பக்கங்கள்

சனி 14 2017

சில நேரங்களில்...இப்படி.......

வேலைகளை சீக்கிரமாய் முடிக்க வேண்டி..... சில நேரங்களில்.... பல்.மற்றும் முகத்தை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வேலைகளில் முழ்கிவிடுவது உண்டு... அப்படி வேலைகளில் முழ்கியதன் பயனாக... தலையில் அறிவு வளர்வதற்கு பதிலாக நிறைய முடி வளர்ந்தும்... தாடியும் மீசையுமாக  பார்ப்பதற்கு பயங்கரமாகவும்... மற்றவர்களுக்கு பிடிக்காாமல் முகம் சுழிக்கும் அளவுக்கு மிகவும் ஆ...சிங்கமாக  இருந்தேன்.... நண்பர்கள... தாடி மீசையும் பார்த்து அய்ப்பாவா...முருகனா என்றார்கள்.... தோழர்களோ...ஏன்? இந்தக் கோலம்... ரெம்ப வயதானவர் மாதரி தெரிகிறது என்றார்கள்...

ஒருவழியாக வாங்கிய வேலையை இரவும் பகலுமாக தொடர்ந்து முடித்துவிட்டு ... சிகை அலங்கார கடைக்கு சென்றபோது....ஏற்கனவே.. காத்திருந்த ஒருவர்  முகச்சவரம்  மட்டும் செய்து  கொள்வதால் காத்திருந்தேன்....  எனக்கு தெரிந்தவர்... என் சிறு வயதில் சைக்கிள் கடை வைத்திருந்த அண்ணன் ஒருவர் வந்தார்.

வந்தவர்  என்னைக்  கண்டதும் என்னையா... இந்தக் கோலம்... காதல் தோல்வியா என்றார். எனை்னைப் பார்த்தால்  அப்படியா  தெரிகிறது கேட்டபோது.... முகச்சவரம் செய்து கொண்டு இருந்தவரையும்... சவர வேலையை செய்து கொண்டு இருந்தவரையும் அவர் கருத்துக்கு துனைக்கு அழைத்தார்.

அவர்களும்.... என்னைப் பார்த்தால்  அப்படித்தான்  தெரிகிறது என்று சேர்ந்து சொன்னார்கள்.... கண்ணாடியில் என் முகத்தை நன்றாக பார்த்தேன். எனக்கு அப்படித் தெரியலையே அண்ணே என்றபோது... உனக்கு தெரியாது எனக்கும் அவர்களுக்கும்தான் தெரியும் என்றார்.

அப்படியென்றால்  நீங்கள் எல்லாரும் காதலில் தோற்றுப் போன அனுபவம் உள்ளவர்களா...? கேள்வி கேட்டபோது.... காதலித்து தோத்து போகவில்லை  பிறர் சொல்லி...பிறரை பார்த்து தெரிந்து கொண்டோம் என்றார்கள்.


எப்படி...?? நான் அதை தெரிந்து கொள்ளலாமா..?என்று அவரிடம் கேட்டபோது அப்படியா இரு என்றவிட்டு, சைக்கிள்கடை அண்ணன். சலூன் கடைக்கு சற்று தள்ளி எதிரில் இருந்த டீக்கடையை நோக்கி மணி... மணி...மணி என்று தாடியும் மீசையும் நிறைந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்தார்..

பல தடவை கூப்பிட்டும் திரும்பி பார்க்காத மணி  ஒரு சிறுவன்.. போசுஅண்ணன் கூப்பிடுறாரு என்று சொன்னதும்...  திரும்பி பார்க்காத மணி  கடையின் திசையை பார்த்தார். போஸ் அண்ணன் கை காட்டி ஆட்டி அவரை அழைத்ததும் மணி எழுந்து எங்களை நோக்கி நடந்து வந்தார்.

அவரை முன்பின் பார்த்தது இல்லை... யாருண்ணே...இவரு என்று கேட்டதுக்கு
வரட்டும்..வந்தப்பின் அவரைப் பற்றிச் சொல்கிறேன் என்றார்..

இதற்கிடையில் பலசரக்கு கடைக்காரர் ஒருவரும்  முகச்சவரம் செய்வதற்க்காக கடைக்கு வந்தார்.  என்னைக் கண்டதும்... சிரித்தார். “என்னண்ணே... அந்த பொம்பள சொன்னதும்...முடி வெட்ட வந்திட்டிங்களா...??? என்றார்.

போஸ் அண்ணன் என்ன விவரம் என்று அவரிடம் கேட்டார்.... அவர் என்னிடமே கேட்கச் சொன்னார்..... நானும் என்ன விபரமுன்னு அவருகிட்டயே கேளுங்க... என்றேன்.

கடைக்காரர் அந்த விபரத்தை சொன்னார்,  அண்ணன் பற்பசையும் குளியல் சோப்பும் வாங்க வந்தார்...

அப்போது  குழந்தையுடன் வந்த ஒரு பெண்... இவரைப் பாா்த்து...ஏன்? இப்படி.....!!! சும்மாவே  நீ  அழகாக இருக்க  மாட்ட.... இந்த லட்சனத்துல  தாடி மீசை  குடுமியாக்கும்.... .....ஒழுங்கா.முடிவெட்டி தாடி மீசையை எடுக்கிற வழியைப்பாரு என்றது..என்று கடைக்காரர் சொல்லி முடித்து விட்டு அதான் அண்ணனை இங்கே  பார்த்ததும் சிரித்தேன் என்றார்.


போஸ. அண்ணனன். யாருப்பா அது உங்க சொந்தக்கார பொண்ணா என்று என்னிடம் கேட்டதும்.. இல்லண்ணே... அந்தப் பொன்னு. ..பிகேஎம் காலனி இருந்து வருதுண்ணே.. என்றார் கடைக்காரர்..

என்னப்பா...யாருப்பா..அந்தப் பொண்ணு......ஊமை ஊரெ கெடுக்கும் என்பது உண்மையாக... இருக்குமோ.. அதுவும் எங்களுக்கு தெரியாமா??  ..என்று சொல்லிவிட்டு..

கடைக்காரரைப்பார்த்துக் கேட்டார்...அந்தப் பொண்ணு சொன்னதுக்கு இவரு என்ன சொன்னாரு..னு கேட்டார். இவரு ஒன்னுமே  சொல்லாமே..பேந்த  பேந்த  முழித்தார் என்றார்.அவர்.


“ அண்ணே..நீங்க  பாட்டுக்கு கதை. திரைக்கதை வசனம் எல்லாம் எழுததாதீங்கண்ணே... அந்தப் பொண்ணு  யாருன்னே  எனக்கு தெரியாது.ஏன்? அப்படி சொல்லுச்சு....அது யாருன்னு பின்னாடி தெரிஞ்சுக்கலாம்.... இப்ப மணி.உங்களையே பாத்துகிட்டு இருக்காரு.. மணி அண்ணன பத்தி சொல்லுங்க என்றபோது......

பாத்தீயா...ஒரு நல்ல விசயம்  பேசும்போது...“கிழவன தூக்கி மடியில வைன்னு கதையாக.. கதையை திசை திருப்புற பாத்தியா  என்றார்...

அடுத்ததாக சலூன் கடைக்காரர் முடிவெட்ட என்னைக் கூப்பிட்டபோது.

கடைக்காரர்... “அண்ணே...அண்ணே..எனக்கு உங்கள மாதிரி  முடி இல்லேண்ணே... கொஞ்ச நேரரத்தில சேவிங் முடிந்திரும்ண்ணே.... அது வரையும் போஸ. அண்ணன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கண்ணே என்றுவிட்டு... என் அனுமதி பெறாமலே..போய் சோபாவில் உட்கார்ந்தார்.

போஸ் அண்ணன் மணியின் கதையைச் சொன்னார்..

.மணிக்கு கலியாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருந்தும்.. புதிதாக குடிவந்த .திருமணமான குழந்தை பேரு இல்லாத ஒரு பொண்ணுக்கும் மணிக்கும் உன்னத  காதலாகி அந்தக் காதல் அய்ந்து வருடமாக  யாருக்கும் தெரியாமல் தொடர்ந்தாகவும்.. கடைசியில் அந்தப் பெண்  இவரை மறந்துவிட்டதாகவும் அந்தக் காதலினால் இப்படி  குடுமி தாடி வளர்த்து  மனநிலை பாதிக்கப்பட்ட கதையைச் சொன்னார்.. 

“ என்னையும் அந்த லிஸ்ட்டிலா சேர்த்துவிட்டீர்கள்  என்று கேட்டபோது.... சே...சே... உன்னப்பத்தி அப்படிச் சொன்னா  என் நாக்கு அழகிப் போகுமப்பாா.... சும்மா ஒரு ஜாலிக்கு கேட்டேன்பா...என்றார் போஸ் அண்ணன்...

சலூன் கடைக்காரரும் பதிலக்கு சொன்னார்.. அப்படி உங்களை கேட்கவில்லை என்றால்  மணி மாதிரியான கதை உங்களுக்கு தெரிய வருமா....? என்றார்...

இப்படி பல கதைகளை போஸ் அண்ணன் சொல்ல... அதைக்கேட்டுக் கொண்டே அன்றைய எனது சிகையலங்காரம்  ஒருவழியாக முடிந்தது...

சசிகுமார் மாதிரி இருக்கேன். கமலகாசன் மாதிரி இருக்கேன் என்று தாடி மீசையுடன் பார்த்தபோது சொன்னவர்கள்...... என்னண்ணே.....என்னண்ணே..... என்று அன்புத் தம்பிமார்கள் கேட்டபோது

நேரமாகிவிட்டது..பசி எடுக்கிறது.. குளித்துவிட்டு ,சாப்பிட்டுவிட்டு வந்து அந்தக் கதையை சொல்கிநேன் என்று விடை பெற்று வந்தேன்...


வியாழன் 12 2017

இதில நான் எம்மாத்திரம்... ......

தொடர்ந்து விடாமல் என் கைப்பேசி ஒலித்தது....எடுத்த பின்....

“ வணக்கம்  சார்... சொல்லுங்க.சார்..”

“பிரிண்டிங்..ஆபிசா....”

“ஆமாங்க...சார். விபரத்த சொல்லுங்க.சார்...”

“நீங்க...யாருங்க....”

“நான்  ஓனர்...சார்”

“யோவ்... வேல கொடுத்தா   சீக்கிரம்  முடித்து தர மாட்டீயா...??”

“ எந்த வேலை சார்... கொஞ்சம்  விவரமா..... சொல்லுங்க...சார்,”

“ அதாய்யா...விசிட்டிங்கார்டு...”

“ சார், கோவித்துக் கொள்ளாதீங்க.... அதுல..கரெக்சன் இருந்தது. அதில் திருத்தம் செய்து... மீண்டும் ஓட்டி தரோம் சார்,“

“ நான் சரியாகத்தானே புருப் பார்த்தேன். அதுல் ஒன்னுமில்லையே.யய்யா..”

” எழுத்துப் பிழை இருந்தது சார், அதை திருத்தி விட்டோம்.. சார் உடனே ஓட்டி தரோம் சார்,

” வேல கொடுக்கிறதுக்கே..பயமா   இருக்கு  ”

“ நீங்க...என்னைக்கு சார் கொடுத்தீங்க  சார்,”


“ முந்தின நாள்  கொடுத்ததுதய்யா...”

“ சார், நீங்க  கொடுத்தது மல்டிகலர்.. நாலு கலர் சார்,.. ஒன்ன மட்டும்  பிரிண்டிங் ஓட்ட முடியாது.. ரெண்டு மேட்டர் சேர்ந்திருந்தா... உடனே  ஒட்டிவிடலாம்.... நீங்க..அவசர படுத்துகிறதனால... நாளைக்கு கண்டிப்பா... வாங்கிக்கிறலாம் சார்,

“ என்னவோ  செய்யுங்கய்யா.......”

“ சரிங்க..சார்...”


குறிப்பிட்ட நாளில் அவருடைய விசிட்டிங்கார்டு வேலை முடித்து ஒப்படைக்கப்பட்டது.. வேண்டா வெறுப்பாக பெற்றுக் கொண்டு... கூலியை இரண்டு நாள் கழித்து தருவதாக சொன்னார்.”


எம் பொழப்பே..இந்த தொழிலே அப்படித்தான் இருப்பதால் ஏற்றுக் கொண்டு, இரண்டு நாள் கழித்து அவருக்கு போன் செய்யப்பட்டது...அவருடைய உதவியாளர் எடுத்தார். சார். ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறார். சாருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்றார்.

இரண்டு நாள் கழித்து போன் செய்யதபோது.... பிசி என்று வந்தது...போனை அவர் எடுக்கவில்லை

விசிிட்டிங்கார்டு ஆர்டர் கொடுத்தவர்.. அட்வான்ஸ் எதுவும் கொடுத்தாரா என்று ஆர்டர் குறிப்பில் அலசப்பட்டபோது... எதுவும் இல்லை. என்றும் எனக்கு மிகவும் தெரிந்தவர் ஒருவரின் சிபாரிசு செய்ததால்.. வேலை வாங்கியதாகவும் எனக்கு தெரிந்தது....

பிசியாக இருந்தஅந்த  நாளைகயும் கழித்துவிட்டு..  மறுநாள் அவருக்கு போன் செய்தேன்....

நெடு நேரத்துக்குப்பின் அவர் போனை எடுத்தார்..

“சார், வணக்கம். பிரிண்டிங் ஆபிசில் இருந்து... பேசுகிறேன்..சார்.... ரமேஷ் சாருங்களா...சார்.”

“ ஆமாம்.... என்ன விசயம்.என்றார்.....

“விசிட்டிங்கார்டு அடித்ததுக்கு காசு தர்ரேன்னு சொன்னிங்க  சார்,

“ என்னய்யா..... காசு..காசுன்னு... போன் போடுறீங்க.....ம்ம்”


சார்..ஒரு நிமிசம்,அன்னிக்கு . கொடுத்த வேலைய சீக்கிரம் கொடுக்கலைன்னு என்ன கத்து கத்தினங்க..ஒத்த வேலய கொடுத்துபுட்டு, எப்படி .சத்தம் போட்டீங்க.. இருக்கிறவங்களிலிலே நான்தான் சீக்கிரமாக வேலையை முடித்து கொடுக்கிறவன். என்னயவே... அந்த விரட்டு விரட்டினிங்க.. வேல முடிச்சு கொடுத்து  ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு.... செஞ்ச வேலைக்கு. கூலி கொடுக்கவேனும்முன்னு தெரியல..உய்களக்கு ..எப்ப தருவீங்க.... அந்த காச வாங்குவதற்கு பதினாரு தடவ  நான் அலையுனுமா...??? சொல்லுங்க..சார்,


அந்த நபர் போனை சட்டென கட் பன்னிவிட்டார்.. செஞ்ச வேலைக்கு கூலி பொங்கலுக்கு முன் கிடைக்குமா..? அல்லது பொங்கலுக்கு பின் கிடைக்குமான்னு  தெரியல.இல்ல எதையாவது குற்றம் கண்டுபிடித்துவிட்டு காந்தி கணக்குல சேத்துவிடுவாரோ  தெரியல.....ஊருக்கே சோறு போடும் விவசாயிகளின் நிலைமையோ படு பயங்கரமாக  இருக்கு... இத தட்டிக் கேட்கமா... ஜல்லிக்டடு நடத்த போராட்டம் நடத்துறாங்க...... ஊமையன் கனவுல கூட பேசமுடியாத நிலைமைதான் இன்னிக்கு  நிலவுகிறது.... இதில நான் எம்மாத்திரம்... எதிர்பார்த்து. காத்து இருக்கிறேன் பொங்கல் கழித்து வரும் நாட்களை.......!!!!!!!!!!!!!!!!!


புதன் 11 2017

அதனால்தான் பேசமுடியவில்லை............

என்னா..தலைவரே..போன் அடித்தால்  எடுக்கக்கூட மாட்டுறீங்க...அவ்வளவு பிசியா.....???


பிசியெல்லாம் கிடையாது தலைவரே..... முன்னாடி ஒரு மணி நேரத்தில செய்த வேலைகள் எல்லாம் இப்போது செய்து முடிக்க ரெண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகுது.... முன்னாடி மாதிரி  வேக வேகமா செய்து முடிக்க முடியவில்லை... அதனால் வேலையின் கவனத்தில் இருப்பதால் போன் அடிப்பது காதில் விழுவதில்லை   அதனால்தான் எடுத்து பேச முடியவில்லை...


அப்படி என்றால் வேலைகள் தேங்குமே....???

தேங்கினாலும் செய்து முடித்துவிடலாம் என்றாலும் புதுசா வேலை கொடுக்கிற சீமான்களை நிணைத்தால்தான்   எரிச்சலா  இருக்கிறது....

எரிச்சலா..உங்களுக்கா... அப்படி என்ன  எரிச்சல.....

புதுசா வேலை கொடுஙக்கறவங்க... அதாவது பத்தரிக்கை அடிக்கிறவங்க.... புருப் பார்த்து முடிக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு மேல எடுத்துகிட்டு, ஃபுருப் சரியாக இருக்கிறது என்று  காலையில் வந்து சொன்னவுடன்  மாலையில் பத்திரிக்கை வேண்டும் என்கிறார்கள்... அதான்.....எரிச்சல்...


நியாயமான..எரிச்சல்தான் நண்பரே......கல்யாணம் முடிந்த மறுநாளே  பிள்ளை வேண்டும் என்கிற கதையாக இல்ல  இருக்கிறது....

ஆமங்க.....வர்ர  நபர் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க...... அதனால் காலையில் உட்கார்ந்தால்  இரவு பத்து மணிக்கு மேல்தான் உட்காந்த இடத்தைவிட்டு நகர வேண்டியதாக இருக்கிறது... அதனால்தான் பேசமுடியவில்லை.. சந்திக்க முடியவில்லை... கோபித்துக் கொள்ளாதீர்கள்...

பரவாயில்லை.. பரவாயில்லை.....உங்க வேலைதான் எனக்கு தெரியுமே.... சரி பொங்கல் பண்டிகை.......எப்படி...???

பொங்கல் பண்டிகையா....பொங்குற பண்டிகையாகத்தான் எனக்கு தோனுது..அந்த பொங்கல் பண்டிகைய.. தொலைக்காட்சி காரனும்  சினிமா காரனுகம்தான் கொண்டாடுவாங்கே.... அவிங்கதானே.... ஒரு வாரத்துக்கு முன்பே விளம்பரம் செய்துகிட்டு இருந்தாங்கே.......எனக்கு வேலை இல்லாத நாட்கள்தான் விடுமுறை நாள்..... அந்த விடுமுறை நாளும் வரவர குறைஞ்சிகிட்டே வருது...வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை... அதனால்தான் குடும்பத்தோடு வேலை செய்கிறோம்.......

வேலை  செய்யச் செய்ய வருவாய்தானே....

ஆமாமா... இன்னிக்கு செய்த வேலைக்கு ஒரு மாசம் கழித்துதான் செக்கு கொடுப்பாங்க.... அந்த செக்கு கிளியரிங் ஆகி வருவதற்குல்ல... மொள்ள நிறைய சேர்ந்திடும்.....

 ஒ....ஒ... அப்படி  ஒன்னு இருப்பதை மறந்துவிட்டேன்... நீங்க சொன்னபிறகுதான் ஞாபத்துக்கு வந்தது... எனக்கு சில மொல்ல செலவு வந்தது நினைவுக்கு வந்துவிட்டது. பிறகு பேசுகிறேன்...  முடிந்தால் அந்தப் பக்கம் வந்தால்  வீட்டுக்கு வருகிறேன்.

நல்லது....வாங்க... வச்சுடுகிறேன்....

செவ்வாய் 10 2017

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் இல்லை...


மழையும் பொய்த்துவிட்டது  விவசாயமும் பொய்த்துவிட்டது... மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சமும் பெருகிவிட்டது...இப்படி  ஒன்றா...இரண்டா  எடுத்துச் சொல்ல......

இந்த லட்சணத்தில் எனது மதிப்பிற்குரிய தலைவர்களும் அ்ண்ணன்களும் நண்பர்களும்... தமிழ்மானம் காக்கும் வீரர்களும்  ஜல்லிகட்டு நடத்த போராட்டத்துக்கு விரைந்து வா  நண்பா... என்று  எனக்கு அழைப்பு விட்டார்கள்.. அண்ணன்களும் தலைவர்களும் என்னிடம் ஜல்லிகட்டு பற்றிய என் கருத்தைக் கேட்டார்கள்..

எனக்கு வேலைதான் சோறு போடுகிறது அதனால் அந்த வேலைகள் இருப்பதால்   அண்ணன்களையோ..தலைவர்களையோ சந்தித்து கருத்துரைக்க முடியாத காரணத்தால்.... எனது கருத்துக்கு உடன்பாடான வினவு தளத்தில் வந்த  கட்டுரையையே. சொடுக்கி ..............

இன்றைய நிலைமைக்கேற்றவாறு பொருத்தி படித்துக் கொள்க....மாற்றிக் கொள்ள முடியாத   மாற்றுக் கருத்து இருந்தால்..  பத்திரமாக  பூட்டி வைத்துக் கொள்க ..... பிற்பாடு    பேசிக் கொள்ளலாம்

சொடுக்கி படிக்க............
ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?




ஞாயிறு 08 2017

பொய்ப்புகாரில் அபராதம்--தொடர்ச்சி

முன்னதை படிக்க.....பொய்ப்புகாரில் அபராதம்...

காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  படையோடு வெளியே சென்ற சில நொடிகளில் ஏட்டையா போலீஸ் அவர் கையைப்பிடித்து ரைட்டருக்கு அருகில் உள்ள இடத்தில் சுவரோகமாக உட்கார வைக்கப்பட்டார்.  ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த வயர்லெஸ் போன் கரகரவென்று கத்திய மயமாக இருந்தது.. சிறிது நேரம் சுவரில் சாய்ந்திருந்த அவரிடம்..ரைட்டர் பேச்சுக் கொடுத்தார்..

“இன்ஸபெக்டர் என்ன சொன்னார்...

“விசாரிச்சுகிட்டு இருக்கிறப்ப.... திடிரென்று வெளியே போய்விட்டார் என்றார்”

“எந்த ஏரியா என்று விசாரித்த ரைட்டரிடம் ஏரியாவைச் சொன்ன கையோடு நடந்த விபரத்தையும் குறிப்பாக சொன்னார்... ஒரு பேப்பரும், பேனாவையும் கேட்ட போது மறுத்த ரைட்டர்... வேறு ஒன்றுமில்லை உங்களிடம் சொன்ன விபரத்தை மனுவாக எழுதத்தான் கேட்டேன். என்று சொல்லியும் சிறிது நேர இழுத்தடிப்புக்கு பின் பேனாவும் பேப்பரும் கொடுத்தார்.

“ அதில் தான் சொல்ல வேண்டியதை மனுவாக எழுதினார் அவர்

அனுப்புநரில் தன் பெயர் விலாசத்தையும்.. பெறுநரில் காவல் நிலைய ஆய்வாளர். காவல்நிலைய எண்ணையும் குறிப்பிட்டு  தொடங்கி விபரத்தை எழுதத் தொடங்கினார்

அய்யா, நான் மேற்படி முகவரியி்ல் பூர்வீகமாய் குடியிருந்து வருகிறேன். என் தந்தை நான் பிறந்த சில வருடங்களில் இறந்துவிட்டார். என் தாயார்தான் என்னை வளர்த்து ஆளாக்கி விட்டார். என் தந்தையின் தம்பி சொல்வது போல் அந்த நபர் என்னை வளர்க்கவில்லை... என் தந்தை இறந்தலிருந்து  என் தாயாருக்கும் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டதினால் அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் பேசிக் கொள்வதில்லை.....

என் தந்தை காலத்திலிருந்து என் தாயாரும் நானும் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறோம். இந்தநிலையில் நான் குடியிருந்து வரும் வீடும் அதைச்சேர்ந்த 5சென்ட காலி இடமும் தங்களுக்கு சொந்தம் என்று ச.புரத்தை சேர்ந்த அய்யணன் அம்பலம் என் தாயாரின் மீது வாடகை கட்டுப்பாட்டின் கீழ் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதி மன்றத்தில் தள்ளுபடியானது.... அதை எதிர்த்து அப்பீல் செய்தார். அதுவும் தள்ளுபடி ஆகிவிட்டது... இந்த நிலையில்... நான் என் தாயாரின் பெயரில் மின் இணைப்பு பெற்று... அந்த வீட்டில் சொந்தமாக தொழில் தொடங்கினேன்.

இதற்கிடையில்  அய்யணன் அம்பலம் என்பவர் மீண்டும் உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்... என் தந்தையின் தம்பிகளான இருவரும் இறந்துவிட்ட இன்னொரு தம்பியின் மனைவி மக்களுடன் சேர்ந்து வழக்கு இடத்தில் எங்களுக்கும் பங்குள்ளது பங்கை பிரித்து கொடு என்றார்கள்.  அப்போது...நான் இடமும் வீடும் தனக்கு சொந்மானது என்று  உங்கள் அய்யா (பன்னையார்) அய்யணன் அம்பலம் என் மீதும் என் தாயார் மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளார் அதில் உங்களுக்கும் பங்கு இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் ஆவணத்தைக் கொண்டு நீங்களும் என் மீது வழக்கு தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறியதை கேட்காமல் என்னுடன் சண்டையிட்டு என்னை அடித்துவிட்டு நான் அடித்தாக சில மாதங்களுக்கு முன் என் மீது பொய்யாக புகார் தெரிவித்தார்கள். அன்றைக்கு விசாரித்த அதிகாரி அவர்கள், உங்களுக்கு பங்கு இருந்தால் நீங்கள் வழக்கு தொடுங்கள் என்று கூறி இரண்டு தரப்பாருக்கும் எச்சரிக்கை விட்டு விசாரனையை முடித்து வைத்தார். அதன் பேரில்  என் தந்தையின் மூன்று உடன் பிறப்புகளும் , வழக்கு தொடுத்ததால் மேற்படி   அய்யணன. அம்பலம் தொடுத்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது..

 மேற்படிவீடும்  இடமும் எனது கட்டுபாட்டில் இருந்தாலும் அவர்களும் வழக்கு போட்டு இருப்பதால் காலி இடத்தை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவைப்பற்றி நான் எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை  என்வீட்டிற்கு கழிப்பறை இல்லாததால்.. என் வீட்டை ஒட்டிய கிழக்குப்பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு முயற்சி செய்தபோது... முதல் வழக்கு போட்ட அய்யணன் அம்பலம் கூட வந்து தடுக்கவில்லை... இவர்கள்தான் என்னை கழிப்பறை கட்டக்கூடாது என்று தடுத்தார்கள். வயல் வெளிகளில் ஒதுங்கும் இடமெல்லாம் வீடாகிவிட்டதால்... ஆத்தர..அவசரத்துக்கு ஒதுங்க இடமில்லை.என்  தாயாரும் பார்வை இல்லாமல்போன என் சகோதரியாரும் இரண்டு பெண் பிள்ளைகளும்.... படும் கஷ்டத்தை காண சகிக்காமல்... பல நாள் கடன் கேட்டு அலைந்ததால் கிடைத்த பணத்தைக் கொண்டு கழிப்பறையை கட்டுவதற்கு வேலையை தொடங்கிய போது... கூட்டமாக வந்து தடுக்கிறார்கள். 

அவர்களிடம்  “ இப்படிச் சொன்னே்ன்.. உங்களுக்கு தீர்ப்பாகி விட்டால் உங்களைப்போல் அப்பீல் எதுவும் செய்யமாட்டேன்... தீர்ப்பு சொன்ன சிலநாளிலே எல்லாவற்றையும் காலி செய்து விடுகிறேன். உங்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை இல்லையென்றால் பத்திரத்தில எழுதித் தருகிறேன். என்றேன். எதையும் கேட்காமல் என்னை அடித்துப் போட்டுவிட்டு எனக்கு முன்னால வந்து நான் கெடுக்க முயன்றதாக பொய்ப்புகார்...கொடுத்துள்ளார்..


மேலும்  புகார் கொடுத்துள்ள அந்த அம்மாவும் ஒழுக்கமானவர் இல்லை... அந்த அம்மாவாவின்  தொடுப்புதான் உங்களிடம் என்னைப் பற்றி தவறாக சொன்னவர்.. அந்த நபர் அந்த அம்மாவின் வீட்டுக்கு வந்த போது...கண்டிக்ககூடவில்லை .. உங்கள் நட்பின்  தொடர்பை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டுக்கு வந்து மற்றவர்களை கெடுக்காதீர்கள் என்றுதான் கூறியுள்ளேன்.. அதற்கு என்னை பழிவாங்குறார்...

ஆகவே, அய்யா அவர்கள்.. என் மனுவின் உண்மை நிலையை அறிந்து. என்மீது அவதூறாக புகார் கொடுத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை வேனுமாய் வேண்டிக் கொள்கிறேன்.  இப்படிக்கு்..கீழ்படிந்துள்ள என்று கையெழுத்தப் போட்டு விட்டு பேனாவை ரைட்டரிடம் கொடுத்துவிட்டு அதற்கு நன்றியாக ஒரு கும்பிடு போட்டார். எழுதிய மனுவை சுவரில் சாய்ந்து கொண்டு... ஒருமுறைக்கு இரு முறையாக படிக்க ஆரம்பித்தார்..


“நெடுநேரம் சென்ற பிறகு ... நிறைய ஆட்களை பிடித்து வந்தார்கள்..போலீஸ்காரர்கள்... வந்த சிறிது நேரத்தில்  வந்தவர்களுக்கு லத்தி அடியும் கெட்ட வசவுகளும் மாறி மாறி... கிடைத்தன.   இன்ஸ்பெக்டர்  சேரில் வந்து அமர்ந்தார்... ரைட்டரிடம் கேட்டார் அவர்.. மனுவை கொடுக்கலாமா... என்று.... ரைட்டரோ.... சைகையால்.... பொறு ..பொறு  அவசரப்படாதே.... என்றார்...


அரை மணி நேரத்துக்குப்பின் இன்ஸ்பெக்டரே  அவரை அழைத்தார்... சார், என்று மறுமொழியுடன் சென்றவர் தான் எழுதி இருந்த மனுவைக் கொடுத்தார்.

“சார் இதில  எல்லா விபரமும் எழுதி இருக்கேன் சார்.. படித்து பார்த்துவிட்டு . அதன் மேல் நடவடிக்கை எடுங்க சார், என்றார்.

“வாங்கிய இன்ஸ்பெக்டர் வாங்கிப் படித்தார்...படித்து முடித்துவிட்டு.. எல்லாம் உண்மைதானா..? என்றார். 

“உண்மைதான்.. சார்.. பொய் என்று தெரிந்தால் என் மீது கடுமையான நடவடிக்கை .எடுங்க சார்,  இவர்..”.

“ஒரு போலீசை கூப்பிட்டு.. புகார் கொடுத்தவங்க..வந்திருந்தா.. வரச்சொல் என்றார்.

“பொய்ப்புகார் கொடுத்த அந்த அம்மாவும், அதுதோட தொடுப்பும் வந்தார்கள்..”

“தொடுப்பை வெளியே நிற்கச் சொல்லிவிட்டார் ரைட்டர் .இன்ஸ்பெக்டர். மனுவில் குறிப்பிட்டு இருந்த சிலவற்றை அந்த அம்மாவிடம் கேட்டார்”

“ என்னம்மா...நீ....எல்லாத்துக்கும் ஆமா ஆமான்னு சொல்ற... இவன் கெடுக்க வந்தான்னு  வேறு சொல்றேயே..... இவன உள்ளே தள்ளினா... உனக்கு இடம் கிடைச்சிடுமா...?  உனக்கு தீர்ப்பாச்சன்னாதான் காலி செய்துவிடுறேன்.. சொல்றான்... வழக்கு போட்டது வேறு நபர்....இவன் கழிப்பறையை கட்டுனா.... அதை தடுக்க கோர்ட்டுல  போயி உத்தரவு வாங்கி தடுக்கனும் இப்படி பொய்ப் புகார் கொடுக்கக்கூடாது.... என்றபோது....

“ அந்தம்மா..., இல்ல...சார்...  அவன் என்ன கெடுக்கத்தான் வந்தான் என்று சொன்னதும்.. இன்ஸ்பெக்டர் சற்று கோபமடைந்தார்.. 

என்னம்மா.... நா...ன் சொல்றத கேட்காம.... சென்னதையே சொல்ற... நீ..என்ன பெரிய அழகியா.... உன்ன இவன் கெடுக்க வந்திட்டான்.... என்று சத்தம் போட்டார்...இநதம்“மாவை வெளியே போகச் சொல்லிவிட்டு.. தொடுப்பை அழைத்தார்....  யோவ்் சொத்து சண்டை இடத்து சண்டை இதுல  போயி அந்தம்மா பொய்யா... புகாரு கொடுத்திருக்கியா..... இவன் மேல நடவடிக்கை எடுத்து அபராதம் கட்டச் சொல்றேன்  போதுமா.... என்றார்.

“ அந்த தொடுப்பு எதோ சொன்னார்... இன்ஸ்பெக்டர் எதோ சொல்லவும் தொடுப்பு அமைதியாக  வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தது...

“நின்று கொண்டிருந்த இவரிடம்.... இடத்து சண்டையில  இப்படித்தான் நடக்கும்... அந்தம்மா திருப்திக்கா... ஒரு ஆயிரம் ரூபா பைன் கட்டிவிடுய்யா..... என்று சொன்னபோது.... சார்....அப்படி ஒரு சம்பவே நடக்கல சார்,

“தெரியுதுப்பா..... சண்டை போட்டதாகத்தான் பைன் கட்டச் சொல்றேன். அபராதத்ததை கட்டிவிட்டு அடுத்த வேலைப் பாருப்பா. என்றவர் ரைட்டரை கூப்பிட்டு , வழக்கு எண்ணை சொன்னார். 


இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் சொல்லிவிட்டு.. ரைட்டரிடம் வந்த போது... நாளைக்கு ரயில்வே ஸ்சேடசனுக்கு அருகில் வந்திரு.... மொபைல் கோர்ட்ல அபராதத்தைகட்ட ரூபாயோட வா... என்றார்...ரைட்டர் நீட்டிய சில கோப்புகளில் கையெழுத்தைப் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது  மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டது...
.. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...