளை
அது ஒன்றும் செய்யாது.. ..
சும்மா..வேடிக்கைதான் பார்க்கும்.

சந்தோசம் அடைந்த...
முதல் அடிமை கத்தியது
எருமையே.........என்று
கூடவே இரண்டாவது
அடிமையும் பிளிறியது
 சட்டம் தெரியாத சனியனே..........!!!!






திங்கள் 06 2014

அடிமைகளின் ஒப்பாரியின் ஊடே.. குடி மகன்களின் உளறல்கள்.

ஆனந் நந்தன்-ன் படம்.
படம்-ஆனந் நந்தன்.

குடிகாரன் எப்பவுமே  உண்மையைத்தான் 
சொல்வானாம்.....

ஆத்தாவின் ...குடிமகன்களும்  
உளறலில் உண்மையைத்தான் 
சொல்கிறார்களா..??ஃ..............

இவர்களின் உளறல்கள்
உண்மையா...?
பொய்யா...............? என்று நாளை
தெரிந்துவிடும்..........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...