பக்கங்கள்

சனி 28 2016

அதிகாலை கனவுகள்.1



                           



சில நாட்களில் சில நேரங்களில்  எனக்குஅதிகாலையில் நல்ல தூக்கம் ஏற்ப்படுகிறது. அந்த நல்ல தூக்கத்தின் போது பல கனவுகள் நல்லதுமாய் கெட்டதுமாய்..... அப்படி தோன்றுகின்ற கனவுகளில் பல மறந்துவிடுகின்றன. சில மனதில் நின்றுவிடுகின்றன... மறக்காமல் நினைவில் நின்று விடுகின்ற கனவுகளை  உள்ளது உள்ளபடி அதிகாலை கனவுகள் தலைப்பில் தொடராக மேலான நண்பர்களுக்கு....... பதிவிடுகிறேன்

கனவில் தொலைந்த செருப்பு..நிஜத்தில் கிடைத்தது...

பெய்த பெரு மழையில் பஸ் செல்லும் ரோடெல்லாம் வெள்ளம் ஓடிக் கொண்டு இருந்தது. செல்போன் கம்பெனி தகவல் சேவை மையத்தின் அலுவலகம் இருக்கும் அபர்னா டவரின் அய்ந்தாவது மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்... அய்ந்தாவது மாடியில் எனக்கு என்ன வேலை என்றால். தகவல் சேவை மையத்தின் ரசீதுகளை தேதி வாரியாக பிரித்து பைண்டிங் செய்வது என் வேலை... அலுவலக பணியாளரின் உணவுகூடத்தின் முன்பாக எனக்கு பைண்டிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு நாற்காலியில் அமர்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கையில். நிறுவனத்தின் H.R பெண் மேலாளர்.  . நான் இருக்கும் இடத்திற்கு வந்தார். வந்தவர் கையில் தனித்தனியாக கிழிந்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டி இது என்னோட பையனின் புத்தகம் அக்கக்காக கிழித்துவிட்டான். இதை உடனே பைண்டிங் செய்து தாருங்கள் என்றார்.

வெளியில் மழை பெய்கிறது.. மழை நின்றவுடன் வீட்டிற்கு சென்று செய்து கொண்டு வருகிறேன் என்ற போது....

அய்யோ...எனக்கு அதெல்லாம் தெரியாது..  நான் ஆபீஸ முடிந்து வீட்டுக்கு போகும்போது எனக்கு என் பையனின் புத்தக்தை பைண்டிங் செய்துதர வேண்டும்  என்றார்.

இவர் வந்தவுடன் நிர்வாகத்துக்கு சிக்னம் பிடித்து  தருவதற்க்காக  ரசீது பைண்டிங்  மூலம் வந்து கொண்டு இருந்த என் வருவாயின் பாதியை நிறுத்தி அதன் மூலம் பெருமை தேடிக் கொண்டவர்..  பின்பு A4சைஸ் டாக்குமெண்ட்களை மட்டுமே பைண்டிங் செய்து வந்து கொண்டு இருந்தேன். பின் கொஞ்ச நாளில்  மத்திய அமைச்சர்  ஒருவரின் புன்னியத்தில் கம்பெனியே கைம்மாறிப்போனபோது இந்த H.R.உள்பட பலர் காணாமல் போனது வேறு விசயம்... இப்போது கனவு கதைக்கு வருகிறேன்.

கண்டிசனாக சொல்லிவிட்டு H.R சென்றுவிட்டார்கள்...பைண்டிங் செய்தாலும் இவர்  காசு தர மாட்டார். கேட்டால் நாங்கள் வேலை தறோம்ல என்பார்.... ஒரு நாள் இவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி அணிந்த்து அலுவலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

அந்த நிணைப்பில் ரெண்டு ஆயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி அணிந்து எல்லாரும் பேசுவதைக் கேட்டு பெருமைப்பட வசதி இருக்கிற இவர்.. தன் ஒரு மகனின் புத்தகத்தை பைண்டிங் செய்வதற்கு காசு தராமல் ஓசியில் வாங்கிக் கொள்ள அந்த மழையிலும் எனக்கு உத்தரவு போட்டுவிட்டு புத்தகத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது.  புத்தகத்தை பாலீதின் பையில் கொண்டு போனாலும் சுத்தமாக நான் நணைந்து விடுவேன். ஈரத்துடன் வீடு சென்றாலும் பைண்டிங் செய்ய முடியாது. மழையை வேடிக்கை பார்த்தபடி என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த போது. செக்ருட்டி வந்தார்..

அண்ணே.. மேடம் புத்தகத்தை பைண்டிங் செய்துட்டீங்களா? என்றார்  ஓ.. செய்திட்டேன் போய் கொடுங்க என்று புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.
வாங்கியவர் என்னண்ணே... அப்படியே கொடுக்குறிங்க என்றார்.

அடிக்கிற பேய் மழையில...இந்த பேயி..கொடுத்த புத்தகத்தை எப்படி பைண்டிங் செய்வது. சொல்லுங்க.. அதனால்தான்.... அப்படியே போய் கொடுங்க என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்றேன்.

சரி. என்று கொண்டு போனார்..... சிறிது நேரத்தில் ஆபீஸ் பாய் வந்தான் அண்ணே மேடம் கூப்பிடுறாங்க என்று வந்தான்..

அய்ந்தாவது மாடியிலிருந்த நான்காவது மாடியில் இருக்கும் அந்த மேடத்தை பார்க்க படிகளில் சென்ற போது பளிங்கு படிகளில் இருந்த மழை தண்ணிரின் ஈரம் வழக்கியதால் செருப்பை கழட்டி கையில் பிடித்துக்கொண்டு. அவர் அறைக்கு அருகில். எனது செருப்பை..  வெளியே ஓரமாக வைத்துவிட்டு விட்டு உள்ளே சென்றேன்..

என்னைவிட எச் ஆர் ஒரு அடி உயரமான கூடுதல தகுதி இருந்தாலும் வயதில் நான் மூத்தவனாக இருப்பதால. சில நேரங்களில்...இந்தா பைண்டரே என்பதற்கு பதிலாக மறந்து போயி இப்படி  மரியாதையாக பேசுவார்.

என்னங்க.. பைண்டிங் செய்யாம அப்படியே தர்றீங்க  என்றார்.. மழை நின்னாத்தான் செய்ய முடியும் என்றேன்..அய்யோ  நாளைக்கு நான் லீவுங்க..அதான் இன்னிக்கே கேட்டேன் என்றார். பைண்டிங் செய்யாமல் தைத்து மட்டும் தருகிறேன் தாங்கள் வேலைக்கு வந்தபின் காலையில கொடுத்துவிடுங்கள் வீட்டுக்கு செல்லும்போது கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு தைத்து  கொடுத்தேன்.... இவர்க்காக நான்காவது மாடிக்கும் அயந்தாவது மாடிக்கும் அலைந்த்தினால் என் செருப்பு நிணைவுக்கு வரவில்லை. மழையும் விடவில்லை.எல்லோரும் சென்ற பின்பு நான்  நனைந்தாவது வீடு செல்ல வேண்டும் என்ற நிலையில் செருப்பை தேடியபோது என் செருப்பைக் காணவில்லை. இரு நூறு ரூபா செருப்பு வாங்கி இரண்டு நாள்கூட ஆகவில்லை...

.
எல்லா இடத்திலும் தேடியபோதும் செருப்பு கிடைக்கவில்லை.. H.R- ரெண்டாயிரம் செருப்பை பார்த்த எனக்கு அந்த செருப்புதான் என் கனவில் வந்தது நான் பார்த்து வாங்கிய  செருப்பு  வரவில்லை.

பாவிகளா ரெண்டாயிரம் செருப்ப தூக்காம இரு நூறு ரூபா செருப்ப போயி...தூக்கிட்டீஙகளேடா... என்று புலம்பத்தான் தோன்றியது.... ரெண்டாயிரம் செருப்பு மீண்டும் மீண்டும் மறையாமல் வந்து நின்றது.அந்த செருப்பை உற்று பார்க்க நிணைத்தபோது...

விழிப்பு ஏற்ப்பட்டது... மணியைப் பார்த்தேன். காலை ஆறு.. எழுந்தவுடன் ரெண்டாயிரம் செருப்புதான் நிணைவுக்கு வந்த்து என் செருப்பை தேடினேன். காணவில்லை. விடாப்பிடியாக தேடினேன். அன்று இரவு பெய்த மழையில் என் வீட்டை சுற்றி தேங்கிய நீரில் . என் செருப்பு மழையில் நணைந்த படி   களவு போகாமல் பத்திரமாக  ஆடிக் கொண்டு இருந்தது.



வெள்ளி 27 2016

வித்தகம் பேசிய கோர்ட் அமீனா..



காலை ஏழு மணி. அவர்  வீட்டின் வாசலில் நின்று இங்கு கணேசன் என்பவர் யார் என்று கேட்டார்.

கைப்பனியனும் கைலியும் அணிந்திருந்து வாசற்படியில அமர்ந்திருந்த ஒருவர்  நான்தான் கணேசன் என்ன விசயம் என்று கேட்டார்.

மாவட்ட கோர்ட்டிலிருந்து உங்கள் பெயருக்கு சம்மன் கொடுக்க வந்திருக்கும் அமினா என்றார்.

வீட்டின் வாசற்கதவருகில் உட்கார்ந்திருந்தவர் ஒரு நிமிடம் என்றபடி வீட்டிற்குள் இருந்த இரண்டு சேர்களை எடுத்து வாசல் முன் போட்டு வந்தவரை அமரச் சொன்னார்.

சம்மனை வாங்கி பார்த்துவிட்டு. இனிசியலை தப்பாக போட்டுவிட்டார்க்ளே என்று அவரிடம் கேட்டபோது..அது பெரிய விசயமில்லை உங்கள் வக்கிலிடம் சொல்லி சரி செய்து கொள்ளலாம் என்றார்.

கையெழுத்து போட்ட பேப்பரை வாங்கிக் கொண்டு  “ தங்கள் வீட்டு முகவரியை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன் என்றார்.
இவர் சம்மனில் உள்ள முகவரியை சுட்டிகாட்டி தெட்டத் தெளிவாக எழுதப்பட்ட  இந்த முகவரியைக் கண்டுபிடிக்கவா  ரெம்ப சிரமப்பட்டீர் எனறு கேட்டார்.

“ ஆமாம் சார்எனற்ர் அமீனா.

“ தாங்கள் உள்ளுரா...? வெளியூரா...ஃ என்று கேட்டார் இவர்.

 “ உள்ளுர்தான் என்ற போதும். இந்த முகவரியை கண்டுபிடிக்க சிரமப்பட்டேன் சார்எனறார் மீண்டும்.

“ அப்படியாஎன்றவரிடம்  செலவுக்கு கொடுங்கள் என்றார். வந்தவர்.

“என்ன செலவுக்கு என்றார் இவர்

தங்கள் முகவரியை அலைந்து தேடி கண்டுபிடித்து உங்களிடம் சம்மனை சேர்ப்பித்தற்கு என்றார்.

“ இப்படி கொண்டு வந்து கொடுப்பது கோர்ட்டில் வேலை செய்யும் உங்கள் பணிதானே... இதற்கு நான்..ஏன் செலவுக்கு கொடுக்க வேண்டும் என்றார் இவர்.

“ சார், தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. பிரியப்பட்டு தாங்கள் கொடுக்க வேண்டும் எனற்ர்.

“ அப்படி எதுவும் கொடுத்து எனக்கு பழக்கமில்லை... சரி.. எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் இவர்

“ தாங்கள் பார்த்து கொடுங்கள் என்றார் வந்தவர்.

“ அதான் சொன்னேன்னே.. எனக்குகொடுத்து பழக்கமில்லை.. வாங்கியும் பழக்கமில்லேன்னு... எவ்வளவு வேண்டும். சும்மா கூச்சப்படாமல் கேளுங்கள் என்றார் இவர்.

“ வந்தவர் ஒரு இரு நூறு ரூபா கொடுங்கள் என்றார்.

“ இரு நூறு ரூபாயா? அதிகமாக இருக்கிறதே.... என்றார்.

“எல்லோரிடமும் வாங்குவதைத்தான் கேட்ககிறேன். சார் என்றார் அவர்.

“ தாங்கள் பதிலீயா... நிரந்தரமா..? என்று கேட்டார் இவர்.

“ நிரந்தர பணிதான் சார் “ என்றார் வந்தவர்.

“ அப்படினா..... ஒங்களுக்கு சம்பளத்துடன் எல்லா சலுகையும் கிடைக்குமே என்றார். இவர்.

“எல்லாம் கிடைச்சு என்ன சார் செய்ய,படித்து முடித்த என் மகளை வேலையில் சேர்க்க பதிணைந்து லட்சம் கேட்க்கிறார்கள். அதைக் கொடுத்து வேலையில் சேர்க்க முடியவில்லை சார் என்றார்.

“ நீங்கள் என்னிடம் கேட்பது மாதிரிதானே... அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள் என்றார் இவர்.

அப்படியில்ல சார். இது வேற...அது வேற..சார்.... இது பிரியப்பட்டு வாங்கிறது. ரெண்டும் ஒன்னாக முடியாது சார்.“ என்றார்.

“ நீங்கள் கேட்பது சின்ன மீன்.. அவர்கள் கேட்பது பெரிய மீன்.. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.. இவர்.

“உட்கார்ந்திருந்து எழுந்த வந்தவர். “சார் . இருநூறு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா சார் என்றார்

“ கோபிக்க கூடாது.. என் தொழிலிலே அப்படித்தான்.. என்றபடி சுவற்றில் அடித்திருந்த போர்டை பார்க்கச் சொன்னார். எனது தொழில் அச்சு தொழில் ஆயிரம் எண்ணிக்கை ஒரு கலர் அடிப்பதற்கு கூலியாக இருநூறு ரூபாய்தான் வாங்கிறேன். பேப்பர் . தனி... அந்த இரு நூறு ரூபாய்க்கு..மைவிலை ஏறிப்போனதையும்.. விலைவாசி ஏறிப்போனதையும் பெட்ரோல், மின்சார பில் கூடிப்போனதையெல்லாம் வாடிக்கையாளரிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கறதுக்குல்ல எனக்கு தொண்டை தண்ணி வத்தி போயிரும்.. அதோடு நெருங்கியவர்கள்.. மிக வேண்டப்பட்டவர்கள் நண்பர்கள், வந்தால் அந்த இரு நூறு கூலியில் கொஞ்சம் குறையும்... இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா...? என்றார்.. இவர்.

“ எனக்கு தெரிஞ்சு என்ன சார், என்றார் வந்தவர்.

“ம்ம்ம்.... அப்படியா...? இருங்க..மாவட்ட கோர்ட்டிலிருந்து என் வீட்டுக்கு வர  சாதாரண பஸ்சுல ரெண்டு பஸ்சுல  ஏறி வந்தாலும்  12+12=24 ரூபாய்தான்  டஜிட்டல் மிதவை பஸ்சுல வந்தால் 18 +18= 36 ரூபாய்தன் ஆகிறது.. ஒரு டீ சேர்த்தால் மொத்தம் ஐம்பது ரூபாய்தான் ஆகிறது. இந்த வேலைக்கு போயி இருநூறு ரூபாய் கேட்டால் எப்படி தலைவா...? என்றார் இவர்.

“அப்படியா...சார். நான் சொல்றதையும் நீங்க கோபப்படாமா... சிந்தித்து பார்க்கனும்.. இந்த சம்மனுக்கு கோர்ட்ல ஆஜராக.. ஒரு வக்கீல பாப்பீங்க.. இல்லயா...அந்த வக்கீலு பீச ரெண்டு மடங்கு உசத்தி கேட்பாரு... நீங்க குறைச்சு போடுங்க சார் என்று கேடப்பீங்க..இல்லையா.. சார்.. அந்த வக்கீலும் குறைக்கிற மாதிரி ஏத்துனதுல கொஞ்சம் குறைப்பாரு... உடனே நீங்களும் குறைச்சத நிணச்சு சந்தோசப்படுவீங்க...அதோடு அந்த வக்கீலின் குமஸ்தாவுக்கும் படி அளக்கனும் கொடுக்கனும் கொடுக்காவிட்டால் காரியம் நடக்காது.  என்கிட்ட பேசின மாதிரியா சார் வக்கீலிடம்  வக்கீல் குமஸ்தாவிடமும் பேசுவீங்க.... என்றார் வந்தவர்.

“ பேசாமல் சற்று அமைதியாக இருந்தவர். சற்று பொறுங்கள் என்று கூறி.....விட்டு  வீட்டிற்குள் சென்று பின் வந்து பின்  அவரிடம்  வந்து இருநூறு ரூபாயை கொடுத்தார்.

“ அந்த இருநூறு ரூபாயை வாங்கியவர்...“ உங்களிடம்தான்.. இவ்வளவு பேசியிருக்கேன் சார்..  நல்லது சார் வர்ரேன் என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தார். இவரும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்

“வீட்டிற்குள்ளிலிருந்து வெளியே வந்த அவருடைய மருமகன்.. இருநுறு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா.... என்று கேட்டார்..

“ உன்னிடம் இருநூறு ரூபாய் கேட்டதற்கு...இரு நூறுரூபாயா?? என்று நீயும் கேட்டாயே அய்யா...  அதற்குத்தான் இவ்வளவு என்றார்.

“ சார். என்றபடி.. திரும்பி வந்தார்.. அமீனா.. வந்தவர். ஒரு நூறு ரூபாயை இவரிடம்  சட்டென்று தந்துவிட்டு  நூறு ரூபாய் போதும் சார். என்றுவிட்டு  வர்ரேன் சார் என்றபடி வேகமாய் சென்று மறைந்தார்.

“ கிழிந்த நோட்டை கொடுத்து விட்டதால் வந்துவிட்டாரோ என்று சந்தேகப்பட்ட அவர்  ரூபாயை பார்த்த போது  நல்ல நோட்டாகத்தான் இருந்த்து. . இந்தாப்பா என்று அமினா திணித்த .அந்த நூறு ரூபாயை மருமகனிடமே கொடுத்தார்.




வியாழன் 26 2016

அது என்ன சத்தம்.....??????



வெளியே போனவர்
வேகமாக திரும்பி
வந்தார் வந்தவர்
கொடியில் கிடந்த
லுங்கியை எடுத்து
கால் வழியாக
மாட்டி கிர்ர்ச்
என்ற படி
பேண்ட்டை கழற்றினார்
அவரை எதிர்பார்த்து
வெளியே அமர்ந்து
இருந்த ஒருவரைப்
பார்த்து ஒரு
நிமிடம் என்றவர்
கிழக்காக சென்று
வடக்காக திரும்பி
அறைக்குள் சென்று
படாரென்று கதவை
சாத்தினார் சாத்திய
ஒரு நொடியில்
டம்.... டம்
டமார் புர்ர்ச்ச்ச்ச்..
என்று சத்தம்
கேட்டது அது 
என்ன சத்தம்.....???


                            ----------------------

புதன் 25 2016

நகையை ஆட்டையை போட்ட கூட்டுறவு வங்கி....



வெங்கடேசன் என்ற விவசாயி.. தன்னுடைய மூன்று பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து பயிர் கடன் பெற்றார்.

விவசாயம் சரியில்லாத காரணத்தால் இரண்டு ஆண்டு கழித்து தன் அடகு வைத்த நகையை திருப்பச் கூட்டுறவு வங்கிக்குச் சென்றார்.

அங்கிருந்த கூட்டுறவு வங்கியின் செயலாளர் தனசேகரன் மற்றும் வங்கி கிளார்க்குகள் “ உங்களுடைய நகையை ஏற்கனவே, நீங்கள் திருப்பி விட்டீர்களே... என்று ஒரே போடாக போட்டனர்

சற்று அதிர்ச்சி அடைந்த விவசாயி... சுதாரித்து..“ அதெப்படி அடகு ரசீதும், கடன் அட்டையும் என்னிடம் இருக்கும்போது நான் எப்படி திருப்பி இருப்பேன் என்று பதிலுக்கு  மடார் மடார் என்று   போட்டு உடைத்தார்.

அரண்டு போன கூட்டுறவு செயலளர் மற்றும் கிளார்க்குகள் தாங்கள் அரண்டு போனதை வெளியில் காட்டிக் கொள்ளாமல். ஏய்.. என்ன நாங்க யாரு தெரியுமில்ல... எங்ககிட்டேயா என்ற ரீதியாக.வெங்கடேசனை மிரட்டினார்கள்.

அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத விவசாயி வெங்கடேசன். நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன், மேல் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று இவரும் பதிலுக்கு அவர்களை மிரட்டினார்.

வழக்கு போட்டால் வாய்தா போட்டே கொல்லும் நீதி மன்றமும், விசாரனை என்ற பெயரிலே நாளைக் கடத்தும் அதிகாரிகளும் அவர்களின் ஆட்கள்தான் என்பதை அறியாத கூட்டுறவு செயலரும் கிளார்க்குகளும். விவசாயி வெங்கடேசன் மிரட்டலுக்கு பின் வாங்கியதுபோல் ...உங்கள் நகை ஜெயராணி என்பவருக்கு மாற்றி கொடுத்துவிட்டோம். அதை திரும்ப வாங்கி உங்களிடம் கொடுக்கிறோம் என்று பக்காவா ரீல் விட்டனர்

இவர்களில் ரீலில் நம்பி காத்திருந்த விவசாயி வெங்கடேசனுக்கு அன்று மாலை ஒரு பழைய நகையை கொடுத்தனர். அதை வாங்க மறுத்து கூட்டுறவு துணை பதிவாளரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த துணைப்பதிவாளரோ.. ஏதாவது ஒரு நகையை வாங்கிச் செல்லுங்கள். பிரச்சினையை கிளப்பாதீர்கள் என்றார்.

நொந்து போன வெங்கடேசன்... அடகு வைத்த நகையை ஆட்டையை போட்ட கூட்டுறவு வங்கியின் மோசடி தொடர்பாக மாவட்ட கலெக்டர் வீர வீரராகவா ராவிடமும்  மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளரிடமும் புகார் கொடுத்து முறையிட்டார்.
.
கூட்டுறவு வங்கி ஆட்டையை போட்ட நகை கிடைக்குமா? கிடைக்காதா ?? என்ற விவரம் ஒன்றும் தெரியவில்லை..


செவ்வாய் 24 2016

பாத்தாக்கா... கொஞ்சம்... சொல்லுங்களேன்..



                          .................


100/சதம் ஒட்டு
போடச்சொல்லி
அறிக்கை விட்டவர்கள்
கண்ணா ஓட்டு
போட ஆசையா?
என்று வீதிக்குவீதி
பிரச்சாரம் செய்தவர்கள்
ஓட்டு போட்டதை
நீங்கள் பார்த்தீங்களா...??
அவர்கள் ஓட்டு
போட்டதை பாத்தாக்கா
கொஞ்சம் சொல்லுங்களேன்..


திங்கள் 23 2016

தொழிலாளிக்கு வகுப்பு எடுத்த முதலாளி...

அந்த உணவுக் கடைக்காரர். கடைக்கு வந்தவுடன். தன் கடைஊழியர்களை அனைவரையும் அழைத்தார். அவர்கள் எல்லோரும் தன் அருகில் வந்து நின்றபின் பேசினார்.

அய்யா.. எவனாவது. வந்து சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கலேன்னா... நீங்கள் கோபம் கொண்டு எதுவும் பேசிப்பிடாதிங்க. ..தின்னுபிட்டு தெனவெட்டா பேசுற நாயி எந்த நாயின்னு மொதல்ல தெரிஞ்சு பேசுங்க.... அப்படி தெனாவெட்டா பேசுறவன் ஒன்னு ரவுடியா இருக்கனும் இல்லேன்னா காக்கியா இருக்கனும்...ரெண்டு பேருமே...நமக்கு வேண்டாதவுக.....இவிங்களால  நம்ம தொழிலு கெட்டு போவதோட மன உளச்சலும் அலைச்சலும் அதிகமாகுது. அதனால...கவனமாக  வாயையும் கைகையும் நீங்க கவனமாக கையாளனும் என்றார்.

ஊழியரில் ஒருவர் சொன்னார்... ஏங்கய்யா ..இப்படி பயப்படுறீங்க..... இப்படி பயப்படுறனாதான்..வர்ரவனெல்லாம் நம்ம தலையில ஏறி மிதிக்கிறானுங்க ..
ஏய்... அய்யா...  காட்சியும் மாறல...ஆட்சியும் மாறல...இந்த லட்சனத்துல இப்படி..வீராப்பா...பேசி..நம்ம பொழப்புல மண்ண அள்ளி போட்டுடத..ய்யா.... என்றார் மொதலாளி...

ஒரு விபரத்தை சொல்றேன் கேளுங்க....மதுரையில அஞ்சாரு கடை வச்சிருக்கிறவர் கடையில... ஒரு காக்கி ஓசியில சாப்பிட்டதுமில்லாம... ஓசியில பார்சலும் கேட்டு இருக்கு காக்கி... சாப்பிட்டதுக்கே காசு தரல..இதுல  பார்சல் வேரையா...? ன்னு கேட்டு பார்சல் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.வந்ததே கோபம் அந்த காக்கிக்கு..... யானை கொட்டாச்சிய ஒதுக்கின மாதிரி மனசுல வச்சுகிட்டு. அன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு வந்து பார்சல் தர மறுத்தவரை அடிச்சு இழுத்துட்டுபோயி ஸ்டேசனுல அடச்சு வச்சுட்டு. தன் பவர காட்டி இருச்சு..... அந்த ஆளுக்கே அந்தக் கதின்னா.... ஒத்த கடைய வச்சுகிட்டு பொழப்ப ஓட்டுற நாம எம் மாத்திரம்.... அதனாலதான் உங்களுக்குச் சொல்றேன்  பாத்து சூதானமாக நடந்துகிங்கய்யா......

அப்போ..வர்ர நாய்க்கு சோத்தையும் போட்டு, பார்சலும் கட்டி கொடுங்கன்னு சொல்றீங்களா மொதலாளி என்றார்.துடுக்கான இளைஞர் ஒருவர்.

சொல்றத..புரிஞ்கிட்டா...நல்லதுதானய்யா....காக்கிய பாத்தி அய்யாவுக்கு   அனுபவம்..பத்தல...கொஞ்ச நேரம் ஒதுக்கி பேப்பர படிங்க..அய்யா.....

நம்ம சங்கமெல்லாம் என்னா செய்துகிட்டு இருக்கு... மொதலாளி.....இன்னொரு ஊழியர்.

ம்ம்ம் வெங்காயத்த உறிக்க முடியாம அழுதுகிட்டு இருக்கு... வேற என்ன செய்யும்..புகார் மனு கொடுக்கும் அதத்தாண்டி அந்த சங்கம் என்ன செய்துவிட முடியும்..

அப்படியெல்லாம் நமக்கு எதுவும் வேண்டாமுன்னுதான். “அப்போ..வர்ர நாய்க்கு சோத்தையும் போட்டு, பார்சலும் கட்டி கொடுங்கன்னு சொல்றீங்களா மொதலாளி..ன்னு அந்த அய்யா கிண்டலா கேட்டாரே.. அது மாதிரிஅதை இடம் பொருள்..ஏவல்..அறிந்து செய்கன்னு சொல்றேன்... ஞாபகத்துல வச்சுகிட்டு வேல செய்யுங்க அய்யா... என்றார்.

உணவுக் கடை ஊழியர்கள். மொதலாளி சொன்னதை கேட்டு உத்தரவுக்கு பணிந்து தங்கள்  வேலைகளில் கவனம் செலுத்த கலைந்தனர்.

செய்தி—் மதுரையில் ஓசியில் சாப்பிட்டதோடு... ஓசியில் பார்சல் தராத்தால் ஒட்டல் மேலாளரை தாக்கிய ஏட்டு........


                                     ............................................................................................................

ஞாயிறு 22 2016

நண்பரின் ஓட்டு போடாததின் இரகசியம்...





நண்பர் ஒருவர்
தான் ஓட்டு
போடாததின் இரகசியத்தை
சொன்னார். எனக்கு
எவனும் சரக்கு
வாங்கித் தரல 
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கொடுக்கல 
இந்தான்னு கையில
இருநூறு ரூபாயும்
தரல அதனால
நான் யாருக்கும்
ஓட்டு போட
வில்லை என்று
மை படாத
தன் விரலை
பெருமையாக காட்டினார்






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...