பக்கங்கள்

சனி 14 2012

சந்தேகப்பட்ட புரட்சி நடிகரும்,சந்தேகத்தை தீர்த்து வைத்த நகைச்சுவை நடிகரும்...

ஒலக சினிமாகாரங்களுக்கு உறவு முறை இருக்கோ. இல்லீயோ.
ஆனால் தமிழ் சினிமாகாரங்களுக்கு எந்தவித உறவு முறையும்
சினிமாவுக்குள்ளும் சரி, வெளியிலேயும் சரி இருந்தது கிடையாது

உதாரணத்துக்கு உறவு முறையே கிடையாது என்பதற்கு சாட்சியாக
சிலதுகளை சொல்லலாம். விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற
நடிகர், முன்னால் கதாநாயகி ஜெயலலிதாவின் அம்மாகூட கனவனாக நடித்திருப்பார்.அடுத்து அந்த அம்மாவின் மகளான கதாநாயகியுடன் காதலனாகவும் கனவனாகவும் நடித்திருப்பார்.

இவரே,ஸ்ரீதேவி என்ற நடிகைக்கு கவரிமான் என்ற படத்தில் அப்பா
வாக நடித்திருப்பார். வேறு ஒரு படத்தில் காதலனாக நட்த்திருப்பார்.


கோச்சடையானக்கூட எடுத்துக்குங்க, மருமகனுடன் நடித்த நடிகையுடன்
கட்டிப்பிடித்து காதல் ஆட்டம் போட்டுயிருப்பார்



புரட்சி நடிகருக்கூட ,அவரு படத்தில் தன்னை நேசிக்கும் பென்னுடன் கட்டிபிடித்து காதல் டூயட்பாடி மணவறைக்கெல்லாம் சென்று விட்டு கடைசியில் தங்கச்சி என்பார். என்னய்யா? இப்படி என்றால்
அவருக்கு முன் அவரது ரசிகர்கள் சொல்வார்கள். அது கனவுங்க
என்பார்கள். கனவிலேயும் ,நிஜத்திலேயும் சினிமாகாரனுக்கு உறவு
முறையே கிடையாது என்பதுதான் உண்மை.

இதற்கு மாறாக, இருபதாம் நுாற்றாண்டில் நடித்து மறைந்த ஒரு
நகைச்சுவை நடிகர் சினிமாவிலும் நிஜத்திலும் முறையான உறவு
முறையை கடைப்பிடித்தள்ளார். அதற்கு பின்வரும் சம்பவங்களையே
 எடுத்துக்கொள்ளலாம்

புரட்சி நடிகர். தன்னுடைய எம்ஜியார் படக் கம்பெனி மூலமாக “அடிமைப
பெண்” என்ற படத்தை எடுத்துக்கொண்டு இருந்தாராம். அதில்புரட்சி
நடிகர். அப்பா.மகன் என்ற இரு வேடத்திலும், புரட்சி தலைவி அக்கா
தங்கை இரு வேடத்திலும் நடிக்க. அந்தப் படத்தில் புரட்சி நடிகருக்கு
தோழனாக சந்திரபாபு என்ற நகைச்சவை நடிகரும் நடித்திருந்தனர்.

அந்த பட்த்தின். படப்பிடிப்பின்போது ஏற்ப்படும் இடைவெளியின்போது
படப்பிடப்பு இல்லாத நேரங்களின்போதும் புரட்சி தலைவியும்
நகைச்சுவை நடிகரும் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு
இருப்பார்களாம்.

இப்படி இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவதைக் கண்ட புரட்சி நடிகர்
கோபம் கொண்டாராம். புரட்சி நடிகரின் கோபத்தை கண்ட நகைச்சுவை
நடிகர்...புரட்சி நடிகரிடம்...

ராமச்சந்திரா........( மருதுார் கோபால இராமச்சந்திரன் என்பதை
ராமச்சந்திரன் என்றே கூப்பிடுவார்களாம். அதோடு நகைச்சுவை
நடிகர்.,புரட்சிநடிகர்க்கு சீனியராக இருந்ததால் பெயரைச்சொல்லிதான்
கூப்பிடுவாராம்).

ராமச்சந்திரா...... நானும் அம்முவும் தனியாக சந்தித்து பேசுவதைப்
பத்தி, தப்பாக சந்தேகப்படுர.......தப்பாக சந்தேகப்படாத.... ராமச்சந்திரா..
அம்மு எனக்கு மக உறவு,அம்முவின் அம்மா என் பாதுகாப்பில்
இருந்தபோது பிறந்த பொன்னுதான் அம்முகுட்டி. எனக்கு மக உறவு
முறை இல்லையா? என்றாராம்.

இதைக்கேட்ட புரட்சி நடிகர்.நகைச்சவை நடிகரிடம் சமதானம்
அடைந்து. தந்தையும் மகளும் சந்தித்து பேசுவதைப்பற்றி படப்பிடிப்பு
முடியும்வரை கண்டு கொள்ளவே இல்லையாம்.

இன்றைய கதாநாயகன்.வில்லன்.நகைச்சவை நடிக நடிகையைவிட
அரிதிலும் அரிதான சினிமாத் துறையில்முறையான உறவு
முறையைப் பின்பற்றிஇருப்பது வியப்புக்குரியதாகத்தான் இருக்கிறது.




வெள்ளி 13 2012

இன்னுமொரு ஆண்ட பரம்பரை.....??????

காந்தி


இந்தீயாவின் தேசத் தந்தையால் அரியின் புதல்வராக
அழைக்கப்பட்ட அரிஜனங்கள். அட்டவனை சாதிகளாக
குறிக்கப்பட்டு,ஆதி திராவிடர்களாக அழைக்ப்பட்டு,அதன்
பெயரில் அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளை பெற்று
ஓரளவு வளர்ந்து விட்ட சாதியில் முதலிடத்தில் இருக்கும்
சாதியான பள்ளர் சாதியை......

இனிமேல் பள்ளன் என்றும்,ஆதிதிராவிடர் என்றும் தேவிந்திர
குலத்தான் என்றும் அழைக்காமல் மள்ளர் சாதி என்றே அழைக்க
வேண்டும் என்றும் தனிவகை சாதியாக மள்ளர் என்றே ஒருங்கி
ணைக்கவேண்டும் என்றும்........

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கூடுதல்
எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவபிரகாஷ் என்பவர்
 மெட்ராஸ் அய் கோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை
தாக்கல் செய்தார்.

மள்ளர்

அதில் அவர் கூறியிருந்தது,15,16ம் நுாற்றாண்டில் மள்ளர்கள்
ஆட்சி நடத்தி அவர்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தார்கள்
பின்னர்.மள்ளர்கள் இரட்டிப்பு செய்யப்பட்டு பள்ளர்களாக
அழைக்கப்பட்டு தீண்டதாகவர்களளாக முத்திரை குத்தப்
பட்டனர். மள்ளர் சாதியில் 56 உட்பிரிவுகள் உள்ளன.. 56 பிரிவு
களையும் மள்ளளர்கள் தலைப்பில் கொண்டு வரவேண்டும்
மள்ளர்களை ஆதிதிராவிடர் என்று அழைக்காமல் மள்ளர் என
அழைக்க வேண்டும் என்றும் அதற்க்கான பல்வேறு வரலாற்று
ஆவணங்களை வழங்கியள்ளராம்...

ஏற்கனவே, பல ஆண்டபரம்பரை.சாதிவெறி பரம்பரை குத்தாட்டம்
போட்டுகிட்டு இருக்கு,இதிலே சாதி வெறி பரம்பரை ஒன்று. நாங்க
மட்டும் ஆளனுமுன்னு ஏறியா சாதி வெறி குலதெய்வத்தை தேசிய
சாதிவெறி கொல தெய்வமாக்க பகீரத முயற்சியில இறங்கி கொல
வெறியாட்டம் போட்டுகிட்டு இருக்குது.

நாட்டின் விடுதலை போராட்ட வீரர்களையெல்லாம். சாதிவெறித் தலைவர்களாக அடையாளப்படுத்தி. அவர்களின் தியாகத்தை
சிறுமைபடுத்தி வருகிறது..சாதிவெறிக்கூட்டம்.

ஊரெல்லாம்,கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, முல்லை
பெரியாறு அனணயின் உரிமையை மீட்போம் என்று சாதி,மத
வெறிகளை கடந்து ஓரணியில் போராடிக் கொண்டுயிருக்கும்
நேரத்தில்.இதற்கு எதிர்ப்பாக அடிமை காங்கிரஸின் களவானிக்
கூட்டமும்,சிறு தொழில்கொள்ளைக் கும்பலும் அணுஉலையை
திறன்னு சொல்லி,உண்ணும் போராட்டமும்,இரத்ததானமும்
நடத்திக் கொண்டு இருக்கையில

இந்த தேசியசாதிகொல வெறிக் கூட்டம் மடடும்,“ மதுரை விமான
நிலையத்துக்கு  சாதிகொல வெறி தெய்வத்தின் பெயரை சூட்டு” என்று
விமான நிலையத்தக்குள் முற்றுக்கை போராட்டம் நடத்தியிருக்கு.

இப்படிப்பட்ட,சாதி வெறி, கொலவெறி பேரவைகளையும்,கொலவெறி
சங்கங்களையும்,கட்சிகளையும், சாதிய அடக்குமுறைகளையும்
ஒடுக்குமுறைகளையும் களையெடுத்து ஒழிக்க பாடுபவதற்கு ரிய
வழிமுறைகளை ப்பற்றி அம்பேத்காரின் இடஒதுக்கீட்டில்வந்த
 முன்னால் எஸ்.பி.சிந்திக்காமல்... சாதிவெறி அதிகாரிகளைப்
போலவே சிந்தித்தள்ளார்.
.

தீண்டதகாத சாதியின் சலுகைகளைப் பெற்று மேல்வகை சாதியாக
 நாங்களும் ஆண்ட பரம்பரைதான் என்று சொல்லிக்கொண்டு
இன்னுமொரு ஆண்ட பரம்பரையாக, தனக்கு கீழ் உள்ள சாதிகளை
ஒடுக்கும் சாதி கொல வெறியர்களாக மாறுவதற்குத்தான் மள்ளர்
சாதி வெறி பயன்படத்தவே அடிகோலும் என்பதைத்தவிர சாதி
ஒழிப்புக்கு நிச்சயமாக பயன்படாது.


இதைத்தான் அம்பேத்காரும் இடஒதுக்கீட்டால் எம் மக்களில் ஒருசிலர் ஆளும் வர்க்கமாக மாறி எம் மக்களின் அடிமைத்தனத்தை
போக்குவார்கள் என கணவு கண்டார். அவர்கண்ட கணவு அவர்
வாழ்நாளில் சிதறுவதைக் கண்ட அவர் தம் கடைசி நாட்களில்
  இப்படி கூறினார்.
அம்பேத்கார்



அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆளும் வர்க்கமாக
எம் மக்களைக்காண ஆசைப்பட்டேன். இன்றோ. என்னால் ஆன
பலன்களை படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர். அதை அவர்கள்
தங்களின் சுயநலத்திற்கும், சொந்த லாபத்திற்குமே பயன்படுத்தி
 என் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டனர். அம்பேத்கர் உழைத்த உழைப்பும்
வீனாகிப்போய்விட்டது.

என்னதான் ஒடுக்கப்பட்டசாதிக்கட்சிகளும் ஓட்டுஅரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பிறந்த நாளை சடங்குத்தனமாக கொண்டாடினாலும்
அம்பேத்கார் கண்ட கணவு பலிக்கப்போவதில்லை

இதைத்தான் நக்சல்பாரி பரம்பரையில் வந்தவர்கள் சொன்னார்கள்.
 இட ஒதுக்கிட்டினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு நண்மை
கிடைப்பதற்க்காக, இடஒதுக்கீட்டை ஆதரிக்க முடியாது. எதிர்க்கவும்
முடியாது. இடஒதுக்கீடே தீர்வாகவும் முடியாது . நக்சல்பாரிகளின்
தலைமையில் அமைகின்ற புதியஜனநாயக அரசியலமைப்பில்தான்
அடக்கு முறையும் ஒடுக்குமுறையும் இல்லாது ஒழிக்க முடியும்.
அதுவரைக்கும் எந்த குருக்கு வழியும் கிடையாது என்பதுதான் உண்மை
நக்சல்பாரிகள்





ஞாயிறு 08 2012

வீரமாய் வழுக்கி விழுந்த வீ......வீ.ரத் துறவி....

புல் தடுக்கி விழுந்த வீரனையும், டாஸ்மாக் புல் அடித்த
விரனையும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை

ஆனால். வீரமாய் சென்று வீரமாய் தடுக்கி விழுந்த வீரத்
துறவியைப் பற்றி பெரும்பாலானேர் தெரிந்திருக்க வாய்ப்
பில்லை.

அட,என்னங்க, நீங்க ,வீரத்துறவியை பற்றி தெரிஞ்சா
தெரியும்னு சொல்லுங்க, தெரியலைன்னா தெரியலைன்னு
சொல்லுங்க! இல்ல பேசாம சொல்றத கேட்டு அதிலிருந்து
தெரிஞ்சுக்ங்க..............................

வருடா வருடம் தீபாவளியின் போது “ இந்துக்களே! இந்துக்
கடையிலேயே வாங்குங்கள்”,.. “ இந்துக்களே!! காமசூத்ரா
ஆனுறை போன்ற இந்து மனம் கமழும் இந்து பொருட்களையே
வாங்குங்கள்” என்று முப்பதுகோடி தேவர்கள் புடை சூழு..........

பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்க்காக
நாத்திகர்களை வம்புக்கு இழுக்கும்  இந்து முன்னணியின்
நிறுவன அமைப்பாளர் இராமா.கோபாலா.... என்ற வீரத்
துறவிதாங்க..........அவரு.!!!!



ஈரோடு மாவட்ட வன்னியர் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து வீரமாய் பேசுவதற்க்காக வந்தவரு......
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணித் துணைத்
தலைவர் புாசப்பன் வீட்டிலுள்ள பாத்ரூமுக்குள் வீரமாய்
போனவரு , வீரமாய் வழுக்கி வழுந்திட்டாருங்க.......

கண்ணு பருவத்திலும்,இடது கையிலும் வீரத்தினால்
காயம் ஏற்ப்பட்டதினால, அகில ஒலக பார்வதிதேவி
சரஸ்வதி,லெட்சுமி போன்ற தேவிகளிடம் வேண்டி
விரதம் புாண்டு அருள் பெறாமா...

தனியார் ஆஸபத்திரியில் அதுவும் அவசர பிரிவில்
சேர்க்கப்பட்டு இருக்காருங்க,.

சிகிச்சை முடிந்த பிறகு.விரமாய் சென்று வீரமாய் வழுக்கி
விழுந்ததில்,பாகிஸ்தான் அய்.எஸ. அய்,தேசத்துரோகிகள்
மற்றும் பயங்கரவாதிகள் சதி என்று வீரமாய் பேட்டி
அளிப்பாருங்கோ,....

 சீ.பீ.அய்,புல்அய்வு,மற்றும் இந்து நாட்டின்முப்படைகளும்
களத்தில் குதித்தாலும் குதிக்கலாமுங்கோ?????
அப்ரானி,சப்பானி போன்றவர்களுக்கு திண்டாட்ட்ம் தாங்கோ???

உதவி-- கண்ணை மறைக்கும் காவிப்புழுதி.-- புதிய கலாச்சாரம்
வெளியீடு.



...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...