பக்கங்கள்

சனி 01 2016

சண்டாளி என்ன நேரத்தில் வந்தாளோ..........

அவள் வீட்டுக்
கோழி என்
வீட்டை கிளரி
நாசப் படுத்தும்

அவள் செல்ல
நாய் என்
வீட்டு வாசலை
மறித்து என்னை
பய முறுத்தும்

அவள் வீட்டுப
பூனை அவள்
முன் குறுக்கே
போனால் பச்சை
பச்சையான  வசவு
எனக்கு கிடைக்கும்


அவள் கழுவி
விடும் கழிவு
நீர் என்வீட்டு
வாசலில் தேங்கும்

சொல்லிப் பார்த்தாயிற்று
சண்டையும் போட்டாயிற்று
அடங்கவில்லை அசரவில்லை
எமகாத சிறுக்கியவள்..

என் கனவர்
எதிர்த்து கேட்டபோது
அவள் குளிப்பதை
பார்ப்பதாக பொய்
புகார் கொடுத்தாள்

போலீசும் அவளுக்கு
பலலிளித்து என்னவரை
அடித்து உதைத்து
வழக்கு போட்டு
சிறையில் தள்ளியது

சன்டாளி என்ன
நேரத்தில் வந்தாளோ
நீதி நியாயம்
நேர்மை எல்லாம்
இல்லாம நாசமா
போச்சு சதிகாரி
ஆசு பத்திரியில்
சீரியசா கிடக்காளாம்
இவ செத்தா
தான் எனக்கு
நிம்மதி போல......






வெள்ளி 30 2016

சார், மயிறு வளர்கிற வேகத்துல........

சார்.. மயிறு
வளர்கிற வேகத்துல
எனக்கு அறிவு
வளர்ந்துச்சுன்னா நான்
இந்நேரம் கவுன்சிலராக
ஆகி எம்எல்ஏவாக வந்து
அமைச்சராகி இருப்பேன்
சார், என்னவோ
என் போதாத
காலம் உங்ககிட்ட
எல்லாம் நான்
எருமை மாடுகூட
மேய்க்க லாயக்கு
இல்லன்னு பேச்சு
வாங்க வேண்டி
இருக்கு காலக்
கொடுமை சார்
 தல மயிற
வெட்டி  ஒரு
மாதம் கூட
ஆகல அதுக்குள்ள
தல மயிறும்
தாடியும் வளர்ந்து
விட்டது சார்,


வியாழன் 29 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

செவ்வாய் 27 2016

வர வர கிழவருக்கு மறதி அதிகமாயிருச்சு....

வயது ஏற
ஏற கிழவர்களுக்கு
மறதி வந்துடுமோ.....
அந்தக் கிழவர்
சொல்வதைப் பார்த்தால்
அப்படித்தான் தோன்றுகிறது.

ஒரு நாள்
நள்ளிரவில் ரவுடித்
துறையைச் சேர்ந்த
பதிமூன்று பேர்கள்
சேர்ந்து அவரை
அய்யோ அம்மா
அய்யோ அம்மா
என்று கத்த
விட்டது தெரியாமல்
தன் மகளை
ஏய் என்று
விளித்த ரவுடியை
மறந்து அந்தத்
ரவுடித்துறை ஸ்காட்லாந்து
ரவுடித்துறைக்கு ஈடாக
பாராட்டப்பட்டது என்றும்

அந்த ரவுடித்துறைக்கு
பாராட்டு பத்திரம்
வழங்குவதில் இருந்து
வர வர பெரிசுக்கு
மறதி அதிகமாகத்தான்
ஆகி இருக்கு........

படிக்க ரவுடித் துறையைத் மேலும் தெரிந்து கொள்ள.

திங்கள் 26 2016

நீங்க தப்பா நிணைக்கலன்னா......

அண்ணே..என்னை
நீங்க தப்பா
நிணைக்கலன்னா அந்த
இரகசியத்தை உங்கிட்ட
மட்டும் சொல்றேண்ணே..

அது வந்துண்ணே..
ம்..ம்ம்.. உங்ககிட்ட
சொல்றதுக்கு என்ன

கொஞ்சம் குடிக்க
தண்ணி குடுங்கண்ணே
குடிச்சுட்டு சொல்றேன்....

அது வந்துண்ணே
நம்ம கிழவி
இருக்குல கிழவி
அதுனால  நடக்க
முடியலண்ணே இந்த
லட்சனத்துல அது

பக்கத்து வீட்டில
உள்ள கிழவன
ஈசி சேர்ல
இருப்பதை பார்த்து
கிணடல் அடிச்சுதுண்ணே
கிழவன் தன்னை
கிண்டல் பன்னிட
கூடாதுன்னு நிணச்சு
வெள்ளையாக தெரிந்த
தல முடிக்கு
கருப்பு  டை
அடிச்சிட்டு   குமரி
மாதிரி சந்தோசமா
இருந்துசுண்ணே இன்னிக்கு
அந்தக் கிழவி
கிழவனுக்கு முன்னாடியே
வண்டிய  விட்ருச்சுண்ணே......


ஞாயிறு 25 2016

சாதிவெறியர்களின் ஆணவ படுகொலைக்கு எதிராக...

அடியே.. அம்சு
நீ.....மற்றவர்கள்
பார்ப்பதற்கு அம்சாமாக
இருந்தா  மட்டும்
பத்தாதிடீ கொஞ்சம்
அறிவும் அதிக
 தைரியமும் வேணும்
டீ   உனக்கு....


நீ..என்ன
சாதிவெறி  கொல
வெறி பிடித்த
சாதி தாஸ்சுகளுக்கு
பயந்து தன்
காதல் இளவரசனை
பலிகடாக ஆக்கி
வீட்டு வீட்டுக்கு

உள்ளே முடங்கிக்
கிடக்கும் திவ்யான்னு
நிணச்சியா நம
கௌசல்யாவ..போடீ
இவளே...  சாதிவெறி
ஆணவக்  படுகொலைக்கு
தன் காதல்
கணவரை இழந்த
பின்னும் வீட்டுக்குள்ளே
முடங்கிக் கிடக்கலடீ
நம்ம கௌசல்யா

சாதி வெறியர்களின்
சாதிவெறி ஆணவக்
படுகொலைக்கு எதிராக
சாதிவெறி மிருகங்களை
சாடி பேசியிருக்குதுடீ
நம்மோட கௌசல்யா....

படம் உதவி--Aanandha Gowthaman உடன் Marx Pandian
சாதி ஒழிப்பு முன்னணியினரால் சாதி ஆணவப் படுகொலை எதிர்ப்பு பிரச்சார இயக்க கூட்டம் சேலத்தில் நடை பெற்றது.கூட்டத்தில் சாதி ஆதிக்க வெறியர்களால் கொல்லப்பட்ட உடுமலைபேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா உரையாற்றினார்

முட்டாள்களே !
சங்கரின் காதல் நாடகமாய் இருந்திருந்தால் இந்த பெண் ஏன் மேடை ஏறி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக முழங்க வேண்டும். சாதி ஆணவத்திற்கு பெண்களே பாடை கட்ட முடியும்.தன் சொந்த சாதிக்கு பிள்ளை பெற்றுத்தர மறுப்பதன் மூலம்.Image result for சங்கர் கௌசல்யா

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...