| படம்- |
சொக்கனின் மனைவியான சொக்கியும், சொக்கியின் கனவனான சொக்கனும் கடைத் தெருவுக்கு சென்று வீட்டுக்கு தேவையான சில சில்லரை சாமான்களை வாங்கி, ஆளுக்கொரு சுமையாக சுமந்து கொண்டு வீதி வழியாக உலா வந்து கொண்டு இருந்தனர்.
அப்படி வீதி வழியாக வந்து கொண்டு இருந்த பொழுது ரோட்டு ஓரமா இருந்த சனியை ..அதாவது அரசு சாராயக்கடையைப் பார்த்தும் சொக்கனுக்கு கைகால் படபடத்தது. உடன் சொக்கி வந்து கொண்டு இருந்ததால்... அந்தப் படபடப்பை கஷடப்பட்டு அடக்கிக் கொண்டு. கவனமில்லாமல் பறிகொடுத்தவன். போல ஏக்கத்துடன் கடையை பார்த்தவாறே நடந்து வந்து கொண்டு இருந்தான்
தன் பேச்சுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்த தன் கனவன் திடிரென்று பதில் சொல்லாமல் வருவதைக் கண்டு சொக்கனை பார்த்த சொக்கி.. சொக்கனின் பார்வையை செல்வதைக் கண்டு . சொக்கனின் பார்வையை தன் பக்கம் திருப்பினாள்...
வீதியில் போவோர் சொக்கியை உற்றுப்பார்த்த வண்ணம் சென்றதை கவனித்த சொக்கன்.. சொக்கியை கவனித்தான். சொக்கியின் மாறாபபு ஒரு பக்கமாய் விலகி இருப்பதைத்க்கண்டு. சனியின் மேல் உள்ள பார்வையை விலக்கிவிட்டு, முன்னால் சென்று கொண்டு இருந்த சொக்கியை நெருங்கிச் சென்று சொக்கியிடம் மாறாப்பை சரி செய்யச் சொன்னான்.
சொக்கி புன்னகை புரிந்தவளாக..... நீ அங்க பார்வையைச் செலுத்தியதால்தான் ரோட்டுல போறவன் இங்க பார்வையை செலுத்துறான். என்றான்.
சொக்கியின் மாறாப்பு சரியா இரருப்பதைக் கண்ட சொக்கன் சரி..சரி... சீக்கிரமா... வீட்டுக்குப் போகலாம் என்று எட்டு வைத்தான். இரண்டு மூன்று சாராயக் கடையை கடந்து வந்தபோது.... சொக்கி கேட்டாள்.
ஏ..மச்சான். அடுத்த வருசம் சாராயக் கடையை எல்லாம் அடச்சிடுவாங்களே!!
அப்போ..இந்தக் குடிகாரன்க... எல்லாம் குடியை விட்டு விடுவாங்களா. மச்சான்.
சொக்கி கேட்ட இந்த கேள்விக்கு சொக்கனால் பதில் சொல்லமுடியவில்லை.. தீவிரமாக யோசித்துக் கொண்டே வந்தான்.
என்ன..மச்சான்.. நாங்.... கேட்டதுக்கு பதிலையே காணோம்..என்றாள்
நா..ஒரு கேள்வி கேக்றன்.. நீ பதிலச் சொல்லு.. அதிலே..நீ கேட்ட கேள்விக்கும் பதில் இருக்கும் என்றான் சொக்கன்..
அப்படியா......!! கேளு... பதிலச் சொல்றேன் என்றாள் சொக்கி.
சன் டீவிய மூடப்போறாங்களாம்.... அப்படி சன் டீவிய மூடிட்டா....சன் டீவி சேனல்ல வர்ர தொடர விடாம பாத்து வர்ர நீ... என்ன பன்னுவ.... என்று கேட்டான்.சொக்கன்
சொக்கி தாமதிக்காமல் பதில் சொன்னாள் “மூடிட்டா. அதுக்கென்ன பன்றது. அடுத்த சேனல்ல வர்ர தொடர பார்ப்பேன் என்றாள்.
சொக்கன் இப்போது சிரித்தான்.
சொக்கன் சிரித்ததை புரிந்து கொணடால் சொக்கி.
நீ சேனல மாத்திக்கிற மாதிரி , குடிமகனகளும் வேறு வழிய மாத்தி குடியை தொடருவாங்கே...டீ....என்றான். சொக்கன்.

