பக்கங்கள்

சனி 21 2015

அப்பட்டமான நடிப்பும்... கடைந்தெடுத்த பொய்யும்...


படம்-Barathi Thambi


'மக்களுக்கு ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்கள் கொடுக்கத்தான் நாங்கள் சரக்கு விற்கிறோம். மற்றபடி, இந்தக் கருமத்தை விற்க வேண்டும் என எங்களுக்கு என்ன தலையெழுத்தா?’ என ஏதோ வேண்டாவெறுப்பாக, மக்கள் நலனை முன்வைத்து, இந்த வேண்டாத வேலையைச் செய்வதைப்போல பேசுகிறார்கள். 

இது பச்சையான பாசாங்கு; அப்பட்டமான நடிப்பு; கடைந்தெடுத்த பொய்.

ஆண்டு ஒன்றுக்கு இலவசப் பொருட்களுக்கு அரசு செலவிடும் பணத்தைக் காட்டிலும், மிடாஸ் சாராயக் கம்பெனிக்குக் கிடைக்கும் லாபம் பலமடங்கு அதிகம். மிடாஸுக்கு மட்டும் அல்ல... டாஸ்மாக்குக்கு சரக்கு விநியோகிக்கும் கம்பெனிகளின் ஆதாயத்துக்காகத்தான் டாஸ்மாக் நடத்தப்படுகிறதே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல. 

'எதை விற்றேனும் மக்களுக்கு நல்லது செய்தே தீர வேண்டும்’ என நாடி நரம்பு எல்லாம் மக்கள் நலன் பொங்கி வழிந்தால், சாராயக் கடையை மூட வேண்டியதுதான் அதற்கு முதல் நிபந்தனை.


மேலும் படிக்க...கிளிக் செய்க....பூங்கொத்தை விட மலிவான மனித உயிர்கள்


வெள்ளி 20 2015

நிவாரணம்- முன்னது கருணையினால் அல்ல ..... பின்னது ஓட்டுக்காக அல்ல...

 நிவாரணம் -கருணையினால் அல்ல..

கொளத்தூர் தொகுதியில் மழை – வெள்ளப் பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
ஒட்டுக்காக



படம்-tamil.thehindu.com

படம்-www.seithy.com


வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை சனிக்கிழமை பார்வையிட்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், நத்தம் இரா.விசுவநாதன், ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மக்களவை உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர்.
படம்--www.dinamani.com



படம்-www.dinamani.com






படம்-nakkheeran.in






வெள்ளம் பாதித்த பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் நிவாரண உதவி.
படம்-tamil.thehindu.com








 நிவாரணம் -பின்னது .. ஓட்டுக்காக அல்ல...  படிக்க .... மக்கள் அதிகாரம்


cuddalore peoples power day 1 (5)
படம்-வினவு



cuddalore peoples power day 1 (6)
படம்- வினவு

cuddalore peoples power day 1 (9)
படம்-வினவு
cuddalore peoples power day 1 (3)
படம்-வினவு



cuddalore peoples power day 1 (7)
படம்-வினவு




cuddalore peoples power day 1 (8)
படம்- வினவு











வியாழன் 19 2015

புழல் சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !


17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.
தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.
புழல் சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !

பார்க்க...ஒளி-ஒலி..படக்காட்சி....






நன்றி! வினவு..


புதன் 18 2015

தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்..

1
படம்-வினவு
பாச மலர் படத்தில்..அண்ணன் தங்கையின் கணவனிடம் என் கண்களையே உன்னிடம் ஒபபடைக்கிறேன் என்று  கூறுவார்.அதே போல காதலுக்கு மரியாதை என்ற படத்திலும் தங்கையின் அண்ணன்கள் முதலில் தங்கையின்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின் தங்கையின் காதலை ஏற்று  காதலுக்கு மரியாதை செய்வார்கள்..இதுகள் தமிழ்ச சினிமாக்களில் மட்டுமே சுபம் பெறும்.. ஆனால் நிஜத்தில்........ வேறு மாதிரியாக நடக்கிறது.. நடந்து கொண்டு இருக்கிறது. 
அதில் ஒன்று தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த அண்ணன் மார்களின்.. உண்மைககதை.
உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் அண்ணன்கள்..அவர்கள் யாரும்  வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தும இளைஞர்கள்தான் அவர்கள்.தமிழ் சினிமாவில் காட்டப்படும் காதல் படங்களை ரசித்தவர்கள்தான்..ஆனால் நிஜமோ  வேறு மாதிரியாகத்தான் நடந்து இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். 
இச்சூழ்நிலையில் இக்காதலர்கள்  சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்தார்கள
.காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.
இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.
தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் காதலித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும்.
நன்றி!

செவ்வாய் 17 2015

கட்டுச் சோற்றில் பெருச்சாளி...............

படம்--வினவு
படம்-kalakakkural.blogspot.com




அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்கிற அடிப்படையில்தான் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம் ஆனால்.. எங்களை சாதிக் கட்சி என்று கூறுகின்றனர்...- சாதிதாஸ்...


திங்கள் 16 2015

தனக்கு வந்தால்....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
பhttps://twitter.com/naatupurathanடம்-


மற்றவர்களின் துக்கத்திற்கு
ஆறுதல் சொல்லும்
போது இருக்கும்
தைரியம் ..தனக்கு
துக்கம்  நேரும்
போது மட்டும்
அந்தத் தைரியம்
இருப்பது இல்லை..
இதைத்தான் தனக்கு
வந்தால் தெரியும்
என்றார்களோ...............

ஞாயிறு 15 2015

புலிட்சர் விருது பெற்றவரின் தற்கொலை குறிப்பு...

படம்- கெவின் கார்ட்டர்.




படத்தில் உள்ளவர் கெவின் கார்ட்டர் வயது 33 சூடனில் இவர் எடுத்த “சிறுமி- கழுகு” புகைப்படம் 1994ம் ஆண்டில் புலிட்சர் விருது பெற்றது. விருது பெற்ற மூன்று மாதங்களுக்குப பிறகு கெவின் தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக குறிப்பு :-

என்னை மன்னியுங்கள், 
உலகின் மகிழ்ச்சிகளை
துரத்தி அழுத்தும்
வாழ்வின் வலி
இறுதியில் அதை
புதைத்து விடுகிறது....

கொலைகள்,பிணங்கள்
பட்டினியால் வாடும்
குழந்தைகளின் வலி
மகிழ்ச்சி,கோபம்,.......
தூண்டி விடப்பட்ட
குதூகலப் பைத்தியங்கள்
போலீஸகாரர்கள் படுகொலையாளர்கள்.....

மறையாத இந்த
நிணைவுகளால் துரத்தப்படுகிறேன்.


புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்
புகைப்பட்த்தின் காட்சி

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில்  எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல  ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது

அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.


எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...