பக்கங்கள்

சனி 13 2018

நினைவலைகள்-6

 ஆறாத ஒரு வடு..............


Image result for தாய்


என் தாய்க்கு
என்னைப் பற்றிய
கவலை கடைசி
காலத்தில் கண்டிப்பாய்
இருந்திருக்கும் இல்லாமல்
இருந்திருக்காது அந்தக்
கடைசி நேரத்திலாவது
ஒரு தடவையாவது
மகன்  பேச்சைக்
கேளாமல் அவனை
அனாதை ஆக்கிவிட்டு
போறோம்மே என்ற
கவலையும் வருத்தமும்
 இருந்திருக்கும் எப்படி
என்றால் கடைசிவரை
 என் பெயரைத்தானே
உச்சரித்தார்  அவர்

ஆனாலும் என்
அம்மா இறக்குவரை
தாய் சொல்லை
 தட்டாத செக்கு
மாடாக இருந்த
நான் என்தாய்
சாகும் தருவாயில்
என்னைக் கூப்பிட்டும்
போகாமல்  செக்கு
மாட்டைப் போல
நான்  நடந்து
கொண்டது ஆறாத
வடுவாக இருக்கிறது.


வெள்ளி 12 2018

நினைவலைகள்-5.

 பாவிகள் நிறைந்த உலகில்................


Related image






படுப்பதற்கு ஒரு
இடம் இல்லா
மனிதர்களில் மத்தியில்

குடியிருக்க ஒரு
ஓலைக் குடிசை
எங்களுக்கு கிடைத்தது.

 ஆயிரம் ஓட்டைகள்
இருந்தாலும் கோடையில்
இதமாக இருக்கும்

மழைக் காலத்தில்
குட்டைக் குளமாகி
மீன் இல்லாத
தண்ணிரை இறைக்கும்
வேலை கிடைத்து
விடும் விடிய
விடிய பெய்யும்
மழையால் தாயும்
மகளும் மகனும்
மூவருமாய் மாறி
இரைத்த களைப்பினால்
மூலையில் ஓய்வாய்.........

மழை நின்றால்
ஈரத்தரையில் தூக்கம்
இல்லை என்றால்
தாமிரபரணி புஷ்கரத்தோடு
சிவன் ராத்திரியும்தான்

அந்த சிறு
ஓலைக் குடிசையையும்
அபகரித்து விரட்ட
ஒரு கூட்டம்..

மழை காலத்தில்
குடியிறுக்கும் வீட்டில்தான்
இப்படி என்றால்
டெங்குவால் செத்து
சுடுகாட்டிலாவது படுக்கலாம்
என்றால் அங்கும
 இடமில்லை என்று
எரித்து விடுகிறார்கள்..
பாவிகள் நிறைந்த
உலகில். புதைக்கவும்
இடமில்லை..........

வியாழன் 11 2018

நினைவலைகள்-4.

இளைப்பாற ஒரு போக்கிடம் ........


Related image






எனை   ஈன்று
வளர்த்த கடனுக்காக

அந்தக் கடனை
அடைக்க தாயுடன்
பாரம் சுமந்தேன்.

குடும்ப பாரத்தின்
சுமை தாளாமல்
இடையில் தாய்
விடை பெற்றுக்
கொள்ள தனியாய்
 நான் சுமந்தேன்.

தனியாய் சுமந்ததால்
பாரம் பெரும்
சுமையாகி மேலும்
எனை அழுத்த....

சுமையான பாரத்தை
இறக்கவும் வழியில்லை
பாரத்திலிருந்து விடுபட்டு
இளைப்பாறவும் ஒரு
போக்கிடம் இல்லை.

இப் பிறப்பில்
போக்கிடம் இல்லாத
போது மறுபிறப்பில்
கிடைக்கும் என்பதற்கு
உத்தரவாதம் ஏது....???

புதன் 10 2018

நினைவலைகள்-3.

படித்ததில் தெரிந்தது............



Image result for ராகுல் சாங்கிருத்தியாயன்





சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு
காரணமான நிலப்பிரபுத்துவ
மண்ணர்களையும் சுரண்டும்
கூட்டத்தையும் பாதுகாக்கவே
கற்பனை செய்யப்பட்டது
மறுபிறப்பு என்னும்
தத்துவம் மிகத்
திறமையான அறிவின்
கண்டுபிடிப்பு..-----ராகுல் சங்கிருத்தியாயன்...........






திங்கள் 08 2018

நினைவலைகள்-2.

அச்சு தொழில்..நச்சு தொழில்............


Image result for அச்சு தொழில் நச்சு தொழில்





முதலில் தெரியவில்லை
இடையில் புரியவில்லை
 கடைசியில் அதுவும்
முப்பத்தி ஐந்து
ஆண்டுகள் அனுபவத்திற்கு
பின்  தெரிகிறது
அச்சு தொழில்
நச்சு தொழில்
என்று இப்ப
புரிந்து என்ன
செய்ய....இனிமேல்
இதுதான் குலத்
தொழில் ஆச்சே...

நினைவலைகள்......1.


 ஒரு மூடனின் அவதானிப்பு.........



Image result for தன் குஞ்சு பொன் குஞ்சு




காக்கை என்ற
பறவைக்கு தன்
குஞ்சு பொன்
குஞ்சு என்பது
சரி என்றால்
அந்த காக்கை
மற்ற பறவைகளின்
குஞ்சுகளை கொத்தி
குதறுவதற்கு காரணம்
சுயநலம் இன்றி
வேறு  என்னவாம்....................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...