பக்கங்கள்

சனி 05 2013

இதனால் சகல நிறுவனங்களுக்கு காவல்துறை தெரிவிப்பது என்னவென்றால்.....





பெரிய பெரிய முடுச்சு அவிக்கிகள்.மொள்ள மாரிகள், திருடர்கள், போக்கரிகள்,கொள்ளைக்காரர்கள்,கொலை காரர்கள், அங்கிகாரம்
பெற்ற சாதி வெறி  மற்றும் அரசியல் தலைவர்கள் போன்றவர்கள்,

மேற்கண்ட தொழிலை செய்பவர்களாக இருப்பதால் தக்க ஆதாரம் இருந்தும். அவர்கள் பெரிய தலைகளாக இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்ய  முடியாது. மேற்கண்டவர்களின் வாழ்வுக்கும் வசதிக்கும் எந்தவித பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்க்காகவே நாங்கள் பாதுகாப்பாக காவல் காத்து இருப்பதால்,

மேற்க் கண்டவர்கள் செய்யும் தொழிலுக்கு  போட்டியாக மேற்க்கண்டவர்களைப்போல் குறுக்கு சந்துவழியாக முன்னேற துடிக்கும்,சிறிய முடுச்சு அவிக்கி, மொள்ளமாரி, கேப்பாரி, போக்கிரி, கொள்ளக்காரன், கொலைகாரன்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்கும் பொருட்டும்.பொது அமைதிக்கு பங்கம் எற்படாதவாறு காக்கும் பொருட்டும்,

பொதுஇடங்களானபள்ளி,கல்லூரி,விடுதி.மருத்துவமனை,காய்கறி வளாகம்,விளையாட்டுத்திடல்,நகைக்கடைகள்,வங்கிகள்,
வழிபாட்டுத்தலங்கள்,தொழிற்சாலைகள்,பெட்ரோல்கடைகள்,
நூலகங்கள் பஸ்நிறத்தங்கள், பஸ்நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்போனற் அணைத்து இடங்களிலும்  கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேற்படி குறுக்கு சந்து தொழில் வழிக்காரர்களால் ஏற்ப்படும். திருட்டு,வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் பல
இடங்களில் நடைபெற்று வருகின்றன. எங்களால் சம்பந்தபட்ட
வர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும்.அப்பிராணி.சப்ராணிகளின் மீது பொய்வழக்கு  போடுவதால்,
நீதி மன்ற பிரச்சனை ஏற்ப்படுகின்றன. அதனால்  மேற்க்கண்ட  சகல நிறுவணங்களின் பொறுப்பாளர்கள் விரைந்து தாமதமின்றி,
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில், கண்காணிப்பு கேமரா பொறுத்தாத பொருப்பாளர்களின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும், மேலும்  பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில்  முகத்தை காட்டாமல் மறைத்துக்  கொண்டு நடமாடுபவர்கள் மீதும் வழக்கு பதியப்படும்.

வெள்ளி 04 2013

துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமாம் மாமே..???



ஏ.......மாமே......இங்கப்பாரு....... துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமாம்...மாமே....

என்னடா.......மாப்ளே   சொல்ற ..“துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமா....?????????

ஆமா............மாமே   அப்படித்தான் .போட்டிருக்காங்கே.........

அப்போ...ஒங்....கக்கால.. குடுக்கச். சொல்வோம்டா....

அதுல்ல மாமே.............

விளக்கமா....... சொல்றா.........

நா........படிச்சு காம்மிக்றேன்..கவனமா..........கேளு.

வேலுரை சேர்ந்த  கோவிந்த சாமி என்ற வாசகர் கேட்டு இருக்காரு

பல தொழில்களை செய்து பார்த்துவிட்டேன. எல்லா தொழிலும் நஷ்டம்தான்  மிச்சம், கடன்களும்சேர்ந்துவிட்டன. குடும்பம் செழிக்க வழி கூறுங்கள் என்று

அதற்கு தீட்சர் சொன்ன வழிதான் இது. சிவாலய துர்க்கைக்கு 3 செவ்வாய் கிழமைகளில் தொடர்ச்சியா அபிஷேகத்திற்கு பால் கொடுங்கள் . இதோடு சமஸ்கிரதம் தெரிந்தவர்களிடம் சுலோகங்களை கற்று தினமும் 21 முறை கூறுங்கள் என்று வழி காட்டியிருக்கிறார்....மாமே....

ஏ.......ஏ.......ஏ..... நிறுத்துடா..... இது நமக்கில்லடா..... அந்தாளுக்குடா..

நாமளும் பல தொழில் செஞ்சும  நஷ்டம்தானே  மிச்சம்...மாமே.....

ஆமாடா.....இருந்தாலும்,அந்த  தீட்சர் ஊடால ஒரு கரடி விட்டிருக்கான் பாக்கலையா?

புரியலையே மாமே............

 துர்க்கைக்கு பால கூடக் கொடுத்திடலாம்டா, சமஸ்கிருத் கத்திகிட்டு புலம்ப முடியுமாடா.............???

பல தொழில் மாதி....இதையும் கத்திகிட்டா போச்சு மாமே.......

 ஏலேய்.........வெங்காயம்.....ஒங்கத்தா...ஒங்கப்பன்,எங்காத்தா.எங்கப்பன் சொத்து சுகம்முன்னு சேத்து வச்சிருந்தா .....நம்ம குடும்பமும்  துர்க்கைக்கு பால் கொடுக்காமலே செழிப்பா இருக்குமுடா.........நாமளும் சொத்து சேத்து வச்சுட்டு போனவங்கள நிணச்சு வழிபடலாம்டா.........


அதான் இல்லேன்னு போச்சே.......

அந்த தீட்சரு சொல்றதா நம்பினா...... இருக்குற இந்த பொழப்பு  போயிரும்டா மாப்பிளே.. பொழப்பே போகும்போது குடும்பம் எப்படிடா செழிக்கும்

 ஆமா...மாமே,

என்னடா........ஆமா...மாமே.........நல்லா யோசிச்சு பாருடா........

ஆமா..மாமே அந்த தீட்சரு கரடிதான் விட்டுருக்காரு. அத இந்த பேப்பரு காரனும்  உலாவ விடுறான். நம்மல மாதி இருக்கிறவங்கல  நல்லா வே கேனையானாக்குறாங்கே   மாமே...........

வியாழன் 03 2013

கொள்ளை காரரிடமிருந்து தப்பித்து கொலைகாரரிடம் உயிர்விட காத்திருக்கும் இந்திய கோவனாண்டிகள்.!!!


சுதநதிரம் பெற்றதாக சொல்லப்படும் காலத்திலிருந்து நீரோ மோடி, ஹீரோவான காலம்வரைக்கும் அணிந்திருந்த மேல் சட்டையிலிருந்து ஒவ்வொன்றாக பறி கொடுத்து கடைசியில் உயிரையும்பறிகொடுக்க காத்திருப்பது வேறு யாரமல்ல இந்தியாவில் வாழும் கோவனாண்டிகள்தான்.

அதெப்படி கோவனாண்டிகள் அவ்வளவு  ஏமாளிகளா...???

ஆமப்பா.....ஆமா....

பழைய தங்கத்துக்கு பாலீஸ் போட்டு தருவதாக ஏமாற்றும் பேர்வளிகளிடம் ஏமாந்தும், வீசியெறிந்ததால் கீழே கிடக்கும் பத்து ரூபாய்க்காக பத்தாயிரத்தை பறி கொடுத்து அலறுவதும் போல்தான்

ஆட்சியிலுள்ள பகாசூர கொள்ளையர்களுக்கு மாற்றாக,மகாசூர கொலைகாரர்கள் பவனி வருவதைக் கண்டு.

கொள்ளைக்காரர்களிடம் தவித்து சீரழிந்த கோவனாண்டிகள். இந்த கொலைகாரர்களின் எச்சில் ஒழகும் பேச்சிலும்,ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் மாயையிலும் மயங்கி, உன்மையென நம்பி..

 கொள்ளைக்காரர்களிடம் தங்கள் உடமையையும்,உரிமையையும் இழந்த பறி கொடுத்தவர்கள். காவு வாங்கும் கொலைகாரர்களிடம் மிஞ்சியிருக்கிற தங்கள் உயிரைவிட்டு கதி மோட்சம் அடைய காத்திருக்கிறார்கள் இந்திய கோவனாண்டிகள்.

புதன் 02 2013

கட்டிய மனைவிக்கு துரோகம் புரிந்த தேசப்பிதா.......




தேசப்பிதாவைவிட வயதில் ஆறுமாதம்  மூத்தவர். சிறு வயதிலே மணமுடிக்கப்பட்டு, தேசப்பிதாவின் இல்லற வாழ்க்கை,ஆசிரம வாழ்க்கை, சிறை வாழ்க்கை என  தேசப்பிதாவின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இணைந்தே நிழலாக வாழ்ந்தவர் கஸ்தூரிபா.....

பெண்களுக்கே விதிக்கப்பட்டஅன்பு,அடக்கம்,சகிப்புத்தன்மை,
பொறுமை, தியாகம், போன்ற குணங்களுடன் வாழ்ந்தவர்.

வாய்பொத்தி,மொய்பொத்தி மங்கையர் திலகம் என பேர் எடுத்த அன்னைக்கு.தேசப்பிதா,தனது 37 வது வயதிலிருந்து துரோகம்
செய்யத் துவங்கினார்.

ஆடையில்லா இளம் பக்கிகளுடன் படுத்து தன் இளமையை கூட்டிக் கொள்வதற்க்காக, தன் மனைவியிடம் ஒரு பொய்யைச் சொன்னார்.

மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தாம்பத்ய உறவு,தடங்கலாக.தடைக் கற்கலாக அமையும். அதனால் பிரம்மச்சரிய விரதம் மேற்க் கொள்ள விரும்புகிறேன். ஆகையினால் எனக்கு  நீ அனுமதி தரவேண்டும் என்று கேட்டு தன் மனைவியை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கினார்.

கணவன்வழியே! தன்வழி! என்று கஸ்தூரிபா,தன் கணவருக்காக இமலாய துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

துரோகத்தின் மொத்த உருவமான தேசப்பிதா,அன்று முதல் பிரமச்சரிய விரதம் என்ற பெயரில் ஆடையில்லா இளம் பக்கிகளுடன் ஆடையில்லாமல் படுத்துறங்கி எழுந்தருளினார்.



(என்னசெய்வது,தேசப்பிதாவின் பிறந்தநாளில் தேசப்பிதா நாட்டுக்கும் தன்மனைவி மக்களுக்கும் செய்த ஒவ்வொரு துரோகம்தான்   எனக்கு நிணைவில் வருகிறது)

செவ்வாய் 01 2013

சாதி பெருமை பேசிய நடிகன்......(மீள் பதிவு)

சாதி பெருமை பேசி நடித்த நடிகருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்,அதற்க்காக கே டீவியில நவராத்திரி படம் போட்டாங்க, ஒன்பது வேடத்தில ஒன்று குஷ்டம் வந்தவராக நடித்திருக்காரு. அந்த குஷ்ட ரோகியை விட அரியின் ஜனங்கள் தாழ்ந்தவங்களாக இருப்பதால் ஒரு அரிஜனவேடத்தில் நடிக்கவில்லை என்பது படத்தை பார்த்த பிறகு தெரிந்தது. இதே மாதிரி ஆஸ்கார் பேயாண்டி பத்து வேடம் ஏற்று தசுவுதாரம் படத்தில் நடித்திருந்தார். அவுரும் ஒரு வேடத்திலாவது அரிஜன் வேடத்தில் நடிக்கவில்லை. இந்தியாவுல சாதிஎல்லாம் கிடையாதுன்னு என்பது மாதிரி யாக சாதிப்பெருமை பேசி நடிச்சிருக்காங்கே..........சாதிபெருமை பேசிய நடிகன்
.

மேயிற மாட்டை கெடுக்குமாம் நக்குற மாடு கதை தெரியுமா???



ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். தன் நிறத்தைபோல ஒரு மாட்டை வளர்த்தான்.  மாட்டுக்கு ஆகாரம் வேண்டி வயல்வெளி பக்கம் ஓட்டிச் சென்றான.


மாடும்  வயல்வெளியில  நன்றாக மேய்ந்து கொண்டு
இருந்தது.அப்போது, மேய்வதற்கு வந்திருந்த
இன்னொரு மாடு இந்த மாட்டை பார்த்தவுடன் வாய
பொளந்து தன் உடலை சிலிப்பிக் கொண்டு ,

ஒழுங்கா மேஞ்சுகிட்டு இருக்கிற மாட்டுகிட்ட போயி, தன் அழக காட்டுச்சு, அந்த மாடு இந்த மாட்ட கண்டுக்கிறவே இல்ல

திடிரென்று, வந்த மாடு மேய்ற மாட்ட நக்க அரும்பிச்சிருச்சு, ஒழுங்கா மேஞ்சுகிட்டு இருந்த மாடு மேயுர வேலைய விட்டுபுடுச்சு

மேயுற மாட்டுக்காரன் , மேயாத மாட்டுக்காரனிடம் சொன்னானாம்,“ ஒழுங்கா மேயுற  எம் மாட்ட, ஓம்மாடு நக்கி கெடுக்குதுடா என்றானாம்,

 அதுக்குஅவன் சொன்னான். எம்மாடு , மேயுற மாட்ட.,கெடுக்குமாம். நக்குறமாடு, என்று .

இதுவே  பலதுக்கு சொல்வடையாக பயனுக்கு வந்து
 பயன்பாட்டுக்கு வந்து பயனபட்டு இருக்கிறது.



திங்கள் 30 2013

இத்துனுண்டு வாய்க்குள் அம்மாம் பெரிய உலகம்!!! ஒரு புளுகு கதையும் நிஜ கதையும்.....

“ அம்மா, கிருஷ்ணன் ...மண்ணை அள்ளித் தின்றான” அவன் அம்மாவான யோசதையிடம் சொன்னான் பலராமன்.

“கிருஷ்னா...... மண்னையா தின்றாய்” கேடடாள் அவன்தாய் யோசதை.

மண்ணைத் தின்ற  பாலகன் கேட்டான். அவன் அம்மாவிடம்.

“யார் சொன்னது” என்று,

அவன்அம்மா சொன்னாள்.- பலராமன்னு,

“பொய்....ம்மா, வாயைத்திறந்து காட்டுகிறேன். நீயே பார்”

வாயை திறந்து காட்டினான்.பாலகன்கிருஷ்ணன்.

அடேங்கப்பா,“ இத்துனுண்டு வாயில்... ஏழு கடல்களும ஏழு மலைகளும்,ஏழு உலகங்கங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து நாண்கு லட்சம் ஜீவராசிகளும் கொண்ட அம்மாம் பெரிய  ஒலகமான பூமி மண்ணாங்கட்டி போல் வலம் வந்ததாம்.

 அண்டா கசத்திலும் அபுக்கா கசத்திலும், பெரிய புளுகுணி கசம் இதுதான்.

இந்த புளுகுனி கசத்தைவிட உண்மையான அண்டா கசம், அபுக்கா கசம்  இது.

கிரானைட்-ஊழல்garnet-2

 இத்துனுண்டு வாய்க்குள் வெளியே உள்ள  இம்மாம் பெரிய உலகத்தில்  மலையையே  முழுங்கிய மகாதேவன்களான மலைக்கள்ளன்கள், கடலையே காணமால் ஆக்கிய தாது மணல் தாதாக்கள்,  சுரங்கத்தையே துரும்பாக்கிய இரும்புக களவாணி  ரெட்டிக்கள்,  எண்ணெயையே கசக்கி பிழிந்தெடுத்த எண்ணெய்வள எத்தன்களான அம்பானிகள்- போன்றவர்கள்  இருக்கும்போது..

அதெப்படி இத்துனுண்டு வாயிக்குள் மண்ணாங்கட்டி சைசில்   தெனவெட்டாக உலகம்  வலம் வந்திருக்கும்

முன்னது புளுகு, பின்னது  நிஜம்

கொஞ்சமாச்சும்  பொருத்தமா சொல்ல  யோசிங்களப்பா...................

ஞாயிறு 29 2013

நன்றி! கெட்ட மக்களும், நன்றி! மறந்த மாந்தரும்...



பெரியாரும், கி.ஆ.பெ. விசுவநாதனும்,ரயில் பயணத்தின் பொழுது, ரயில்   ஒரு நிலையத்தில நின்று கொண்டு இருந்தது. அப்போது  பிளாட்பாரத்தில்  நின்று கொண்டு இருந்த இருவர்

பெரியாரை சுட்டிக்காட்டி, பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது பெரியார், எந்த சமுதாயத்துக்காக நாம் பாடுபடுகிறமோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை  ஏறெடுத்தும்  பார்ப்பதில்லையே என்றார்.

அன்று பெரியார் சொன்ன உண்மை இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த சூத்திர தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெண்னடிமைகளுக்காக பாடுபட்டாரோ அந்த மக்கள் ஏற்றிவிட்ட ஏணியைக்கூட நிணைத்துப்
பார்ப்பதில்லை. இவர்களை

நன்றி! கெட்ட மக்கள்!!  நன்றி! மறந்த மாந்தர்!!! என்று சொல்வதா??? அல்லது பொழைக்கத் தெரிந்தவர்கள் என்று சொல்வதா?????



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...