பக்கங்கள்

சனி 18 2016

காலக் கிரகமண்ணே.....காலக்கிரகம்,


நானும் படித்து
இருந்தால் கலெக்டர்
ஆகி இன்னேரம்
மதுரை கலெக்டர்
ஆக இருந்த
சகாயம் மாதிரி
சுடு காட்டில்
படுத்து இருப்பேன்

என்னோட நேரம்
படிக்காம விட்டதினால்
இந்த சுடுகாட்டில்
கொட்ட கொட்ட
முழிச்சு இருந்து
பொணத்த எரிச்சு
கிட்டு இருக்கேன்

காலக் கிரகம்ண்ணே
காலக் கிரகம்..........

(நெட்டும் வேல செய்யல..கம்யூட்டரும் வேல செய்யல..காலக்கிரகம்மய்யா காலக் கிரகமய்யா..)

வெள்ளி 17 2016

போய்யா...லூசு........



லோக் பால்
கொண்டு வர
பயமா...நமக்கா
போய்யா ....லூசு

நமக்கு பயம்
ஏதும் இல்லய்யா
நமக்கு ஏத்த
த்த்து. குமாரசாமி
ஆளுக கிடைச்ச
உடனே லோக்குபால்
தாண்ய்யா  லூசு..
கத்ததுரவுக கத்திகிட்டு
இருக்கட்டும் அய்யா 
லூசு............

வியாழன் 16 2016

மும்தாஜை இழந்த ஜாஷகான்....

ஷெரிப்பின் தங்கை
மும்தாஜ் ஷெரிப்பின்
நண்பனான அவனை
ஜாஷகானாக நிணைத்தாள்

ஆனால் அவனோ
தான் மும்தாஜின்
ஜாஷகான் என்பதை
அறியாமல்  மும்தாஜை
இழந்து விட்டான்.

இப்போது அவன்
மும்தாஜின் நிணைவாகவே
கல்லறை ஆகிவிட்டான்.

இவனும் அவளும்
அங்கு எங்கு?
சந்தித்து கொள்வார்கள்
என்பது யாருக்கு
தெரியும்...????????




புதன் 15 2016

பேப்பர்காரனும் சினிமாக்காரனும்.........

அப்போது முகமுடி ரவுடியிடம் ரவுடி..

“ எனக்கு எல்லாக் கட்சிக்காரர்களையும் தெரியும்
நானே பெரிய ரவுடி, என்கிட்டேவா..என்கிட்ட
நிறைய அடியாள்கள் இருக்கிறார்கள் அடியாட்கள்
இல்லாமல் பார் நடத்த முடியுமா? மரியாதையாக
தப்பிச்சுபோயிடுங்க.....”


முகமுடி ரவுடிகள்-

“.நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
எங்களுக்கு கவலை இல்லை. ஒழுங்கா
சொன்ன பேச்சை கேளு, இருக்கிற நகை
பணத்தை கொடுத்தால் நல்லது. இல்லா
விட்டால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்.

 பெரிய ரவுடி-

இந்த மிரட்டல்  தொனியெல்லாம் பார்த்துவிட்டுதான்
நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.

.ஆ...ஆ..ஆ..அய்யோ........


செயதி-

வீட்டுக்குள் புகுந்து பார் உரிமையாளைரை தாக்கி முகமுடி  ஆ்......சாமிகள் அட்டூழியம். சினிமாவில் வருவதுபோல விறு விறு சம்பவம்...

அடப்பாவிகளா...!!! சினிமாக்கரன் நாட்டில் நடப்பதைத்தான் படமெடுக்கிறோம் என்கிறான். பேப்பர்காரன்... சினிமாவில் வருவது போல் என்கிறான்.   

செவ்வாய் 14 2016

காக்கை உட்கார..............

காக்கை உட்கார
பனம் பழம்
விழுந்த கதையாக
இல்லை இல்லை
காக்கா உடகார
புதிய கார்
வந்தது சார்..

செய்தி-


கர்ர்ர்நாடக முதல்வரின் காரில் மேல் அமர்ந்து அரைமணி நேரத்துக்கு மேல் 
காகம் ஒன்று ஆட்டம் போட்டதால்.சனியின் பார்வை உக்கிரமாக இருப்பதாக 
கருதி அந்த  சனியின்  பார்வையிலிந்து தப்பிப்பதற்க்காக புது கார் அவருக்கு
வழங்கப்பட்டது

திங்கள் 13 2016

மங்கை சூதகமானால்.........???


மங்கை சூதகமானால்
கங்கையில் முழ்கலாம்
கங்கையே சூதகமானால்..
எங்கே முழ்குவது..????

(திரும்பவும் மங்கையிடம்தான், 
தேர்தல் முடிவ.. 
தலைவரு  மறந்திட்டாரு )



குதிரை களவு 
போன பின் 
லயத்துக்கு
பூட்டு போடுவதா??????

( சனநாயகத்துக்கே பூட்டு 
போட்டவர்கள்.குதிரை 
லயத்துக்கா பூட்டு 
போட தெரியாது..)





ஞாயிறு 12 2016

வக்கீலாகி... நீதிபதியாக போறேன்..சார்,..!!

தம்பீ  நீ எத்தினியாவது படிக்கிற.....

பத்தாவது சார்........

பாசாகிட்டியா...?

இல்ல சார்...ஒரு பாடத்துல போச்சு சார்...

அப்படியா...!! சரி, தம்பி கவலப்படாத.. அடுத்த அட்மிண்டுல எழுதி பாசாயிரு..

சரிங்க சார்,



தங்கச்சி.... நீ எத்தினியாவதும்மா....??

பிளஸ்டூ சார்...

பாசாயிட்டியா....ம்மா..

பாசாயிட்டேன் சார்.

 வெரிகுட்... அடுத்து என்னவாக ஆகபு்போற...

வக்கீலாகப் போறேன் சார்....

என்னது வக்கீலா...!! சரி வக்கீலாகி....???

நீதிபதியாகப் போறேன்.சார்

நீதிபதியாகி என்னம்மா செய்யப்போறே...

மக்களுக்கு சேவை செய்யப்பேறேன் சார்.......

எப்படிம்மா....????

உரிமை, சனநாயகம், சுயமரியாதை என்று பீத்ததுகின்ற வக்கீல்களுக்கு எதிராக சத்தம்போட்டு பேசக்கூடாது, கண் புருவத்தை அசைக்கக்கூடாது, ஊர்வலம் போகக்கூடாது, முழக்கம் போடக்கூடாது...நீதிபதி செய்யிற ஊழல பத்தி பேசக்கூடாது. நாட்டு மக்களுக்கு  நீதி கொடுத்த குமாரசாமி, தத்து. போன்றவர்களை விமர்சிக்கக்கூடாது.ன்னு,.நீதிபதிக தீர்ப்பு சொல்ற வேலையை விட்டுபுட்டு  சட்டசபை, நாடாளுமன்றங்களுக்கு அனுசரனையாக நானும் இப்படியான சட்டத்தை நிறைவேற்றி இதன் மூலமா.... மக்களுக்கு சேவை செய்வேன் சார்.....இதுமாதிரியான சேவை நிறைய நிறைய.... நிறையவே  இருக்கு சார்....

எந்த மக்களுக்குமா...???

நம்ம மக்களுக்குத்தான் சார்.........


 ஆகா.. ஆகா.. பென்னடிமை தீர போராடிய அல்லிராணியை உன்னிடம் பார்க்கிறேன்ம்மா..... வாழ்க! வளர்க!!வாழ்த்துக்கள்ம்மா!!!

தாங்கியூ சார்,.........


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...