பக்கங்கள்

சனி 29 2017

கனவு சிதைக்கப்பட்டவர் எழுதிய பிறந்த நாள் வாழ்த்து.....

சிறையிலிருந்து பிறந்தநாள் வாழ்த்து!
அன்புள்ள வசந்தா,
பிறந்த நாள் வாழ்த்துக்களை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். பிறந்த நாளின் போது இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நாளில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும். நான் இல்லாத இந்த நாள் குறித்து எப்படி வருந்துவாய் என நான் அறிவேன். இந்த அரசு நம்மை பிரிப்பதிலேயே தீர்மானமாய் இருந்தது; சொல்லப்போனால் நம்மை அழிக்கவும் திட்டமிட்டது. திருமணமான இந்த 26 வருடங்களில், நாம் ஒருபோதும் தனிப்பட்ட நலன்களுக்காகவோ வளர்ச்சிக்காவோ எதையும் எதிர்பார்த்ததில்லை. நம்முடைய 36 ஆண்டுகால வாழ்க்கையில் இந்த சமூகத்துக்காக நம்பிக்கையை மட்டுமே கொண்டு இணைந்து உழைத்தோம். இதையொட்டி நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இல்லாத இந்த சூழ்நிலையில், இதே நம்பிக்கையுடன் நீ மக்களுக்காக பணி செய்ய வேண்டும். என்னுடைய இல்லாமையும் சிறைதண்டனையும் உன்னை எந்தவிதத்திலும் அசுவாசப்படுத்திவிடக்கூடாது. உன்னுடைய பிறந்த நாளான இன்று, நீ ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்…இந்த துன்பத்தையும் நம் மீது ஏவப்பட்ட மிருகத்தனத்தையும் நம்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை… இந்த தீர்ப்பும் சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருக்கும் விதமும் நமக்கு அவமானம் அல்ல! அரசின் இந்த நடவடிக்கைகள் உண்மையில் ஜனநாயகத்துக்குத்தான் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் ஒரு நல்ல சமூகத்துக்காக கனவு கண்டோம்; சமத்துவமின்மைக்கு முடிவு வரும் என நம்பினோம். மனித உரிமைக்கான சுதந்திரத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோரின் ஜனநாயக, பொது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தோம். ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து, இந்த சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, நாம் இந்த மதிப்புகளை ஒருபோதும் கைவிடாது தொடர வேண்டும்.

அவர்கள் நமது கனவை, நம்பிக்கையை நசுக்க முயற்சிக்கலாம்; ஆனால், நாம் இன்னமும் கனவுகண்டுகொண்டிருப்பதையோ, நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருப்பதையோ அவர்களால் தடுக்க முடியாது. பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட தீர்ப்பு, பொய்யான வழிகளில் என்னை சிறையில் வைத்திருப்பது உன்னுடைய ஊக்கத்தை குலைக்கக்கூடாது. நம்பிக்கையை ஒருபோதும் நீ இழக்கக்கூடாது. எனக்கு, உன்னுடைய பிறந்த நாள் எப்போதும் முக்கியமானது, எப்போதும் என்னை உற்சாகமூட்டக்கூடியது. நீ இந்த நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? நாம் யாரையாவது தாக்கி இருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன? நம்முடைய கனவு ஏன் நசுக்கப்பட்டது? நம் கனவுகள் மீதான, மனிதத்தன்மையற்ற தாக்குதலை எதிர்த்து, நம்முடைய சின்னஞ்சிறு கனவுலகில், நாம் நம்முடைய உலகத்தில் வாழ முடியுமா? இந்த மணித்துளியில் உனக்கும் எனக்கும் உந்துசக்தியாக இருப்பது எது?

இவ்வாண்டின் பிறந்த நாளில் நான் உனக்கு என்ன தருவேன்? நான் உனக்காக என்ன வைத்திருக்கிறேன்? அதே காதலைத்தான். பள்ளிக் காலத்தில் நாம் முதன்முதலாக சந்தித்த போது உண்டானதே அதே காதல்! உனக்கு நான் நம் வாழ்நாள் முழுக்க அளித்த அன்பை காட்டிலும் நீ அதிக அன்பை செலுத்தியிருக்கிறாய். பதின்பருவ காதல் காலத்தில் உனக்களித்த அதே கனவை இப்போதும் என்னால் அளிக்க முடியும்.

நீ இப்போது என்னுடைய சுதந்திரத்துக்காக தனித்து போரிடுகிறாய். உன் இதயத்தை வலுவிழுக்க விடாதே. இருள் நிரந்தரமாக வெளிச்சத்தை மறைத்துவிடமுடியாது என்பதைப்போல இருள் சூழந்த இந்த நாட்களில் நீ நம்பிக்கையையும் கனவையும் இழந்துவிடாதே. இவை வெறுமையான சொற்கள் அல்லை. நமது நம்பிக்கை முட்டாள்தனமான சிந்தனையல்ல, நாம் வெற்றி பெறுவோம்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு, இவ்வாண்டின் பிறந்த நாளின்போது, நான் எனது காதலை மறுபடியும் உனக்கு காணிக்கையாக்குகிறேன். என்னுடைய தைரியத்தை, நம்பிக்கையை, கனவுகளை உன் காதால்தான் நான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்நாளில் இதுவரை என்னென்ன செய்தேனோ, அதற்கெல்லாம் காரணமாய் இருந்தது கலங்கரை விளக்காக நீ என் மீது பொழிந்த காதல்தான்.

இந்நாளில் அனைத்தும் திரும்ப வாழ்த்துகிறேன்
அளவில்லா காதலுடன்உன்னுடைய
ஜி.என். சாய்பாபா
பேராசிரியர் சாய்பாப மற்றும் அவரது மனைவி வசந்த குமாரி( A S Vasantha Kumari – முகநூல்பக்கம் )
மாவோயிஸ்டுகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, தன்னுடைய மனைவி வசந்தாவுக்கு எழுதிய கடிதம் இது. இந்தக் கடிதத்தை வசந்தா, அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

தமிழாக்கம் : மு.வி. நந்தினி
நன்றி : THE TIMES TAMIL

                                                               

வெள்ளி 28 2017

GST வரி விதிப்பிலும் ஆணாதிக்கம்....



ஆண்கள்  பயன்
பயன்படுத்தும் காண்டத்திற்கு
வரி விலக்கு
பெண்கள் பயன்படுத்தும்
நாப்கீன்க்கு வரி
விதிப்பு இதிலிருந்து
தெரிவது என்ன
ஆளும் இந்துத்வா
பரிவார கும்பல்
போட்ட ஜிஎஸ்டி
வரி விதிப்பதிலும்
இருப்பது ஆணாதிக்கம்....

வியாழன் 27 2017

மனு விஞ்ஞானி கலாம்

அண்ணே .. கலாம்
அய்யாவை செல்ஃபி
பிரதமரு பெருமையா
வாழ்த்தி பேசின
கையோடு கலாமின்
குடும்பத்தோடு செல்ஃபி
எடுத்துக் கிட்டாரு..
நீங்க இத
பத்தி இன்னா
சொல்லப் போறீங்க..

என்னா பேசாம
இருக்கீங்க சும்மா
சொல்லுங்க நா..ன்
ஒன்னும் கலாம்
வெறியன் இல்ல
தெரியாததை தெரிஞ்சுக்க
 வேணுமில்ல அதனால
கேட்டேன்  கோவிக்க
மாட்டேன்  சுறுக்கமா
சொல்லுங்க அண்ணே


என்னது கலாம்“
கையில வீணை
வாயில கீதையா..???
ஒன்னும் புரியலையே......


உன் பிறப்பு
சம்பவமாக இருக்க
வேண்டும் இறப்பு
ஒரு சரித்தமாக
இருக்க வேண்டும்
எனறுல சொன்னாரு

எப்படி?? அண்ணே

எவ்ளோ பெரிய
கலவரங்கள் நடந்தாலும்
செவனே்னனு வீணை
வாசித்துக் கொண்டோ
அல்லது கீதை
படித்துக் கொண்டோ
இருக்க வேண்டுமா...????
ஆகா...ஆகா....

என்னண்ணே புது
குண்டா இருக்கு
அனு விஞ்ஞானி
இல்லையா அவரு
மனு விஞ்ஞானியா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



செவ்வாய் 25 2017

திதி எனும் இழிவு

என்னா அண்ணே......இன்னிக்கு நீங்க ஆத்துப்பக்கம்
போகலீயா என்று கேட்டவாறு வந்தான்  தம்பி முறை உள்ளவன்.

ஆத்துல தண்ணியே...இல்லையடா.... வெட்டியா அங்க போயி என்ன? என்று கேட்ட..நான் எதுக்குடா ஆத்துப்பக்கம் போலயான்னு கேட்ட என்று திருப்பி கேட்டபோது... சொன்னான்..

உங்க அம்மா இறந்து ரெண்டு வருசம் ஆச்சுல... அதனால ஆத்துப் பக்கம் போயி திதி கொடுக்கலையான்னு கேட்டேண்ணே என்றான்.. கம்யூனிஸ்ட்
கட்சி செயலரு இருக்காருல...அவருகூட திதி கொடுக்க ஆத்துப்பக்கம் போயிருக்காங்கா அதான் நீங்க போகலையான்னு  கேட்டண்ணே

கம்யூனிசம் நாத்திகம் பேசிகிட்டு திதி கொடுக்கிற அந்த இழிவையெல்லாம் நான் செய்வேனாடா..என்ன பத்தி  நீ புரிஞ்சது இதுதானாட....அடப்பாவிப்பயலே...

 இல்லண்ணே...

என்ன  இல்லண்ணே...காவி வேட்டி கட்டி இருக்கிறவன் எல்லாம் ஆர் எஸ்எஸ்.காரன் என்ற மாதிரி என்னையும் அந்த நாதாரி கம்யூனிஸ்டுன்னு சொல்லிக் கொள்கிற அவனோட என்ன சேத்திட்டியேடா....

இவிங்க சொல்கிற திதி திதி மந்திரம் என்னான்னு தெரியுமாட ஒனக்கு

ஓரளவு தெரியும்ண்ணே... இருந்தாலும் அது என்னான்னு நீங்க சொல்லுங்கண்ணே....


திதி அல்லது திதி மந்திரம் என்று அவன் சொன்னது. . நமது தாய் தந்தைமார்களை படு கேவலப்படுத்தக்கூடியதுடா.....

அந்த மந்திரம் உன் வாயிலும் என்வாயிலும் நுழையக்கூட முடியாது..அதத்தான் அந்தப் புரொகிதனும் சொல்லுவான்  திதி கொடுப்பவனையும் சொல்லச் சொல்வான்.

அந்த திதி மந்திரம் இதுதான்..இந்தா நீயே படிச்சுப்பாரு 

என்மே மாதா ப்ரலுலோபசாதி
அன்னவ“ வரதா தன்மே ரேதஹா
பிதா வருந்த்தாம் ஆபுரணயஹா அவபத்யநாம-----அண்ணே படிச்சிட்டேண்ணே..இதன் அர்த்தம் சொல்லுங்னண்ணே...

அர்த்தம்மா.... உனக்கு புரியலையா...

புரிஞ்சா..ஏணே கேட்குறேன்...

அதாவது..நான் யாருக்கு பிறந்தேன். அது என் அம்மாவுக்குத்தான் தெரியும். என் அப்பா யாரென்று மற்றவர்கள் சொல்வதால் நம்ப வெண்டியுள்ளது.அப்படிபட்ட என் அம்மாவுக்கு என் அஞ்சலியை சேர்ப்பீர் என்று அர்த்தம்...

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே..

விளக்கமாகவா...உங்க அம்மா சந்தேகத்துக்கு உரியவள்....

என்னண்ணே எங்கம்மாவ சொல்றீங்க..........

சும்மாடா.....ஒரு பேச்சுக்குடா.....

போ...ண்ணே...பேச்சுக்கூட எங்கம்மாவ சொல்லாதிங்கண்ணே....

சரிடா...... எங்கம்மடா........

என் பெரியம்மாவையும் கூட சொல்லதிங்கண்ணே.....

சரிடா........சரிடா.......கோவிக்காதே...

வேறு மாதிரியா சொல்றேன்டா......“தன் தாயானவள் சந்தேகத்துக்கு உரியவள். தன் கணவனக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம்உடல் தொடர்பு கொண்டவள் என்ற அடிப்படையில் மந்திரம் இருக்துடா...... சும்மா சொல்வதற்கே நம்ம மனசு சங்கடப்படுதே....இதத்தாண்டா  திதி கொடுக்கும்போது சொல்லச் சொல்றாங்கே...      இப்ப என்னய புரிஞ்சுகிட்டியா..

நல்லா புரிஞ்கிட்டேண்ணே....


அந்த நாதாரி வட்டச் செயலாரு கிட்ட கேளு என்ன தொலுரு என்ன மந்திரம் சொன்னிங்கன்னு.... அவன்உள்ளத சொல்றனான்னு பாப்போம்.....




( ஆதாரம்... அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலிருந்து பாகம்-1 பக்கம் 157.. நக்கீரன் வெளியீடு)


திங்கள் 24 2017

ஒரு சாமானியன்...சொன்னது...


நல்லாக் கேட்டுக்குங்க,*   ஓயாம..கேட்கக்கூடாது....

சொல்லுங்க.....!!


முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*அப்புறம்?*



ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*சரி, அப்புறம்?*



ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*ஓ அப்புறம்?*



ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*அதுவும் சரிதான், அப்புறம்?*



பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!



*ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?*



மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!....



*ஓஓஓஓஓ அப்புறம்?*



மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!



*ஐயையோ அப்புறம்?*



இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!



*ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?*



அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற *பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சா..அங்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,* அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு *சந்தோஷமா* வாழ்க்கையை அனுபவிங்க. ...... சரியா....??


ரெம்ப நன்றிங்க..!!!

இதுக்கு எதுக்குங்க  எனக்கு நன்றி! சொல்லிகிட்டு...ஒரு உண்ட கட்டிக்காக இம்புட்டும் செய்யச் சொல்றானே...அவனுக்குதாங்க  நீங்க  நன்றி! சொல்லனும்..





                  

ஞாயிறு 23 2017

.படித்ததில் தெரிந்து கொண்டது...

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.

அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.

மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!

இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது. 

இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

மனைவி என்பவள் 
உன்னில் ஒரு பாதி 

உன் உயிரில் ஒரு பாதி 
உன் உடலில் ஒரு பாதி 

அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான் .

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...