பக்கங்கள்

சனி 12 2016

ஒரு இயந்திரம் பேசியது.........

படம்-www.thinaboomi


வீட்டில் ஆறு
குழந்தைகள் இருக்க
இன்னொரு குழந்தைக்கு
என்னை தயாராக்கி
இருக்கிறான்
என் கனவன்
ஒரு  ஆண்
குழந்தைக்காக.......

                                     --- ஒரு பெண்

வெள்ளி 11 2016

தமிழகத்தில்தான் எத்தனை முதல்வர் வேட்பாளர்கள். ..???

படம்-tamil.oneindia.com


பத்தொண்பதாம் நூற்று
ஆண்டிலேயே அறிவிக்கப்
பட்ட சாதிவெறி
முதல்வர் வேட்பாளர்
அன்பு மணி சாதிதாஸ்

சினிமா பிரபலம்
அறிவிக்கப் படாத
ஆம்பிளை ஜெயலலிதா
கிங் மேக்கர்
எந்தப் படைக்கும்
கேப் டன்னாக இல்லாத
முதல்வர் வேட்பாளர்
விஜய காந்து..

தமிழகத்தின் நிரந்தர
சாராய சாம்ராஜ்ஜிய
அதிபதி ராணி
தமிழகத்தை சீரழித்த
புன்னியவதி ஸ்டிக்கர்
தலைவி நிரந்தர
முதல்வர் வேட்பாளர்

தேர்தல் பாதையான
திருடர் பாதையே
எங்கள் பாதை
சாயம் வெளுத்தும்
வலது இடது
கிளை கூட்டம்
தாலுகா கூட்டம்
மாவட்ட கூட்டம்
மத்திய கூட்ட
முடிவே  முதல்வர்
வேட்பாளர் முடிவு.

கழகமே குடும்பம்
குடும்பமே கழகம்
பிழைப்பு வாதத்தின்
 பிதா மகன்
சொன்னதை வழுவாக
பின்பற்றும் கழகத்தின்
குடும்ப வாரிசு....
முதல்வர் வேட்பாளர்
தளபதி  ஸ்டாலின்

இன்னும் இன்னும்
வந்ததுகள்..போனதுகள்
இருந்ததுகள்..இல்லாதததுகளும்
தமிழகத்து முதல்வர்
வேட்பாளர் பட்டியலில்
அணிவகுத்து வருகின்றன...

அய்யோ..பாவம்
தமிழகத்து வாக்கு
கூ ..மூட்டைகளை
குத்தி கிழித்து
நாச மாக்குவதற்கு
எத்தனை முதல்வர்கள்.!!!!


வியாழன் 10 2016

மானத்தை காக்க பலி கொடுத்த ... காதலர்கள்...

படம்-

அந்த ஆணுக்கு வயது இருபத்தி ஐந்த இருக்கும்.. அவருக்கு கலயாணம் ஆகி ஒரு குழந்தை உண்டு. அவரது மணைவி போலீசில் வேலை பார்க்கிறார்.போலீசில் வேலை பார்க்கும் காரணத்தால் இவரை கழற்றிவிட்டார்.


அந்தப் பெண்ணுக்கு வயது ஐம்பது இருக்கும் கணவரை இழந்தவர். ஒரு மகன் உண்டு. அந்த மகன் வெளியூரில் போலீசில் ஆயதபடைப் பிரிவில் வேலை செய்கிறார்.

25வயதுடைய அந்த ஆணும், 50 வயதுடைய அந்தப் பெண்ணும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். காலச் சூழ்நிலை காரணமாக இவர்களுக்குள் பழக்கமாகி அது காதலாக பிறந்து நாளொரு மேனியும் பொழுதுமாக..அந்தக் கிராமத்து ஊர்க்காரர்களுக்கும் தெருக்காரர்களுக்கும் உறவுக்காரர்களுக்கும் தெரியாத வண்ணம்.தனிமையில் சந்தித்து உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து காதலை வளர்த்து காதல் வானில் பறந்து திரிந்து வந்தார்கள்.

இவர்களின் காதலில் பொறாமை கொண்ட சதி. இவர்களுக்கு ஒரு விதி செய்ய காத்திருந்தது. ஆக விதியும் சதியும் சேர்ந்த அந்த நாளும் வந்தது.

அன்றைய நாளில் அந்தக் காதலர்கள் இருவரும் ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டின் சுவர் அருகே ஒதுங்கி தங்களின் காதலை உடலால் பறிமாறிக் கொண்டு இருந்தனர்.

அந்த வேளையில் சிவ பூஜையில் கரடி வந்த கதையாக... அந்த வீட்டின் இளம் பெண் இயல்பான வீட்டு வேலையின் காரணமாக வெளியே வந்தாள். வந்தவள் அந்தக் காதலர்கள் உடலால் உறவாடிக் கொண்டு இருப்பதை கண்ணுற்றாள்.பதறி அடித்து வீட்டுக்குள் சென்று விட்டாள்.

உறவில் திளைத்திருந்த காதலர்களும்.. அந்தப் பெண் தங்களை கவனித்து விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்

அதுவரையில் மானம், வெட்கம், பயம் போன்றவற்றை அறிந்திராத அந்தக் காதலர்களுக்கு  இப்போது பயம், வெட்கம், மானம்  எல்லாம் ஒரு சேர வந்துவிட்டது. தங்கள் காதல் விவகாரத்தை பார்த்துவிட்ட அந்தப் பெண் எப்படியும் ஊர்க்காரர்களிடம், உறவுக்காரர்களிடம் சொல்லிவிடுவாளே  என்று பயந்தனர்.படபடத்தனர்

அவள் எப்படியும் தங்களைப் பற்றி சொல்லி விடுவாள்.அவள் சொல்லிவிட்டால்.. மானம் கப்பலேறிவிடும் என்று நிணைத்த காதலர்கள்.. தங்கள் மானத்தை காப்பாற்றவும் தாங்கள் காதல் வாழவும் என்ன வழி என்று  மாங்கு மாங்குன்னு யோசித்தனர்.

காதல் மோகத்தில் இருந்தவர்களுக்கு திடிரென்று ஏற்ப்பட்ட பயத்தினால் படபடப்பால்  அவர்களின் மண்டையில் ஒரே வழிதான் தோன்றியது அந்த ஒரே வழி பார்த்தவளை பலி கொடுப்பதுத்தான்   முடிவ எடுத்த காதலர்கள் இருவரும்  அந்தப் பெண்னை ..வெடக் கோழியை அமுக்கி கழுத்தை திருகி கொல்வது போல.  பார்த்தவளை சத்தமில்லாமல் கழுத்தை திருகி கொன்று.. தங்கள் மான்ததை காப்பாற்றிய மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பார்த்தினால் பலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை  மருத்தவ பிரேத பரி சோதனை மூலமாக  கொலை என்று பதிவு செய்த போலீசு படிப்படியாக மோப்பம் பிடித்து மானத்தைக் காக்க இளம் பெண்ணை பலி கொடுத்த  இந்தக் காதலர்களை கையும் களவுமாக பிடித்தபோது  ..  இந்தக் காதலர்களின் மானத்தை காத்த கதை   தெருவே பரவி  ஊருக்கே தெரிந்து உலகத்துக்கே தெரியும்படியாக செய்தி பத்திரிகையில் வந்து  தெரிந்துவிட்டது.

புதன் 09 2016

அரசு ஊழியர்கள் இனி, கோடீஸ்வரர் ஆகலாம்.

படம்-www.tamilmurasu.org



“அண்ணே..... அண்ணே....அண்ணே...”

“என்னடா..”

வந்துண்ணே.... அந்தா.... அந்தண்ணே  சொல்றாரு... அரசு ஊழியர்கள் எல்லாம் இனி கோடீஸ்வரர் ஆகலாமுன்னு  சொல்றாருண்ணே..அது எப்படிண்ணே..”

 “அப்படியா,!!... எப்படின்னு அவருகிட்டேயே ...கேளு...”

“கேட்டேண்ணே...... அது ...ரகசியமுன்னு..” சொல்ல மாட்டுறாருண்ணே...”


“ நீதான்.... அரசு ஊழியர் இல்லலேடா... அத தெரிஞ்சு என்ன செய்யப்போற....”

“ என் பொண்டாட்டி... அரசு  ஊழிருண்ணே...”

“அதுசரி...அத உம்..பொண்டாட்டில தெரிஞ்சுகனும்..... நீ..தெரிஞ்சு....???”

“என்னாண்ணே...... இப்படி கேட்டுட்டீங்க.......  ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிற்பது  போல...., என் மனைவியின் வெற்றிக்குப் பின்னால் நான் நிற்க வேணும்மின்ணே....”

“ஓ....... சரிப்பா........அந்தண்ணன்கிட்டே... போ..... அந்த ரகசித்தைச் சொல்லச் சொல்கிறேன்...”


“டேய்...அய்யா....இந்த நாட்டோட இரகசியம் மற்றும் வளங்கள் எல்லாம் வெளி நாட்டிற்கு கொள்ளைபோயிருச்சு......நீ மட்டும் அந்த இரகசியத்தை இவனுக்கு சொல்லப்பா...... நாளைக்கு இவன் கோடீஸ்வரனா ஆயிட்டானா..... உனக்கு தட்சனை செய்யச் சொல்றேன்.”

“அப்ப..தட்சனை செய்யிறது இருக்கட்டும்...  இப்பவே..கொஞ்சம் கட்டிங் வாங்கித்தரச் சொல்லுங்க.....”

“வாங்கித் தரலைன்னா.. சொல்ல மாட்டீயாடா.......”

“ அப்படியில்லண்ணே...”

 “என்ன..னொப்...படியில்ல...ண்ணே.....”

“ ஒரு பீடியாச்சு  கொடுக்கச் சொல்லுங்கண்ணே....” புகைய விட்டுக்கிட்டே சொல்வேன்ல்ல....”

“அண்ணே...ஏங்கிட்ட..பீடி  இருக்குண்ணே... இந்தாங்கண்ணே.... அந்த இரகசியத்த சொல்லுங்கண்ணே....”

“தினமும் பேப்பர படிச்சா...ஒனக்குகூட...அந்த ரகசியம் தெரிஞ்சிருக்கும்... என்ன காலக் கொடுமையிடா...... ஒரு பீடிக்காக அந்த ஊருக்கே தெரிந்த ரகசியத்தை சொல்ல வேண்டியதிருக்கு... இதுல நாடு முன்னேறுது  வல்லு ரசாகுதுன்னு அள்ளி விதைக்கிறாங்கே.....”


“.... பீடிய.. கொடுத்த... தீப்பெட்டி குடு.....””

“ சாரி...ணணே.... இந்தாண்ணே.....”

“ அது வேற..ஒன்னுமில்லடா......., அரசு ஊழியர்கள் லஞ்சம்..வாங்கினாலோ, ஊழல் செய்தாலோ..... அவர்கள் மேல் புகார் செய்யவோ.. வழக்கோ  போட வேண்டுமென்றால் அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் வந்துவிட்டது...


“ அப்படியா....!!!..வாயை பொளாக்காத..இன்னும் கொஞ்சம்  இருக்கு கேளு”....

“உன் வீட்டுக்காரம்மா...ஊழல் பண்ணி சொத்து சேத்து இருக்குன்னு வைய்யி,
அவங்க மேல நடவடிக்கை எடுக்கனும்னா..அரசு உத்தரவு வேனும்...அப்படியே
நடவடிக்கை எடுக்கலாம் என்ற உத்தரவு... அரசு தலைமைச செயலகமான செவ்வாய் கிரகத்திலிருந்து வர்ரதுக்குள்ள..... நீங்க பாக்குறவங்கள... பாத்து கவனிக்கிறவங்கள...கவனிச்சிட்டீங“கன்னா.... எந்தக் கொம்பனாலும் ஒன்னு செய்ய முடியாது. இதுதான்  அந்த இரகசியம், இந்தா.... இன்னொரு பீடி குடு....






திங்கள் 07 2016

மார்ச் 8 சம உரிமைக்கான மகளிர் தினமா? கொண்டாட்ட தினமா??

கிளாரா ஜெட்கின்



மார்ச்8 ஆம் தேதி மகளிர்தினத்தை நம்மூர் தொலைக்காட்சிகளும். வலது, இடது போலிகளும் நடத்துகின்ற பெண்கள் அமைப்புகளும் பெண்களை கவுரவிக்கிற தினமாக மாற்றி விட்டனர்.

இதன் விளைவு... மே தினத்தை கொண்டாட்ட தினமாக மாற்றி சீரழித்தது போல பெண்களின் சமஉரிமைக்கான தினமான மார்ச் 8யும் கொண்டாட்ட தினமாக மாற்றிவிட்டனர்.

அன்றைய  முன்னேறிய  முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆண்களுக்கு நிகராக உழைப்பில் ஈடுபட்ட போதிலும், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகம் நிலை நிறுத்திய போதிலும் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.  

கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கையில் ஆசான்கள் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சொல்லுவதைப்போல பெண்கள் ஒரு உற்பத்தி கருவியாகத்தான் பார்த்தது முதலாளித்துவம்.

இதனை எதிர்த்து 1857 முதல் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்கள் போராடி வந்திருந்த போதிலும்அந்தப் போராட்டங்களில் புரட்சிகர அரசியல் உள்ளடக்கமோ, அமைப்பு வடிவமோ இல்லாமல் தன்னெழிச்சியானவையாகவே இருந்தது.

இந்தச் சூழலில் கிளாரா ஜெட்கின் போன்ற கம்யூனிஸ்டுகளின் மு்ன் முயற்சியால் 1910 ஆம் ஆண்டில் ஜெர்மன்நாட்டின் டீகான்ஹெகன் நகரில் நடைபெற்ற “சர்வேதேச பெண்கள் மாநாடு” பெண்களுக்கு அனைத்து நடவடிக்கைளிலும் சம உரிமை வேண்டும் என பிரகடனம் செய்தது.

சம உரிமை பிரகடனம் செய்து நூற்றாண்டை கடந்து விட்டநிலையிலும் சர்வதேச மகளிர் மாநாடு அறிவித்த ஆண்களுக்கு நிகரான சம உரிமை இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

முன்னேறிய  நாடுகளான ஏகாதிபத்திய நாடுகள் துவங்கி இன்னமும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக பம்மாத்து செய்து வரும் இந்தியாவரையிலும் இதுதான் நிலைமை.


பெண்கள் மீதான  ஆணாதிக்க அடக்குமுறை, பாலியல் வன்கொடுமை, ஈவு இரக்கமின்றி சுரண்டப்படுவதோ நின்றபடில்லை.

எத்தனை எத்தனைஅடக்கு முறைகள். அவமானங்கள். வன்முறைகள் போன்றவற்றை சந்தித்து வருகின்ற பெண்கள்..  மன நிம்மதிக்காக ஆன்மீகத்தில் புகலிடம் தேடினால் , அங்கும் அவர்களுக்கு அவமானம்தான் கிடைக்கிறது.

சபரிமலை கோவிலுக்கு .. மாதவிலக்கு அடைகின்ற பெண்கள் வந்தால் பிரம்மச்சாரி ஐயப்பன் கோவில் தீட்டாகிவிடும் என்று சபரிமலை நிர்வாகம் ஆணாதிக்க திமிரை காட்டுகிறது.

முஸ்லீம் மதத்திலோ.. பர்தா எனும் கருப்பு உடையில் காலம் முழுவதும் அடைத்து வைக்கிறது.

கிறிஸ்துவ மத்திலோ..பெண்கள் ஒரு போதும் மத்த்தலைவராக முடியாது, கன்னியாஸ்திரிகளாக  மாறினால் மட்டுமே தேவனுக்கு சேவை செய்ய முடியும். திருமணமான பெண்களுக்கு அந்தத் தகுதியும் கிடையாது.

இப்படி இந்து மதம் மட்டுமல்ல.. உலகில் உள்ள எல்லா மதங்களும் பெண்களை இழிவாகவும், இரண்டாந்தர குடிகளாகவும்தான் நடத்தி வருகின்றன.

இந்த அவலத்தையும் அவமானத்தையும் அடக்குமுறையையும் துடைத்தெறிய வேண்டுமென்றால்... பெண்ணடிமைத்தனத்தில் முழ்கி கிடப்பதோ,நவநாகரிக உடை, நகைகள், கை நிறைய ஊதியம் என்று மனம் நிறைவடைவதோ பெண்களுடைய சம உரிமைகள் கோரிக்ககைகள் நிறைவேறாது.

ஆணுக்கு பெண் நிகர் என்கிற சமத்துவ பண்பாட்டை படைக்க சமூக மாற்றித்திற்க்கான பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்வதின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்

மகளிர் தின சிந்தனைகள்;-


ஞாயிறு 06 2016

ஒழுங்கு நடவடிக்கை ஆணை போட்ட சின்ன ஜமீன் விளக்கம்



நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை. பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன் என்று  சத்திய மங்கலம் சின்ன ஜமீன்  எண் டிவி சானலுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

படம்-1 உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் உதவியாளர்க்கு சார்பு நீதிபதி அனுப்பிய நோட்டீஸ்




2.jpg
படம்-1--சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள்

படம்-2  நோட்டீசிற்கு பதில் அளித்துள்ள உதவியாளர் வசந்தி..
2.jpg
படம்-2-சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...